>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
EDUCATIONAL NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EDUCATIONAL NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 நவம்பர், 2024

E E STUDENTS WISE REPORT CARD 2024 -- 2025

 *EE students Wise Report Card 2024 - 2025*


முதல் பருவத்திற்குரிய மதிப்பெண் அறிக்கை (Report Card) தற்போது EMIS வலைத்தளத்தில் உள்ளது. 


ஒவ்வொரு மாணவரின் progress report பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Link Clik Heare.  ⬇⬇


https://emis.tnschools.gov.in/ennum-ezhuthum/ee-acadamic-report-card


*************************************

புதன், 9 அக்டோபர், 2024

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?

 களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?
👇👇👇👇👇

ஒருங்கிணைந்த நிதி மற்று மனித வள மேலாண்மைத் திட்டத்தின் (IFHRMS) செயலியான Kalanjiyam Appன் வழியே விழா முன் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறுவோர் இந்த App வழியே தங்களுக்கான விழா முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


👉🏼 *என்னென்ன விழாக்களுக்கு முன்பணம் பெறலாம்?*
👇👇👇👇👇
1. பக்ரித்
2. கிறிஸ்துமஸ்
3. தீபாவளி
4. ஈஸ்டர்
5. காந்தி ஜெயந்தி
6. புனித வெள்ளி
7. விடுதலை நாள்
8. கிருஷ்ண ஜெயந்தி
9. மே தினம்
10. மிலாடி நபி
11. மொகரம்
12. ஓணம்
13. பொங்கல்
14. ரம்ஜான்
15. குடியரசு தினம்
16. தெலுங்கு வருடப் பிறப்பு
17. விஜயதசமி
18. விநாயகர் சதுர்த்தி

(பட்டியலில் முதலாவதாக ஆயுதபூஜை தான் வரும். எனினும் அதற்கு விழா தேதி automatic enable option வரவில்லை. எனவே தற்போதைய நிலையில் அதற்கு விண்ணப்பிக்க இயலாது.)


👉🏼 *எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?*
👇👇👇👇👇

விழா நாளுக்குச் சரியாக 30 நாள்களுக்கு முன்னர் முதல் விண்ணப்பிக்கலாம்.
உதாரணமாக தீபாவளி 31.10.2024ம் தேதி எனில் 01.10.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இறுதியாகப் பெற்ற விழா முன்பணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்திய பின்பே விண்ணப்பிக்க வேண்டும்.


👉🏼 *எந்தத் தேதிவரை விண்ணப்பிக்கலாம்?*
👇👇👇👇👇

IFHRMSல் centralized payroll run செய்வதற்கு முன்பே பணம் வரவாகும்படி முன்தேதியிட்டு விண்ணப்பிப்பது நல்லது.

உதாரணமாக, மாதந்தோறும் 15 தேதிக்கு மேல் centralized payroll run செய்யப்படுமெனில், 14ஆம் தேதி பணம் வரவாகிவிட வேண்டும். Bill தயார் செய்து கருவூலத்தில் ஒப்படைக்க அலுவலகத்திற்கும் போதிய காலம் தேவை என்பதால், 8 - 10ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுவது நல்லது.


👉🏼 *எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?*
👇👇👇👇👇
IFHRMS மூலம் ஒரு நாள்காட்டி ஆண்டில் (January - December) ஒரு முறை மட்டுமே விழா முன்பணம்  அனுமதிக்கப்படும். பணம் வரவாகும் மாதத்தைத்தான் IFHRMS கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

உதாரணமாக, 2024 கிறிஸ்துமஸ்ஸிற்கு நீங்கள் விண்ணப்பித்தும் அலுவலக தாமதத்தால் 2025 ஜனவரி 1-ஆம் தேதி உங்களது கணக்கில் பணம் வரவானால் 2025 கிறிஸ்துமஸ்ஸிற்கு மீண்டும் விண்ணப்பித்தால் IFHRMS தானாகவே தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்து விடும். ஓராண்டில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு.

👉🏼 *எப்போது பிடித்தம் ஆரம்பமாகும் ?*
👇👇👇👇👇
பணம் வரவான அந்த மாத ஊதியத்திலேயே தவணை தொடங்கப்பட்டு ரூ.1000/- பிடித்தம் செய்யப்பட்டுவிடும். தொடர்ச்சியாக 10 மாதங்கள் தவணை பிடித்தம் செய்யப்படும்.



👉🏼 *எப்படி விண்ணப்பிப்பது?*
👇👇👇👇👇

Kalanjiyam Appல் Login செய்யவும்- Click here

பின் Advance - Festival Advance - Apply என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.

அதன்பின், Festival Name என்பதில் தாங்கள் விண்ணப்பிக்கும் விழாவைத் தேர்வு செய்தால், Festival Date - Advance Amount - Recovery no. of Installment உள்ளிட்டவை தானாகவே தோன்றும்.

இறுதியாக, Submit செய்ய வேண்டும்.


👉🏼 *விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைத்துவிடுமா?*
👇👇👇👇👇👇

ஒவ்வொரு நிதியாண்டிற்கும் முன்னதாக அவ்வாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (Budget) துறை வாரியான தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு அலுவலகத்திற்கும் கோரப்படும். விழா முன்பணத்தைப் பொறுத்தவரை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி கோரி விண்ணப்பிக்கப்படும். கோரப்பட்ட நிதி பெரும்பாலும் கிடைத்துவிடும் என்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைக்க வாய்ப்புண்டு.


ஒருவேளை ஆண்டுத் தொடக்கத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமிருந்து அதன்பின் நிரம்பியிருப்பின் பெறப்பட்ட நிதி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லாது போகலாம். அத்தகைய நிலையில் இருக்கும் நிதியில் விண்ணப்பித்த வரிசைப்படி முன்னுரிமை அளிக்கப்படக்கூடும்.


*பின் குறிப்பு :*
👇👇👇👇👇
தற்போது Appல் விண்ணப்பித்தாலே போதுமா என்பதை 02.10.2024ற்குப் பின்னர் தங்களது அலுவலகத்தைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.  ஏனெனில் இதுதான் முதல்முறை என்பதால் அந்தத் தேதிக்குப் பின்புதான் அலுவலகங்களுக்கே முறையான & தெளிவான வழிகாட்டல் கிடைக்கப்படக்கூடும்...
*****************-**----*************************---

வெள்ளி, 6 அக்டோபர், 2023

7TH SCIENCE POWERPOINT 7 TH, Power Point, TERM 1, TERM 2, TERM 3...

 

7 TH Science PowerPoint TERM -1

1 அளவீட்டியல்Tamil MediumDownload
2 விசையும் இயக்கமும்Tamil MediumDownload
3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்Tamil MediumDownload
4 அணு அமைப்புTamil MediumDownload
5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்Tamil MediumDownload
6 உடல் நலமும், சுகாதாரமும்Tamil MediumDownload
7 கனிணி காட்சித் தொடர்புTamil MediumDownload

Science PowerPoint TERM -2

1 வெப்பம் மற்றும் வெப்பநிலைTamil MediumDownload
2 மின்னோட்டவியல்Tamil MediumDownload
3 .நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்Tamil MediumDownload
4 .செல் உயிரியல்Tamil MediumDownload
5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்Tamil MediumDownload
6 கணினி வரைகலைTamil MediumDownload

Science PowerPoint TERM -3 

1 ஒளியியல்Tamil MediumDownload
2 அண்டம் மற்றும் விண்வெளிTamil MediumDownload
3 பலபடி வேதியியல்Tamil MediumDownload
4 அன்றாட வாழ்வில் வேதியியல்Tamil MediumDownload
5 அன்றாட வாழ்வில் விலங்குகள்Tamil MediumDownload
6 காட்சித் தொடர்பியல்Tamil MediumDownload

THANKS  ;; / By KALVI MATERIAL

6TH SCIENCE POWERPOINT 6 TH, Power Point, TERM 1, TERM 2, TERM 3

 

6Th Science PPT TERM -1

1.அளவீடுகள்Tamil MediumDownload
2 விசையும் இயக்கமும்Tamil MediumDownload
3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்Tamil MediumDownload
4 தாவர உலகம்Tamil MediumDownload
5 விலங்குலகம்Tamil MediumDownload
6 உடல் நலமும் சுகாதாரமும்Tamil MediumDownload
7 கணினி – ஓர் அறிமுகம்Tamil MediumDownload

6Th Science PPT TERM -2

1.வெப்பம்Tamil MediumDownload
2.மின்னியல்Tamil MediumDownload
3.நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்Tamil MediumDownload
4.காற்றுTamil MediumDownload
5.செல்Tamil MediumDownload
6.மனித உறுப்பு மண்டலங்கள்Tamil MediumDownload
7.கணினியின் பாகங்கள்.Tamil MediumDownload

6Th Science PPT TERM -3

1.காந்தவியல்Tamil MediumDownload
2.நீர்Tamil MediumDownload
3.அன்றாட வாழ்வில் வேதியியல்Tamil MediumDownload
4.நமது சுற்றுச்சூழல்Tamil MediumDownload
5.அன்றாட வாழ்வில் தாவரங்கள்Tamil MediumDownload
6.வன்பொருளும் மென்பொருளும்Tamil MediumDownload

THANKS ;

வியாழன், 13 அக்டோபர், 2022

சிறார் திரைப்படம் - The Red Balloon - மாணவர்களுக்கு கூற கதையின் சுருக்கம் தமிழில்

 



சிறார் திரைப்படம்: அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய திரைப்படம் - THE RED BALLOON


GOOGLE DRIVE LINK👇

https://drive.google.com/file/d/1-6zeHEtmIk32cwgi1ZkbUa2DjsMw8LJU/view?usp=drivesdk

*The Red Balloon*

குழந்தைகள் நேசம் செலுத்தும் பட்டியலில் ஐந்தறிவோ ஆறறிவோ கொண்ட உயிர்கள் மட்டுமல்ல. உயிரற்ற பொருட்களும் கூட அடங்கும். அவ்வகையில் உலகம் முழுக்க குழந்தைகளுக்கு பிரியமான விளையாட்டுப் பொருட்களின் பட்டியலில் பலூன் தவிர்க்க முடியாத ஒன்று. திருவிழா சமயங்களில் அவர்கள் கையில் இருக்கும் பலூன் வெடிக்காமல் வீடு வந்து சேர்ந்தால் அது தான் அவர்களின் அன்றைய பெரிய சாதனையாக இருக்கும். அப்படிப்பட்ட பலூன், குழந்தைகளின் சொல் பேச்சை கேட்கவும் துவங்கினால் அது எத்தனை வேடிக்கையாக இருக்கும். இப்படிபட்ட சில கற்பனையான, சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்தான் 1956 ஆம் ஆண்டு வெளியான தி ரெட் பலூன்…

*The Red Balloon (1956)*

ஆறுவயது சிறுவன் பாஸ்கல், பள்ளி செல்லும்போது உயரே தெருஓர தூணில் பறந்து கொண்டிருக்கும் காற்றடைத்த சிவப்புநிற பலூனை பார்க்கிறான். தூணில் ஏறி பலூனை விடுவித்துக் கொண்டு பலூனை கைப்பற்றும் அவன், கையிலிருக்கும் பலூனுடன் பேருந்தில் ஏற முயலும் போது நடத்துநர் “பலூனுக்கெல்லாம் பஸ்ஸில் இடமில்லை” என்பது போல மறுத்துவிடுகிறார்.

அதனால் ஒரு கையில் புத்தகப் பையினையும் ஒரு கையில் சிவப்பு பலூனையும் பிடித்துக் கொண்டே பள்ளிக்கு ஓடுகிறான். பள்ளிக்குள் பலூனுடன் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் பள்ளி ஊழியர் ஒருவரிடம் பலூனை ஒப்படைத்துவிட்டு வகுப்பிற்கு செல்லும் அவன் வீடு திரும்பும் போது அதனை பெற்றுக் கொள்கிறான். இப்படி அந்த சிவப்பு பலூன் அவனது தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிப் போகிறது....

மழை பொழியும் சாலையில் குடை பிடித்துச் செல்லும் ஒருவரிடம் தஞ்சம் கேட்டு குடைக்குள் அந்த பலூனை மழையில் நனையாமல் பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறான். வீடு வந்ததும் முதல் மாடியில் இருக்கும் பால்கனியில் பலூனை சுதந்திரமாக பறக்கவிட்டு தூங்கச் செல்கிறான். அந்த பலூன் உயிர் பெற்றுவிட்டது போல அவனை விட்டு எங்கும் போகாமல் அங்கேயே இருக்கிறது.

மறுநாள் காலையில், பள்ளிக்கு கிளம்பும் பாஸ்கலை, காற்றில் மிதந்தபடியே பின்தொடர்ந்து வருகிறது அந்த சிவப்பு பலூன். வழியில் ஒரு மூலையில் அச்சிறுவன் ஒளிந்து கொள்ள பலூன் அவனை தேடி கண்டுபிடிக்கிறது. அதன் பின் அந்த பலூன் ஒளிந்து கொள்ள பாஸ்கல் அதைத் தேடுகிறான். இப்படி பலூனும் பாஸ்கலும் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்...

பலூனுக்கு தான் பஸ்ஸில் அனுமதி இல்லையே. எனவே பாஸ்கல் மட்டும் பேருந்தில் ஏறிக்கொள்ள, பலூன் படுவேகமாக அந்த பேருந்தை பின் தொடர்கிறது. பாஸ்கலை தவிர, மற்ற மனிதர்களுக்கு இந்த காட்சி ஆச்சரியமூட்டுகிறது. குழந்தைகளை பொருத்தவரை பலூன் தங்களிடம் பேசத் துவங்கினால் கூட ஆச்சர்யப்படமாட்டார்கள், காரணம் எந்த ஒரு விளையாட்டுப் பொருளும் அவர்கள் கைபட்டதும் உயிர் பெற்றுவிடுகிறது. பாஸ்கலின் பலூனுக்கு அவன் மீது பெரிய பிரியம் தான். மற்றவர்கள் யாராவது பலூனை பிடிக்க முயன்றால் கைக்கு எட்டாமல் பறந்துவிடும். பாஸ்கல் கூப்பிட்டால் எங்கிருந்தாலும் பறந்து வந்து அவன் முன் ஆஜராகிவிடும்...

சாலையில் எதிரே நடந்து வரும் சிறுமி ஒருத்தி நீலநிற பலூனோடு செல்கிறாள். உடனே பாஸ்கலின் சிவப்பு நிற பலூன் அந்த பலூனை பின் தொடர ஆரம்பித்துவிடுகிறது. பாஸ்கல் தன்னுடையதை எடுத்துக் கொண்டு செல்கிறான். உடனே நீலநிற பலூன் சிறுமியின் கையிலிருந்து விடுபட்டு சிவப்பு பலூனை பின் தொடந்து வர சிறுமி ஓடி வந்து தன் பலூனை பெற்று செல்ல என காட்சிகள் மிக குஷியாக குழந்தைகளை மகிழ்விக்கிறது. சிவப்பு நீலத்தையும் நீலம் சிவப்பையும் பின் தொடர வேண்டியது காலத்தின் தேவை அல்லவா..?

இந்நிலையில் உயிர் கொண்டு பறக்கும் பாஸ்கலின் சிவப்பு பலூன் மீது மற்ற சிறுவர்களுக்கு பொறாமை ஏற்படுகிறது. அந்த பலூனை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் பாஸ்கலை அவர்கள் ஒரு குழுவாக இணைந்து துரத்துகிறார்கள். பாஸ்கலும் அவனது பலூனும் அவர்களுக்கு போக்கு காட்டி ஓடுகின்றன. ஒரு கட்டத்தில் குறும்புக்கார சிறுவன் ஒருவன் உண்டி வில்லால் பலூனை அடித்துவிட காயம்பட்ட பலூன் காற்றை இழந்து தரையில் மயங்கி விழுகிறது. சிறுவர்கள் குஷியில் குதிக்கிறார்கள். கொஞ்சம் காற்றை தேக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பலூனை ஒரு சிறுவன் காலால் மிதித்து உடைத்து அதை முற்றிலும் சிதைத்து விடுகிறான்...

தனது பலூனுக்கு நடந்த விபரீத முடிவை பார்த்து பெரும் சோகத்தோடு உடைந்த பலூனின் அருகே அமர்ந்திருக்கிறான் பாஸ்கல். அவ்வூரில் இருந்த மற்ற பலூன்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க வருவது போலவும், பாஸ்கலின் சோகத்தை ஈடு செய்ய நினைப்பது போலவும் வானில் படையெடுத்து பறந்து வருகின்றன...

ஹீலியம் நிரப்பப்பட்ட வானவில் கூட்டம் போல நூற்றுக்கணக்கான வண்ண பலூன்கள் வீடுகளின் சன்னல்கள், பலூன் கடைகள், சாலைகள் என நகரின் பல பகுதிகளில் இருந்தும் பாஸ்கலிடம் பறந்து வந்து சேர்கின்றன. பாஸ்கல் அவைகளில் கட்டப்படிருக்கும் கயிறுகளை பிடித்துக் கொள்கிறான். அந்த பலூன்கள் அவனை உயரே தூக்கிக் கொண்டு பறப்பதோடு படம் முடிகிறது. அந்த காட்சி வண்ண தேவதைகள் ஒன்று கூடி ஒரு சிறு குருவியை கவர்ந்து செல்வது போல இருந்தது...

1956ல் வெளியான பிரெஞ்சு நாட்டுத் திரைப்படமான இதை இயக்குநர் ’ஆல்பர்ட் லாம்ரோஸ்’ இயக்கினார். பாஸ்கலாக நடித்த சிறுவனான பாஸ்கல் லாம்ரோஸ், இப்படத்தின் இயக்குநர் ஆல்பர்ட் லாம்ரோஸின் சொந்த மகன். புகைப்படக்கலைஞராக தன் வாழ்வை துவங்கிய இயக்குனர் 40-களின் பிற்பகுதியில் திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். 1978-ல் வெளியான “தி லவ்வர்ஸ் விண்ட்” என்ற ஈரானிய ஆவணப் படத்தை இயக்கியபோது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆல்பர்ட் லாம்ரோஸ் இறந்து போனார். அவரது இறப்புக்கு பிறகும் கூட அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அப்படம் முழுமையாக எடுத்து முடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி 51-வது ஆஸ்கர் விழாவில் “தி லவ்வர்ஸ் விண்ட்” ஆவணப்படம் கலந்து கொண்டது...

இப்போது இருக்கும் நவீன கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்ட படம் போல பிரம்மிக்க வைக்கும் பலூன் காட்சிகளைக் கொண்ட ’தி ரெட்பலூன்’ கேன்ஸ் திரைப்பட விழா, ஆஸ்கர் விருது, பிரிட்டீஸ் அகாடமி ஆப்ஃ பிலிம் அண்ட் டெலிவிசன் ஆர்ட் விருது, நேஷனல் போர்ட் ஆஃப் ரிவ்யூ விருது என குழந்தைகள் கை நிறைய சாக்லேட் அள்ளுவதைப் போல விருதுகளை அள்ளியது. இன்றும் குழந்தைகள் திரைப்பட விழாவில் பலூன் சூடிய மன்னனாக பறந்து கொண்டிருக்கும் ’தி ரெட் பலூன்’ திரைப்படத்தை அவசியம் உங்கள் வீட்டு சுட்டிகளுக்கு காண்பியுங்கள்.

நம் நினைவில் மிதக்கும் பலூன்களில் பால்யத்தின் வாசனையல்லவா நிரம்பியிருக்கிறது.

புதன், 26 ஆகஸ்ட், 2020

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்கள் விடுபட்ட பாடங்களை எப்படிப் பார்க்கலாம் ?



கல்வித் தொலைக்காட்சிஇணையதளம் குறித்துபெற்றோர்மாணவர்கள்மற்றும் கல்வியாளர்கள்தரப்பில் எழும் பொதுவானகேள்விகள்.

கல்வித் தொலைக்காட்சிஒளிபரப்புகளை பார்க்கத்தவறியவர்களுக்காககல்வித்தொலைக்காட்சிஇணையதளம், Tn e-learn, TNTP, கல்வித்தொலைக்காட்சியின் YouTubeசேனல் வாயிலாகவும்மேற்கண்ட நிகழ்ச்சிகளைப்பார்த்து பயன்பெறலாம்.

படிக்கும் போது ஏற்படும்சந்தேகங்களை தீர்ப்பதற்காக,வினாக்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

கல்வித் தொலைக்காட்சியின்மின்னஞ்சலிலும் மேற்காண்கேள்விகளை பதிவுசெய்யலாம்.
இவ்வாறு பலரிடமிருந்துபெறப்படும் வினாக்களைதொகுத்துவாராவாரம்சனிக்கிழமைகளில்பாடவாரியாககல்வித்தொலைக்காட்சியில்வினா – விடை (Q & A)நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின்றனஇதன்மூலம் பயனடையலாம்.

கல்வித் தொலைக்காட்சிநிகழ்ச்சிகள் வீட்டுப்பள்ளியாக கருதப்படுகிறது.
முறையான பள்ளி நேரத்தில்வகுப்புகள் எவ்வாறுபாடவாரியாக,தலைப்புவாரியாகஅலகுவாரியாக நடத்தப்படுமோ,அதே வகையில் பாடங்கள்,காணொளி காட்சியாகவரிசைக்கிரமமாகஒளிபரப்பப்படும்.


Standardised Time table –முறைப்படுத்தப்பட்டஒளிபரப்பு பட்டியல் –பள்ளியில் பின்பற்றப்படும்கால அட்டவணைப் போன்று,இணைப்பிலுள்ளவாறுவெளியிடப்படும்.


CLICK HERE TO TO VIEW YOU TUBE LINKS

CLICK HERE TO VIEW -eLearning tnschools 

CLICK HERE TO VIEW -TV CHANNEL -CLASS WISE Standardised Time table

CLICK HERE -DOWNLOAD -GUIDE-PDF FILE

CLICK HERE TO DOWNLOAD-KALVI TV MOBILE TV APP

CLICK HERE TO VIEW -KALVITHOLAIKAATCHI

Tamil Nadu New Syllabus Text Books 2020-2021


.................................................................