தபால் துறையின் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்’ வங்கியானது டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 399 ரூபாயில் பத்து லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

 


 சிறப்பம்சங்கள்:-

18 முதல் 65 வயது உடையவர்கள் சேரலாம். 

தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து 399 ரூபாய் செலுத்தி 5 நிமிடங்களில் 5 நிமிடங்களில் முற்றிலும் மின்னணு (டிஜிட்டல்) முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

 விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் 

மேலும் விபத்தால் நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், ஆகியவற்றுக்கும் இழப்பீடு பெறலாம்.

அதேபோல் விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகள், உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையிலும், 

புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரையிலும், 

விபத்தால் உயிரிழப்பு, ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரது குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுகளுக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், 

விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகையாக ரூ.1,000 வீதம் அதிகபட்சம் 9 நாட்களுக்கு காப்பீட்டு தொகை  பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.ippbonline.com/web/ippb/tata-aig-group-accident-guard


**************************************-*********------**************************