>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
JIO NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JIO NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜனவரி, 2018

ஜியோ அதிரடி ஆஃபர்!


ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்ததில் இருந்து
சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால், மற்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும், வருமான இழப்பை தவிர்க்கவும் சலுகைகளை வழங்குகிறது.
இதன் காரணமாக புதிய சலுகை அல்லது திருத்தங்களுடன் பழைய சலுகை என சலுகை அற்விப்புகள் அதிக அளவில் வெளியாகின்றன. அந்த வகையில் ஜியோ குடியரசு தினத்தை முன்னிட்டு விலை குறைப்பு + அதிக சலுகைகளை வழங்கியுள்ளது.
# ரூ.98-க்கு வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படும் புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
# ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449 திட்டங்களில் முறையே 42 ஜிபி, 105 ஜிபி, 126 ஜிபி மற்றும் 136 ஜிபி டேட்டா ஆகியவை முறையே 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
# ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்களில் முறையே 56 ஜிபி, 140 ஜிபி, 168 ஜிபி மற்றும் 182 ஜிபி டேட்டா ஆகியவை முறையே 28 நாட்கள், 70 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 91 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

புதன், 23 ஆகஸ்ட், 2017

JIO FREE PHONE - பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம்.


ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ  தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை  உருவாக்க  தொடங்கிவிட்டது.
 ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ.  ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.
ஜியோ ஸ்மார்ட் போன்
ஜியோ தற்போது ,  INDIA KA SMARTPHONE (JIO PHONE ) என்ற போனை  அறிமுகம் செய்துள்ளது.  அதுவும் இலவசமாக என்றால்எவ்வளவு பெரிய விஷயம்.அதற்கான  முன்பதிவு  நாளை  முதல்  தொடங்குகிறது
ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE )
ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை  இலவசமாக பெறுவதற்கு முதலில் 1500 ரூபாய் கட்ட  வேண்டும்.பின்னர் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.
இந்த அறிய வாய்ப்பை  பயன்படுத்தி , ஜியோவின் ஸ்மார்ட்போனை பெற ஆகஸ்ட் 24 ஆம்  தேதி  முதல் (நாளை ) முதல் முன்பதிவு  செய்யலாம் என  இஷா  அம்பானி  அவர்கள்  தன்  ட்விட்டர் பக்கத்தில்   தெரிவித்து  இருந்தார்.
எப்படி  முன்பதிவு செய்வது ?
ஜியோவின்  அதிகாரபூர்வ  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்ம் பூர்த்தி செய்து ,  ஜியோவின் இலவச  போனை  பெறலாம்.
அல்லது அருகில் உள்ள ஜியோ ஷோ   ரூம்  சென்று ,  உங்கள் முன் பதிவை  உறுதி  செய்யலாம்  அல்லது  my jio app  மூலமாகவும்   முன்பதிவை செய்யலாம்  என்பது  குறிப்பிடத்தக்கது .

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஜியோ ரீசார்ஜ் செய்பவர்களா நீங்கள்... உங்களுக்கு ஜியோ வழங்கும் புதிய கேஷ்பேக் சலுகைகள்!!


ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ‘தன் தனா தன்’ சலுகை நிறைவு பெற்றுவருவதையொட்டி  சலுகையை தொடர்ந்து பெற இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அடுத்த ரீசார்ஜ் செய்யும் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளன.


இதற்காக ஜியோ மொபைல் ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களை குறிவைத்து கவரும் விதமாக ஆன்லைன் பேமெண்ட் போர்ட்டல்கள். பேடிஎம், மொபி க்விக், அமேசான் பே என அனைத்து ஆன்லைன் பேமெண்ட் நிறுவனங்களும் கேஷ்பேக் ஆஃபர்களை அள்ளித் தருகின்றன.

வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முன் ப்ரோமோ கோடினை தெளிவாக படித்து அதன்பின் பதிவிட வேண்டும். ரீசார்ஜ் செய்யப்பட்டதும் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் பேடிஎம் கணக்கில் சேர்க்கப்படும்.

இதுதவிர போன் பெ (PhonePe app) செயலி மூலம் ரிலையன்ஸ் ஜியோ எண்ணிற்கு ரூ.300க்கும் அதிக விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ புதிய சலுகைகள் அந்நிறுவன இணையப்பக்கம் மற்றும் மைஜியோ செயலியில் பார்க்க முடியும். ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் திட்டங்கள் விலை ரூ.19 முதல் துவங்குகிறது. போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலை ரூ.309 முதல் துவங்குகிறது.

பேடிஎம் (Paytm):
பேடிஎம் மூலம் ஜியோ ரீசார்ஜ் செய்தால் 15 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாய் அல்லது அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 76 ரூபாய் கேஷ்பேக் தருகிறது பேடிஎம். வழக்கம்போல, ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்தில் உங்கள் பேடிஎம் கணக்கில் கேஷ்பேக் தொகை வந்துவிடும்.

ஃபோன்பே (PhonePe): ஃபோன்பே மூலம் ஜியோ ரீசார்ஜ் செய்தால் 75 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்சம் 300 ரூபாய் அல்லது அதற்கு மேல் ஜியோ ரீசார்ஜ் செய்தால் இந்த ஆஃபர் கிடைக்கும். ஆகஸ்ட் 21 வரை மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும்.

மொபி க்விக் (MobiKwik): மொபிக்விக் மூலம் 399 ரூபாய்க்கு ஜியோ ரீசார்ஜ் செய்தால் 59 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் (இதற்கான கோட் JIOMBK). இதுவே நீங்கள் செய்யும் முதல் ஜியோ ரீசார்ஜ் என்றால் 159 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் (இதற்கான கோட் NEWJIO).

அமேசான் பே (Amazon Pay): அமேசான் பே மூலம் ரூ.309 அல்லது அதற்கு மேலான தொகைக்கு ஜியோ ரீசார்ஜ் செய்தால் 99 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். நவம்பவர் 30 ஆம் தேதி வரை ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் ரூ.20 கிடைக்கும். இப்படியே 300 ரூபாய் வரை மட்டுமே கேஷ்பேக் பெறலாம். ரீசார்ஜ் செய்த 7 நாள்களுக்கு இந்த கேஷ்பேக் அக்கவுண்டுக்கு வரும்.

ரூ.309 முதல் ரூ.9,999 வரையிலான அனைத்து ப்ரிபெய்ட் டேட்டா பிளான்களுக்கும் வேலிடிட்டி நாள்கள் மற்றும் டேட்டா சலுகைகள் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னதாக ஜியோ ப்ரைம் வாடிக்கையாளராக, ஆண்டு கட்டணமாக ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்தது. ஆனால் அதன்பின் ஜியோ ப்ரைம் உறுப்பினராக ஜியோ மணி என்ற இ-வாலட் மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கும் செய்து அதன் மூலம் ரூ.99 மற்றும் ரூ.303 க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்-பேக் சலுகை அளிக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

இலவச JIO PHONE: தொடங்குகிறது முன்பதிவு

ஜியோ ஃபோனை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.



ஜியோ ஃபோன் ஆகஸ்ட் 15 முதல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சந்தைக்கு வரவுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள ஜியோ ஃபோனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பின்னர் செப்டம்பர் முதல் இது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபோனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜியோ ஃபோன் பதிவு செயல்முறை மற்றும் அதைப் பற்றிய விவரங்கள்:

ஆன்லைன் மூலம் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் மை ஜியோ ஆப் மூலமும், jio.com இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். ஜியோ சிம் கார்டுகள் போலவே இதற்கும், ஆதார் எண் கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.

அதுவே, நீங்கள் ஒரு வணிக உரிமையாளர் எனில், உங்கள் நிறுவனத்தின் PAN அல்லது GSTN எண்ணை வழங்க வேண்டும். நீங்கள் எத்தனை தொலைபேசிகள் வாங்க விரும்புகிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும். உங்கள் விவரங்களைப் பதிவு செய்தவுடன், உங்கள் மொபைல் ஃபோனில் உங்கள் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் கிடைக்கும்.

ஆஃப்லைன் மூலம் முன்பதிவு செய்ய விரும்புவர்கள் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஜியோ விற்பனையகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஜியோ மொபைல் ஃபோன் இலவசமாக, குறைந்த கட்டண பிளான்களுடன் வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்திருந்தார். இந்த மொபைல் ஃபோன் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 டெபாசிட் செய்ய வேண்டும். இத்தொகையை 3 வருடத்திற்கு பின் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

வெளியானது மாபெரும் தீபாவளி சலுகை...! "ஜியோ பைபர்" ரூ.5௦௦- கு 100 GB..!

ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாபெரும் சலுகையை வழங்க  திட்டமிட்டுள்ளது ஜியோ.

அதாவது, டேட்டா சேவையில் ஒரு மாபெரும் புரட்சியையே உருவாக்கிய ஜியோ தற்போது ஜியோ  பைபர் நெட்சேவையை வழங்க உள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசாக இந்த  திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ என்பது  கூடுதல் தகவல்.
திட்டம் விவரம் :
இந்த சிறப்பு திட்டத்தின் படி, வெறும் ரூபாய் 5௦௦-கு,1௦௦ ஜிபி டேட்டாவைவழங்க உள்ளது.1 gbps  வேகத்தில் சேவையை வழங்க உள்ள ஜியோ கண்டிப்பாக மக்களிடேயே மீண்டும் நல்ல வரவேற்பை  பெரும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த திட்டமானது ஆரம்பத்தில் 1௦௦ முக்கிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 22 ஜூலை, 2017

Jio - அடுத்த அதிரடி - ரூ.24-க்கு ஜியோ கேபிள் டிவி..


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று தனது 4ஜி பியூச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் கேபிள் டிவி சேவை பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.

இதனால் ஏர்டெல் டிடிஎச், வீடியோகான் டிடிஎச், சன் டிடிஎச், சன் நெக்ஸ்ட் ஆகிய சேவைகள் அளித்து வரும் நிறுவனங்களுக்குப் பெறும் சவாலாக ரிலையன்ஸ் ஜியோவின் இந்தச் சேவை இருக்கும் என்று கூறப்படுகின்றது.
விலை
தொலைக்காட்சிகளில் காணக் கூடிய ஜியோ போன் கெபிள் டிவி சேவை 309 ரூபாய் மாதம் என்ற கட்டணத்தில் கிடைக்கும்.

சிறிய பேக்குகள்
ஒரு வாரத்திற்குக் கேபிள் டிவி சேவையினைப் பெற 54 ரூபாயும் இதுவே இரண்டு நாட்களுக்கு டிசி சேவைப் பெற 24 ரூபாய் எனவு கட்டணமாக அறிவித்துள்ளது.

ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே மொபைல் சேவையில் பெறும் நட்டத்தைச் சந்தித்து வரும் நிலையில் ஜியோவின் இந்த அறிவிப்பு மேலும் நட்டத்தை ஏற்படுத்துமோ என்ற பயத்தில் உள்ளது.

HOW TO ORDER "FREE RELIANCE JIO PHONE"


ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு செய்வது எப்படி?

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய பீச்சர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோபோன் என அழைக்கப்படும் புதிய பீச்சர்போன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.செப்டம்பர் மாதம் வெளியிடப்பட இருக்கும் ஜியோபோன் சரியான விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஜியோபோனினை செப்டம்பர் மாதத்திற்குள் முன்பதிவு செய்ய முடியும்.புதிய ஜியோபோனினை மை ஜியோ செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும். ஜியோபோன் வங்குவோர் ஆகஸ்டு 24-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அதன்பின் முதலில் முன்பதிவு செய்தோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விற்பனை துவங்குகிறது.
ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் ஜியோபோன் விலை ரூ.0 எனஅறிவிக்கப்பட்டது. எனினும் வாடிக்கையாளர்கள் திரும்ப வழங்கப்படும் தொகையாக ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகை மூன்று ஆண்டுகளுக்கு பின் திரும்ப வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  4ஜி எல்டிஇ நெட்வொர்க்கில் இயங்கும் ஜியோபோன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட செயலிகளை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
 டிஜிட்டல் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருப்பதால் வாய்ஸ் கமாண்ட் மூலம் போனினை இயக்க முடியும். இத்துடன் 24 மொழிகளை இயக்கும் வசதியும், 5 எண் அழுத்திப் பிடித்தால் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் ஜியோபோனில் என்எஃப்சி வசதியை வழங்க இருப்பதாகவும், விரைவில் இதற்கான மென்பொருள் அப்டேட்வழங்கப்படம் இருக்கிறது. மேலும் ஜியோபோனில் பயன்படுத்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ போனின் சாதக ,பாதகங்கள்??

இந்தியாவின் பரபரப்பான பெயர் என்றால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவைகள்தான், தற்போது புதிதாக ஜியோ 4ஜி அறிமுகம் செய்துள்ள ஜியோபோன் வாங்கலாமா ? வேண்டாமா ? அறிவோம் வாருங்கள்.

ஜியோபோன்.....

ஜியோ போன் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் நாம் வெளியிட்டிருந்தாலும், இந்த 4ஜி மொபைலை வாங்குவது நண்மையா ? மூன்று வருடத்துக்கு பிறகு ரூ.1500 கட்டணத்தை திருப்பி தருமா ஜியோ என பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு பெறும் வகையில் ஜியோ ஃபோன் கவர் ஸ்டோரி காணலாம்.

ஜியோ போன் முற்றிலும் இலவசமா ?

இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 50 கோடிக்கு மேற்பட்ட மக்கள் 2ஜி சேவை பெற்ற ஃபீச்சர் மொபைல்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பெரும்பாலும் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் தேவையே மிக அதிகமாகும்.

4ஜி உயர்தர இணைய வேகத்தை பெறும் வகையில் கொண்டு வழங்கப்படுகின்ற இந்த சேவையை சாதாரன மக்களும் பயன்படுத்தும் வகையில் ஜியோ திட்டமிட்ட நோக்கமே ஃபீச்சர் போன் எனப்படுகின்ற பட்டன்களை கொண்ட மொபைல் ஆகும்.

இன்றைக்கு ஸ்மார்ட்போன் உலகம் மிக விரிந்து கிடந்தாலும், ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்களை முழுமையான ஸ்மார்ட்போனுக்கு மாற்றுவது என்பது சாத்தியமில்லை , என்பதனை உணர்ந்த ஜியோ எடுத்த அதிரடி முடிவுதான் 4ஜி எல்டிஇ சேவையுடன் கூடிய ஃபீச்சர் போன் திட்டம், தற்போது இதனை சாதித்து காட்டுவதற்கு தயாராகிவிட்டது.

எந்த கட்டணமும் மொபைலுக்கு வசூலிக்கப்படாது, ஆனால் ரூ.1500 மட்டுமே திரும்ப பெறதக்க பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்த வேண்டும், இதனை மூன்று வருடங்கள் அல்லது 36 மாதங்களுக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. (எதோ காரணத்தால் ஜியோ மொபைல் தவறிவிட்டாலோ அல்லது சேவையை பயன்படுத்த தவறினாலோ கட்டணத்தை திருப்பி தருமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்க பெறவில்லை )

ஜியோபோன் டேட்டா பிளான்

ஜியோஃபோன் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் (28 நாட்கள்) அதிகபட்சமாக ரூ.153 செலுத்தினால் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எந்த நிறுவனத்துக்கும் மற்றும் வரம்பற்ற குறுஞ்செய்தி (100) உள்பட வரம்பற்ற டேட்டா (இது தினசரி 500எம்பி ஆக இருக்கலாம்) என குறிப்பிட்டுள்ளது.


மேலும் ரூ, 24 கட்டணத்தில் இரு நாட்கள் பிளான் மற்றும் ரூ.54 கட்டணத்தில் வாரம் முழுவதும் (7 நாட்கள்) பயன்படுத்தலாம். இதுதவிர கூடுதலான டேட்டா பிளான்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

ரூ. 309 கட்டணம் எதற்கு என்றால் உங்கள் ஜியோ போனை எந்த டிவியிலும் இணைத்து இணையத்தை வாயிலாக தொலைக்காட்சியில் சேவைகளை பெறும் வகையிலான பிளான் என குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு எனில் ஸ்மார்ட் டிவி மட்டுமல்ல கலைஞர் டிவியிலும் இணைக்கலாம் என்றே நினைக்கிறேன்.

ஜியோபோன் வசதிகளும் சிறப்புகளும்.....

இது ஒரு மினியேச்சர் ஸ்மார்ட்போன் என்று சொல்லும் வகையிலான பல்வேறு வசதிகளை 2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்கள் மற்றும் பிரசத்தி பெற்ற வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றையும் இணைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபயர்ஃபாக்ஸ் ஒஎஸ் அடிப்படையாக கொண்ட கெய் ஓஎஸ் (KaiOS) கொண்டு இயக்கப்படுகின்ற இந்த 4ஜி ஜியோபோனில் பிரத்தியேகமான ஆப் ஸ்டோர் ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பயனார்கள் விரும்பும் ஆப்கள் தரவிறக்கலாம்.

இந்த மொபைல் 512எம்பி ரேம் கொண்டு செயல்பட்டாலும் உள்ளடங்கிய மெமரி 8 ஜி.பி மற்றும் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்க கூடிய  வகையில் மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.

செல்ஃபீ மற்றும் கேமரா பிரியர்களுக்கு மட்டுமே இந்த மொபைல் பெரிய அளவில் பூர்த்தி செய்ய வாய்ப்பில்லை. இரண்டு மெகாபிக்சல் விஜிஏ கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

வை-ஃபை ஹாட்ஸ்பாட் வசதி வழங்கப்பட்டுள்ளதால் கணினி மற்றும் மொபைல்கள் போன்றவற்றுடன் இணைப்பதுடன், தானாகவே மேம்படுத்திக் கொள்ளும் வகையிலான மென்பொருள் அப்டேட்ட் உள்பட NFC வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேம்ஸ் பற்றி எந்த முக்கிய தகவலையும் ஜியோ வழங்கவில்லை என்பதனால் கேம் பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். 2000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்று.

ஜியோ போன் வாங்கலாமா ?

2ஜி சேவையை மட்டுமே விரும்பி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள் வாங்கலாம்.

குறிப்பாக இதில் இரட்டை சிம் கார்டுகள் பயன்படுத்தலாம் என்பதனால் ஒன்று ஜியோ 4ஜி மட்டுமே இருக்க வேண்டும் மற்றொன்று உங்களுடைய 2ஜி என்னை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் மாதம் ரூ.100 ரீசார்ஜ் செய்பவர்கள் என்றால் வரி பிடித்தம் போக ரூ. 80 டாக்டைம் கிடைக்கலாம் மற்றும் கூடுதலாக அதிகம் பேசுபவர்கள் தனியான பூஸ்டர் பேக் போட வேண்டிய நிலை இருக்கலாம். இவற்றை சமாளிக்க மாதம் ரூ.153 மட்டும் ரீசார்ஜ் செய்தால் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை பெறலாம், தினமும் 100 எஸ்எம்எஸ், 500எம்பி டேட்டா பெறலாம்.

ஜியோ போன் வழியாக எண் 5 அழுத்தி பிடித்தால் உங்களுக்கு ஆபத்து உள்ளதை உங்கள் விருப்பமான பதிவு செய்யப்பட்ட நண்பரின் எண்ணுக்கு அவசர தேவை என்ற செய்தியை வழங்கும்.

உங்களுடைய தற்போதைய 2ஜி சேவையை விட கூடுதலான பலன்களையே பெறலாம்.

ஸ்மார்ட்போனுடன் பீச்சர்போனை வைத்திருக்கும் பிரியர்களுக்கு ஏற்றதாகவே இது இருக்கும்.

ஜியோபோன் வேண்டாம் ? ஏன்

அதிகப்படியான இணைய வேகம், செல்ஃபீ, கேமரா, கேம் பிரியர்களுக்கு இந்த மொபைல் சரிப்பட்டு வராது. தொடுதிரை உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு இணையான பல்வேறு வசதிகளை நீங்கள் இதில் பயன்படுத்த இயலாது.

ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு மட்டுமே நோ சொல்லாம்.

ரூ. 153 மாதந்தோறும் ரீசார்ஜ் கட்டணமாக செலுத்தியே ஆக வேண்டும் அல்லது ரூ. 24 இரு நாட்களுக்கு அல்லது 7 நாட்களுக்கு ரூபாய் 54 செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்..!

டவர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என ஜியோ குறிப்படும்போது அடுத்த 12 மாதங்களுக்குள் 99 % இந்தியாவில் ஜியோ 4ஜி சேவை முற்றிலும் கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.



ஜியோ போன் உண்மையில் இலவசமே இல்லை..!

நீங்கள் 12 மாதங்களுக்கு ரூ. 153 ரீசார்ஜ் செய்தால் (ரூ.54 அல்லது ரூ.24 ) அதன் மொத்தம் ரூபாய் 1836 நீங்கள் பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்தியுள்ள ரூ. 1500 என மொத்தம் ரூ. 3,336 ஆக மொத்தம் மூன்று வருடங்களுக்கு நீங்கள் செலுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகை ரூபாய் 5508 மற்றும் டெபாசிட் தொகையை சேர்த்து ரூபாய் 7008 மொத்த தொகையில் சராசரியாக 6-10 % வட்டி என கணக்கிட்டாலே வருடம் 300 முதல் 500 வரை வட்டியாக கிடைக்கும் என்பதனால் ரூ.1500 பெறுவது ஜியோவுக்கு சாதாரனமே என்பதுதான் உண்மை.

வருகை

வரும் ஆகஸ்ட் 15ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஜியோ போன், இதே வாரத்தில் டெஸ்ட் செய்து பார்க்கலாம், ஆகஸ்ட் 24ந் தேதி முதல் முன்பதிவு ஜியோ டிஜிட்டல் ஸ்டோர் விற்பனையாளர் மற்றும் மை ஜியோ ஆப் வழியாக தொடங்கப்பட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும். வாரம் 5 மில்லியன் அதாவது 50 லட்சம் மொபைல்கள் டெலிவரி செய்யப்படும்.

வெள்ளி, 21 ஜூலை, 2017

புதிய ஜியோ 4ஜி போன்.. இதுதாங்க இதோட சிறப்பம்சங்கள்!


ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரயாக ரூ.0 விலையில் 4ஜி மொபைல் போன்கள் வழங்கப்படவுள்ளன.
ஜியோ 4ஜி மொபைல் போன் ரூ.0 விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனை வாங்க 1,500 ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை 3 ஆண்டுகளில் திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜியோ 4ஜி மொபைல் போன் இலவசமாக கிடைக்க உள்ளது.
இலவச ஜியோ 4ஜி மொபைலுக்கான புக்கிங் வரும் ஆகஸ்ட் 24 முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இது விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த ஜீரோ காஸ்ட் போனில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது மற்ற பேசிக் மாடல் மொபைல்களில் இருப்பது போன்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் நம்பர்களுடன் கூடிய கீபேடை கொண்டுள்ளது இந்த ஜியோ போன்.
2.4 இஞ்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளே மற்றும் எஃப்எம் ரேடியோவை இந்த போன்கள் கொண்டுள்ளன. மேலும் டார்ச் லைட் வசதியும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெட்ஃபோன் ஜாக் வழங்கப்படும் என்றும் மெமரி கார்டு போடுவதற்கான ஸ்லாட் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் சார்ஜரும் போனுடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வழி நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மற்ற போன்களில் உள்ளதை போன்ற போன் காண்டாக்ட்ஸும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. கால் ஹிஸ்டரி மற்றும் ஜியோ போனின் செயலிகளும் இந்த மொபைல் போனில் இடம்பெற்றுள்ளது.
வழக்கமாக போன்களை போல் மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஜியோ 4ஜி மொபைலில் ஜியோ தன் தனா ஆஃபர் வாயிலாக மாதம் ஒருமுறை 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்கள், மெசேஜ், மற்றும் டேட்டா என அனைத்தும் அன்லிமிடெட் ஆக கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
இதோடு, 54 மற்றும் 24 ரூபாய்க்கு இரண்டு ரீசார்ஜ் பேக்குகளையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 7 நாட்களுக்கும், 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கும் இலவச தொலைத்தொடர்ப்பு சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 20 ஜூலை, 2017

ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபர் அறிவிப்பு...

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தனது அடுத்த அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
டேட்டா ஆஃபர்கள் வழங்குவதில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஜியோ, தற்போதும் அதே யுக்தியைத்தான் கொண்டுள்ளது.
ப்ரீபெய்ட் திட்டத்தில் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், தற்போது புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ரூ.19 முதல் ரூ.9,999 வரை பல ரீசார்ஜ் வாய்ப்புகள் உள்ளன. இதில் எந்த ஒரு ரீசார்ஜையும் வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். ஆனால், சில முக்கிய ரீசார்ஜ் திட்டங்களின் கால அளவு மட்டும் இரண்டு மடங்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரூ.349 மற்றும் ரூ.399 ஆகிய இரண்டு ரீசார்ஜ்க்கும், ஏற்கனவே இருக்கும் ரூ.309 மற்றும் ரூ.509க்கும் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரூ.309 ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா இலவசம். அதே சமயம், அதற்கான வாலிடிட்டி 28 நாட்களுக்கு பதிலாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல, ரூ.509 ரீசார்ஜ் செய்தால், அதற்கான வாலிடிட்டியும் 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபிக்கள் இலவசமாக வழங்கப்படும்.
அதே போல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.349 திட்டத்தில், 56 நாட்களுக்கு தினமும் டேட்டா வழங்கப்படுவதற்கு பதிலாக, 4ஜி டேட்டா 20 ஜிபி வழங்கப்படும்.
அதே சமயம், ரூ.399 திட்டத்தில், தினமும் 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும், இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள்.
போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ.349 மற்றும் 399 திட்டங்கள் உள்ளன. ரூ.349 திட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 4ஜி டேட்டா 20 ஜிபி வழங்கப்படும். அதே போல ரூ.399 திட்டத்தில் அளவில்லா 4ஜி டேட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 8 ஜூலை, 2017

ரூ.500க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோ அடுத்த அதிரடி


மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ்ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது.

ஜியோ அறிவித்த குறைந்தவிலையில் 4ஜி டேட்டாதிட்டத்தால் இந்த ஆண்டுஏப்ரல் மாதம் வரை ஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனை எட்டி உள்ளது.இந்நிலையில் அடுத்தகட்டமாக ரூ.500 க்கு 4ஜிமொபைல்போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

நிறுவனத்தின் ஆண்டுபொதுக் கூட்டம் ஜூலை 21 ம்தேதி நடக்க உள்ளது.அன்றைய தினம் அல்லதுஆகஸ்ட் துவக்கத்தில்இத்திட்டத்தை ஜியோமுறைப்படி அறிமுகம் செய்யஉள்ளது. ரூ.1000 க்குமொபைல் போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்பட்டு வந்த நிலையில்,எதிர்ப்பார்ப்புக்களை விடமேலும் விலையைகுறைத்து, ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குகொண்டு வர உள்ளதுஜியோ.

ஆகஸ்ட் 15 அன்றுதங்களின் புதிய திட்டத்தைதுவக்கவும், ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.வாடிக்கையாளர்களைகவருவதற்காக 2ஜிவாடிக்கையாளர்கள் இந்தபுதிய போன் மூலம்நேரடியாக 4ஜி க்குதங்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் விலைரூ.500 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்டஎண்ணிக்கையிலேயேஇந்த குறைந்த விலைஸ்மார்ட்போனை விற்பனைசெய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.இருந்தாலும் 2ஜிவாடிக்கையாளர்கள்தங்களை 4ஜி க்கு மாற்றிகொள்வதற்காக இந்தபோனை அதிகம்வாங்குவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் ஜியோ, தனது‛டன் டனா டன்' சலுகையின்புதிய திட்டத்தின் ஆரம்பவிலையை மாதத்திற்குரூ.150 ஆகநிர்ணயித்துள்ளது. மேலும்ரூ.80 முதல் 90 என்ற சலுகைகட்டண திட்டத்தையும்ஜியோ அறிமுகம் செய்யஉள்ளது. தற்போது டன் டனாடன் திட்டத்தில் ரூ.309அல்லது ரூ.509 க்கு இலவசவாய்ஸ், அளவில்லாஎஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ்,தினமும் 1 முதல் 2 ஜிபிடேட்டா சேவையை வழங்கிவருகிறது. பிரைம்உறுப்பினர்களுக்கு இந்தசேவை ரூ.99 க்குவழங்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.புதுடில்லி:மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ் ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது. ஜியோ அறிவித்தகுறைந்த விலையில் 4ஜிடேட்டா திட்டத்தால் இந்தஆண்டு ஏப்ரல் மாதம் வரைஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனை எட்டி உள்ளது.இந்நிலையில் அடுத்தகட்டமாக ரூ.500 க்கு 4ஜிமொபைல்போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்நிறுவனத்தின் ஆண்டுபொதுக் கூட்டம் ஜூலை 21 ம்தேதி நடக்க உள்ளது.அன்றைய தினம் அல்லதுஆகஸ்ட் துவக்கத்தில்இத்திட்டத்தை ஜியோமுறைப்படி அறிமுகம் செய்யஉள்ளது. ரூ.1000 க்குமொபைல் போன்களைவிற்பனை செய்ய ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்பட்டு வந்த நிலையில்,எதிர்ப்பார்ப்புக்களை விடமேலும் விலையைகுறைத்து, ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குகொண்டு வர உள்ளதுஜியோ. ஆகஸ்ட் 15 அன்றுதங்களின் புதிய திட்டத்தைதுவக்கவும், ஜியோதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.வாடிக்கையாளர்களைகவருவதற்காக 2ஜிவாடிக்கையாளர்கள் இந்தபுதிய போன் மூலம்நேரடியாக 4ஜி க்குதங்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் விலைரூ.500 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்டஎண்ணிக்கையிலேயேஇந்த குறைந்த விலைஸ்மார்ட்போனை விற்பனைசெய்ய ஜியோதிட்டமிட்டுள்ளது.இருந்தாலும் 2ஜிவாடிக்கையாளர்கள்தங்களை 4ஜி க்கு மாற்றிகொள்வதற்காக இந்தபோனை அதிகம்வாங்குவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது.இத்துடன் ஜியோ, தனது‛டன் டனா டன்' சலுகையின்புதிய திட்டத்தின் ஆரம்பவிலையை மாதத்திற்குரூ.150 ஆகநிர்ணயித்துள்ளது. மேலும்ரூ.80 முதல் 90 என்ற சலுகைகட்டண திட்டத்தையும்ஜியோ அறிமுகம் செய்யஉள்ளது. தற்போது டன் டனாடன் திட்டத்தில் ரூ.309அல்லது ரூ.509 க்கு இலவசவாய்ஸ், அளவில்லாஎஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ்,தினமும் 1 முதல் 2 ஜிபிடேட்டா சேவையை வழங்கிவருகிறது. பிரைம்உறுப்பினர்களுக்கு இந்தசேவை ரூ.99 க்குவழங்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.

புதன், 12 ஏப்ரல், 2017


360 சேனல்கள். 50 HD சேனல்கள். முதல் மூன்று மாதம் இலவசம் ..

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ  
4G இலவச சேவை அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில நாட்களில் நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி இன்று சுமார் 10 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அடுத்தடுத்த இலவச அறிவிப்பே இந்த வரவேற்பிற்கு காரணம்
இந்த நிலையில் இலவச இணையதள சேவையை அடுத்து ஜியோ தற்போது டி. டி. ஹெஸ் சேவையிலும் கால்பதிக்க உள்ளது.
இலவசம் கொடுத்தால்தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக முடியும் என்பதை சரியாக புரிந்து கொண்ட ஜியோ, டி. டி. ஹெச் சேவையிலும் முதல் மூன்று மாதங்கள் இலவசம் என அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை மேலும் ஜியோ செட்-டாப் பாக்ஸ்ம் டிடிஎச் சேவையில் 360க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது.அதில் 50 சேனல்கள் ஹெச். டி. சேனல்களாகும். ஜியோ சேவைகளைப் போலவே இவற்றையும் குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

"தன் தனா தன்' சலுகை: jio புதிய அறிவிப்பு



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு "தன் தனா தன்' என்ற புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
"தன் தனா தன்' என்ற சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.309-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 1ஜிபி டேட்டாவை 84 நாள்களுக்கு பெறலாம். அதேபோன்று, ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா 84 நாள்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதேசமயம், "சம்மர் சர்ப்ரைஸ்' திட்ட உறுப்பினர்களுக்கு இந்த புதிய சலுகை திட்டம் பொருந்தாது. பிரைம் திட்டத்தில் உறுப்பினராக சேராத வாடிக்கையாளர்கள் ரூ.408-க்கு ரீசார்ஜ் செய்து தினமும் 1 ஜிபி டேட்டாவையும்; ரூ.608-க்கு ரீசார்ஜ் செய்து தினமும் 2ஜிபி டேட்டாவையும் 84 நாள்களுக்கு பெறலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

"தன் தனா தன்' சலுகை: jio புதிய அறிவிப்பு



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு "தன் தனா தன்' என்ற புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
"தன் தனா தன்' என்ற சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.309-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும் 1ஜிபி டேட்டாவை 84 நாள்களுக்கு பெறலாம். அதேபோன்று, ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா 84 நாள்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதேசமயம், "சம்மர் சர்ப்ரைஸ்' திட்ட உறுப்பினர்களுக்கு இந்த புதிய சலுகை திட்டம் பொருந்தாது. பிரைம் திட்டத்தில் உறுப்பினராக சேராத வாடிக்கையாளர்கள் ரூ.408-க்கு ரீசார்ஜ் செய்து தினமும் 1 ஜிபி டேட்டாவையும்; ரூ.608-க்கு ரீசார்ஜ் செய்து தினமும் 2ஜிபி டேட்டாவையும் 84 நாள்களுக்கு பெறலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

வெள்ளி, 7 ஏப்ரல், 2017


Jio- க்கு ட்ராய் வைத்த செக்...! முக்கிய அறிவிப்பு வெளியீடுj


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி 'ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை' அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.
இதன்படி, ஜியோ பயனர்கள் 303 ரூபாய் செலுத்தி அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச இன்டர்நெட் சேவை தொடரலாம் என்று அந்நிறுவனம் கூறியிருந்தது. இந்த ஆஃபரைப் பெற வரும் 15-ம் தேதிக்குள் 99 ரூபாய் மற்றும் 303 ரூபாய் என இரு ரீசார்ஜுகளை செய்ய வேண்டும் என ஜியோ அறிவுறுத்தி இருந்தது. இதில், 'ஜியோ ப்ரைம்' வாடிக்கையாளராக மாற 99 ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் (TRAI), ஜியோ-வின் இந்த 'சர்ப்ரைஸ் பேக்கை' கைவிடுமாறு கூறியுள்ளது. இதையடுத்து, ஜியோ நிறுவனம், இந்த 'சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர்' கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் 31-ம் தேதி முதல் இன்று வரை இந்த ஆஃபரை சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு, மூன்று மாத குறிப்பிடப்பட்ட சேவை கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது ஜியோ நிறுவனம்.

புதன், 5 ஏப்ரல், 2017


மலிவு விலை சேவைகள்! அடுத்த அதிரடியில் ஜியோ?

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இலவசமாக ஜியோ சேவையை வழங்கிவந்தது. மார்ச் 31 முதல் இந்த இலவச சேவை முடிந்து மலிவு விலையில் ஜியோ சேவை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை அதிகரிக்க, மலிவு விலை சேவை 12 முதல் 18 மாதங்கள் தொடர்ந்து அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



கடந்தான்டு ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சேவையை அறிமுக்கப்படுத்தியது. இந்திய தொழில் தொடர்புத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஜியோ சேவை ஏற்படுத்தியது. மார்ச் 31 வரை ஜியோவில் இலவச கால் மற்றும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஜியோ சேவைகளை இனி பெற மாதக் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஜியோ ப்ரைமில் இணைய ஏப்ரல் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜியோ மலிவு விலை சேவைகள் அடுத்த ஒரு வருடத்துக்கு மேல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் 60 சதவீத வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள ஜியோ நிறுவனம், 12 முதல் 18 மாதம் வரை மலிவு விலை சேவைகளை தொடர்ந்து வழங்கலாம் என தொழிநுட்ப வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, முன்னணி தொழில் தொடர்பு சேவையாக வளர்ந்து வரும் ஜியோ, மலிவு விலை சேவைகளை தொடர்ந்து வழங்கி தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 நிதியாண்டின் முடிவில் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ கொண்டிருக்கும் என அந்நிறுவனத்தின் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 5 மார்ச், 2017

ஜியோவுக்கு போட்டியாக வோடஃபோன், ஐடியா அதிரடி சலுகைகள் !!

ஜியோ ஆஃபர்களுக்கு எதிராக, வோடபோன், ஐடியா நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஆரம்பிக்கப்பட்ட, ஒரு மாதத்திற்குள்ளாக 16 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றது
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிவேக வயர்லெஸ் இணைய சேவையில் அளவில்லா டேட்டாக்கள் மற்றும் அழைப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது.
இதனால் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன்,ஐடியா, ஏர்டெல் போன்ற ப்ரீபெய்ட் சேவையில், அழைப்புக்கட்டணம், மற்றும் டேட்டா கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது.
இந்நிலையில், போட்டி நிறுவனமான வோடபோன், ஐடியா புதிய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, புதிய சலுகைகளை ஏப்ரல் 1 முதல் இலவசமாக வழங்க உள்ளது.
இதில், ஐடியா அளவில்லா வாய்ஸ் கால், மற்றும் 500 எம்.பி டேட்டா வெரும் ரூ.348 வழங்க உள்ளது.
வோடபோன், ஜியோவின் ரூ.303 சலுகைக்கு எதிராக ரூ.342 அறிவித்துள்ளது.
இதில், அளவில்லா வாய்ஸ் கால், 28 ஜிபி டேட்டா ஒரு மதத்திற்கும், இதை நாள் ஒன்றுக்கு 1 ஜிபி வீதம் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சலுகையில், ரூ.346-ல் அளவில்லா வாய்ஸ் கால், 10 ஜிபி டேட்டா 28 நாள் வரை பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஜியோ அதிரடியாக வெள்ளிக்கிழமை பை- ஒன் கெட்-ஒன் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், ரூ.303 ரீசார்ஜ் செய்தால் ரூ.499 வரை எக்ஸ்ட்ரா பெறலாம் என்றும், இந்த சலுகை மார்ச் 31 வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையில் ரூ. 201 தொகையும், 5ஜிபி வரை இலவச டேட்டாவும் வழங்கப்பட உள்ளது.
ரூ.499 அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.301,10 ஜிபி இலவச டேட்டா சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 4 மார்ச், 2017

சாம்சங் உடன் இணைந்து 5ஜி சேவை. ஜியோவின் அடுத்த அதிரடி..

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி இலவச சேவையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் ஏர்டெல் உள்பட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வரவில்லை.
இந்நிலையில் ஜியோவின் அடுத்த அதிரடியாக அதிவிரைவில் 5ஜி சேவை தொடங்கவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கதிகலங்கி உள்ளன.
ஜியோவின் 4ஜி இலவச சேவையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புதுப்புது வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் ஜியோ நிறுவனம், உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உடன் இணைந்து, 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவின்படி 5ஜி சேவைக்குத் தேவையான ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் தயாரித்து வழங்கவுள்ளதாகவும், மற்ற சேவைப் பணிகளை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை ஜியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

வியாழன், 2 மார்ச், 2017

Jio அறிவிப்பு : மார்ச் 31-க்குப் பிறகு புதிய பேக்குகள் !


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், இலவச சேவை வரும் மார்ச்31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதற்குப் பிறகு, மற்ற நிறுவனங்கள் போல பணம் செலுத்திதான் ஜியோ சேவையை அனுபவிக்க முடியும். இதையடுத்து, ஜியோ நிறுவனம் தனது கட்டண சேவை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் 99 ரூபாய் கட்டணம் செலுத்தி 'ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் சப்ஸ்கிரிப்ஷன்' செய்ய வேண்டும். இந்த சப்ஸ்கிரிப்ஷன் வேலிடிட்டி 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும். இது தவிர, வேண்டிய மாதாந்திர பேக்குகளை பயன்படுத்தி ஜியோ சேவையை தொடரலாம்.
 தற்போது, 303 ரூபாய்க்கு ஜியோ வெளியிட்டுள்ள பேக்கிலேயே 28 நாட்களுக்கு இன்டர்நெட் முதல் அனைத்து சேவைகளும் அன்லிமிடெடில் கிடைக்கிறது. இந்த பேக்கின் மூலம் 1GB இன்டர்நெட் பயன்படுத்திய பிறகு, பேண்ட்வித் வேகம் குறைக்கப்படும். மேலும், விபரங்களை ஜியோ இணையதளத்தின் மூலம் அறியலாம்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

Jio வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த புதிய கட்டண விவரங்கள் அறிவிப்பு வெளியீடு

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.
 செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஒரு முறைக் கட்டணமாக ரூ.99 செலுத்தி தங்களை பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது இருக்கும் அனைத்து சலுகைகளையும் மாதத்துக்கு ரூ.303 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஒரு நாளைக்கு ரூ.10 மட்டுமே செலவாகும்.
மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதிக்குள் ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பில் இணையலாம்.
இந்த திட்டத்தில் இணைந்தவர்கள், ரூ.303ல் தற்போது பெற்றிருக்கும் அனைத்து சலுகைகளையும் அடுத்த 12 மாதங்களுக்கு அதாவது மார்ச் 31ம் தேதி 2018ம் ஆண்டு வரை பெறலாம் என்று அறிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ரிலையன்ஸ் ஜியோ கடந்த 6 மாதத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நொடியும் 7 வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைவதாகவும், அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.