>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
NCERT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NCERT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 நவம்பர், 2017

NCERT பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு...


''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர்
வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள், எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய் தெரிவித்தார்.
மதுரையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், 23வது தேசிய சகோதாயா மாநாடு நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து தருண் விஜய் பேசியதாவது:திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, மீனாட்சி அம்மன் கோவிலில் தான் முதன் முதலில் இறைவனிடம் சமர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது.
நம் வரலாறு, கலாசாரத்துடன் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துக்களையும் உலக அளவில் நாம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு ஆங்கிலேயர் வகுத்து தந்த கல்வி முறையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். நம் நாகரிகம், கலாசாரம், பண்பாடு சார்ந்த பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களை குறிப்பிடாமல், இந்திய வரலாறு முழுமை பெறாது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களில், வட மாநிலம் தொடர்பான வரலாறு அதிகம் இடம் பெற்றுள்ளது.குறிப்பாக ராஜராஜசோழன் ஆட்சி, கம்போடியா, வியட்நாம் வரை விரிந்து கிடந்தது என்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு வேண்டும்.ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளை நாம் இங்கு விருப்ப மொழியாக படிக்கும்போது, வட மாநிலங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் விருப்ப பாடமாக இடம் பெறச்செய்ய வேண்டும்.
வள்ளுவரின் திருக்குறள் உலகத்திற்கே பொதுவானது. அதில் எந்த சூழலுக்கும் ஏற்ற கருத்துக்கள் உள்ளன. திருக்குறள் மற்றும் வள்ளு வரின் வரலாறு குறித்த, என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினேன். அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

NCERT புத்தகங்கள் மனுவை பரிசீலிக்க உத்தரவு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி குழு புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில் பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் புருஷோத்தமன், தாக்கல் செய்த மனு:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆரம்ப நிலையில் உள்ளகுழந்தைகளுக்கு, மூன்றுஅல்லது நான்கு பாடங்கள்கற்பிக்கப்படுகின்றன.இந்த குழந்தைகளுக்கு,
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 6ம் வகுப்பில் இருந்து, வெவ்வேறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.தனியார் வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்களை, தனியார் பள்ளி களில் அனுமதிப்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்துக்கு மனு
அனுப்பினேன்.அதற்கு, ௨௦௧௭ ஜன., முதல், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டும் வாங்க, தனியார்,சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அறிவுறுத்திஇருப்பதாக, பதில்அளிக்கப்பட்டது.என்.சி.இ.ஆர்.டி., நிர்ணயித்த பாடங்களைமட்டுமே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிற்றுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தனியார் வெளியீட்டு நிறுவனங்களின் புத்தகங்களை வாங்கும்படி, பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை வாங்கும்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி கிருபாகரன்முன், விசாரணைக்குவந்தது. மூன்று வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் குழந்தை பருவத்தை பாழாக்குவதாக, நீதிபதி வேதனை
தெரிவித்தார்.என்.சி.இ.ஆர்.டி.,புத்தகங்களை பயன்படுத்தக் கோரிய மனுவை, நான்கு வாரங்களில்பரிசீலித்து, முடிவெடுக்கும்படி, மத்தியஅரசுக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், நீதிபதிஉத்தரவிட்டார்.மனு குறித்து, மத்திய அரசு, உதவி சொலிசிட்டர் ஜெனரல், சீனிவாசன் பதிலளிக்கும்படி
உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை....

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி) மற்றும் மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றைக் தவிர்த்து தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாய படுத்தக்கூடாது என்று சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் மாதம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள 287 சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 2014 பிப்ரவரியில், தனியார் பதிப்பகப் புத்தகங்கள் வாங்க அனுமதித்த சிபிஎஸ்இ, இப்போது வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தச் சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று ஜூலை-28 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கக் கூடாது எனவும், தனியார் பதிப்பக புத்தகங்களின் தரம், விலை குறித்து சிபிஎஸ்இ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் ஒரே மனுவில் 287 பேர் வழக்கு தொடர்ந்துள்ளதால் நீதிமன்றத்துக்கு வரும் ஸ்டாம்ப் கட்டண வருவாய் பாதித்துள்ளது. எனவே 287 பள்ளிகளும் தலா 1000 ரூபாய் வீதம் 2 .87 ஆயிரம் ரூபாயை நீதிமன்ற கட்டணமாக செலுத்தி ஒரு வாரத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் சம்மந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

திங்கள், 26 ஜூன், 2017

மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...

மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...

  (1) (topics & lessons) பாட பொருள் தலைப்புகள் - வேறுபாடு இல்லை.

(2) Book & Metetials type புத்தகவடிவமைப்பு:- NCERT - very Advanced 
SCERT - Oldest Method 

(3) Question & Exam method வினாத்தாள் அமைப்பு முறை :- 
NCERT - No blue print, பாடத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து எடுக்கப்படும்.
SCERT - blue print குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கேட்கப்படும்.


(5) ( content )பாடக்கருத்துகள்:-
(NCERT - Application view only ) பயன்பாடு அடிப்படை மட்டுமே.
SCERT - (Basic concept, and Application) அடிப்படை கருத்து, பயண்பாடு, மனப்பாடம் , புரிந்து கொண்டு படைப்பாற்றல் உருவாக்கும் திறன் என பலவகையான வாய்ப்புகள் உள்ளது... 

அதனால் தான் நம் மாணவர்கள் உலகம் முழுவதும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்..

மருத்துவர்கள் அவசியமே.
அதற்காக NCERT syllabus உயர்ந்தது போன்றும், நமது SCERT syllabus தரம் குறைந்தது போன்ற பிம்பத்தை
ஏற்றுக் கொள்ள முடியாது ..

நமது வளர்ச்சி பாதிப்படையாமல் இருக்கவும், நம் கலாச்சார பண்பாடுகளை நம் இளைய தலைமுறையினர் அறியவும் SCERT என்கிற நம் மாநில அமைப்பு அத்தியாவசிய தேவையான ஒன்று... 

எனவே 
NEET போன்ற மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றிப்பெற, நாம் தற்போது பயன்படுத்தி வரும் வினாத்தாள் அமைப்பு முறைக்கான blue print ஐ நீக்கி,
NCERT syllabus ன் Application பகுதியை மட்டும் சேர்த்தால் மட்டுமே போதும்..

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

நம் ஆசிரியர்கள் NEET மட்டுமல்ல அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்து விடுவார்கள்...

நம் மாணவர்களும் இத்தேர்வுகளை ஊதி தள்ளிவிடுவார்கள்...