பான் கார்டு (PAN CARD ) வைத்து இருப்பவர்களா நீங்கள் ? இந்த பதிவை பின்பற்றுங்கள் இல்லை என்றால் Rs 10000// அபராதம்...
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 272 பி இன் கீழ், பயன்பாட்டில் இல்லாத பான் கார்டை
நான்(PAN- PERMANENT ACCOUNT NUMBER) வைத்திருப்பவர்கள் அனைவரும் பான் கார்டுடன் கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.
மேலும் இதற்காக கடைசி தேதி 2021 மார்ச் 31ம் தேதி என கூறியுள்ளது. அவ்வாறு இணைக்கவில்லை என்றால் உங்கள் கார்டு செல்லாமல் போய்விடும் மேலும் முக்கிய பிரச்சனையாகஉங்களுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இணைப்பதற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். பான் கார்டு தொடர்பான தவறான தகவல்களை வழங்கினால், ரூ .10,000 அபராதம் விதிக்கப்படுவதாக வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் தெரிவித்திருந்தார்.
மேலும், சில பரிவர்த்தனைகளில், பான் அட்டை (PAN CARD) தொடர்பான தகவல்களை நிரப்புவது கட்டாயமாகும், அங்கு பான் அட்டை விவரங்களை வழங்காததற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். முறையாக பான் கார்டு ஆதார் அட்டை இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோர் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
முன்னதாக வருமான வரித் துறை ஆதார் இல்லாத பான் கார்டை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யலாம் என்று கூறியிருந்தது. மேலும், வரி செலுத்துவோர், வருமான வாரியை தாக்கல் செய்யவும் முடியாது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் கீழ், வருமான வரி தாக்கல் செய்யும் ஒவ்வொரு குடிமகனும் பான் மற்றும் ஆதார் அட்டையை (Aadhaar Card) இணைப்பது அவசியம்.
இரண்டு ஆவணங்களும் இணைக்கப்படவில்லை என்றால், வரி செலுத்துவோரின் வரி ஏற்றுக்கொள்ளப்படாது மேலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.உங்கள் பான் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை சரிபார்ப்பது எப்படி? இதை சரிபார்க்க, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அணுகலாம்.
www.incometaxindiaefiling.gov.in
எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் முறைஉங்கள் தொலைபேசியில், IDPN என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு ஆதார் எண் மற்றும் பான் எண்ணை உள்ளிடவும்.
இந்த தகவலை 567678 அல்லது 56161 க்கு எஸ் எம் எஸ் அனுப்பவும். ஆதார் பான் அட்டையை ஆன்லைன் மூலமாகவும் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று சுலபமாக இணைக்கலாம்....
............................