>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

திங்கள், 9 ஏப்ரல், 2018

Teaching of English by Phonetic Method Video- Unit 16


இளையராஜா தன்னோட முதல் பாட்டுப் பதிவைத் தொடங்கியதுமே CURRENT போயிடுச்சாம். எல்லாரும் என்னடா இது? நேரம் சரியில்லனு..... பேசிக்கிட்டாங்களாம். ஆனால், இன்னைக்கி வரை என்ன, என்னைக்குமே இசைனா ராஜா மட்டும் தான்.

இரண்டு மாசமா அங்கயும் இங்கயும் அலஞ்சு, இடத்தப் பிடிச்சி பெயிண்ட் அடிச்சு சுவர் பூராம் PHONETICS படம் வரைஞ்சி CONTENT எல்லாத்தையும் SCREEN PLAY ஆ எழுதி, நடிக்கிற டீச்சர்ஸ் எல்லாத்து கிட்டயும் ஒரு மாசத்துல முடிச்சுருலாமுனு சும்மானாச்சிக்கும் ஒரு தைரியத்தச் சொல்லி SHOOTING START  பண்ண நாள் குறிச்சி AEEO அல்போன்ஸ் சார் தலைமையில குத்து விளக்கெல்லாம் பொருத்த தயார் பண்ணிட்டு எல்லோரும் கிளம்பிகிட்டு இருக்கிற சமயத்துல, இரு சக்கர வாகனத்துல வந்த ஒரு தர்மத்தின் தலைவன் UNIT – 16 எடுக்குற சுகுமாரி டீச்சரை விபத்துக்குள்ளாக்கிட்டு பறந்து போயிட்டான். நாங்களெல்லாம் பயந்து போயிட்டோம்.



முதல் நாளு வேற....., சரித்தான்!! இனி ஆரம்பிச்ச மாதிரிதானு சின்னதா ஒரு கலக்கம் எல்லோர் முகத்திலும்.... அந்த நேரத்தில் மருத்துவமனையிலிருந்து அலைபேசி அழைப்பு..... சரி, பரவாயில்லை இன்னொரு நாள் ஆரம்பிச்சுக்கலாம் என்ற மனநிலையுடன் அலைபேசிய ON செய்தால், சார் நீங்க மத்த வேலைகள பார்த்துக்கிட்டே இருங்க. ஒரு பத்து நிமிஷத்துல டாக்டரப் பாத்துட்டு, சித்ரா மிஸ்ஸோட வந்துடுறேன் என்று தீர்க்கமான சுகுமாரி ஆசிரியரின் இந்த குரல், PROJECT – ன் முதல் தைரியத்த உள் ஊட்டியது. சுகுமாரி ஆசிரியரின் கணவரும் அந்த சூழலில் பக்க பலமாக இருந்து படப்பதிவுக்கு அழைத்து வந்தது HATS OFF செய்ய வேண்டிய நெகிழ்வு.



இக்கட்டான சூழலில் நடக்குமோ நடக்காதோ என்ற தடுமாற்றத்திலும், தன்னம்பிக்கையுடன் அன்று ஏற்றப்பட்ட குத்து விளக்கின் சுடர்தான் இன்றுவரை அணையா ஜோதியாக மாணவ நெஞ்சங்களில் வாஞ்சையுடன் விடியலேற்றிக் கொண்டிருக்கிறது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நான் உட்படத் தங்குவது, சாப்பிடுவது என்பது கடைசி நாள்வரை எதிர் நோக்குப் பிரச்சனையாகவே இருந்து வந்தது. தங்கும் வீட்டில், FAN, CURRENT இல்லாத பல இரவுகள் காருக்குள் உட்கார்ந்திருந்தபடியே கழித்திருக்கின்னறன. கண்ணன் சார், சுகுமாரி டீச்சர் போன்றோரது கரிசனத்தாலும், தாயுள்ளத்தாலும் தான் அடிப்படை வசதிகள் ஆசுவாசப்படுத்தப்பட்டன.

இவர் கொண்டு வரும் லெமன் ஜூஸ் தான் சுட்டெரிக்கும் வெக்கையில் சக்கரமாய் எங்களைச் சுழல வைத்தன.

எதைச் செய்தாலும் நேர்த்தியாக இருக்க வேண்டுமென முன் கூட்டியே திட்டமிடுதல் இவரது அசாத்தியப் பெருமை.
 RHYMES SHOOTING (OUT DOOR) – ல் இவரது பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது.

ஒரே மாதிரி டிரஸ் ஆறு குழந்தைகளுக்கு புதுசா எடுத்துத் தைச்சாச்சு. SHOOTING அன்று காலையில பாத்தா ஒரு கட்சியோட கொடி கலருல டிரஸ். SHOOTING எடுப்பதில் எனக்குத் தயக்கம். வேற ஏற்பாடு செய்ய முடியுமானு கேட்ட அடுத்த செகண்ட் ஒரு டெயிலர (TAILOR) வரவழைச்சி, ஒரு மணி நேரத்துல BORDER(பார்டர்) துணி வேற கலர்ல வாங்கி தைச்சு.........!!! என்னாவொரு டைமிங்க்(TIMING). சூழ் நிலையைக் கையாளும் அலட்டாத நேர்த்தி. இதுதான் ஒரு ஆசிரியரின் ஆளுமை. சிறப்பாக முடிந்தது அன்றைய நாள்.

காந்தம் என்பதன் வட துருவம்,தென் துருவம் (NORTH POLE,SOUTH POLE) COLOUR PICTURE உலகம் பூராம் ஒரே மாதிரி கலர் தான். தமிழ் நாட்டுப் பாடப்புத்தகத்துல மட்டுந்தான் வேற கலர்ல இருக்கும். . பாடப்புத்தகத்துக்கே இந்த கதினா, பாட்டு தாங்குமானுதான் கலர் சேஞ்ச் (COLOUR CHANGE) பண்ணினேன்.
அரசியல் கலக்காத கல்வியே அறிவினைத் தூண்டும். இல்லையேல் அது வெறும் உணர்வையேத் தூண்டும்.

எழுதுவதற்கு இன்னும் நிறைய மிச்சமிருக்கிறது. ஒவ்வொருவரைப் பற்றியும்....

பிறரது உழைப்பிற்கும் திறமைக்கும் கை தட்டும் கரங்களை விட, கண்குத்தும் விரல்களே உலகில் அதிகம்.

 அறியப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களே இங்கு அதிகம்.
 எனவேதான் PHONETIC DVD இயக்குநர் என்ற முறையில் படைப்புகளையும், தியாகங்களையும் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஊடகங்கள், முகநூல் இவர்கள் முகங்களை முன்னிருத்தட்டும். சந்தோசமான குழந்தைகளின் கற்றல் ஆசிகளாக இவர்கள் சந்ததிக்கே புண்ணியப் பூச்சொரியட்டும்.

"ஆசிரியராகவே" வாழ்ந்து கொண்டிருக்கும் சக தோழமை சுகுமாரி அவர்களுக்கு வார்த்தைகள் வாழ்த்துகளாகட்டும்.

Video



Pls click the below link:
https://youtu.be/EfjcNZ0T65M


 வாழ்த்து சொல்வதோடு நின்று விடாமல் பிறரும் வாழ்த்த ஒரு SHARE செய்யலாமே.........