>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 நவம்பர், 2020

கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்!

 கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்!

 


PADHNA LIKHNA ABHIYAN 2020 - 2021






வயதுவந்தோர் கல்வி - கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் - பயிற்சி கால அட்டவணை - பாதுகாக்க வேண்டிய படிவங்கள்....



Click Here To Download - பயிற்சி கால அட்டவணை மற்றும் படிவங்கள் - Pdf


.................

புதன், 5 ஆகஸ்ட், 2020

முதல்-அமைச்சர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்....





பள்ளி ஆசிரியர் ஒரு பழைய உலக அழகை தொழிலுக்குள் கொண்டுவருவதோடு, மாணவர்களை மனதில் பதிய வைக்கும் நல்லறிவை கொரோனா காலத்திலும் பராமரிக்க உதவுகிறார். அவர் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறார்.

நாங்கள் பேசும் இந்த 49 வயதான ஆசிரியர் மஹாலட்சுமி, கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுவீரபட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கற்பிக்கிறார். அவர் சுமார் 25 ஆண்டுகளாக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 700’க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.

மகாலட்சுமி ஒவ்வொரு நாளும் தனது காலை வேலைகளை முடித்தவுடன், அவர் தனது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தொடங்குகிறார், அவர்களுடன் சந்திப்புகளைத் திட்டமிடுகிறார். தொற்றுநோய்களின் போது தனது ஒவ்வொரு மாணவர்களையும் பார்வையிடும் நடைமுறை இப்போது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது. இது அவருக்கு தற்போது தினசரி வழக்கமாகிவிட்டது.



தனது மாணவர்களை உந்துதலாக வைத்திருக்கவும், அவர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் இதை செய்வதாகக் கூறியுள்ளார். மஹாலட்சுமி மேலும் கூறுகையில், “கொரோனா ஊரடங்கின் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் கல்வி ரீதியாக நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், அவர்களை சந்திக்க முடிவு செய்தேன். பல மாணவர்கள் பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியில் இருந்து வருவதால், அவர்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்களின் மன ஆரோக்கியம் குறித்து நான் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தேன்.” என அவர் மேலும் கூறினார்.



அவர் பயப்பட வேண்டாம் என்று பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்துகிறார். மேலும் நிலைமைகள் இயல்பு நிலைக்கு வந்தவுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார். நெருக்கடியை சமாளிக்க அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க மகாலட்சுமி இதைச் செய்வதாகக் கூறுகிறார்.

“பள்ளியில் ஏராளமான மணிநேரங்களை ஒன்றாகக் கழித்ததால், இந்த குழந்தைகள் படிப்படியாக என்னுடைய குழந்தைகளைப் போலவே மாறிவிட்டார்கள். நேரத்தை எவ்வாறு கடத்துவது என்பது குறித்து அவர்களைப் படித்து விரிவுரை செய்ய நான் அவர்களிடம் கேட்கவில்லை. அவ்வாறு நான் செய்தால், அவர்கள் என்னைச் சந்திக்க விரும்ப மாட்டார்கள்.





பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கவே அவர்களின் வீடுகளுக்குச் செல்கிறேன். இது எனது மாணவர்களுக்கும் எனக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும்.” என்று அவர் மேலும் கூறினார்.

அரசு பள்ளியில் பணிபுரியும் தமிழாசிரியை மஹாலட்சுமி தனது மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ஊக்கமளிப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி கடலூர் மாவட்ட மக்களிடையேயும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.


...................................................................

வியாழன், 4 ஜூலை, 2019

தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலை!

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? -
தினமணியின் தலையங்கம்...
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன.
ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?
அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.
மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?
மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?
ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.
திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.
ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.
நன்றி : தினமணி
...................................................................................................................................................................

ஞாயிறு, 30 ஜூன், 2019

அத்திவரதர் தரிசனத்துக்குத் தயாராகும் காஞ்சிபுரம் - பக்தர்களுக்கு 15 வழிகாட்டுதல்கள்!


40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்' வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக எழுந்தருளச் செய்யப்படுவார். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வரதரை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்! 
1. குளத்தில் இருந்து அத்திவரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்திவரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல்நாள் அன்றே அத்திவரதரை பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாள்கள் கழித்து அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

2.  48 நாள்களிலும் அத்திவரதர் தரிசனம் மட்டுமே நடைபெறும். வேறு எந்த சிறப்பு பூஜையும் நடைபெறாது.

3. காலை 6  முதல் 2 மணி வரை, பிற்பகல் 3 முதல் 8 மணி வரை எனத் தரிசனத்துக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

4.  அத்திவரதர் தரிசனத்தைக் காண வரும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்த பின்பு மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.

5.  பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுதரிசனத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. சிறப்பு தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வி.ஐ.பி-க்கள் மேற்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6. ஸ்ரீதேவராஜர் மற்றும் தாயார் சந்நிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தவழியாக மூலவர் மற்றும் தாயாரைத் தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

7. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து நிறுத்தம், மருத்துவ முகாம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ளன.

8. காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிகப் பேருந்து நிலையங்களை ஓரிக்கை, ஒலிமுகமதுப்பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைத்திருக்கிறார்கள். மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காகப் பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதிபள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒலிமுகமதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி மற்றும் செய்யாறு, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை பேருந்து நிலையத்திலிருந்தும் தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து புறப்படும்.

10. தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்துக்கென நிமிடத்துக்கு 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
11. காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் இருபாலருக்கும் தலா 11 வீதம் 22  தற்காலிகக் கழிப்பிடம் கூடுதலாக அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36 கழிப்பிடங்களும் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து  மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு எந்திரங்களும் வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு எந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில்  6 புதிய சுத்திகரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டி கோயிலுக்குள் ஒன்றும், கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

12. குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 100 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலமாகக் கண்காணிப்புப் பணிகள் நடைபெறும். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

13. சுகாதாரத் துறையின் மூலமாகக் கோயிலுக்கு உள்பகுதியில் 5 மருத்துவக் குழுக்களும் கோயிலுக்கு வெளியில் 4 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன் கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14. அத்திவரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். உணவின் மாதிரி எடுத்துப் பரிசோதனை செய்யப்படும். அதுபோல் காஞ்சிபுரத்தில் உள்ள சுமார் 300 உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அந்த உணவகங்களில் இருந்து வரும் உணவுகள் தினமும் பரிசோதனை செய்யப்படும்.

15. பெரும்பாலான விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆகவே, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களை திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்குத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.....

வெள்ளி, 28 ஜூன், 2019

ONE TOUCH IMAGES அனைத்து வகுப்புகளுக்கும் தேவைப்படும் பாடத்தொடர்பான புகைப்படங்கள்.



தலைப்பினை தொடுங்கள் படத்தினை காணுங்கள்.
குறிப்பு. இதனை சேமித்து வைத்துக்கொள்ளவும்  வரும் காலங்களில் புதிய  படங்கள் இணைக்கும் போது தானாக உங்கள் டாக்குமென்ட்டில் வந்துவிடும்.


Click here to download PDF

.......................................................

திங்கள், 22 ஏப்ரல், 2019

NEET dress code: Light, half-sleeve clothes, no belts


NEET dress code: Light, half-sleeve clothes, no belts


The National Testing Agency (NTA), which recently released admit cards for National Eligibility-cum-Entrance Test (NEET) for undergraduate (UG) medical and dental seats, has laid down a dress code for candidates to minimise instances of cheating. In a recently released circular, the NTA asked candidates to wear only light clothes with half sleeves and open footwear. 



 Those wearing customary dresses including burqas or turbans have been asked to mention the same in their application form and report to the exam centre at least one and a half hours early to complete the frisking procedure. 'Students who have to wear a burqa or a turban during exams have already mentioned the same in their application form and this will be mentioned in their admit card. We've requested them to report to the exam centre early so that their frisking process is over in time,' said the circular. 

NEET dress code: Light, half-sleeve clothes, no belts


 Any metal objects, including belts or digital watches, will not be allowed in the exam centre. According to registration figures made public by NTA, close to 15.19 lakh students registered for NEET-UG this year, compared to 13.26 lakh in 2018. There are close to 67,000 UG medical seats in government-run and private institutes in the country, which means at least 23 students will be vying for one medical and dental seat this year. 




Like last year, most NEET-UG registrations in the country have come from Maharashtra, where 2.19 lakh students will be appearing for the exam, followed by Uttar Pradesh and Tamil Nadu, with 1.57 lakh and 1.40 lakh students respectively. From Rajasthan, 99,711 have registered for NEET-UG and another 84,443 students registered from Bihar. NEET 2019 will be held across the country on May 5.

NEET dress code: Light, half-sleeve clothes, no belts 

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 100 புத்தகங்கள்... மின்நூல் வடிவில்...


குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 100 புத்தகங்கள்... மின்நூல் வடிவில்...Click Download

திங்கள், 15 ஏப்ரல், 2019

கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாதனை.


வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கோக்கலூர் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வேறு அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பி பரிசு பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடையே மகிழ்வித்து மகிழ் சென்னை சிறுதுளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த ஆசிரியர். ஜெயா வெங்கட் நினைவாகவும், தஞ்சாவூர் கனவு மெய்ப்பட வேண்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான குழந்தைசாமி, சிவகுருநாதன், தரணிபாய், ஆனந்த் ஆகியோர் ஏற்பாடுகளையும்,நமது முடிவுகளை இரவு பகலும் கண் விழித்து சேகரித்து உதவிய அன்புத்தம்பி கனவு பள்ளி பிரதீப் ஆகியோர் இடைவிடாது ஏற்பாடுகளை
 செய்து அரசு பள்ளிகளுக்கு இடையே அஞ்சல் துறை அஞ்சல் அட்டையை மூலம் அரசு பள்ளிகளுக்கு இடையே வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்ளச் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அஞ்சல் அட்டையில் படம் வரைந்து இதர பள்ளிகளுக்கு அனுப்பி இருந்தனர்.

இதில் கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பள்ளி அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் அஜய்  முதல் பரிசையும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஆஷிகா இரண்டாம் பரிசும், நான்காம் வகுப்பு மாணவன் கிரண்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர். சென்னை சிறு துளி மற்றும் கனவு மெய்ப்பட வேண்டும் குழு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழ்,பரிசு மற்றும் பதக்கத்தினை மாணவர்களுக்கு வழிபாட்டு கூட்டத்தில் வழங்கப்பட்டது.

................................................................................................................................................................................

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கல்விச்சிகரத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


சனி, 30 மார்ச், 2019

ரூ.1.2 கோடி சம்பளத்துக்கு கூகுளில் வேலை பெற்ற சாதாரண கல்லூரி மாணவர்




ரூ.1.2 கோடி சம்பளத்துக்கு கூகுளில் வேலை பெற்ற சாதாரண கல்லூரி மாணவர் 
 An ordinary college student who worked in Google for a salary of Rs. 1.2 crore

பிரபல வலைதள நிறுவனமான கூகுளில், மும்பையை சேர்ந்த சாதாரண கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் வருடத்திற்க ரூ.1.2 கோடி சம்பளத்தில் பணி ஆணை பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

பொதுவாக ஐஐடி, எம்ஐடி போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கே இதுபோன்ற உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும் நிலையில், சாதாரண கல்லூரியில் படித்த மாணவன் ஒருவர் 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பையைச் சேர்ந்தவர் அப்துல்லா கான். இவர் ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு, அதற்கான தேர்வுகளை எழுதிய நிலையில், தோல்வி அடைந்ததால், சாதாரண கல்லூரியில் சேர்ந்த படித்து பட்டம் பெற்றார். 

அதைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பித்திருந்த அப்துல்லா கானுக்கு, இன்டர்வியூ குறித்து தகவல் வந்தது. அதையடுத்து, ஆன்லைன் மூலமே அவரிடம் நேர்காணல் நடைபெற்றது. 

இவைகள் அனைத்திலும் அப்துல்லாகான் தேர்ச்சி பெற்ற நிலையில், இறுதிச்சுற்று இன்டர்வியூவுக்காக லண்டனுக்கு அழைக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற நேர்காணலில் வெற்றிபெற்ற அப்துல்லாகானுக்கு கூகுள் நிறுவனம் பணி ஆணை வழங்கியது. அவருக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் பவுண்டுகள் (ரூ. 54.5 லட்சம்) போனஸ், 85 ஆயிரம் பவுண்டுகள் (ரூ. 58.9 லட்சம்), ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் வழங்கப்படும் என்றும் பணி ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்துல்லா கான், கூகுளில் பணி கிடைக்கும் என்பது குறித்து தான் எதிர்பார்க்கவில்லை என்றும், இன்டர்வியூ காரணமாக தனக்கு அனுபவம் கிடைக்கும் என்பதாலேயே பங்கேற்றேன்.ஆனால் எனக்கு வேலை கிடைத்துவிட்டது.. நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனேன் என்று கூறியுள்ளார்.

.........................................................................................................................................................................................................................................................................................................................................................................

திங்கள், 31 டிசம்பர், 2018

🙏🌹🌹🌹🌹🌹🌹🌹 *Wish you all a Happy & Prosperous New Year 2019 !*

*நம்  அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு இனிய புத்தாண்டாக 2019 மலர வாழ்த்துக்கள்!!!*

 *என்றும் அன்புடன் ப.மா.ஏழுமலை பட்டதாரி ஆசிரியர்(அ) ஊ.ஒ.ந.நி.பள்ளி கலத்தம்பட்டு மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம்    மா வட்டம்.* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

வெள்ளி, 14 டிசம்பர், 2018

ஒரே வாரத்தில். நெஞ்சு சளியை நிரந்தரமாக குணமாக்கலாம் இதை செய்து பாருங்கள்




புகைப்பழக்கம் மற்றும் பல்வேறு விதமான பழக்கவழக்கங்களால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தீராத சளியை ஏற்படுத்தும்.

இது நாளடைவில் நெஞ்சில் தங்கி பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தும். உடல் பலவீனம்,ரத்த ஓட்டத்தை தடுக்கும். அதிகமாகநெஞ்சில் சளி இருந்தால் மூச்சடைப்பு ஏற்படும்.

இதற்கு எளிய முறையில் வீட்டில் உள்ள ஒரு பொருளைவைத்தே நாம் தீர்வு காணலாம்.இரண்டு மூன்று வெற்றிலையை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். ஒரு டம்ளர் நீர் கால் டம்ளராக சுண்டும் வரை விட்டு பிறகு எடுத்து வடித்து தேவைப்பட்டால் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

இதை தினமும் அதிகாலை நேரங்களில் காபி,டீயை தவிர்த்து விட்டு இந்த கசாயத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் கட்டியுள்ள சளி முழுவதுமாக வெளியேறி உடல் நன்றாக தேறாஆரம்பிக்கும்.

திங்கள், 26 நவம்பர், 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.11.18



திருக்குறள்


அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்

திருக்குறள்:104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

விளக்கம்:

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

பழமொழி

Lamb at home and a lion at the cage

பார்த்தால் பசு ‌பாய்ந்தால் புலி

இரண்டொழுக்க பண்பாடு

1.பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்
2.  தினமும் ஒரு முறையாவது என்னாலான உதவியை செய்வேன்

 பொன்மொழி

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.

  அன்னைத்தெரசா

பொதுஅறிவு

1.சித்தூர்கார்  கோட்டை எங்குள்ளது?

ராஜஸ்தான்

2. குவாலியர் கோட்டை எங்கு உள்ளது?

மத்திய பிரதேசம்


தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

முள்ளங்கி



1.  முள்ளங்கியைச் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, மாவுச் சத்து நன்றாக செரிமானம் ஆகிவிடும். கொழுப்புச் சத்தும் நன்றாக ஜீரணமாகும். தவிர ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் சேர்வதை முள்ளங்கி தடுக்கும்.

2. முள்ளங்கிச் சாறு மூல நோயைக் குணப்படுத்தும். சிறுநீரக கற்கள் பிரச்னையில் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி முழு நிவாரணம் தரும். முள்ளங்கியை நன்றாக வேக  வைத்து, அந்த நீரை வடிகட்டிக் குடித்து வர சிறுநீரக கற்கள் முற்றிலும் கரைந்து போகும்.

English words and meaning

Javelin.      ஈட்டி
Jester.       விகடன் Jury.   பஞ்சாயத்துகுழு
Jot.         சிறு அளவு
Jovial.       மகிழ்ச்சியான

அறிவியல் விந்தைகள்

சில புரட்சிகள் அறிவோம்
1. முட்டை உற்பத்தி அதிகரிப்பு - வெள்ளி புரட்சி
2. பால் உற்பத்தி அதிகரிப்பு - வெண்மை புரட்சி
3. வேளாண் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு - பசுமை புரட்சி
4. கடல் சார் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு - நீல புரட்சி
5. பழங்கள் மற்றும் தேன் உற்பத்தி அதிகரிப்பு - தங்கப் புரட்சி

நீதிக்கதை

நீ எந்தக் காகம்?

பலராம் பிழைப்பதற்கு வழியின்றித் தவித்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை....ஒரு நாள் அறிவுமதி என்ற அறிஞரைச் சந்தித்தான். அவரிடம் தன் கஷ்டங்கைச் சொன்னான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் அறிவுமதி. அவர் பலராமிடம், ""இந்த பூமி பரந்து விரிந்து கிடக்கிறது....இந்த ஊரில் உனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வெளியூர் சென்று வேலை தேடு...உன் முயற்சிக்கு ஏற்ப இறைவன் கூலி தருவான்...''

பலராமும் சம்மதித்துப் புறப்பட்ட மூன்றாம் நாள் ஊருக்குத் திரும்பினான்.

ஊருக்குத் திரும்பியவன், அறிவுமதியைச் சந்தித்தான்.

அவரிடம், ""தங்கள் அறிவுரைப்படி நான் கிளம்பிவிட்டேன்.....வழியில் பாலைவனம்!....ஒரே ஒரு மரம் மட்டும் தென்பட்டது....கடுமையான வெயிலில் நடந்து களைத்துப் போய் அந்த மர நிழலில் அமர்ந்தேன்....அந்த மரத்தில் சிறகொடிந்த ஒரு நொண்டிக்காகம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது...அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இன்னொரு காகம், தான் கொண்டு வந்த உணவை இந்த நொண்டிக் காக்கைக்கு ஊட்டி விட்டுச் சென்றது! எங்கோ பாலைவனத்தில் பசியால் கிடந்து துடிக்கும் ஒரு நொண்டிக்காக்கைக்கு மற்றொரு காகத்தின் மூலம் உணவை அளிக்கும் இறைவன், என்னை மட்டும் கை விட்டு விடுவானா....என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது!....திரும்பி வந்து விட்டேன்!...'' என்றான்.

அறிவுமதி சிரித்துக் கொண்டே, ""அது சரி!....நீ அதில் எந்தக் காகம்?'' என்று கேட்டார்.

""ஐயா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

""யாராவது உணவு தருவார்களா,....என்று பரிதவிக்கும் நொண்டிக் காகமா?....அல்லது .....பாடுபட்டு உணவு தேடி தானும் உண்டு பிறருக்கும் வழங்கும் வலிமை உள்ள காகமா?...நீ எந்தக் காகமாக இருக்கு விரும்புகிறாய்?''
இப்போது நம்பிக்கையோடு உற்சாகமும் பலராமுக்கு ஏற்பட்டு விட்டது.

தற்போது அவன் வறுமை நீங்கி சந்தோஷமாக இருக்கிறான்!
✨✨✨✨


இன்றைய செய்திகள்

26.11.18

* கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

* சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அளவில், பயன்படுத்தாத நீரை தேக்கி வைக்கும் வகையில், மூன்று அணைகள் கட்டும் பணிகளை விரைவில் மேற்கொள்ள, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

* நிப்பான் பெயின்ட் நிறுவனம் பார்மால்டிஹைட் நச்சுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘கிட்ஸ் பெயின்ட்’ வகையை நேற்று சென்னையில் அறிமுகம் செய்தது

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

* டி20 பெண்கள் உலகக் கோப்பை  கிரிக்கெட் போட்டியில் 4-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Today's Headlines

* The Tamil Nadu Health Division has issued a warrant against the tariff in the four state government hospitals in Tanjore, Nagapattinam, Thiruvarur and Pudukottai on December 15.

* The central government is seriously inclined to take up all three dams construction tasks to ensure the use of irrigation water in the Indus River Water Distribution Agreement.

* Nippon Paint Company introduced 'Kids' Paint' in Chennai yesterday to protect children from formaldehyde poisons

* In the 3rd T20 match against Australia, India won by 6 wickets and leveled the series 1-1.

* T-20 Women's World Cup Australian won the Women's Championship title for the 4th time

ஞாயிறு, 25 நவம்பர், 2018

தொப்பையை குறைக்க கூடிய முன்னோர்களின் முறைகள்..!


இப்போதெல்லாம் உடல் எடை பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர். உணவு கட்டுபாடின்றியும், தேவையற்ற அன்றாட பழக்கத்தாலும், ஆரோக்கியமற்ற சூழலாலும் இந்த நிலை அதிகமாகி கொண்டே செல்கிறது. இதன் விளைவாக தொப்பை என்கிற விரும்பாத பரிசு தான் நமக்கு கிடைக்கிறது.

ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்க கூடிய முன்னோர்களின் முறைகள்..!
இதனை சரி செய்ய ஏராளமான வழிகள் இருந்தாலும் நமது முன்னோர்களின் முறை சற்றே ஆற்றல் மிக்கது. எப்படியெல்லாம் நம் முன்னோர்கள் உடலை கச்சிதமான அமைப்புடன் வைத்து கொண்டார்கள் என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.

ஆற்றல் மிக்க முறைகள்
முன்னோர்கள் கடைபிடித்த ஒவ்வொரு முறைகளுக்கும் பல வித அர்த்தங்கள் இருந்ததாம். எல்லா வகையான முறைகளும் இயற்கையுடன் பின்னி பிணைந்துள்ளது என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் எடை பிரச்சினைக்கு மட்டுமன்றி பல வகையான பிரச்சினைகளுக்கும் இவர்களின் முறைகள் நன்கு உதவியது.

புஜங்காசனம்

பாம்பு படமெடுப்பது போன்ற தோற்றத்தை இந்த பயிற்சி முறை தரவல்லது. உடலின் தசைகளை இலகுவாக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொண்டு, தொப்பையை விரைவில் குறைக்க செய்யும். அத்துடன் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து எந்த வித பிரச்சினைகளும் இன்றி ஆரோக்கியமான உடல் நலத்தை தரும்.

பயிற்சி முறை...

முதலில் குப்புற படுத்து கொண்டு, இரண்டு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக வைத்து கொள்ளவும். பிறகு தலை மற்றும் மார்பு பகுதியையும் சேர்த்து மேலே தூக்கி மூச்சை மெல்ல இழுத்து விடவும். அதன் பின், இரு கால்களையும் மேலே தூக்கி மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியால் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறைந்து எளிதில் ஸ்லிம்மாக ஆகிவிடலாம்.

உஸ்ட்ராசனம்

தொப்பையை குறைப்பதில் உஸ்ட்ராசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆசனம் உடலின் முழு நிலையையும் சீராக வைத்து, அதிக நலனை தருகிறது. இந்த பயிற்சியை தினமும் செய்து வருவதால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறைந்து, மிக சீக்கிரமாகவே தொப்பை குறையும்.

ஆசன முறை...
முதலில் கால்கள் உள்ளே மடங்குவது போன்று முழங்காலில் உட்கார்ந்து கொண்டு, மெதுவாக உடலை எழ செய்து பின்னங்கால்களை கைகளால் பிடித்து கொள்ளுங்கள். இந்த நிலையில் உடலை நன்றாக வலைத்து இருக்க வேண்டும். இந்த நிலையில் மெல்லமாக மூச்சை நன்கு இழுத்து வெளியே விடவும். இதனை தொடர்ந்து செய்யவும்.

கும்பகாசனம்
தொப்பையை குறைப்பதில் இந்த முறை முதன்மையான பங்கு வகிக்கிறது. தொப்பையை குறைப்பதோடு தசைகளுக்கு அதிக வலிமையை இது தருகிறது. அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளும் உறுதி பெறுகிறது. கிட்டத்தட்ட "புஸ் அப்ஸ்" போன்ற நிலையில் தான் இதை நீங்கள் செய்ய வேண்டும்.

பயிற்சி முறை

குப்புற படுத்து கொண்டு தோல் பட்டையை மேலே தூக்கி நிறுத்து கொள்ளவும். அடுத்து கைகளை தோல் பட்டைக்கு நேராக நிறுத்தவும். இந்த நிலையில் கால்கள் பாதி முட்டி போடுவது போன்று இருக்கவும். அடுத்து உங்களின் உடலை மெல்ல மேலே எழும்ப செய்யவும். இந்த நிலையில் 10 நொடிகளுக்கு மேல் இருக்கலாம். பின் மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.


தனுராசனம்

தனுராசனம் செய்வதால் உடலின் முழு செயல்படும் சீராக நடைபெறும். தொப்பையை முழுக்க குறைக்க இந்த தனுராசனம் பெரிதும் உதவும். தனு என்பதற்கு "வில்" என்ற அர்த்தம் உண்டு. ஆதலால், இந்த ஆசனத்தை செய்வதற்கு, வில்லை போன்று நம் உடலை வளைக்க வேண்டும்.

பயிற்சி முறை...

முதலில் குப்பற படுத்து கொண்டு, இரண்டு கணுக்காலை கைகளால் பிடித்து கொள்ளவும். அடுத்து, மார்பு பகுதியை மேல் நோக்கி தூக்குமாறு செய்ய வேண்டும். இந்த நிலையில் மெல்லமாக மூச்சை இழுத்து வெளியில் விடவும். இவ்வாறு, வில்லை போன்று உடலை வளைத்து தொடர்ந்து செய்து வந்தால், தொப்பையை விரைவில் குறைத்து விடலாம்.


விருக்சாசனம்

"விருக்ஷம்" என்பதற்கு மரம் என்று பொருள் உண்டு. மரத்தை போன்று நின்ற நிலையில் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இந்த முறை வயிற்று தசைகளுக்கு அதிக வலிவை தந்து, தொப்பையற்ற வயிறாக மாற்றுகிறது. இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 விநாடிகள் வரை இருக்கலாம்.


ஆசன முறை...

இந்த பயிற்சியை செய்ய, முதலில் இரு கால்களையும் சிறிது விரித்து வைத்து கொண்டு, வலது காலை மடக்கி, அதை மேலே உயர்த்தி அடிப்பாதத்தை இடது தொடையின் மேல் வைக்க வேண்டும். இந்த நிலையில் முதலில் நிலையாக நின்று கொள்ளவும்.பிறகு மெல்லமாக மூச்சை இழுத்து விடவும். அடுத்து கைகளை மேலே உயர்த்தி வணக்கம் சொல்வது போன்று வைத்து கொள்ள வேண்டும்.





மேற்சொன்ன முன்னோர்களின் முறைப்படி எளிதில் உங்களின் தொப்பையை குறைத்து விடலாம் நண்பர்களே.