புதன், 21 டிசம்பர், 2022
அடிக்கடி கை கால் மரத்து போகிறதா..? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்.....
உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!..
உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை பேர் சிம் வாங்கி பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமாக? கவலை வேண்டாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தினாலே போதும், எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமின்றி அது உங்கள் மொபைல் நம்பர் இல்லையென்றாலும் அதனையும் ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இது அரசாங்கத்தின் இணையதள முகவரி என்பதனால் பயப்படாமல் இதனை தெரிந்து கொள்ளலாம்.
https://tafcop.dgtelecom.gov.in/
ஒருவேளை காட்டும் போன் நம்பரில் உங்கள் நம்பர் இல்லையென்றால் அதனை ரிப்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் போனிருக்கு ஓர் ரெஃபரன்ஸ் ஐடி வரும்.அந்த ஐடியை மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் பதிவு செய்தால்,இந்த நம்பர் எந்த இடத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது என்பதனை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஞாயிறு, 11 டிசம்பர், 2022
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது மிக சுலபம். இனி ஆதார் ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை TNEB AADHAR LINK....
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மின் வாரியம் தற்போது எளிமையாக்கி உள்ளது. இனி ஆதார் கார்டினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டாம். ஆதார் எண் மட்டும் போதும்.
முதலில் மின்வாரிய அதிகாரபூர்வ இணையதளம் செல்லுங்கள்
அடுத்து அதில் உள்ள CONSUMER INFO என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் உள்ள
TANGEDCO link your service connection with aadhar
அல்லது
https://nsc.tnebltd.gov.in/adharupload/
இந்த லின்ங்கை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுமையாக பதிவிட வேண்டும். ( 11 இலக்க எண்)
அடுத்து நீங்கள் யாருடைய ஆதார் எண்ணை பதிவிட உள்ளீர்களோ அந்த ஆதார் எண்ணில் இணைத்த மொபைல் எண்ணை பதிவிடுங்கள்.
அதன் கீழ் உள்ள கேப்சாவை சரியாக பதிவிட்டு எண்டர் கொடுங்கள்
அடுத்து வரும் பக்கத்தில் உரிமையாளர், அல்லது வாடகைதாரர் என அத்னை கிளிக் செய்யுங்கள்.
அதன்பின்பு உங்கள் ஆதார் எண்ணை சரியாக பதிவிடுங்கள்
அடுத்து ஆதாருடன் பதிவிட்டுள்ள மொபைல் எண்னுக்கு வரும் OTP யை பதிவிடுங்கள். அவ்வளவுதான் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு முடிந்துவிட்டது அவ்வளவுதான்.
இதற்க்கு முன்பு ஆதார் எண்ணுடன் அதன் நகலையும் பதிவேற்ற வேண்டும். ஆனால் தற்போது இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது..
******************************************************************************************************
புதன், 30 நவம்பர், 2022
கரும்பு சாகுபடி இயந்திரம்: வாடகை மையம் நிறுவ ரூ.60 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
கரும்பு சாகுபடி இயந்திரம்: வாடகை மையம் நிறுவ ரூ.60 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
சாகுபடிக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காத நிலையில், விவசாயிகள் உரிய காலத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்வதற்காக, வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நடப்பு 2022-2023ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்
தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவ, மானியம் போன்ற வகைகளில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழகத்தில், 2022-2023ம் ஆண்டில் செயல்படுத்துவதற்காக, ரூ.150 கோடி ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.41.67 கோடி நிதியில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதிக வேலையாட்கள் தேவைப்படும் கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதற்காக, ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு 40% மானியம் அதிகபட்சமாக ரூ.60 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
பங்களிப்புத் தொகைக்கு 3 சதவிகித வட்டி மானியத்துடன் கடன் வசதி,வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் விவசாயக் குழுக்களுக்கு, மானியம் போக மீதமுள்ள பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்கு, வங்கியின் மூலம் கடன் பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பெறும் கடனுக்கு, வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் (Agriculture Infrastructure Fund) கீழ் மூன்று சதவிகித வட்டி மானியம் கிடைக்கும்.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது http://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
அ) ஆதார் அட்டையின் நகல்
ஆ) புகைப்படம் (Passport Size Photo)
இ) சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல்
ஈ) ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்
கிராமங்களில் சாகுபடிப் பணிகளுக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காமல் அவதியுறும் வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு மேற்கொண்டு வரும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
**********************************