>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
MEDICAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MEDICAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 டிசம்பர், 2017

NEET - 2018 நுழைவுத்தேர்வு ஓரிரு நாளில் அறிவிக்கை வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று சொல்லியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு தமிழகத்திற்கு  கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 
அதைத்தொடர்ந்து நவம்பர் 13ம் தேதி காணொலி காட்சி மூலம் 25 மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசின் இந்த திட்டத்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எந்த அளவு பயன்பெற்றுள்ளனர் என்பது 2018 நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னரே தெரியவரும். 
இந்நிலையில், நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டுள்ள தமிழக மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
அரசு, சுயநிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நேற்று துவங்கி விட்டன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.டி.எஸ்., இடங்களுக்கு, நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 15 இடங்கள் நிரம்பின. இதனால், மொத்தமுள்ள, 1,045 பி.டி.எஸ்., இடங்களில், 604 இடங்கள் நிரம்பி உள்ளன; 441 இடங்கள் காலியாக உள்ளன.
சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 715 பி.டி.எஸ்., இடங்களில், 34 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 681 இடங்கள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், 1,122 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இன்று, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நாளை, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்!!

நீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பயின்றதமிழகத்தைச் சேர்ந்தஇரட்டை சகோதரிகள்வெற்றி பெற்றுள்ளனர்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட,மருத்துவப்

படிப்பில் மாணவர்சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள்இன்று (வெள்ளிக்கிழமை)காலை 10.30 மணியளவில்வெளியிடப்பட்டது.
 நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
நீட் தேர்வில் முதல் 25இடங்களைப் பிடித்தமாணவர்கள் பட்டியலில்தமிழகத்தைச் சேர்ந்த எந்தஒரு மாணவ மாணவியும்இடம்பெறவில்லை என்பதுவேதனையானவிஷயம்தான். ரேங்க்பட்டியலில்இல்லாவிட்டாலும் நீட்தேர்வில் தமிழகத்தைச்சேர்ந்தவர்களும் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
வந்தவாசியைச் சேர்ந்தஅன்புபாரதி, நிலாபாரதிசகோதரிகள். வந்தவாசிஅரசு மேல்நிலைப்பள்ளியில்தான் அன்புபாரதியும் நிலா பாரதியும்பயின்றனர். நடந்து முடிந்தபிளஸ் 2 தேர்வில் அன்புபாரதி 1165மதிப்பெண்களும்,நிலாபாரதி 1169மதிபெண்களும் பெற்றனர்.இதனையடுத்து அவர்கள்நீட் தேர்வுக்குஆயத்தமாகினர்.
நீட் தேர்வைஎதிர்கொண்டது குறித்துஅவர்கள் 'தி இந்து'விடம்கூறும்போது, "பிளஸ் 2தேர்வு முடிந்தவுடன் ஐந்துநாட்கள் ஓய்வு எடுத்தோம்.பின்னர் நீட் தேர்வுக்காகதிட்டமிட்டோம். நீட் 2014தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ்முந்தையவினாத்தாள்களை வாங்கிபயிற்சி மேற்கொண்டோம்.பள்ளியில் நல்லமதிப்பெண் எடுத்திருந்தும்எங்களுக்கு அந்தக்கேள்விகள் புதிதாகஇருந்தன. அதனால்,சிபிஎஸ்இ 11, 12 வகுப்புபுத்தகங்களை வாங்கிப்படித்தோம்.
அதன் பின்னரே எங்களால்அந்தக் கேள்வித்தாளில்இருந்த வினாக்களுக்குபதில் அளிக்க முடிந்தது. நீட்தேர்வை சிறப்பாகஎதிர்கொள்ளவேண்டுமானால் சிபிஎஸ்இதரத்துக்கு பாடத்திட்டம்மாற்றப்பட வேண்டும்"என்றனர்.
நீட் தேர்வில் அன்பு பாரதி151 மதிப்பெண்களும்நிலாபாரதி 146மதிப்பெண்களும்பெற்றுள்ளனர்.

புதன், 30 ஆகஸ்ட், 2017

மருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு!!

புதுடில்லி: தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு

, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அவகாசத்தை செப்., 7 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்காக, நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், ஆக., 31 வரை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தன்னாட்சி அந்தஸ்து பல்கலைகளில், 5,500 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, இதுவரை எந்த கல்லுாரி அல்லது பல்கலையில் சேருவதற்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களை, தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கான கவுன்சிலிங் நடத்துவதற்கான காலக்கெடு, செப்., 7 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, தன்னாட்சி பல்கலைகளுக்கு மட்டுமே; மற்றவர்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது.
தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை, கவுன்சிலிங்கை நடத்தும் மருத்துவ சேவைகளுக்கான டைரக்டர் ஜெனரல் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அந்தத் தகவல்களை, தன்னாட்சி பல்கலைகளுக்கு, இ - மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதன் மூலம், இதுவரை கல்லுாரிகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் வெளி மாநில மாணவர்கள் சேரவில்லை'

சென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையில் ஒருவர் கூட, வெளி மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறினார்.
'எம்.பி.பி.எஸ்.,, பி.டி.எஸ்., படிப்பில், வெளி மாநில ,மாணவர்கள், சேரவில்லை'
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேர், இரண்டு இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்து, மோசடி செய்துள்ளதாக, அரசு வழக்கறிஞர், 
அஜ்மத் அலி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறி னார். அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 1,000மாணவர்கள் போலி சான்றிதழ் வழங்கி உள்ள தாக, விக்னயா என்பவரும் புகார் அளித்துள் ளார். மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மோசடி நடந்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களிலும், தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:
வெளி மாநிலங்களை பூர்வீகமாக கொண்டு, தமிழ கத்தில் வாழ்ந்து, ரேஷன் கார்டு, வாக்காளர் அடை யாள அட்டை போன்றவற்றை,இங்கு பெற்றுள் ளோர், தமிழகமருத்துவ கல்லுாரிகளில் சேர விண் ணப்பிக்கலாம். 
அதன்படி, 1,500 பேர் விண்ணப்பித் துள்ளனர். இவர்கள், பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் மட்டுமே பங்கேற்க முடியும். அவர்களில், 28 பேர், மருத்துவ
கல்லுாரிகளில் இடங்களை பெற் றுள்ளனர். இடம் பெற்ற அனைவரும், தமிழகத்தில் படித்த வர்கள்; வெளி மாநிலத்தவர்கள் இல்லை. போலி இருப்பிட சான்றிதழ் பெற்று யாருக்கும், 'சீட்' கொடுக்கவில்லை. மாணவர்கள் அளிக்கும் சான்றிதழ்களுக்கு, உறுதிமொழி கடிதம் பெறுகி றோம். சான்றிதழ் போலி என கண்டறியப்பட் டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

MBBS / BDS Courses 2017 - 18 | Provisional Selected Student List - Government/Management Quota

பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் போது நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தியது ஏன்?

நாடு முழுவதும் பல்வேறுவிதமான பாடத்திட்டங்கள் இருக்கும்போது நீட்  தேர்வை நடுநிலையான அமைப்பு நடத்தாமல் சிபிஎஸ்இ நடத்தியது ஏன் என்று மத்திய  அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதி 1184 மதிப்பெண்  பெற்றுள்ளேன். எனது மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் 199.25 ஆகும். ஆனால்  நீட் தேர்வில் 154  மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளேன். இதனால் எனக்கு  மருத்துவப் படிப்பில் சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனது  மருத்துவப் படிப்பு கனவாகி விட்டது. 
நீட் தேர்வு விஷயத்தில் ஒரு நிலையான  உறுதியான நிலைப்பாட்டை தமிழக அரசால் எடுக்க முடியவில்லை. இந்த இக்கட்டான  நிலை தமிழக மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான  மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றிருந்தும் மருத்துப் படிப்பில் சேர  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்ணும்,  அதிக கட் ஆஃப் மதிப்பெண்ணும் எடுத்துள்ள என்னை மருத்துவ கலந்தாய்வுக்கு  அழைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.  மாணவி கிருத்திகா தரப்பு வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, தமிழகத்தில் இருந்து  மொத்தம் 83 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் வெறும் 5 சதவீதம்  மட்டுமே சிபிஎஸ்இ தரப்பு மாணவர்கள். 
மாநில பாடத்திட்டத்தில் படித்து பிளஸ் 2  தேர்வில் 200-க்கு 200 எடுத்தவர்கள் கூட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க  முடியாத கடினமான நிலையில் தமிழக மாணவர்கள் உள்ளனர். எனவே, தமிழக  மாணவர்களுக்கு உரிய இடத்தை தருமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இந்த  வழக்கில் வக்கீல் வேல்முருகன் இடையிட்டு மனுவைத் தாக்கல் செய்து  வாதிடும்போது, நீட் தேர்வை சிபிஎஸ்இ தான் நடத்துகிறது. 
பெரும்பாலும்  சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இது  தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று வாதிட்டார். சிபிஎஸ்இ தரப்பில் வக்கீல் வி.பி.ராமனும்  ஆஜராகி, நீட் தேர்வு தொடர்பான  எந்த வழக்குகளையும் உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது என்று  வாதிட்டார். 
அப்போது அவரிடம் நீதிபதி, கேள்வித்தாளை யார் தயார் செய்தது  என்று கேட்டார். அதற்கு வி.பி.ராமன் சிபிஎஸ்இதான், ஆனால், மாநிலப்  பாடத்திட்டமும் கேள்வித்தாளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது   என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன்,  மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் தமிழகம்தான் மற்ற மாநிலங்களுக்கு  முன்னோடியாக உள்ளது. 
ஆனால் நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலமாகவும்  தமிழகம்தான் உள்ளது. நீட் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு தன்னால் ஆன அனைத்து  முயற்சிகளையும் எடுத்துள்ளது. இதில் யாரையும் குறை சொல்லமுடியாது.  அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி  தீர்மானத்தையும் நிறைவேற்றின. 
ஜல்லிக்கட்டுக்குப் பிறகு நீட் தேர்வு  விஷயத்தில்தான் அனைத்து அரசியல்  கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளன.  ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்றபோது, சிபிஎஸ்இயை இந்த  தேர்வை நடத்த மத்திய அரசு அனுமதித்தது ஏன். இந்த தேர்வை சிபிஎஸ்இ  நடத்தாமல், கேள்விகளை சிபிஎஸ்இ தயாரிக்காமல் நடுநிலையான ஒரு அமைப்பு  நடத்தியிருந்தால் இவ்வளவு குளறுபடிகள் ஏற்பட்டு இருக்காது. நீட்  தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேநேரம்,  தமிழகத்திற்கான மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்  உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பதும் சந்தேகமே. எனவே இந்த வழக்கில்   விரிவான தீர்ப்பு நாளை பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார். வழக்கில்  இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் முன்னதாக வழக்கு நேற்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி, ‘நீட்’  விவகாரத்தில் மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் விளைவித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த நிலையான முடிவையும் தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே எடுக்கவில்லை. மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் எத்தனை பேருக்கு ‘நீட்’ தேர்வு அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிற்பகலில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

NEET - தமிழகத்தில் நாளை மறுநாள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு : மாநில சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்த நீட் தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 4-ம் தேதி வரை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்த தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறாது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே MBBS சேர்க்கையில் பங்கபெற முடியும்  என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு கோரும் சட்டத்தை அமல்படுத்தினால் குழப்பமே ஏற்படும் என்றார். எனவே அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர கூடாது என மத்திய அரசுக்கு அவர் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற மத்திய அரசு, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியது. ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்களிக்க முடியாது. ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசின் அவசர சட்டம் உள்ளது. எனவே தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியது. இதனை அடுத்தே தமிழகத்தின் அவசர சட்டம் ஒப்புதல் அளிக்கப்படாமல், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை மறுநாள் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கி நடைபெறும் என மாநில சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாளை மாணவர் தகுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 

NEET அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு...

நீட் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு திடீர் பல்டி

தமிழக அரசின் நீட் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை- மத்திய அரசு
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு சட்ட சட்டம் தாக்கல்

10 நாட்களில் மாணவர் சேர்க்கை; மருத்துவ கவுன்சில் கெடுபிடி

’நீட்’ தேர்விலிருந்து, தமிழக அரசுக்கு இன்னும் விலக்கு கிடைக்காத நிலையில், வரும், 31க் குள்
மாணவர் சேர்க்கையை முடிக்க, இந்திய மருத்துவ கவுன்சில், ’கெடு’ விதித்து உள்ளது
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, ’நீட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இந்தத் தேர்வின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. 
தமிழகத்தில் மட்டும், இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.’நீட்’ தேர்விலில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தர, உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது. அதனால், ’நீட்’ தேர்வுக்கு விலக்கு கேட்டு, தமிழக அரசு புதிய அவசர சட்டம் நிறைவேற்றி, மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது. இதற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு பரிசீலிப்பதாக அறிவித்துள்ளது.
அதே நேரத்தில்,மருத்துவ மாணவர் சேர்க்கையை தாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில், புதிய வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கில்,மத்திய - மாநில அரசுகள் பதில் தர, உச்சநீதிமன்றம் .
இதற்கிடையில், வரும், 31க்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கும்படி,தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உத்தர விட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன், அனைத்து மாநிலங்களிலும், மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதால், தமிழகத்திலும்,மாணவர் சேர்க்கையை உரியகாலக்கெடுவில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதனால், இன்னும், 10  நாட்களில் மாணவர்சேர்க்கையை முடிக்க வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில், ’நீட்’ தேர்வு வழக்கு, உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் சார்பில், கூடுதல்அவகாசம் கேட்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை....

மருத்துவ கவுன்சிலிங்கை விரைவாக நடத்தக் கோரி, மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் வழக்கு
தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ‛நீட்' அவசர சட்டம் குறித்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் ஆஜராகவில்லை. மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
முடியாது:
‛நீட்' அவசர சட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்க முடியாது என மத்திய மாநில அரசுகள் வாதாடின.
சட்டச் சிக்கல்ஏதும் இல்லை என்பதால், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
சட்டத்திற்கு உட்பட்டே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.
தடை:
இந்நிலையில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர உத்தரவிட்டு ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் எங்கே என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய கோர்ட், அவசர சட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு என்ன செய்ய போகிறது. எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் அவசர சட்டம் இருக்க வேண்டும் எனவும் கூறினர்....

NEET விலக்கு அளிக்க ஒப்புதல். (News Update)

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின்  அவசர சட்டவரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க அரசு அவசர சட்டம் இயற்றியது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவு 14 ல் மத்திய அரசின் 3 துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அவசர சட்டவரைவு சரியானதே என்று தலைமை வக்கீல் வேணுகோபாலும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். அவசர சட்டவரைவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழக நீட் அவசர சட்ட வரைவு 2 நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

புதன், 16 ஆகஸ்ட், 2017

NEET விலக்கு அளிக்க ஒப்புதல். (News Update)



நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின்  அவசர சட்டவரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க அரசு அவசர சட்டம் இயற்றியது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவு 14 ல் மத்திய அரசின் 3 துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அவசர சட்டவரைவு சரியானதே என்று தலைமை வக்கீல் வேணுகோபாலும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். அவசர சட்டவரைவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழக நீட் அவசர சட்ட வரைவு 2 நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

'நீட்' தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு... ஓராண்டு....

சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.அதனால், 'நீட்' தேர்வை அடிப்படையாக வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தினால், தமிழக பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, தமிழக அரசு அரசாணை இயற்றியது.
பிரதமருடன் பேச்சு இதை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், ரத்து செய்தன. அதனால், 'நீட்' தேர்வுப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும் என, முடிவாகியிருந்தது.இந்நிலையில், 'அவசர சட்டம் இயற்றினால், இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க, மத்திய அரசு தயார்' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக, அறிவித்துள் ளார்.இதுகுறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரத மரையும், என்னையும், சுகாதார அமைச்சர், ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகார அமைச்சர், ஜிதேந்திர சிங் போன்றோரை சந்தித் தனர்.இதில், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள் ளன. தமிழகத்தில், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகளில், 'நீட்' அமலுக்கு வந்துவிட்டது.'நீட்' தேர்ச்சியில், தமிழக கிராமப்புற மாணவர் கள் எண்ணிக்கை குறைந்து உள்ளதால், மருத் துவ வாய்ப்புகளை அவர்கள் இழந்துள்ளனர். எனவே, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை ஆதரிக்க தயார்.

இதே கோரிக்கையை தான் தமிழக அரசும் வைக்கிறது.இதுகுறித்து, பிரதமரை சந்தித்து, நானும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பேசினோம். தமிழக அரசு வழங்கியுள்ள புள்ளி விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். அதன்படி, தமிழகத்திற்கு, இந்த ஆண்டு மட்டும், 'நீட்' தேர்வில், விலக்கு கொண்டு வர பரிசீலிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்.பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக முதன்மை செயலரிடமும் பேசினோம். அதற்கு, 'நீட் தேர்வு தொடர்பாக, மத்திய அரசு இனி, சட்டம் கொண்டு வராது; மாநில அரசுஅவசர சட்டம் இயற்றினால், அதற்கு நாம் உதவ தயாராக உள்ளோம்' என, பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்தனர்.

மத்திய அரசு தயார் எனவே, கிராமப்புற மாணவர்களின் நிலைமையை விளக்கி, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு ஒத்துழைப்பு தர, மத்திய அரசு தயாராக உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து, நிரந்தர விலக்கு கிடையாது. தமிழக, 'மெட்ரிக்' பாடத்திட்டத்தை மாற்றி, கூடுதல் பயிற்சி அளித்து, 'நீட்' தேர்வில் தகுதி பெற வைத்தால், தமிழகத்தில் மட்டு மின்றி, வெளிமாநிலங்களில் உள்ள கல்லுாரி களிலும், தமிழக மாணவர்கள் மருத்துவ இடங்களை பெறலாம்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மத்திய அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அவசர சட்டத்தை இயற்றும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் தலைமையில், அதிகாரிகள் குழு, நேற்றிரவு டில்லி சென்று, முகாமிட்டுள்ளனர்.தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சிக்கு, பலன் கிடைக்கிறது. தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றுவதால், பல மாதங்களாக நீடித்த, மருத்துவ மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது.தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்கு கிடைத்து, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் படி, 'கட்-ஆப்' கணக்கிட்டு, 17ம் தேதி, மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 12 ஆகஸ்ட், 2017

ஆகஸ்ட் 17ல் எம்பிபிஎஸ் கலந்தாய்வு?... நீட் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையா?

சென்னை : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதன காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் நீட் தேர்வு கேள்விகளில் தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீட் முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.
தோல்வியில் முடிந்த முயற்சிகள்
ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஎஸ்இ நீட் முடிவுகளை அறிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசிடம் மன்றாடி வருகிறது. இதுவரை தமிழகத்திற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. மேலும் மாநில பாடத் திட்டத்தில் படித்தோருக்கான 85 சதவீத் உள் இடஒதுக்கீடு அளித்து பிறப்பித்த அரசாணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 17ல் கலந்தாய்வு?
பொறியியல் கலந்தாய்வு இன்றோடு நடத்தி முடிக்கப்படும் நிலையில் இரண்டாம் கட்ட துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ கலந்தாய்வை வழக்கமான முறையில் நடத்த அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவிய நிலையில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.


தரவரிசைப் பட்டியல்
மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தரவரிசைப் பட்டியல் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அது தள்ளிப் போனது நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.


களக்கத்தில் மாணவர்கள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிடும், தங்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர் கிராமப்புற மாணவர்கள். ஆனால் அவர்களது எண்ணத்தில் பேரிடியை இறக்கியுள்ளது இந்தத் தகவல்.

நீட் தேர்வு அடிப்படையில் 2 நாளில் ரேங்க் லிஸ்ட் வெளியீடு - சுகாதாரத்துறை செயலாளர்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். 
நாடு முழுவதும் மே 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசு அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்ைல. நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் அந்த அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். நீட் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும்’’ என்றார்....

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

NEET தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி

'நடப்பாண்டில், நீட் தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.




அப்போது, நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருப்பதாக மாணவ அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது. நீட் தேர்வில் மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏன் என்று சிபிஎஸ்இ-க்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மாறுபட்ட வினாத்தாளை வழங்கியது ஏற்புடையது அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
நீட்  நுழைவுத் தேர்வுக்கென பொதுவான வினாத்தாள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்ய கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர். 

புதன், 9 ஆகஸ்ட், 2017

நீட் அவசர சட்டத்துக்கு தமிழக அரசு ஆலோசனை பெறவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் 'பகீர்,.....

டெல்லி: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை கேட்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லியிலேயே முகாமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரையும் தமிழக அமைச்சர்கள் சந்திக்கின்றனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் நீட் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், நீட் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு எந்த ஒரு ஆலோசனையையும் தமிழக அரசு கேட்கவில்லை என குண்டை தூக்கிப் போட்டார்.
இதனால் நீட் அவசர சட்டம் பற்றி தமிழக மக்களுக்கு பொய்யான தகவலை தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்த நீட் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 ஜூலை, 2017

நீட் தேர்வில் மாநிலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்ட வினாத்தாள்கள்.. ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்!

சென்னை: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜவடேக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
நீர் தேர்வை பிராந்திய மொழிகளில் எழுதுபவர்களுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே கேள்வித்தாள் மாநில மொழிகளில் வழங்கப்படும்.
இந்த ஆண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதியவர்களுக்கு வெவ்வேறு மாதிரியான கேள்வித்தாள்களை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது. வங்க மொழியில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தாள்களை விட கடினமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

அடுத்த ஆண்டு முதல் மொழி மாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப்பட உள்ளதால் இந்த பிரச்னை எழாது. எனவே மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை.

அதே போல் ஒரே தேசம் ஒரே தேர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் இன்ஜினியரிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது அது பேச்சு வார்த்தைமட்டத்தில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழில் கேட்கப்பட்ட நீட் கேள்வித்தாளும் கஷ்டமானதாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். நீட் தேர்வில் விலக்கு பெற்றுத்தருவதில் மாநில அரசு தோல்வியடைந்த நிலையில், கேள்வித்தாளும் கஷ்டமாக கேட்கப்பட்டதால் தமிழக மாணவர்களுக்கு இந்த வருடம் பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சனி, 22 ஜூலை, 2017

நிகர்நிலை பல்கலைகளில் 8,801 பேருக்கு 'மெடிக்கல் சீட்'

சென்னை: நாடு முழுவதும் உள்ள, நிகர்நிலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், 8,801 பேர் மாணவர்கள், 'சீட்' பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், 87 நிகர்நிலை பல்கலைகளில், 9,661 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள் உள்ளன. 


கவுன்சிலிங் : தமிழகத்தில், ஒன்பது நிகர்நிலை பல்கலைகளில், 1,650 இடங்கள் உள்ளன. இந்தாண்டு முதல், நிகர்நிலை பல்கலையில் உள்ள இடங்களையும், மத்திய அரசு, கவுன்சிலிங் மூலம் நிரப்புகிறது.

இடம் காலி : இதற்கான, முதற்கட்ட கவுன்சிலிங், ஆன்லைன் மூலம், சமீபத்தில் நடந்தது. இதில், 8,801 பேர் சீட் பெற்றுள்ளனர். இவர்கள், இன்றைக்குள், தேர்ந்தெடுத்த, பல்கலையில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5 முதல், 7 வரை நடக்கிறது.அதே போல், மருத்துவப் படிப்பகளில், அகில இந்திய ஒதுக்கீடுக்கான, முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், இன்றைக்குள், தேர்ந்தெடுத்த கல்லுாரியில் சேர வேண்டும். இல்லை என்றால், அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெறும்.