>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
TEACHERS' FORMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TEACHERS' FORMS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 அக்டோபர், 2024

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?

 களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?

களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?
👇👇👇👇👇

ஒருங்கிணைந்த நிதி மற்று மனித வள மேலாண்மைத் திட்டத்தின் (IFHRMS) செயலியான Kalanjiyam Appன் வழியே விழா முன் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறுவோர் இந்த App வழியே தங்களுக்கான விழா முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


👉🏼 *என்னென்ன விழாக்களுக்கு முன்பணம் பெறலாம்?*
👇👇👇👇👇
1. பக்ரித்
2. கிறிஸ்துமஸ்
3. தீபாவளி
4. ஈஸ்டர்
5. காந்தி ஜெயந்தி
6. புனித வெள்ளி
7. விடுதலை நாள்
8. கிருஷ்ண ஜெயந்தி
9. மே தினம்
10. மிலாடி நபி
11. மொகரம்
12. ஓணம்
13. பொங்கல்
14. ரம்ஜான்
15. குடியரசு தினம்
16. தெலுங்கு வருடப் பிறப்பு
17. விஜயதசமி
18. விநாயகர் சதுர்த்தி

(பட்டியலில் முதலாவதாக ஆயுதபூஜை தான் வரும். எனினும் அதற்கு விழா தேதி automatic enable option வரவில்லை. எனவே தற்போதைய நிலையில் அதற்கு விண்ணப்பிக்க இயலாது.)


👉🏼 *எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?*
👇👇👇👇👇

விழா நாளுக்குச் சரியாக 30 நாள்களுக்கு முன்னர் முதல் விண்ணப்பிக்கலாம்.
உதாரணமாக தீபாவளி 31.10.2024ம் தேதி எனில் 01.10.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இறுதியாகப் பெற்ற விழா முன்பணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்திய பின்பே விண்ணப்பிக்க வேண்டும்.


👉🏼 *எந்தத் தேதிவரை விண்ணப்பிக்கலாம்?*
👇👇👇👇👇

IFHRMSல் centralized payroll run செய்வதற்கு முன்பே பணம் வரவாகும்படி முன்தேதியிட்டு விண்ணப்பிப்பது நல்லது.

உதாரணமாக, மாதந்தோறும் 15 தேதிக்கு மேல் centralized payroll run செய்யப்படுமெனில், 14ஆம் தேதி பணம் வரவாகிவிட வேண்டும். Bill தயார் செய்து கருவூலத்தில் ஒப்படைக்க அலுவலகத்திற்கும் போதிய காலம் தேவை என்பதால், 8 - 10ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுவது நல்லது.


👉🏼 *எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?*
👇👇👇👇👇
IFHRMS மூலம் ஒரு நாள்காட்டி ஆண்டில் (January - December) ஒரு முறை மட்டுமே விழா முன்பணம்  அனுமதிக்கப்படும். பணம் வரவாகும் மாதத்தைத்தான் IFHRMS கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

உதாரணமாக, 2024 கிறிஸ்துமஸ்ஸிற்கு நீங்கள் விண்ணப்பித்தும் அலுவலக தாமதத்தால் 2025 ஜனவரி 1-ஆம் தேதி உங்களது கணக்கில் பணம் வரவானால் 2025 கிறிஸ்துமஸ்ஸிற்கு மீண்டும் விண்ணப்பித்தால் IFHRMS தானாகவே தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்து விடும். ஓராண்டில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு.

👉🏼 *எப்போது பிடித்தம் ஆரம்பமாகும் ?*
👇👇👇👇👇
பணம் வரவான அந்த மாத ஊதியத்திலேயே தவணை தொடங்கப்பட்டு ரூ.1000/- பிடித்தம் செய்யப்பட்டுவிடும். தொடர்ச்சியாக 10 மாதங்கள் தவணை பிடித்தம் செய்யப்படும்.



👉🏼 *எப்படி விண்ணப்பிப்பது?*
👇👇👇👇👇

Kalanjiyam Appல் Login செய்யவும்- Click here

பின் Advance - Festival Advance - Apply என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.

அதன்பின், Festival Name என்பதில் தாங்கள் விண்ணப்பிக்கும் விழாவைத் தேர்வு செய்தால், Festival Date - Advance Amount - Recovery no. of Installment உள்ளிட்டவை தானாகவே தோன்றும்.

இறுதியாக, Submit செய்ய வேண்டும்.


👉🏼 *விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைத்துவிடுமா?*
👇👇👇👇👇👇

ஒவ்வொரு நிதியாண்டிற்கும் முன்னதாக அவ்வாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (Budget) துறை வாரியான தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு அலுவலகத்திற்கும் கோரப்படும். விழா முன்பணத்தைப் பொறுத்தவரை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி கோரி விண்ணப்பிக்கப்படும். கோரப்பட்ட நிதி பெரும்பாலும் கிடைத்துவிடும் என்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைக்க வாய்ப்புண்டு.


ஒருவேளை ஆண்டுத் தொடக்கத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமிருந்து அதன்பின் நிரம்பியிருப்பின் பெறப்பட்ட நிதி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லாது போகலாம். அத்தகைய நிலையில் இருக்கும் நிதியில் விண்ணப்பித்த வரிசைப்படி முன்னுரிமை அளிக்கப்படக்கூடும்.


*பின் குறிப்பு :*
👇👇👇👇👇
தற்போது Appல் விண்ணப்பித்தாலே போதுமா என்பதை 02.10.2024ற்குப் பின்னர் தங்களது அலுவலகத்தைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.  ஏனெனில் இதுதான் முதல்முறை என்பதால் அந்தத் தேதிக்குப் பின்புதான் அலுவலகங்களுக்கே முறையான & தெளிவான வழிகாட்டல் கிடைக்கப்படக்கூடும்...
*****************-**----*************************---

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

6 - 8th மாணவர்களுக்கு Baseline Assessment Survey மேற்கொள்வதற்கான வழிமுறை

 6 - 8th மாணவர்களுக்கு Baseline Assessment Survey மேற்கொள்வதற்கான வழிமுறை


LANGUAGE LAB - BASELINE ASSESSMENT -HI TECH LAB - CLASS 6-8

மொழிகள் ஆய்வகத்தில் 


6 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு BASELINE ASSESSMENT SURVEY மேற்கொள்வதற்கான வழிமுறை


THIN CLIENT SYSTEM இல் LOGIN செய்ய வேண்டிய முகவரி

👇👇👇👇👇

https://mozhigal.tnschools.gov.in/login


USERNAME - STUDENTS 10 DIGIT NEW EMIS ID 

PASSWORD - LAST 4 DIGIT OF EMIS ID @ YEAR OF BIRTH



*****************************************

புதன், 3 ஜனவரி, 2024

Income Tax Calculator Softwares - 2024

 INCOME TAX. Calculator Softwares - 2024


Income Tax 2024 - Empty Form - Download Here

Income Tax Calculator Software 2024 (Mr. Arunagiri) - Download Here


Income Tax Calculator Software 2024 (Mr. Viswanath) - Download Here

Income Tax Calculator Software 2024 (Mr. K. ) - Download Here

In single file you can calculate for 24 employees)


Income Tax Calculator Software 2024 (Mr. T. Basker) - Download Here

( Passcode: 123)



**********--***********************************

புதன், 20 டிசம்பர், 2023

IFHRMS Kalanjiyam App 1.0 Dowload Link...

 

IFHRMS Kalanjiyam App 1.0 Dowload Link...



  IFHRMS களஞ்சியம் செயலி - Kalanjiyam App 1.0 Dowload Link...



>>> Click Here to Download App...


*****************-**********************

புதன், 30 நவம்பர், 2022

அறிவியல் மற்றும் கணித வானவில் மன்றம் பரிந்துரைக்கும் சோதனை வீடியோக்கள்*

 *அறிவியல் மற்றும் கணித வானவில் மன்றம் பரிந்துரைக்கும் சோதனை வீடியோக்கள்*


*வானவில் மன்றம் காணொளி*



STEM (அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம்) மூலம் வானவில் மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.


இந்தத் தொகுப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களின் பிளேலிஸ்ட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



 இதனை கிளிக் செய்து ஒவ்வொரு பகுதி சார்ந்த வீடியோக்களை மாணவர்களுக்கு காட்டி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.




தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி.


அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதே STEM (அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணிதம்) திட்டம். அதாவது அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , கணிதம் இணைந்த செயல் திட்டமாகும் . 




இத்திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்...


பகுதி வாரியாக பிளே பட்டியல் இணைப்பு


*இயற்பியல்*

https://www.youtube.com/watch?v=nPxRmk2W-Dg&list=PLrEkyHXS85Xvt9gpjrNVN9MiWS6tiAAa3

 

 *வேதியியல்*

https://www.youtube.com/watch?v=RaiUy9z5Afg&list=PLrEkyHXS85XtQkXKi3NLbDaV4t31HqRBx


 *கணிதம்*

https://www.youtube.com/playlist?list=PLrEkyHXS85Xs0ot_Yi3aab61q0ZeRHx5z


 *உயிரியல்*

https://www.youtube.com/playlist?list=PLrEkyHXS85Xt-mUFWMJl8CYTld4YrzPuu



2019 இல் வெளியான DIKSHA பதிப்பில் இவற்றை DIKSHA செயலியில் ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்து உபயோகிக்க 

https://diksha.gov.in/play/collection/do_31292096656402022412625?contentType=TextBook


***************************************

செவ்வாய், 29 நவம்பர், 2022

பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்..

 பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்


 
பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

(Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of karur District Education Officer (Elementary Education))..

CLIO HEARE 
*********************************

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

பள்ளி மேலாண்மைக் குழு - கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவம்

 

பள்ளி மேலாண்மைக் குழு - கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவம்

பள்ளி மேலாண்மைக் குழு - கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவம்



..............................................................


புதன், 11 மார்ச், 2020







Retirement Book - All Forms, Details & Procedures in Single pdf File



பிப்ரவரி, 2020











................................................

திங்கள், 17 பிப்ரவரி, 2020

C,D மாணவர்களுக்கு ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள்











......................................................

சனி, 15 பிப்ரவரி, 2020

NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...?



Saturday, February 15, 2020


கரூர் மாவட்டம்- கடவூர் ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .

*இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.

அதற்குமேல் தர மறுத்து விட்டது.


மாணிக்கம் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவரது தொடர் முயற்சியினால் சாதகமானதீர்ப்பு பெறப்பட்டது.

*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,

_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._

_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்._


(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)

01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.

அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.

*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.


அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..

*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..

*************************

டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..

(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)


*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..
http://www.tn.gov.in/go_view/dept/9


*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx

(NHIS Insurance Complaint number- 7373073730)

சி.அன்ழகன்
மாநிலத்துணைத் தலைவர்
த.நா.ஓய்வூதியர் சங்கம்


....................

வியாழன், 13 பிப்ரவரி, 2020

Important Forms For Teachers And Students Download


 1.. C.L Forms Download - Click Here
2. C.L Forms (H.M) Download - Click Here 
3. M.L Forms Download - Click Here 
4. R.L Forms Download - Click Here

5. All Forms Download For Teachers In - Single Click 
6. Teachers Reliving Form Download - Click Here (Page 2-3) 
7. Teachers Joining Form Download - Click Here (Page1) 
8. LPC Form Download - Click Here (Page 4-5 )

9. B.Ed Teaching Practice Permission Form Download - Click Here
10. E.L Forms Download- Click Here
11. E.L Surrender Form Download - Click Here
12. E.L Surrender Form Download - Click Here
13. School Inspection Forms Download - Click Here

14. Higher Studies Permission Form - Click Here
15. Festival Advance Form Download - Click Here 
16. Festival Advance Form -2 Download - Click Here

17. Festival Advance Form With Covering Letter - Click Here
18. Vehicle Advance Format Download - Click Here
19. V.R.S Format Download - Click Here
20. C.P.S. Form Download - Click Here

21. TPF Loan Application Download - Click Here
22. Increment Certificate Download - Click Here
23. RTI Act - 2005 Model Form Download - Click Here
24. TET Exam NOC Format Download - Click Here

25. GPF Tem Advance Format Download - Click Here
26. Housing Quata Format Download - Click Here
27. TN NHIS Application Form Download - Click Here
28. Pay Bill Print (Legal) Download - Click Here
29. Pay Drawn Particulars Form Download - Click Here

30. Local Holidayformat Download - Click Here
31. DSE - Form - M.Phil., / P.Hd., Permissionreg Format - Click Here 
32. Teacher Profile Format Download - Click Here
33. LPC New Forms Download - Click Here
34. Reliving Order Download - Click Here

35. Parent's Accident Scholarship Application Form- Click Here
36. Passport Objection Certificates Download - Click Here 
37. IGNOU Genuineness Form Download - Click Here
38. NHIS Form-With Spouse Certificate - Click Here 
39. Nativity Certificate Download - Click Here
40. Conduct Certificate Download - Click Here

41. Selection Grade/ Special Grade Format Download - Click Here
42. ஒரே பதவியில் தேர்வு நிலை படிவம் Download - Click Here [Page 10-13]
43. ஒரே பதவியில் சிறப்பு நிலை படிவம் Download - Click Here [Page 14-18]

44. பணிவரன்முறை படிவம் Download - Click Here[Page 1-4]
45. தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான படிவம் Download - Click Here [Page 5-7 ]
46. பணிப்பதிவேட்டுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் Download - Click Here [Page 8 ]
47. Tamil, English, Maths - வாசிப்புத்திறன் பதிவேடு Download -Click Here

48. DEE - Transfer Application Form Download - Click Here 
49. DSE - Transfer Application Form Download - Click Here
50. Mutual Transfer Application Form Download - Click Here
51. DEE - Mutual Transfer Application Form Download - Click Here


.......................................................................

வெள்ளி, 20 டிசம்பர், 2019

அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ய வருகிறது புது செயலி



பொதுவாக அரசுப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள், கல்வி மாவட்ட அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மாதந்தோறும் நேரில் சென்று கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்து ஆய்வு செய்வா்.

ஆய்வின்போது அதன் விவரங்களை அந்தந்த பள்ளிகளில் உள்ள ஆய்வு பதிவேட்டில், குறிப்பிட்டு எழுதிவிட்டு, அதை அறிக்கையாக உயா் அதிகாரிகளுக்கு அனுப்புவா்.

இதில் சிலா், குறிப்பிட்ட பள்ளிகளுக்குச் செல்லாமலேயே ஆய்வு செய்யாமல் ஆய்வு செய்ததாக அறிக்கை அனுப்புகின்றனா் என பள்ளிக் கல்வி இயக்ககத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கல்வி அலுவலா்களுக்கு பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அலுவலா்கள் கூறியதாவது:

கல்வி அலுவலா்களுக்கு பிரத்யேக செயலி, அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் மாணவரின் பெயா், அவா்களிடம் கேட்கப்படும் கேள்விகள் என்று அனைத்தும் அதில் பதிவேற்றம் செய்யப்படும்.

மாணவா் தரும் பதிலும் அதுலேயே உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட பள்ளியின் அனைத்து வகை கற்றல், கற்பித்தல், இதர செயல்பாடுகள் அனைத்தும் அந்தச் செயலியில் அந்த நேரத்திலேயே பதிவேற்றம் செய்யப்படும். இச் செயலி வரும் ஜனவரி முதல் கொண்டு வரப்படவுள்ளது என்றனா்.
.................................................................

வியாழன், 19 டிசம்பர், 2019

How to complete co scholastic achievement, "Using Mobile"



வியாழன், 19 டிசம்பர், 2019





.............................................

CCE MARKS CO SCHOLASTIC GRADES மதிப்பெண்களை EMIS இல் பதிவு செய்வது எப்படி??




வியாழன், 19 டிசம்பர், 2019





........................................................

திங்கள், 16 டிசம்பர், 2019

1முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பீடு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு



Monday, December 16, 2019


ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் விதம் தொடர்பாக சுய மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவது போன்று ஆசிரியர்களிடமும் சுய மதிப்பீடு மேற்கொள்ள கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் சென்று  ஆசிரியர்கள் தங்களின் பெயர், யூசர்நேம் ஆகியவற்றை பதிவு செய்து ‘பெர்பாமன்ஸ் இன்டிகேட்டர்’ பிரிவில் சென்று ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடத்தை தேர்வு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் அதை தொடர்ந்து வரும் மதிப்பீடுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாட புத்தகம் மற்றும் அது தொடர்புடைய கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகளை மேற்கொள்ளுதல், கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் எல்லா குழந்தைகளையும் ஒரு சேர ஈடுபடுத்துதல், குழந்தைகள் வகுப்பறை சூழலை ரசிக்கும் வகையில் கற்றல் செயல்பாடுகள் திட்டமிடுதல், அனைத்து குழந்தைகளாலும் எதிர்பார்க்கப்படும் வகையில் கற்றல் முடிவு அமையும் வகையில் பாட குறிப்புகள் தயார் செய்தல், கற்றல் திறன் குறைந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்துதல், பாடத்தில் உள்ள உள்ளடக்கத்தை குழந்தைகளுக்கு சரியான எடுத்துகாட்டுகளுடன் புரிய வைத்தல் உள்ளிட்ட 8 அம்சங்கள் தொடர்பாக கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்.

இதில் ஒரு கேள்விக்கு நான்கு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புக்கு கீழ், நெருக்கமாக, பூர்த்தி செய்தல், மீறுகிறது என்பது ஆகும். இதன் மூலம் ஆசிரியர்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்படும் என்றும், தொடர்ந்து மதிப்பீடுகள் குறைவாக இருப்போருக்கு பயிற்சி அளித்தல், அவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் போன்றவையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


...............................