>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
TRB NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TRB NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 நவம்பர், 2019

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் புதிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.



EMIS இணையதளத்தில் Teacher Profile PART 1-ல் ஆசிரியர்களின் வங்கி விவரம் மற்றும் PAN Card No ஆகிய புதிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது

மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப் TN EMIS என்ற செயலியினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பழைய செயலியில் வருகையினை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருந்துவந்தது. இனி ஆசிரியர்கள் தங்களது பழைய  ஆப்பினை Uninstall செய்துவிட்டு பின்வறும் Link-ஐ கிளிக் செய்து புதிய ஆப்பினை பதிவிறக்கம் செய்து மாணவர்களது வருகையினை பதிவு செய்ய பயன்படுத்தவும்.

எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?  

கீழ் உள்ள Link-ஐ கிளிக் செய்து Play Store -ல் செயலினை இன்ஸ்டால் செய்யவும்.

EMIS ONE PLAY STORE LINK - DOWNLOAD ..

எவ்வாறு பயன்படுத்துவது?

பதிவிறக்கம் செயததும் Open செய்யவும்.



Open ஆனதும் Login ID,  password என்ற பகுதி தோன்றும்.

அதில் Login ID என்பதில் உங்களது பள்ளியின் 11 இலக்க Dise எண்ணையும்,  Password என்பதில் உங்களது பள்ளியின் EMIS Password -ஐயும் கொடுத்து Sing in கொடுத்து உள் நுழையவும்.


அதில் Attendance,  TNTP என்று இரண்டு பகுதிகளில் Attendance என்பதை கிளிக் செய்யவும்.அதில் உங்களது பள்ளியின் விவரங்கள் தோன்றும்.


பின் வலது மேல்புறத்தில் + என்ற உள்ளதை கிளிக் செய்யவும்.

அதில் வகுப்பு வாரியாக கிளிக் செய்தால் மாணவர்கள் பட்டியல் வரிசையாக இருக்கும். அதில் மாணவர்களுக்கு நேர் பகுதியில் P என்று இருக்கும்,  மாணவர் வந்திருந்தால் அதை மாற்றம் செய்ய தேவை இல்லை,  மாணவர் வரவில்லை என்றால் மட்டுமே அதனை கிளிக் செய்து A என்று மாற்றிக்கொள்ளவும்.


பின்பு அனைத்து மாணவர்களது வருகையினை சரிபார்த்து கடைசியாக கீழ் SAVE என்பதை கிளிக் செய்யவும்.

இவ்வாறு அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு வருகைப் பதிவினை பதிவிடவும்.


குறிப்பு :

தற்போது வந்துள்ள attendance app ல் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு attendance பதிந்த உடன்  மாணவர்கள் பெற்றோருக்கு SMS செல்லும் வசதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்.


........................................

வியாழன், 21 மார்ச், 2019

TRB - Computer Instructor Grade I Exam - How to Apply through online? [ Tips in Tamil ]



கணினி பயிற்றுனர் நிலை - 1 ( முதுகலை ஆசிரியர்கள் நிலை)  க்கான நேரடி தேர்வு இணைய வாயிலாக விண்ணப்பதாரர்கள் " எப்படி விண்ணப்பிப்பது " என்பதற்கான அறிவுரைகள்...

Computer Instructor Grade I Exam - How to Apply through online? | Tips - Click here

ஞாயிறு, 17 மார்ச், 2019

TNTET 2019 - Online Application Registration - TRB Website Live Link... [ Apply Now ]


2019 மே இறுதி அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள  ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக உங்களது விண்ணப்பங்களை 15.03.2019 முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம்.விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.04.2019.
# விண்ணப்பிப்பதற்கான TRB இணையதள நேரடி Link...

# முதலில் கீழ் உள்ள மஞ்சள் நிற Link-ஐ கிளிக் செய்து, அதில் வலது மேல்பகுதியில் உள்ள Registration என்பதை கிளிக் செய்து உங்களது தகவல்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளவும்.

# மீண்டும் நீங்கள் பதிவு செய்த விண்ணபத்தை காண இதே கீழ் உள்ள மஞ்சள் நிற Link-ஐ கிளிக் அதில் வலது மேல்பகுதியில் உள்ள Login என்பதை கிளிக் செய்து உங்களது விண்ணப்பத்தை காணலாம்.

TNTET 2019 - How to Apply through online? [ Tips in Tamil ]




TNTET 2019 - ஆன்லைன் மூலமாக எவ்வாறு விண்ணப்பிப்பது?

தெளிவான விளக்கக்குறிப்புகள் - தமிழில்...


.................................................................................................................................................

செவ்வாய், 26 ஜூன், 2018

Flash News : TRB - TNTET 2017 Paper -II Mark Certificate Published.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
PUBLICATION OF CERTIFICATE OF MARKS

Dated: 25-06-2018

Chairman

ஞாயிறு, 4 மார்ச், 2018

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெறும்.
இன்று வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய வருடாந்திர கால அட்டவணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சனி, 24 பிப்ரவரி, 2018

TRB - வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018


PGTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேதியியல் பிரிவில் 6 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு

டிஆர்பி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGTRB) போட்டித்தேர்வு வேதியியல் பிரிவில் 6 வினாக்கள் தவறாக இருந்ததை குறித்து தொடுத்த வழக்கில் 6 மதிப்பெண்கள் தர சொல்லி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

செவ்வாய், 26 டிசம்பர், 2017

TRB - சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து

சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 முறைகேடுகளை யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முறைகேடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். சமூக பணிகள் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் பாடத்துடன் நற்பண்புகளை கற்பிக்க ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

தேர்வு முறைகேடு :156 பேர் மீது வழக்குப் பதிவு!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் நடைபெற்ற 
முறைகேடு குறித்த விவகாரத்தில் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வை நடத்தியது.
இந்தத் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதன்பேரில் தேர்வு முடிவுகள் திறம்ப பெறப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2200 பேரில் பெரும்பாலானோருக்கு மதிப்பெண் வேறுபாடு இருந்தது தெரியவந்தது.
தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல், இணையதளத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து,மதிப்பெண் குளறுபடிகள் ஏற்பட்ட தேர்வர்கள் தேர்வு வாரியத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் முறைகேடு தொடர்பாக 196 பேர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் 20 அன்று தெரிவித்திருந்தது.
இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த , மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக . விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், முறைகேடாக வேலையில் சேர முயன்றவர்கள் என 156பேர் மீது 6 பிரிவுகளில் குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணை ஆணையம் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடு பின்னணி குறித்து தெரியவரும் என்றும் மற்ற அரசு பணி நியமனங்களிலும் ஊழல் குறையும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியள்ளார்.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு!!!

செவ்வாய், 19 டிசம்பர், 2017

தேர்வில் முறைகேடு ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை - TRB முடிவு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.  
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.
அந்த மனுவில், தேர்வில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது. 
மேலும் தேர்வில் இடம் பெற்ற ஓ.எம்.ஆர் தாள்கள் அனைத்தையும்  ஸ்கேன் செய்து ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.  அத்துடன் இறுதி விடைக்குறிப்பில் தரப்பட்டுள்ள மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது. 
இதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் அது தொடர்பாக 18ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து திருத்திய சான்று சரிபார்ப்பு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது. 
நேற்று மாலைவரை எத்தனைபேர்  கருத்து தெரிவித்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் தயாரிக்க உள்ளது. இந்த பட்டியல் இன்று வெளியாகும் என்று தெரிகிறது. மதிப்பெண்களில் மாற்றம் வந்தவர்கள் தாங்களாக முன் வந்து மதிப்பெண் மாற்றம் குறித்து ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் போடும் போது அதில் குறிப்பிட்ட அனைத்து விவரங்களுக்கும் விண்ணப்பம் செய்யும் நபரே பொறுப்பு என்பதால், சான்றுகள், முகவரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீண்டும் சரிபார்ப்பு நடத்தவும் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது. விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதிகப்படியாக மதிப்பெண்களில் திருத்தம் செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், என அனைத்து தரப்பினர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் தேர்வு வாரியம் உத்தேசித்துள்ளது.

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

TRB Exam - தகுதியற்ற 300 பேருக்கு போலி மதிப்பெண் வழங்கியது அம்பலம். தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!!!

புதன், 22 நவம்பர், 2017

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்திவைப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் பாடங்களுக்கு நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு.

சென்னை தரமணி மத்திய பல்தொழில்நுட்ப கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவிருந்தது.பொறியியல் அல்லாத பாடங்களுக்கு திட்டமிட்டபடி நடைபெறும்.விழுப்புரம்,மதுரையில் திட்டமிட்டபடி நவம்பர் 24,25ல் நடைபெறும்.சான்றிதழ் நடைபெறும் தேதி பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

வியாழன், 16 நவம்பர், 2017

TRB RTI LETTER : G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள PGTRB 10% இட ஒதுக்கீடு, TET PAPER - II பொருந்துமா -TRB பதில்.



திங்கள், 13 நவம்பர், 2017

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

தமிழகத்தில் கல்விக் கூடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 3,000 பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேல்நலைப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 

புதன், 8 நவம்பர், 2017

செவ்வாய், 24 அக்டோபர், 2017

TRB - ஆசிரியர் பணிக்கான வினா - விடையில் குளறுபடி

அரசு பள்ளிகளில்,1,325 ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய போட்டிதேர்வில், தவறுதலாக வினா - விடை தயாரிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில்,ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என, பல்வேறு சிறப்பு பாடங்களுக்கு, நிரந்தரமாக, ௧,௩௨௫ ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 இதற்கு, செப்., ௨௩ல், போட்டி தேர்வு நடந்தது; ௩௫ ஆயிரத்து, 781 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான, தற்காலிக விடைக்குறிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. அதில், வினாவும், விடையும் தவறாக உள்ளதாக, முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் அனுப்பிய புகார் வருமாறு: பத்தாம் வகுப்பைத் தேர்ச்சியாக கொண்ட, சிறப்பு ஆசிரியர் பணிக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே, பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியிட கோரியும், டி.ஆர்.பி., கண்டு கொள்ளவில்லை. இந்த தேர்வில், கவின் கலை கல்லுாரி பாடங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து, வினாக்கள் இடம் பெற்றன. அதனால், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.வினாத்தாளில், கிடைமட்டக்கோடு என்பதற்கு, தவறான பதில் குறிப்பு தரப்பட்டுள்ளது. 'அஜந்தாவில், புத்தரின் ஓவியம் தீட்டப்பட்ட குகை எண் என்ன...' என்ற கேள்வியில், சரியான பதில் குறிப்பு தரவில்லை. 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' என்பதற்கு பதில், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' அமைந்துள்ள இடம் என, தவறாக கேட்கப்பட்டுள்ளது.
தந்த சிற்பக்கலை யாருடைய காலத்தில் சிறப்பு பெற்றது என்ற வினாவுக்கு, நாயக்க மன்னர்கள் காலம் என, பள்ளிக்கல்வி, பிளஸ் ௨ தமிழ் புத்தகத்தில் பதில் உள்ளது. ஆனால், விஜயநகர மன்னர்கள் காலம் என, வரலாற்றையே மாற்றி, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இப்படி பல்வேறு வினாக்களும், பதில் குறிப்புகளும் தவறுதலாக உள்ளதால், அவற்றுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.