>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
GAMES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
GAMES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 மார்ச், 2018

விளையாட்டு விளையாடுவதற்கு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஏன் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்கான 50 காரணங்கள்...

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

இணையதள விளையாட்டுகள்: இலவச, 'லேப் - டாப்'களில் தடை?

கணினி விளையாட்டுகளால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு, 'லேப் - டாப்'களில், விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பிளஸ் ௨ முடித்ததும், அவர்களுக்கு, இலவச லேப் - டாப் வழங்கப்படுகிறது. அனைத்து வகை, 'சாப்ட்வேர்'களையும் உள்ளீடு செய்து, இதை உடனடியாக பயன்படுத்த முடியும். இந்நிலையில், லேப் - டாப் வாங்கும் மாணவர்கள் பலர், 'வீடியோ கேம்' விளையாடுவதும், இணைய தளங்களில் பொழுதை போக்குவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில், 'ப்ளூ வேல்' இணையதள விளையாட்டால், சில மாணவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.
அப்போது, இலவச லேப் - டாப் பெறும் மாணவர்கள், இணையதள விளையாட்டில், நேரத்தைசெலவிடுவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில், அரசால் வழங்கப்படும் லேப் - டாப்களில், 'கேம் அப்ளிகேஷனை' நீக்கவும், அது போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கு, தொழில்நுட்ப தடை ஏற்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

திங்கள், 11 செப்டம்பர், 2017

பாரம்பரிய விளையாட்டை மறந்ததால் பரிதவிக்கும் மாணவர்கள்

மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாட்டை குறைக்க அவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவதில் ஊக்கப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி உள்ளதுடன், தற்போது ப்ளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்யும் அளவிற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும். கோ கோ, கபடி, சிலம்பம், களரி, வாலிபால், புட்பால் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.
இதன் விளைவாக அவர்களின் மூளை செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். அதோடு கல்வியில் சிறந்து விளங்குவதோடு எதிர்காலத்தில் நல்ல அறிவார்ந்த சமூகம் உருவாகும் நிலை ஏற்படும். இந்த பணியை பள்ளி பருவத்தில் ஊக்குவிக்கவில்லை என்றால் எந்த நிலையிலும் செய்ய முடியாது. இதனால் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் தற்போது மாணவர்கள் விளையாட தயாராக உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் ஊக்குவிப்பதில்லை. விளையாட்டு நேரங்களில் பாடம் நடத்துகின்றனர். மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள் இருக்கும் ஒரு சில விளையாட்டு மைதானங்களில் விளையாடுவதை தவிர்த்து செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 
இதனால் அவர்கள் மனரீதியாக மிகுந்த பாதிப்பு அடைகின்றனர். இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். அவர்கள் போதிய அளவு சலுகை கொடுக்காமல் மாலை நேரத்தில் விளையாட கட்டாயப்படுத்த வேண்டும். பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டிற்கு கண்டிப்பாக திரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை. நேற்று முன்தினம் ஆம்பூரில் ப்ளூவேல் கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவி கண்டுபிடிக்கப்பட்டு ஆசிரியர்கள் கவுன்சில் வழங்கினர். இதேபோல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் ப்ளூவேல் கேம் விளையாடி வருகிறார்களா என்று ஆசிரியர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

please be-aware dont play this game ... ப்ளூ வேல் இந்த கேம் - 50 வது டாஸ்க் இல் உங்கள் உயிரை விடவேண்டும் அப்படி விடுபவர் வெற்றியாளர் ஆவார்...சரி இப்ப இதபத்தி பாப்போம்....


*BLUE WHALE*


*Game of death*
This is my last awareness post for #Blue_whale இதுக்கு அப்பறம் இத பத்தி பேசவோ  post போடவோ எனக்கு விருப்பம் இல்ல...
இந்த கேம்னுடைய  முக்கியமான தீம் என்னன்னா மனிதன் என்பவன் ஒரு biological waste...அவனை சுத்தப்படுத்த அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கேம் முடிவில் அவன் இறக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் நோக்கம் ஆகும்.
இந்த game விளையாடுறவங்க mostly childrens இப்போ adult age peoples உம் விளையாட start பண்ணிட்டாங்க...
இதுல 50 டாஸ்க் கொடுக்கப்படும். 
இந்த கேம் விளையாட ஆரம்பிச்சி.... வெளிய போனம்னு முடிவு பண்ணிட்டீங்க னா அதுக்கு bluewhale admin உங்களுக்கு பனிஷ்மென்ட் தருவாரு அதாவது தங்களை கண்டபடி ப்ளேடால் அறுத்துக்கொள்ள வேண்டும் அல்லது காயப்படுத்திக் கொள்ளவேண்டும்...
ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு task இந்த game ownerta  வாட்ஸ் அப் அல்லது facebook messenger இல் இருந்து தகவல் வரும்...
எல்லா டாஸ்கும் early morning 4.20 am க்கு துவங்கும்   
ஒவ்வொரு டாஸ்க் முடிச்சவுடனே அவங்க நீங்க அந்த டாஸ்க் முடிச்சிட்டீங்கலானு செக் பண்ணுவாங்க...அதுக்கு நீங்க அவங்களுக்கு போட்டோ எடுத்து அனுப்பனும்.
அதுக்கு அப்புறம் தான் இன்னொரு டாஸ்க் கொடுப்பாங்க ...
உன் கையில பிளேடு வச்சி 3 தடவ cutபண்ணிக்க
அத என்னக்கு photo எடுத்து அனுப்பு....
தனியா உச்சியான பில்டிங்ல உக்காந்து போட்டோ எடுத்து அனுப்பனும் ...
தனியா ரயில்வே track பொய்ட்டு வரனும் அதும் படம் புடிச்சு அனுப்பனும் என்பது தான் டாஸ்க்...
Morning4:20ku எழுந்து உன் வீடு மொட்டை மாடிக்கு போய் ஏதாவது ஒரு horror movie பாத்து அத எனக்கு photo எடுத்து அனுப்பு...
அவங்க ஒரு song கேட்க சொல்லுவாங்க அத நாம கேட்கணும் அதுவும் தனியா...
எல்லா டாஸ்க்கும் தனியா தான் செய்யணும் ...நண்பர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் யாரிடமும் இதை பற்றி பேசக்கூடாது ...எனபது இதன் விதி...
ஒவ்வொரு நாளும்  task கொடுக்க படும்....
நீங்க கேட்கலாம் நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்....
நா பண்ண மாட்டேன்னு அவன்கிட்ட சொல்லவும் முடியாது
நீங்க  ஒரு தடவை இந்த gamela login பண்ணிடீங்கனா உங்க மொபைலில் உள்ள அணைத்து detailsum அவன் கைல போய்டும் நீங்க இதுவரை பார்த்த விஷயங்கள் msgபண்ணின விஷயங்கள் மற்றும் உங்கள் contactlist மொத்தமும் அவனுக்கு போய்டும்
சுருக்கமா சொல்லனும்னா உங்க மொபைல் இருக்கிறது உங்க கைல but மொத்த தகவலும் அவன்கிட்ட போய்டும் அப்புறம்.....
நா சொல்றத பண்ணலேனா நீ செய்த விஷயங்களை உன் பெற்றோர் அல்லது relativesku அனுப்பிடுவேன் அப்டின்னு பயம்புருத்துவான்
நீ பயப்படனும்னு கொஞ்ச தகவலை அனுப்பவும் செஞ்சிடுவான்
உங்க வீட்டுல இருந்து கேப்பாங்க
நீயும் அடுத்த விஷயம் leak ஆக கூடாதுனு அவன் சொல்றத வேறு வழி இல்லாமல் செய்ய தொடங்குவ
*So, automatically you are forced to play this game*
 ஏன் இதை விளையாடனும் ?! ஏன் இது இவ்ளோ கொடூராமா இருக்குனு தெரிஞ்சும் விளையாடுறாங்க?! இதற்கு விடை ரொம்ப சின்னது
1)They are all lonely people அதாவது தனிமை ல ரொம்ப ஏங்கி போய் இப்டியான game uh பாதத்தும் அது மேல வர ஒரு விதமான ஈர்ப்பு 2) ஆர்வக்கோளாறு ..சரி இதுல என்னதான் இருக்குனு பாத்துருவோம் உள்ள போய் உயிர விட்றது !!!
சரி இவங்க எல்லாரும் விரும்பி தான் இதலாம் செஞ்சு suicide பண்ணிக்கிறாங்களானா அதுவும் இல்ல ... அப்போ என்னதான் நடக்குது இங்க அப்டின்னு பாத்தா அந்த blue whale game online ல கிட்டத்தட்ட 5000 memebers ஆல நடத்தபட்டுட்டு இருக்கு அதுல 85% hackers சொன்னா நம்ப மாடீங்க ஆமா இது நடந்துற peoples எல்லாமே #phishing தெரிஞ்சவங்க அதாவது நல்லா hacking படிச்சு knowledge உள்ளவங்க....இந்த game uh கண்டுபுடிச்ச அந்த administrator அத அப்டியே இந்த hacking குரூப் கிட்ட குடுத்துட்டான் so its now been handled by those hackers...
சரி இப்போ இவன் என்ன செய்றான்னா அந்த #BW link உள்ள போய் நீங்க register பண்ணதுமே உங்க account uh hack பண்ணிருவான் அது உங்க fb id , gmail even உங்க mob num உம் hack பண்ணிருவாங்க...thn உங்க fb accnt ல சம்மந்தனே இல்லாம posts வரும் ... உங்க accnt uh அசிங்கப்படுத்துவாங்க... அது மூலமா உங்களுக்கு mental torchure குடுப்பங்க உங்கள அத செஞ்சே தீரனும் னு pressure பன்வாங்க...and உங்க Num கு calls கூட வரலாம் ... இவ்ளோ pressure uh நெனச்சி நமக்கே நெனச்சிப்பாக்க பயமா இருக்கும்போது ஒன்னுமே தெரியாத சின்ன பசங்க என்ன பண்ணுவாங்க 😞😞 so இப்டிதான் பல உயிர எடுத்துருக்காங்க..
Ok coming to the end இதுக்கு solution ரொம்ப simple ... 1st உங்க வீட்ல or தெரிஞ்ச சின்ன பசங்க யாரா இருந்தாலும் அவங்க அவங்கள அவ்ளோவா net , browsimg லாம் பண்ண விடாதீங்க அவங்க என்ன net ல பாக்குறங்கன்னு நீங்க check பண்ணிட்டே இருக்குறது நல்லது... அவங்கள தனியா விட்றது நல்லது இல்ல... and most important one எக்காரணத்த கொண்டும் எவன் கேட்டாலும் link uh தயவு செஞ்சி share பண்ணாதீங்க இது என்னோட humble reqst 🙏🏼🙏🏼
Mostly My req Share Other Grps And Relatives plzzzz😒
இதுக்கும் மேல  தெரிஞ்சிக்கணும்னா  நீங்க இந்த வீடியோ வ பாருங்க...அப்புறம் புரியும் ....please dont play this game ....

சனி, 19 ஆகஸ்ட், 2017

தேசிய அளவிலான 2017 - 18 பாரதியார் தின / குடியரசு தின குழுமம் போட்டிகள்

தேசிய அளவிலான 2017 - 18 பாரதியார் தின / குடியரசு தின குழுமம் போட்டிகள்

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் அவசியம் - மத்திய அமைச்சர் விஜய்கோயல்...
'பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் கட்டாயமாக்கட்டுள்ளன. இவற்றைக் கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்க்கக்பட்டுள்ளதாக' மாநிலங்களவையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் அறிவித்துள்ளார்.

'சிபிஎஸ்இ பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளைப் போன்றே மாநில கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் செயல்பட வேண்டும். அனைத்துப் பள்ளியிலும் மைதானங்கள், விளையாட்டுக்கான உபகரணங்களையும், கருவிகளையும் கொண்டிருக்க வேண்டும், உடற்கல்வி போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக'த் தெரிவித்த மத்திய அமைச்சர் விஜய்கோயல், 'ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 45 நிமிடங்கள் விளையாட்டு அல்லது உடற்கல்வி என்று நேரம் ஒதுக்க வேண்டும். இதைப்போலவே, யோகா, நீச்சல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட எட்டு அம்சங்களில் இரண்டு அம்சங்கள் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கட்டாயம்' என்றும் அறிவித்திருக்கிறார்.
பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமாக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

செவ்வாய், 18 ஜூலை, 2017

காமன்வெல்த் போட்டியில் அரசுப்பள்ளி மாணவி பங்கேற்பு

திங்கள், 17 ஜூலை, 2017

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு ஒடுகத்தூர் மாணவி தேர்வு...

ஒடுகத்தூரை அடுத்த மலையாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன் மகள் ஹேமமாலினி. இவர் தேசிய, தென்னிந்திய மாநில அளவில் பல தங்கம், வெள்ளி பதங்கங்களை வென்றுள்ளார்.

அணைக்கட்டு,

ஒடுகத்தூரை அடுத்த மலையாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன் மகள் ஹேமமாலினி. இவர் தேசிய, தென்னிந்திய மாநில அளவில் பல தங்கம், வெள்ளி பதங்கங்களை வென்றுள்ளார். இவர், நாளை (திங்கட்கிழமை) முதல், 23–ந்தேதி வரை இங்கிலாந்து நாட்டில் உள்ள பகாமஸ் பகுதியில் நடைபெறும் காமன்வெல்த் இளைஞர்களுக்கான தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இதற்காக அவர் இங்கிலாந்துக்கு பயணம் செய்துள்ளார்.

இவர், தேசிய அளவில் 3 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் தென்னிந்திய அளவில் 3 தங்கப்பதக்கம், மாநில அளவில் 11 தங்கப்பதக்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

2011–ம் ஆண்டு துருக்கியில் உலக பள்ளிகள் அளவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு 7–ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய மற்றும் தமிழ்நாடு மாநில அளவில் 16 வயது முதல் 18 வயது பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர், ஒடுகத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 முடித்து விட்டு, பொறியியல் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்துள்ளார்.

வியாழன், 13 ஜூலை, 2017

தொடக்கக்கல்வி - பள்ளிக்கல்வி மூலம் நடத்தப்படும் மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் இனி உயர் தொடக்கக்கல்வி மாணவர்களும் பங்கேற்கலாம் - இயக்குனர் செயல்முறைகள்....

வெள்ளி, 2 ஜூன், 2017

மாநில அளவிலான செஸ் போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் !!

செவ்வாய், 30 மே, 2017

விளையாட்டை பாடமாக சேர்க்க மத்திய அரசு முடிவு

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் கூறியதாவது: ஒவ்வொருவருடைய வாழ்க்கை யிலும் விளையாட்டு என்பது ஒருங்கிணைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பள்ளிப் பாடத்தில் விளையாட்டு கல்வியைப் புகுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் அடுத்தடுத்துச் செல்ல பள்ளியில் இருந்தே குடும்பத்தின ரும், சமூகத்தினரும் அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிப்பார்கள் என நம்புகிறேன். விளையாட்டு உடல் மற்றும் மன ரீதியாக மாற்றத்தைத் தருவதுடன், குழு மனப்பான் மையையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் கலாச்சார விளையாட்டான கபடி மற்றும் கோ கோ-வை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சியை பிரதமர்எடுத்து வருகிறார்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

புதன், 17 மே, 2017

ஆசிரியர்களுக்கு வெயிலில் பயிற்சி

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கு(பிஇடி) 3 நாள் பயிற்சியை நடத்த முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி நேற்று முதல் 18ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சிக்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களுக்கு செல்போன் மூலம் அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. 
நேற்று காலை மாவட்ட அலுவலகங்களில் குவிந்த விளையாட்டு ஆசிரியர்களுக்கு திறந்தவெளி மைதானத்தில் புதிய விளையாட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது, பீச் வாலிபால், உள்ளிட்ட விளையாட்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. கோடையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் விளையாட்டு ஆசிரியர்கள் வெயிலில் பயிற்சி எடுத்து அவதிப்பட்டனர். இது குறித்து பள்ளிக்் கல்வி இயக்குநருக்கு புகார்கள் அனுப்பியும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என விளையாட்டு ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மேலும், இந்த பயிற்சியை பள்ளி திறந்த பிறகு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

சனி, 6 மே, 2017

மாநில அளவிலான செஸ் போட்டியில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன் ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி


ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார்.
இவரது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி. உடன்பிறந்தவர்கள் 4 பேர். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தந்தை சேலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தினக்கூலி. தாயார் நடைபாதையில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்பவர். நடராஜன் தனது 20 வயது வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடினார். அதன் பிறகே தீவிர கிரிக்கெட்டுக்கு மாறினார். சென்னைக்கு இடம் பெயர்ந்து டிவிசன் அளவிலான போட்டிகளில் விளையாடி முன்னேறினார்.
அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டியாகும். கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக களம் இறங்கினார்.
அது தான் நடராஜனை வெகுவாக அடையாளம் காட்டியது. அவரது பந்து வீச்சை, வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரகுமானின் பந்து வீச்சு போன்று இருப்பதாக வர்ணிக்கப்பட்டது. அது மட்டுமின்றி தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு எதிரான சூப்பர் ஓவரில் 6 பந்துகளையும் துல்லியமாக யார்க்கராக போட்டு கலங்கடித்தார். இறுதிகட்டத்தில் நேர்த்தியாக பந்து வீசும் பாங்கு, ஐ.பி.எல். அணி நிர்வாகிகளை கவர்ந்தது. அதன் தாக்கம், இன்று அவரை கோடீசுவரர் ஆக்கி இருக்கிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
டி.நடராஜன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால், தினக்கூலிக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்திருப்பேன். சொந்த ஊரில் டென்னிஸ் பந்தில் விளையாடி நிறைய கோப்பைகளை வென்று இருக்கிறேன். டிவிசன் போட்டியில் ஆடிய போது எனது திறமையை கண்டுபிடித்து ஊக்குவித்தவர், பயிற்சியாளர் ஜெயபிரகாஷ். அவர் தான் எனது பெற்றோரிடம் பேசி என்னை சென்னையிலேயே தங்கியிருந்து விளையாட வைத்தார். நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் எல்லா பெருமையும் அவரைத் தான் சாரும். ஏலத்தில் எடுக்கப்பட்ட தகவலில் முதலிடம் அவரிடம் தான் பகிர்ந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார்.
மேலும் அவர், ‘எனது முன்மாதிரி ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் ஆவார். ஐ.பி.எல். தொடரின் போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்’ என்றார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணிக்காக ஆடிய முருகன் அஸ்வின், திருவள்ளூர் வீரன்சுக்காக ஆடிய சஞ்சய் யாதவ் முறையே ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி, கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர்.