>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
தன் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஜூன், 2019

ONE TOUCH IMAGES அனைத்து வகுப்புகளுக்கும் தேவைப்படும் பாடத்தொடர்பான புகைப்படங்கள்.



தலைப்பினை தொடுங்கள் படத்தினை காணுங்கள்.
குறிப்பு. இதனை சேமித்து வைத்துக்கொள்ளவும்  வரும் காலங்களில் புதிய  படங்கள் இணைக்கும் போது தானாக உங்கள் டாக்குமென்ட்டில் வந்துவிடும்.


Click here to download PDF

.......................................................

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கலைஞர் கருணாநிதி பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 25 விஷயங்கள்!


1. கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மூன்று முக்கிய கட்டிடங்கள். 1. சென்னையில் வள்ளுவர் கோட்டம். 2. பூம்புகாரில் சிலப்பதிகார கலைக் கூடம். 3. குமரிமுனையில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை. இவையெல்லாம் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டு.

2. கருணாநிதி 1941ம் ஆண்டு ‘‘மாணவ நேசன்’’ என்ற கையெழுத்து பத்திரிகையை தொடங்கி நடத்தி வந்தார். 1942ம் ஆண்டு அதனை முரசொலி துண்டு பிரசுரமாக்கினார். பின்னர் வார இதழ், நாளிதழாக மாறியது. அதுதான் அவர் பெற்ற முதல் குழந்தை.

3. கருணாநிதி தனது 14வது வயதில் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். அதுவே பின்னாளில் அனைத்து மாணவர் கழகம் என்ற அமைப்பாக உருவாகியது. இந்த அமைப்புதான் திராவிடையக்கத்தின் முதல் மாணவர் அமைப்பாகும்.

4. நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரி சாமியின் பேச்சின் பால் ஈர்க்கப்பட்டு, 14 வயதில் அரசியலுக்கு வந்தார். அன்று ஆரம்பித்த அவரின் அரசியல் பயணம் இன்னமும் தொடர்கிறது.

5. கருணாநிதி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் 1957ம் ஆண்டு. குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் 2016 வரையில் போட்டியிட்ட எந்த தேர்தலில் தோற்றதே இல்லை. சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் மூன்று முறை போட்டியிட்டு ஜெயித்தார். 2016ம் ஆண்டு தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுத்தனர், சொந்த தொகுதியான திருவாரூர் மக்கள்.

6. ஒரு கட்சியின் தலைவராக 45 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பெருமை கருணாநிதிக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அவர் தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்ததும் மிகப் பெரிய சாதனையே.

7. 14 ஆண்டுகள் எதிர்கட்சி தலைவராக இருந்த போதிலும் கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்கும் திறமையை அவர் பெற்றிருந்தார்.

8. ஆரம்பத்தில் அசைவ உணவை விரும்பி சாப்பிட்ட கருணாநிதி, பிற்காலத்தில் அசைவ உணவுக்கு மாறினர்.

9. கருணாநிதி 20வது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸில் திரைக்கதை எழுத்தாளராக பணியில் சேர்ந்தார். 39 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

10. இதுவரையில் 10 நாடகங்களை எழுதியுள்ளார். 13 இலக்கிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

11. நவீன தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலை தளத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மூத்த தலைவர் அவர்தான்.

12. கருணாநிதி கட்சி தலைவராக இருந்த போது 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். அதன் பின்னர் 1993ம் ஆண்டு வைகோ கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். வைகோ பின்னாளில் கருணாநிதியோடு தேர்தல் கூட்டணி வைத்தார். இரண்டு பிளவுகளை கட்சி சந்தித்த போதும், கட்சியை கட்டுக் கோப்பாக நடத்தி வந்தார்.

13. கருணாநிதியின் சகோதரியின் மகன் முரசொலி மாறன், திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். முதல் மனைவியின் மகன் மு.க.முத்துவை சினிமா நடிகராக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. அவரது இரண்டாவது மனைவி தயாளுவின் மகன் மு.க.ஸ்டாலினை தனது அரசியல் வாரிசாக அரசியலில் உருவாக்கினார். அவர் சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை முதல்வர் என பல்வேறு பதவிகளை வகித்து தற்போது, கட்சியின் பொருளாளராகவும், செயல்தலைவராகவும் உள்ளார். இன்னொரு மகன் மு.க.அழகிரி, மத்திய அமைச்சராக இருந்தார். மூன்றாவது மனைவி தயாளுவின் மகள் கனிமொழி ராஜ்யசபா உறுப்பினராகவும், கட்சியின் மகளிரணி செயலாளராகவும் இருந்து வருகிறார். முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், மத்திய அமைச்சராக இருந்தார்.

14. கருணாநிதி மீது ஊழல் புகார் குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்ட போதிலும் , எதுவும் நிருபிக்கப்படவில்லை. சர்காரியா கமிஷன் அமைக்க்கப்பட்ட போதிலும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிருபிக்கப்படவில்லை.

15. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஏராளமான பாலங்கள் கட்டினார். அதில் திருநெல்வேலியில் அவர் கட்டிய இரடுக்கு மேம்பாலம் அவர் பெயரைச் எப்போதும் சொல்லும். சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மேம்பாலம் கட்டியதில் முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லி, இரவோடு இரவாக கருணாநிதி கைது செய்யப்பட்டார். ஆனால், கடைசி வரையில் அந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

16. கருணாநிதி குடியிருக்கும் கோபாலபுரம் வீட்டை தனது மறைவுக்குப் பின்னர் மருத்துவமனையாக்கி ஏழைகளுக்கு உதவ வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார்.

17. எழுத்தாளர்களை ஊக்கிவிக்கும் வகையில் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடியை வழங்கியுள்ளார். ஓவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியின் போது, கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.

18. 96ம் ஆண்டு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்த ஜி.கே. மூப்பனாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார், கருணாநிதி. 99ம் ஆண்டு யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்த போது, சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கருணாநிதியிடம், நீங்கள் பிரதமராவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் என் உயரம் எனக்குத் தெரியும் என பதிலளித்தார். இந்த பதிலே திமுக – தமாகா கூட்டணி உடைய காரணமாக அமைந்தது. அப்போது பிரதமர் பதவிக்கு ஜி.கே.மூப்பனார் முயற்சி செய்ததாகவும், கருணாநிதி ஆதரிக்கவில்லை என்றும் சொல்வார்கள்.

19. திமுக தலைவர் கருணாநிதிக்கு சீட்டாடுவது பிடித்தமான பொழுது போக்கு. ரயில் பயணத்தின் போதும், ஓய்வு நேரங்களிலும் அவர் தனது நெருக்கமான நண்பர்களுடன் சீட்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

20. கருணாநிதி தீவிரமான கிரிக்கெட் ரசிகர். பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டால் கூட அவ்வப்போது கிரிக்கெட் ஸ்கோரை அவருக்கு சொல்ல வேண்டும். எதிர்கட்சியாக இருக்கும் போது, டிவியில் முழு போட்டியையும் பார்த்து ரசிப்பதுண்டு. சச்சின், டோனியின் ஆட்டம் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

21. ஈழ தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களில் கருணாநிதி முக்கியமானவர். இலங்கை சென்ற அமைதிப்படையினர் தமிழர்கள் மீது பல்வேறு வன் செயல்களில் ஈடுபட்டதாக புகார் வந்தது. அதனால் அவர்கள் சென்னை திரும்பி வந்த போது வரவேற்க போகவில்லை. பின்னாளில் இவருடைய ஆட்சியை கலைக்க, அதுவே காரணமாக அமைந்தது.

22. அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடும் கருணாநிதி, அன்றைய நாளிதழ், பருவ இதழ்களை படித்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த இதழ்களில் தன்னைப் பற்றி செய்திகள் வந்தால், உடனடியாக சம்மந்தப்பட்ட பத்திரிகைக்கு போன் போட்டு பேசும் பழக்கத்தை வைத்திருந்தார்.

23. கருணாநிதி அதிகாலை நடைபயிற்சி எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். பெரும்பாலும் அவர் தனது நடைபயிற்சியை அறிவாலயத்திலேயே முடித்துக் கொள்வார். அப்போது அவருடன் கட்சியின் மூத்த தலைவர்கள் யாராவது இருப்பார்கள்.

24. வயது அதிகரித்த பின்னர் நடைபயிற்சியை செய்ய முடியாத சூழலில், யோகா செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

25. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று புத்தாடை உடுத்தி, குடும்பத்தினருடன் கொண்டாடுவார். இப்போதெல்லாம் தன்னை சந்திக்கும் குடும்பத்தினர், கட்சிக்காரர்களுக்கு ரூ.10 பரிசாக வழங்குவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.

வியாழன், 15 டிசம்பர், 2016

THANKS ,பால.ரமேஷ்.AVL,

தினம் ஒரு தகவல்.

சிதம்பரம்_நடராஜர்  கோவில்  பற்றிய  75  தகவல்கள்வருமாறு:-

1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.

2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது

வியாழன், 3 நவம்பர், 2016

விழுப்புரம் மாவட்டம்  வரலாறு            www.kalvicikaram.blogspot.com

விழுப்புரம் மாவட்டத்தின் சிறப்பு

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும். செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலுர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத் தளங்கள் ஆகும். தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம் விழுப்புரம். இம்மாவட்டம் திருச்சி - சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது.இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது. விழுப்புரத்திற்கு விழிமா நகரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

2011 இல் இம்மாவட்டத்தில்

தலைநகரம் விழுப்புரம்மக்கள் தொகை34,63,284ஆண்கள்17,44,832பெண்கள்17,18,452கல்விஅறிவு விகிதம் 72.1

வரலாறு:

தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை ‘நடுநாடு’ என்றனர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் ‘மலையமானாடு’ எனவும் ‘மலாடு’ எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.

எ-கா : திருமுனைப்பாடிநாடு@ சேதிநாடு@ மகதநாடு@ சகந்நாதநாடு. சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் ‘ஏனதி’ பட்டம் கிடைத்தது என்பர். பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப்பொருள் நாயனார் ‘சேதியர்’ என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலுரில் ஆண்டதாக தெரிகிறது.

பாரி மகளிரை மணந்த தெய்வீக மன்னனும் திருக்கோவிலு}ரை ஆண்டவன். கடைசி பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் கெடிலத்தின் தென்கரையில் உள்ள சேந்த மங்கலத்தில் கி.பி.1243 முதல் 37 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டான் என அவன் கல்வெட்டு உரைக்கிறது. ஆற்றுரை தலைநகராகக் கொண்டு, இப்பகுதியை ஆண்ட ஏகம்பவாணன் பற்றி பெருந்தொகை பாடல்களால் அறிகிறோம். சோழராட்சிக்குப் பின் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், கர்நாடக ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேயர் என அவரவர் கால ஆட்சியில் அவர்களிடம் சென்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் பாலாற்றுக்கு வடக்கில் இருப்பவை வடாற்காடு எனவும், தெற்கில் இருப்பவை தென்னாற்காடு எனவும் பிரிக்கப்பட்டன. பின்னர் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து 1993 செப்டம்பர் 30 இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பெயர்க்காரணம்:

காராணை விழுப்பரையன் மடல் என்ற நுலை செயங்கொண்டார் இயற்றினார். இந்நு}லில் குறிப்பிடப்படும் காராணை என்னும் ஊர் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள சிற்றுர். காராணைக்காரனான ஆதிநாதன் முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதி. ஆதிநாதன் விழுப்பரையன் என்னும் குடிக்கு உரியவன். இவர்கள் விழுப்பாதரயன்,விழுப்பதரையர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரில்தான் இன்றைய விழுப்புரம் நகரம் பெயர் பெற்றுள்ளது. விழுப்புரத்திற்கு விழிமா நகரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

எல்லைகள்:

கிழக்கிலும் தெற்கிலும் கடலூர் மாவட்டமும், மேற்கில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களும், வடக்கில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொழில்கள்:

ஆலைகள்:

சர்க்கரை ஆலைகள், விழுப்புரம் வட்டம் முண்டியம்பாக்கத்திலும், கள்ளக்குறிச்சி வட்டம் மூங்கில் துறைப்பட்டிலும் செயல்பட்டு வருகின்றன. நுற்பாலைகள் - 3 விக்ரவாண்டி, சாரம், கள்ளக்குறிச்சி. விழுப்புரத்தில் வனஸ்பதி தொழிற்சாலை உள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் இரசாயனக் கலவை உரத் தொழிற்சாலைகள் உள்ளன.

பெரிய நடுத்தர தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள - தயாரிப்பு
ஆற்காடு டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் கள்ளக்குறிச்சி - நுல்
சௌத் இண்டியாசுகர்ஸ் முண்டியம்பாக்கம் - சர்க்கரை
சதர்ன் அக்ரிபுரன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட் முண்டியம்பாக்கம் - ஸ்பிரிட்
சௌத் ஆற்காடு டிஸ்டிரிக்ட் கோவாபரேடிவ் ஸ்பின்னிங் மில் சாரம் - நுற்பாலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை
பெரிய செவலை - சர்க்கரை
தி மெட்ராஸ் வனஸ்பதி விழுப்புரம் - வனஸ்பதி
தி. நாகம்மை காட்டன் விக்கிரவாண்டி - நுற்பாலை
 ஆரோபுட் கம்பெனி புளிச்சபள்ளம் - கோதுமை, பிஸ்கட் பால்பவுடர், சேமியா
பாண்ட்ஸ் இந்தியா பாஞ்சாலம - வாசனை திரவியங்கள்

சிட்கோ தொழிற்கூடங்கள்:

கள்ளக் குறிச்சி, தியாகதுர்கம், எலவானாசூர் கோட்டை, திருக்கோவிலுர் முதலிய இடங்களில் 101 சிறு தொழிற் கூடங்களை சிட்கோ கட்டிக் கொடுத்துள்ளது. இவற்றில் தீப்பெட்டித் தயாரிக்கும் சிறு தொழிலுக்கு இவை பயன்படுகின்றன.

விவசாயம்:

விழுப்புரம் மாவட்டத்தில் நெல், சோளம், ராகி, கம்பு மற்றும் வரகு தானியங்களும், கரும்பு, நிலக்கடலை, மற்றும் பருத்தியும் பயிரிடப்படுகிறது. புவியியல்:

ஆற்றுவளம்:

மணிமுத்தாறு, கெடிலம் ஆறு, கோமுகி ஆறு, சங்கராபரணி ஆறு, செஞ்சி ஆறு, பெண்ணை ஆறு ஆகியன இம்மாவட்டத்தில் பாயும் குறிப்பிடத்தக்க ஆறுகளாகும்.

கெடில நதி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மையனுர் என்னும் ஊருக்கருகில் தோன்றி 112 கி.மீ ஓடி கடலூருக்கருகில் கலக்கிறது. திருக்கோவிலுர் வட்டத்தில் தாழனோடை என்னும் துணையாறு கெடிலத்தோடு கலக்கிறது. திருக்கோவலுருக்கு அருகில் உள்ள வீரமடை, சித்தலிங்க மடம் என்னும் ஊர்களுக்கருகில் பெண்ணையாற்றிலிருந்து பிரியும் சிற்றாறு மலட்டாறு எனப்படுகிறது.

செஞ்சி ஆறு:

சங்கராபரணி ஆற்றின் கிளை நதியாகச் செஞ்சி வட்டத்தில் ஓடும் ஆற்றுக்கு அதுபாயும் பகுதியின் பெயரால் செஞ்சி ஆறு என அழைக்கப்படுகிறது. பெரிதும் மழைக் காலத்தில்தான் நீர் நிறைந்து காணப்படும்.

சங்கராபரணி ஆறு:

செஞ்சி வட்டத்தில் சில மைல்கள் அளவே ஓடி விவசாயத்திற்கும் பயன்படுகிறது. இதுவும் சிறிய ஆறுகளில் ஒன்று. மழைக் காலத்தைத் தவிர பிற மாதங்களில் நீர் இருக்காது. இவை தவிர பெண்ணையாறு, கோமுகியாறு, மணிமுத்தாறு போன்றவையாலும் பலன் பெறுகிறது. வீடூர் அணைத்தேக்கம் தவிர 4 நீர்த் தேக்கங்களால் விவசாயம் செழிக்கிறது.

நகர அமைப்பு :
வட்டங்கள் 10ஊராட்சி ஒன்றியங்கள் 22நகராட்சிகள் 3பேரூராட்சிகள் 15வருவாய் கோட்டங்கள் 4சட்டசபைத் தொகுதிகள்- 11 : செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானுர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலுர், உளுந்தூர்ப்பேட்டை, இரிஷிவந்தியம், சங்கராபுரம், விழுப்புரம் மாவட்டச் சுற்றுலாத் தலங்கள் :

செஞ்சிக்கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலங்களும், மேல்மலையனுரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலாத்தலம் ஆகும். இந்த கோயில் செஞ்சியிலிருந்து 32 கி.மி. தூரத்தில் உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் விழாவில் மசான கொல்லை மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். இங்கு ஒவ்வொரு அமாவாசை அன்றும், பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுவார்கள். திருக்கோயிலுர், திருவக்கரை புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.

செஞ்சிக் கோட்டை:

செஞ்சி நகருக்கு மேற்கே ஒருமைல் தொலைவில் கோட்டைகள் உள்ளன. முக்கோண அமைப்பில் மூன்று குன்றுகள் உள்ளன. ஒவ்வொரு குன்றிலும் சுற்றிப் பீரங்கிகள் வைத்துப் போரிட 60 அடிகொத்தளங்கள் அமைந்துள்ளன. வடக்கே உள்ளது கிருஷ்ணகிரி@ தெற்கே உள்ளது சந்தரையன் துர்க்கம்@ மேற்கேயுள்ளது மிகவும் உயர்ந்த இராஜகிரி. ஆனந்தக் கோன் என்பவரால் கட்டப்பட்டது. தேசிங்கு ராஜன் இங்குபுiபெநந ஆண்டதை “தேசிங்கு ராஜன் கதை” கூறுகிறது. சஞ்சீவி மலையே - செஞ்சி ஆனதாக கூறுகின்றனர். இக்கோட்டையில் அரச குடும்பத்தினர் நீராடுவதற்கு குளம் ஒன்றும், அந்தப்புறமும், விசாரனை மன்றமும், திருடர்களை விசாரிப்பதற்கென்று தனி இடங்களும் உள்ளன. கலை அமைப்போடு, அக்கால தொழில் நுட்ப முறையில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை இன்றும் காண்போர் மனதைக் கவர்கிறது. தானிய சேமிப்பு கிடங்குகள் பல பூமிக்குக் கீழும், மேலும் கட்டப்பட்டுள்ளன.

கல்ராயன்மலை:

திருக்கோவலுரிலிருந்து பேருந்து வசதி உண்டு. கல்ராயன் மலையில் “மலையாளிகள்” என்ற மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கல்ராயன் மலைக்காடு வளமான காடுகளைக் கொண்டது. இங்கு மூங்கில், தேக்கு, கடுக்காய் மரங்கள் செறிவாகக் காணப்படுகின்றன. மலையின் மீது சில இடங்களில் பழத்தோட்டங்கள் உண்டு. இயற்கை அழகை காண்பதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. சுனைகள், பள்ளத் தாக்குகள், சிற்றருவிகள் உண்டு. இங்குச் சிறு விலங்குகளான மான், கீரி, பாம்பு, நரி, காட்டுப்பன்றி, மலைப்பாம்பு, கௌதாரி முதலியவற்றைப் பார்க்கலாம்.

வழிபாட்டுத் தலங்கள் :

திருக்கோவலுர்:

இவ்வூர் பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ஊர் மேலுர், கீழூர் என 2 பிரிவாக உள்ளது. சிவன் கோவில் கீழூரிலும், திருவிக்கிரமப் பெருமாள் கோவில் மேலுரிலும் உள்ளன. இறைவன் பெயர் வீரட்டேசுரர்@ அம்மை: சிவானந்தவல்லி. வள்ளல்பாரி மறைந்த பின்னர், பாரிமகளிரை திருக்கோவலுர் மன்னனுக்கு மணம் முடித்து விட்டு கபிலர், பாரியின் பிரிவுத்துயரை ஆற்றாமல் வருந்தி, பெண்ணையாற்றின் நடுவில் உள்ள மணற்பரப்பில் வடக்கிலிருந்து உயிர் துறந்தார். கபிலர் உயிர் விட்ட கல் ஆற்றில் இன்றும் காணப்படுகிறது. ஆண்டு தோறும் மே 1 முதல் 5 வரை கபிலருக்கு விழா இங்கு நடைபெறுகிறது. எட்டு வீரட்ட தலங்களுள் இதுவும் ஒன்று.

திருவறையணி நல்லுர்:

அறை கண்ட நல்லுர் எனத் தற்போது அழைக்கப்படுகிறது. திருக்கோவிலுரில் உள்ள பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. கோயில் குன்றின் மேல் கட்டப் பட்டுள்ளது. இக்குன்றின் மீது நின்று பார்த்தால் திருவண்ணாமலையின் திருமுடி தெரியும். இறைவன் மேற்கு பார்த்து உள்ளார். பெருங்குளம் ஒன்று பாறையில் உள்ளது. இதற்குப் பக்கத்தில் ஐவர் குகைகளும் சிறு அறையும் உள்ளன.

திருவிடையாறு:

திருவெண்ணைநல்லுர் சாலை என்னும் புகை வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கில் 5 கி.மீ உள்ளது. இறைவன்: இடையாற்றுநாதர்@ இறைவி: சிற்றிடை நாயகி.

திருநெல்வெண்ணெய்:

இது தற்போது நெய்வெணை என அழைக்கப்படுகிறது. இவ்வூர் உளுந்தூர்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கில் 7 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன்: வெண்ணெய்யப்பர். இறைவி: நீலமர்க்கண்ணம்மை.

திருவடுகூர்:

விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் புகைவண்டி வழித்தடத்தில் சின்னபாபு சமுத்திரம் என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் ஆண்டார் கோவில் என்னும் திருவடுகூர் அமையப் பெற்றுள்ளது.

திருவெண்ணெய் நல்லுர்:

இறைவன் தடுத்தாட் கொண்டநாதர், அம்மை: வேற்கண்மங்கை@ விழுப்புரத்திற்கு மேற்கே 19 கி.மீ தொலைவில் உள்ளது. திருவருட்டுறை என்பது கோயிலின் பெயர். “சிவஞானபோதம்” இயற்றிய மெய்கண்டதேவ நாயனார் இருந்த ஊர்.

திருமுண்டீச்சரம்:

திருக்கண்டீச்சரம் என்னும் இப்பகுதி திருவெண்ணெய் நல்லுருக்குக் கிழக்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.

திருவாமாத்தூர்:

இறைவன்: அழகியநாதர்@ அம்மை: அழகிய நாயகி. விழுப்புரம் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 7 கி.மீ. தொலைவில் பம்பை என்னும் சிற்றாற்றின் வடகரையில் உள்ளது. புலவர் புராணம் பாடிய திருபுகழ்த் தண்டபாணியடிகள் (சமாதி) கற்குகை இங்குள்ளது.

திருப்புறவார் பனங்காட்டூர்:

இறைவன் : பனங்காட்டீச்சுரர். இறைவி: புறவம்மை. பனையபுரம் என வழங்கும் இவ்வூர் விழுப்புரத்தை அடுத்துள்ள முண்டியம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் சித்திரைத் திங்கள் முதல்நாள் முதல் ஏழாம் நாள் வரை, நாள்தோறும் காலையில் கதிரவன் கதிர்கள் முதலில் இறைவன் மேலும், பின்னர் இறைவி மேலும் விழுகின்றன.

திருவக்கரை:

விழுப்புரம் நிலையத்திலிருந்து வடக்கே புறவார் பனங்காட்டூர், கூனிச்சம்பட்டு, கொடுக்கூர் ஆறுவழியாகவும் செல்லலாம். புதுச்சேரி வழியில் மானுரிலிருந்து மேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு இறைவன் திங்களுக்காக ஒரு முகமும், பிரமனுக்காக ஒரு முகமும், திருமாலுக்காக ஒரு முகமும் கொண்டு மூன்று முகங்களுடன் விளங்குகிறார். கோயிலுக்கு முன்புறத்தில் இலிங்கம் உள்ளது. காளி உருவம் தென்பால் உள்ளது. இங்குள்ள காளியை வக்ரகாளி என அழைக்கின்றனர். காளியின் காதில் குழந்தையின் உருவம் குண்டலமாகத் தொங்குகிறது. இடக்கையில் வில் இருக்கிறது. திருமால் கோயில் மேற்கு பார்த்த நிலையில் திருச்சுற்றில் உள்ளது. இங்குள்ள நந்தி பெரியது. சிவபெருமான் இடக்காலையூன்றி, வலக்காலைத் தூக்கி நிற்கிறார். இது புதுமையாக உள்ளது. திண்டிவனத்தைத் தண்டக வனம் என்றும், திருவக்கரையை குண்டலி வனம் எனவும் கூறுகிறார்கள்.

கல்மரம்:

“மரம் கல்லாலானதை” இங்கு பார்க்கலாம். இது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

மயிலம்:

திண்டிவனத்திலிருந்து கிழக்கே புதுச்சேரி செல்லும் வழித்தடத்தில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. பரந்த மேட்டின் மேல் அமைந்துள்ள இவ்வாலயம், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ளது. பங்குனி உத்திரம் காவடி ஊர்வலம் பார்க்க வேண்டியது. இங்கு பல சாமியார்களின் சமாதிகள் உள்ளன.