சிவில் சர்வீசஸ் ரிசல்ட் : தமிழகத்தில் 70 பேர் தேர்ச்சி...
இந்திய ஆட்சி பணி, போலீஸ் பணி உட்பட, சிவில் சர்வீசஸ் பணிகளில், 980 காலியிடங்களுக்கு, 2017, ஜூன், 18ல், முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது.
இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 12 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்டவர்கள், பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். 2017, அக்., 28ல் பிரதான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி முதல், ஏப்., வரை நேர்முக தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகளை, யு.பி.எஸ்.சி., என்ற, அகில இந்திய குடிமை பணிகள் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில், ஐதராபாத் இளைஞர் துரிஷெட்டி அனுதீப், முதல் இடம் பெற்று உள்ளார்.தமிழகத்தில், மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற, 15 மாணவியர் உட்பட, 51 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், தர்மபுரி டாக்டர் கீர்த்தி வாசன், அகில இந்திய அளவில், 29ம் இடமும், சென்னை மதுபாலன், 71ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் பல மையங்களில் பயிற்சி பெற்ற பலரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து, 70க்கும் மேற்பட்டவர்கள், ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.