>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
TEACHERS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TEACHERS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 ஏப்ரல், 2023

கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள்


கனவு ஆசிரியர் தேர்வின் முதல் நிலைத்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள் ! 

திரையில் தோன்றுவதைப் படிப்பதற்கு மடிக்கணினி / மேசைக் எளிதாக கணினியில் தேர்வை எழுத நாங்கள் பரிந்துரைக்கிறோம் . உங்களிடம் இவை இல்லையென்றால் , திறன்பேசியின் கூகுள் குரோம் உலாவியின் வாயிலாக மட்டும் தேர்வை எழுதலாம் . ஐபோனைப் ( iphone ) பயன்படுத்தக்கூடாது.

You have to log into your EMIS website account, using your EMIS ID and password. There will be a 'Take Test' button that will be visible to you at 11:30.

இன்று 11.30 மணிக்கு தொடங்வுள்ள கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள் -++


 Download here

வெள்ளி, 4 நவம்பர், 2022

PEER Group Learning - மாணவர்களே சக மாணவர்களுக்கு கற்பிக்க ஊக்கவிப்போம்

 PEER Group Learning - மாணவர்களே சக மாணவர்களுக்கு கற்பிக்க ஊக்கவிப்போம்

ஆறாம் வகுப்புக்கு மேல், குறிப்பாக ஒன்பதாம் வகுப்புக்கு மேலான வளரிளம் பருவத்தினர் (adolescents) குறித்த பிரச்சினைகள் இன்று விடையற்ற கேள்விகளாக நம் முன் நிற்கின்றன. இந்தச் சிறார்கள் வன்முறை, போதைப் பழக்கம், ஆன்லைன் கேமிங் போன்ற சூதாட்டங்களிலும், வேறு பல சுய அழிவு/சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுத் தங்களை இழந்து வருகிறார்கள். கல்வி நிலையங்கள், சமூகம், பெற்றோர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.

வளரிளம் பருவத்தினரைச் சமூக மேம்பாட்டுச் (socially constructive) செயல்களில் ஈடுபடவைப்பது அவர்களுக்குப் பொறுப்பையும் முதிர்ச்சியையும் அளிக்கும். அத்தகைய ஈடுபாடுகள், அவர்களைப் பேயாய்ப் பிடித்தாட்டும் நுகர்பொருள் கலாச்சார மோகம், பகட்டு உலகின் பளபளப்பு, பிறர் மீதான பொறாமை, சுய பச்சாதாபம் போன்றவற்றிலிருந்து காத்து, பொறுப்புடைய மனிதர்களாக்கும். அதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்க விரும்புகிறேன்.

 

வாசிக்கும் தமிழகம்: பள்ளிகளில் வளரிளம் பருவத்து மாணவர், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்ற மாணவர்களுக்கு வாசிக்கக் கற்றுத் தருவதுதான்அந்தத் திட்டம். தொடக்கக் கல்வி வகுப்பு மாணவருக்கு நன்கு வாசிக்கத் தெரிந்த நடுநிலை வகுப்பு மாணவரோ, உயர், மேல்நிலை வகுப்பு மாணவரோ, அதே வகுப்பில் வாசிக்கத் தெரிந்த சக மாணவரோ யார் வேண்டுமானாலும் கற்பிக்கலாம். தங்களைவிட வயதில் / வாசிக்கும் திறன் குறைந்த மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணி வளரிளம் பருவத்து மாணவருக்கு மிகுந்த பொறுப்பு, பெருமை, நிறைவு, மகிழ்ச்சியை அளிக்கும். அவர்களது வாழ்விற்கு அர்த்தமும் அளிக்கும்.



ஆசிரியரிடமிருந்து கற்பதைவிட மற்ற குழந்தைகளிடமிருந்து, தங்கள் வயதே உடைய, அல்லது வயதில் சிறிது மூத்த குழந்தைகளிடமிருந்து, சிறப்பாகவும் ஆர்வத்துடனும் குழந்தைகள் கற்கின்றனர் என்பது உலகெங்கும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆகவே இத்திட்டம் கற்பிக்கும் வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து கற்கும் குழந்தைகளுக்கும் பெரும் பலனளிக்கும்.


 

திட்ட வடிவம்:

# தமிழ்நாட்டின் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஒரே சமயத்தில் இதை அறிமுகப்படுத்தலாம்.

 

# அனைத்துப் பள்ளிகளிலும் 6 – 12 வகுப்பு மாணவர்களில் நன்கு வாசிக்கும் திறன் கொண்ட மாணவரை ஆசிரியர் இனம்காண வேண்டும்.

# அவ்வாறு அறியப்பட்ட மாணவர்களில், மற்ற மாணவருக்குக் கற்பிக்கும் விருப்பமுடைய மாணவருக்குத் தலைமை ஆசிரியர் / ஆசிரியர் அழைப்பு விடுக்கலாம். இந்தப் பணியின் பெருமையையும் பலனையும் விளக்க வேண்டும்.

# திட்டம் வாரம் இரண்டு நாட்கள் நடைபெறும்.

# ஒவ்வொரு ஆசிரிய-மாணவருக்கும் வயதில் சிறிய வகுப்பு மாணவர் 10-15 பேருக்குக் கற்பிக்கும் பொறுப்பை அளிக்கலாம்.

# சிறப்பாகப் பணிபுரிந்து, பல மாணவர்களுக்கு வாசிக்கும் திறனை மேம்படுத்திய மாணவ-ஆசிரியர்களுக்கு அங்கீகாரம், பாராட்டு, சான்றிதழ் போன்றவற்றை அளிக்கலாம்.

# இந்தச் செயல்பாடு பள்ளி நேரத்திற்குப் பிறகே நடைபெறும்.

# மாணவ-ஆசிரியர், மாணவர் இருவரும் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஊர்/ தெருக்களில் வசிப்பவராதலால், பள்ளி நேரத்திற்குப் பிறகு இந்த வகுப்புகளுக்கு வருவதில் சிரமம் இருக்காது. தற்போது ‘இல்லம் தேடிக் கல்வி’ வகுப்புகள்போல் நடத்தலாம்.

# வகுப்புகள் பள்ளி வளாகத்தில் நடைபெற வேண்டும். பள்ளி வளாகம் மாணவரின் திறன் வளர்க்கப் பயன்படுத்தப்பட வேண்டும். பள்ளி சமுதாயத்தின் சொத்து என்பது அனைவராலும் உணரப்பட வேண்டும்.

# மாணவ-ஆசிரியர், மாணவர் இருவரும் பள்ளி நேரத்திற்குப் பிறகு, சிறிது நேரம் வீட்டிற்குச் சென்றுவிட்டு, பிறகு இந்த செயல்பாட்டுக்கு வரலாம்.

# 1-5 வரை மட்டும் வகுப்புகள் கொண்ட பள்ளிகளில் கற்பிப்பதற்கான உயர் வகுப்பு மாணவர் இல்லையாதலால், அவர்களுக்கு அருகிலிருக்கும் நடு / உயர் / மேல் நிலைப் பள்ளி மாணவர், அருகில் இருக்கும் ஊர்களைச் சேர்ந்தவர்கள் கற்பிக்கலாம்.

# மாணவரின் வயதிற்கு ஏற்ற புத்தகங்களைப் பள்ளி நூலகங்களில் இருந்து ஆசிரியர் / நூலகர் தேர்ந்தெடுத்து, இந்த செயல்பாட்டுக்கு அளிக்கலாம். அதற்கு உரிய தகுதியும் பொறுப்பும் ஆசிரியருக்கு நிச்சயம் உண்டு. அத்துடன், இன்று பள்ளிக் கல்வித் துறை ஒரு பெரும் முயற்சியைச் செய்திருக்கிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் பட்டியலிடப்பட்டு, கணினியில் ஏற்றப்பட்டு, துறையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. துறை அலுவலகத்திலிருந்தே எந்தப் புத்தகம், எந்த நூலகத்திலிருக்கிறது, யாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இயலும்.

# திட்டம் முழுதும் பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்பில் / மேற்பார்வையில் நடைபெறும். இன்றைய தமிழக அரசின் முக்கிய முன்னெடுப்பு பெற்றோர், உள்ளாட்சிகள் இணைந்த, பொறுப்பும் அதிகாரமும் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இயங்கிவருவது. தங்கள் குடும்பத்து இளைஞர்கள் சீரழியாமல் காப்பதில் பெற்றோரும் ஊர் மக்களும் அன்றி, யாருக்கு அதிக அக்கறை இருக்க முடியும்?

# மேலாண்மைக் குழு உறுப்பினர் வாரம் இரண்டு நாட்கள் பொறுப்பினைப் பகிர்ந்துகொண்டோ, அல்லது குழுவின் கல்வியாளர், அவ்வூரைச் சேர்ந்த ‘இல்லம் தேடிக் கல்வி’த் தன்னார்வலர் கண்காணிப்பிலோ திட்டம் நடைபெறும். நூலகரும் விருப்பமுடைய ஆசிரியரும் பங்கேற்றால் கூடுதல் நலம்.

# இந்தத் திட்டத்தால் அரசுக்கு எந்தக் கூடுதல் நிதிச் சுமையும் இல்லை. கற்கும் மாணவர், கற்பிக்கும் மாணவர், கண்காணிக்கும் மேலாண்மைக் குழுவினர் அனைவரும் பள்ளியையோ, அருகமைப் பகுதிகளையோ சேர்ந்தவர். புத்தகங்கள் பள்ளி நூலகம் அல்லது ஊர் நூலகத்தைச் சேர்ந்தவை. செலவு இல்லை. வரவோ அளப்பரியது. தமிழ்நாட்டின் பல லட்சம் மாணவர்கள் - இளைஞர்கள் அழிவிலிருந்து மீட்கப்பட்டு, ஒளிபடைத்த எதிர்காலம் காண்பர். குழந்தைகள் கற்றல் திறன்பெறுவர். - வே.வசந்தி தேவி கல்வியாளர் , முன்னாள் துணை வேந்தர்



******************************************

வியாழன், 3 நவம்பர், 2022

வெள்ளி, 14 அக்டோபர், 2022

TNSED APP LIBRARY BOOKS NEW UPDATES


📕TNSED APP LIBRARY BOOKS NEW UPDATES......

✅❓நூலக புத்தகங்களை பதிவேற்றம் செய்வது எப்படி ?


✅❓புத்தகங்களின் பெயர்களை மாற்றம் செய்வது எப்படி?


 ✅❓புத்தகங்களின் எண்ணிக்கையை மாற்றம் செய்வது எப்படி 


✅❓பதிவேற்றம் செய்த புத்தகங்களை பார்ப்பது எப்படி?


CLIK HEARE. LINK....

https://youtu.be/Ayd5gw5-nG0

✅✅அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு

www.kalvicikaram. blogspot. In.

அனைவருக்கும் பகிருங்கள் நன்றி

........................................................................

வியாழன், 29 செப்டம்பர், 2022

அறிவியல் அறிஞர் வரலாறு......

 *தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*

                                                                                                                                                                                               *செப்டம்பர் 25, 1920 - இந்திய விண்வெளித் துறையின் வித்தகர், பொறியாளர் ”சதீஷ் தவான்” பிறந்த நாள்*

                                                                                                                                                                                                 # ஆங்கில இலக்கியம், இயற்பியல், கணிதத்தில் பட்டங்கள் பெற்றவர். இயந்திரப் பொறியியல் துறையில் அமெரிக்காவில் பட்டம் பெற்றார். வானூர்திவியல் மற்றும் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

                                                                                                                                                                                                # இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிரியராக இணைந்து, 42வது வயதில் அதன் இயக்குநராக உயர்ந்தார்.

                                                                                                                                                                                                   # விக்ரம் சாராபாய் இறப்புக்கு பின் அமெரிக்காவில் இருந்த சதீஷ் தவானை இந்திரா காந்தி அழைத்தார். அவரது அழைப்பின் பேரிலேயே இந்திய விண்வெளித்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

                                                                                                                                                                                                   # இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்ததால் அதனுடன் சேர்த்தே விண்வெளி ஆய்வுப் பணிகளை செய்ய முடியும் என்றார். விண்வெளி தலைமையகம் பெங்களூருக்கு மாறியது. அப்போது இவர் தலைமையில் உருவானதுதான் இஸ்ரோ.

                                                                                                                                                                                                  # திறமையானவர்களை அடையாளம் காண்பதில் வல்லவர். அணுசக்தித் துறையில் இருந்த பிரம்ம பிரகாஷை, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவர் ஆக்கினார். அப்துல்கலாமை இஸ்ரோவுக்குள் கொண்டு வந்ததும் இவரே.

                                                                                                                                                                                                 # இன்சாட், பி.எஸ்.எல்.வி., ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள் திட்டங்களின் வெற்றிகளுக்கு வழிவகுத்தவர் தவான்!

                                                                                                                                                                                                                                                                          # வெற்றிகளை சகாக்களுக்கு பகிர்ந்துவிட்டு, தோல்விகளைத் தோளில் தாங்குவார். எஸ்.எல்.வி - 3 தோற்றபோது அத்திட்டத்தின் தலைவரான அப்துல் கலாமை உள்ளே அமர வைத்துவிட்டு, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு தானே பதில் அளித்தார். அடுத்த முறை அத்திட்டம் வெற்றி பெற்றபோது கலாமை பேச வைத்தார்.

                                                                                                                                                                                                         # வானூர்திகளின் பாகங்கள் காற்றுடன் உராய்வது பற்றி ஆய்வுகள் செய்து துல்லியமாக அதன் அளவைக் கணக்கிட்டார். ஸ்கின் ஃப்ரிக்ஷன் (Skin friction) என்கிற அந்தத் தொழில்நுட்பம் பின்பு உலகெங்கும் பயன்படுத்தப்பட்டது.

                                                                                                                                                                                             # பறவைகள் மீது ஆர்வம் அதிகம். அவை பறக்கும் விதங்களை உன்னிப்பாக கவனித்து, ஆராய்ச்சிகளை மேற்கொள்வார். அடிக்கடி பழவேற்காடு ஏரிக்கு செல்பவர், பறவைகளை நுட்பமாக கவனித்து படங்கள் வரைவார். அவற்றின் தொகுப்பே ‘Bird Flight' புத்தகம்.

                                                                                                                                                                                                   # ஓய்வுக்குப் பின்னர் அரசு பல்வேறு பொறுப்புகள் அளித்தும் அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். திறமையானவர்களுக்கு வழிவிட வேண்டும் என்கிற அக்கறையின் வெளிப்பாடு அது!



************************************

புதன், 15 ஜூன், 2022

2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியீடு....

 2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியீடு

The CPS Account Slips for the year 2021-22 has been hosted in the CPS portal except for the local body employees.

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்...

2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...

வலைதள முகவரி:

CLIK HEARE WEB SITE...

http://cps.tn.gov.in/public/index.php

சனி, 11 ஜூன், 2022

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு - தமிழ்

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு - தமிழ்

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு 

பாடம் : தமிழ் 

பருவம் : 1 

எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேடு தமிழ் முதல் பருவம்.








செவ்வாய், 5 ஏப்ரல், 2022

எண்ணும் எழுத்தும் மூன்றாவது கட்டகம். இன்று முதல் பயிற்சி மேற்கொள்ளலாம்*.....

*எண்ணும் எழுத்தும் மூன்றாவது கட்டகம். இன்று முதல் பயிற்சி மேற்கொள்ளலாம்*.....

எண்ணும் எழுத்தும் மூன்றாவது கட்டகம். இன்று முதல் பயிற்சி மேற்கொள்ளலாம்.




Click here




.......************************************.....

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

தொடக்கக் & உயர் தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள் -கையேடு-PDF

 




தொடக்கக் & உயர் தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள் -கையேடு-PDF

CLIK HEARE 👇👇👇👇





***********************************************-----*************************

வியாழன், 25 நவம்பர், 2021

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

 



பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்த பின்னர் , அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது : 

( i ) . 2021-2022ஆம் கல்வியாண்டில் , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாடங்களான தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , தாவரவியல் , விலங்கியல் , பொருளியல் . வரலாறு , புவியியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் காலியாகவுள்ள 2,774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள ஊர்கள் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு , சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் , மேல்நிலைப் பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை கொண்ட குழு மூலமாக , ஒப்பந்த அடிப்படையில் ( Contract Basis ) தற்காலிகமாக நிரப்பிக் கொள்வதற்கு பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது . 

( ii ) இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை , அவர்கள் நியமனம் செய்யப்படும் நாளிலிருந்து ஐந்து மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மற்றும் பதவி உயர்வு மூலம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படும் வரை இவற்றில் எது முந்தியதோ அது வரையில் மட்டும் நிரப்பிக் கொள்வதற்கு பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது . 

( iii ) . இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில்    ( Contract Basis ) தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ .10,000 / - வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும் . 

( iv ) . இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மூலம் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது . 

இவ்வாறு நியமிக்கப்படும் தற்காலிக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கும் வகையில் ஏற்படும் செலவினம் ( 2774 x ரூ .10,000 × 5 மாதங்கள் ) ரூ .13,87,00,000 / -ஐ ரூபாய் பதிமூன்று கோடியே எண்பத்தேழு இலட்சம் மட்டும் ) நிதி ஒப்பளிப்புச் செய்து ஆணை வழங்கப்படுகிறது .


அரசாணை பதிவிறக்கம் செய்திட

Touch Here to download




..........................................................

சனி, 30 அக்டோபர், 2021

ஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும்.

 கூட்டுறவு சங்கம் அமைப்பு


உறுப்பினர்கள் பேரவை:

✍கூட்டுறவு தத்துவத்தின்படி உறுப்பினர்களின் பேரவையானது சங்கத்தின் ஒர் உயர்ந்த நிலை அமைப்பாகும்.

✍ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைவதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஒருமுறையாவது பேரவை கூடி கீழ்க்கண்டுள்ள பொருட்கள் பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

✍ஆண்டு வரவு,செலவு திட்டம் ஒப்புதல் செய்தல்.

✍தணிக்கை அறிக்கை மற்றும் ஆண்டறிக்கையும் வாசித்து அங்கீகரித்தல்.

✍நிகர லாபப் பங்கீட்டினை அங்கீகரித்தல்.

✍சங்கத்தின் செயல்திட்டத்தை மதிப்பிடுதல்.


✍முந்தைய ஆண்டில் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் சேவைகளை கலந்துரையாடல். (அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சங்கம் செய்திருந்த சேவைகளின் விவரங்களை பரிசீலித்தல்.)

புதிய துணைவிதிகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது ஏற்கனவே உள்ள துணை விதிகளுக்கு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல்.

✍தகுதியற்ற உறுப்பினரை விலக்குவது பற்றி முடிவெடுத்தல்.
(கடன் பெற்று மூன்று மாதம் திருப்பி கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்கள்)

✍சங்கப் பேரவை நிர்வாகக் குழுவால் கூட்டப்படவேண்டும்.

✍சங்க பேரவையை சங்க அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைமையிடத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வசதியான இடத்தில் கூட்ட வேண்டும். 

✍உறுப்பினர்களுக்கு துணை விதிகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பேரவைக் கூட்ட, முன் அறிவிப்பு அனுப்ப வேண்டும்.

நிர்வாகக் குழு:

✍ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகம் உறுப்பினர்களால் சட்டம் விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.

✍நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவர் தலைவராகவும் இன்னொருவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

✍நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

நிர்வாகக் குழு கூட்டம்
நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு குறையாமல் முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும்.

✍இக்கூட்டத்தை சங்கத்தின் செயல் எல்லையில் எங்கு வேண்டுமானாலும் கூட்டலாம்.

✍செயலாளர், தலைவருடன் அல்லது அவர் இல்லாத நேர்வில் துணைத்தலைவருடன் கலந்து, நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

✍மேலாண்மை இயக்குநர் இல்லாதபோது தலைவர் நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டவேண்டும்.

✍மூன்று மாதங்களுக்குள் குறைந்தது ஒரு முறையாவது நிர்வாகக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும்.


✍தலைவர் துணைத் தலைவர் தலைவர் பேரவைக் கூட்டத்தையும், நிர்வாகக்குழு கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தவேண்டும்.

✍சங்க துணை விதியில் குறிப்பிட்டுள்ளபடி சங்க நிர்வாகத்தை தலைவர் நடத்த வேண்டும்.

✍தலைவர் பதவி காலியாக உள்ளபோது, தலைவரின் அனைத்து அதிகாரங்களையும் துணைத் தலைவர் செயல்படுத்தலாம்.

கூட்டுறவு சங்கம் பார்வை👁👁👁👁

 கண்டிப்பாக தகவலை முழுவதும் வாசிக்கவும்...

Society Act-1983
Society Law-1988
ஒரு பார்வை...

✍கூட்டுறவு இயக்கத்தை முறையான வளர்ச்சி அடையச் செய்வதே கூட்டுறவுச் சட்டத்தின் நோக்கம்.

✍ஒவ்வொரு சங்கத்திலும் சட்டம் மற்றும் விதிப் புத்தகங்கள் கட்டடாயம் வைத்திருக்க வேண்டும்.🤦‍♂🤦‍♂

✍கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றிற்கு உட்பட்டுத்தான் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம் இருத்தல் வேண்டும்.

சட்ட விதிகள்

✍பிரிவு - 9 :
கூட்டுறவுச் சங்கத்தை பதிவு செய்தல் (120 நாட்கள்).
குறைந்தபட்சம் 25 உறுப்பினர்கள்...🤝🤝


✍பிரிவு - 1 விதி -9 :
பொதுவாக துணை விதித் திருத்தம் செய்தல் (120 நாட்கள்).
தேவைப்படும் போது DRO விடம் உறுப்பினர்கள் இணைந்து மாற்றலாம்.
உறுப்பினருக்கு நிர்வாக குழுவை மதிப்பிட உரிமை உள்ளது...

உறுப்பினர் யார் வந்து கேட்டாலும் பதில் சொல்லனுமா? என விதி ஒன்று கூட தெரியாமல் குதர்கமாக பேசக்கூடாது..

✍பிரிவு - 80:
தணிக்கை முடித்தல் (6 மாதங்கள்).

தேவையில்லாமல் காலம் கடத்திய பின் Audit பிரச்சனை என பொய் கூறக்கூடாது..😜😜

✍பிரிவு - 81:
விசாரணை முடித்தல் (3 மாதங்கள்).

தணிக்கை மீதும் , நிர்வாகம் மீதும் மேல்முறையீடு சார்பு.

✍பிரிவு - 87:
தண்டத்தீர்வை நடவடிக்கை முடித்தல் (6 மாதங்கள்).

நிர்வாக முறைகேடு கண்டறியப்பட்டால்..😀😀


✍பிரிவு - 88:
நிர்வாகக் குழுவை கலைக்க ஆணையிடுதல் (2 மாதங்கள்).

சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்...🤦‍♂🤦‍♂

✍பிரிவு - 88:
நிர்வாக குழு கலைப்பு காலம் (6 மாதங்களுக்கு மிகாமல்).

சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்...🤦‍♂🤦‍♂

✍பிரிவு - 89:
சில சூழ்நிலைகளில் தனி அலுவலர் நியமனம் (6 மாதங்களுக்கு மிகாமல்).

நிர்வாக குழு கலைக்கப்பட்டால்...
தேர்தல் கட்டுப்பாடு நடைமுறையில் கூட ...
உறுப்பினர் நலன் கருதி தனி அலுவலர் மூலமாக தாராளமாக (டிவிடண்ட்) பங்குத்தொகை வழங்கலாம்...😀😀

தேர்தல் காரணம் என பொய் சொல்ல கூடாது😜😜

✍பிரிவு - 36:
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தகுதியின்மை மற்றும் நீக்குதல்.

✍பிரிவு - 72 விதி 94:
நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்.🙊🙊


இலாபத்தில் வேலை செய்யும் சங்கங்கள்...
நிகர லாபத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் அதிக அளவு மாத மதிப்பூதியம்.

( உதாரணம்: தலைவர்/செயலாளர் - ரூ.1200 & இதர இயக்குநர்கள் - ரூ.2400 )
இப்ப பதவிக்கு ஏன் போட்டி போட்டுட்டு அரசியல் வருது என தெரியுதா?

👍முடிந்தால் ஆண்டறிக்கை நிர்வாக குழு பிரிண்ட் எடுத்து தர வேண்டும் தவறு ஒன்றும் இல்லை.

மாத ஆரம்ப இருப்பு தொகை , வரவு , மாத முடிவு தொகை & TDS தொகை... கூட்டம் கூட்டிய எண்ணிக்கை , கூட்டத்திற்கான டீ மிக்சர் செலவு ஆடிட் பண்ணுவதற்கான தொகை , ஆடிட் லஞ்சம் (தவறை பூசி மறைக்க) ஒன்று விடாமல் நிர்வாக குழு பிரிண்ட் தந்தால் நிர்வாகத்தில் எவ்வித குழப்பமும் இல்லை என அறிந்து கொள்ளலாம்.

👉🏼👉🏼இதில் ஆயுள் காப்பீடு என்று கொண்டுவந்தால் அதற்கான பாண்டை சார்ந்த ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும்.அந்த நிறுவனத்தின் பெயர் தெரிவிக்க வேண்டும்.
ஏனென்றால் அதையும் வருமான வரிக்கு உதவும்


மேலும் சில விதிமுறைகள்:

1. நாம் பெறும் கடன் (₹5,00,000) தொகையில் 10% (₹50,000)வைப்பு தொகையாக பிடித்தம் செய்து மீதம் வழங்கப்படும்.

2. மாதம் சிக்கன சேமிப்பு தொகை இடவேண்டும் குறைந்த பட்சம்₹500 முதல்

3 நாம் வைத்திருக்கும் வைப்புதொகைக்கு 50,000 க்கு 14% வட்டியும்,சேமிப்பு தொகைக்கு 8 & 8.5% வட்டியும்  கூட்டுறவு சங்க வழங்க வேண்டும்.

4. இந்த கணக்கீடு ஒவ்வொரு வருடமும் தணிக்கை முடித்து, 1.ஏப்ரல் முதல் அடுத்த வருடம் 31மார்ச் வரை இலாபத்தொகை (Dividend) பங்கீட்டு வழங்க வேண்டும்.




******-****-****----*--************