>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
ENGINEERING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ENGINEERING லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூன், 2022

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.

 தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்.


tneaonline.org 

என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.

***************************************

சனி, 4 மே, 2019

பொறியியல் பட்டப்படிப்பு 2019: இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்..



தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய கடைசி நாள் மே 31-ந்தேதி.

பொறியியல் விண்ணப்பம், கலந்தாய்வு போன்றவைகளை கடந்த பல ஆண்டுகளாக அண்ணா யுனிவர்சிட்டி திறம்படசெயல்படுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டுமுதல் தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்கம் நடத்துகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 42 இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து, 2019-20-ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பில் சேர இணையதளங்கள் மூலம் இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதுஇணையதள வசதி இல்லாதவர்கள் தங்களது பகுதியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் தமிழகம் முழுவதும் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரிwww.tneaonline.in, www.tndte.gov.inவிண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். ஆன்லைனில் பணம் செலுத்த முடியாத விண்ணப்ப தாரர்கள் 'செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை' என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து சேவை மையங்களில் அளிக்கலாம். விண்ணப்பத்தில் அருகில் உள்ள சேவை மையம் ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டும். ஏனெனில் அந்த சேவை மையத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்புநடக்கும். விண்ணப்பிக்க மே 31-ந்தேதி கடைசி நாள்ஆகும்.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குனர் விவேகானந்தன் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,'தொழில்நுட்ப கல்வி துறை கலந்தாய்வு இணையதளம் தயாராக இருக்கிறது விண்ணப்ப பதிவு இணையதளத்துக்கான உரிமத்துக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. இணையதளம் தயாராக இல்லை என்று வந்த செய்தி தவறானது. மேலும் தகவல்களுக்கு 044 22351014, 22351015 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்' என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு தேவையான முன்னேற்பாடுகள்…..

இணையதள முகவரிக்கு உள்ளே சென்றதும் மாணவர்கள் முதலில் உள்நுழைவு ஐ.டி. மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு மாணவர்கள் தங்கள் பெயர், ஊர், முகவரி, கல்வி நிலை விவரம் (8 முதல் 12-ம் வகுப்பு வரை), பெற்றோர் பற்றிய விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு செல்போன் எண், சுய மின்னஞ்சல் முகவரி அவசியம். அந்த எண், மின்னஞ்சல் முகவரிக்குத்தான் ரேண்டம் எண், தரவரிசை பட்டியல்,கலந்தாய்வுக்கான நாள் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும். எவ்வித சான்றிதழையும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வெளிமாநில மாணவர்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தினரின் மகன் மற்றும் மகள், விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளி என்றால் அதற்குரிய சிறப்பு சான்றிதழ் கட்டாயம். பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் அவசியம். விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்.முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய தனிச்சான்று அவசியம். அப்போது தான் அவர்கள் உதவித்தொகை பெற முடியும்.

பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.250-ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும்.இந்த பணி அரசின் 42 சேவை மையங்களில் மட்டுமே நடைபெறும். அப்போது விண்ணப்ப பதிவு மேற்கொண்ட அனைவரும் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களின் சான்றிதழ்களை சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.ஜூன் 17-ந்தேதி தரவரிசை பட்டியல் www.tneaonline.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும். தரவரிசை பட்டியலின்படி, ஜூலை 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.மாணவர்களின் தரவரிசை எண்ணிக்கைக்கு ஏற்ப எந்த தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் செய்தி அனுப்பப்படும்.மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூன் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும்.

இது சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் நேரடியாக நடைபெறும்.பொதுப்பிரிவு மாணவர்கள் நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இணையதள வழி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
..................................................................................................................................................................................

BE - TAMILNADU ENGINEERING ADMISSION - 2019 DIRECT LINKS And All Instructions...




TAMILNADU ENGINEERING ADMISSION - 2019 DIRECT LINKS And All Instructions All Details ( PDF )


..................................................................................................................................................................

வியாழன், 5 ஜூலை, 2018

  1. BE - கவுன்சிலிங் நாளை துவக்கம்!

  2. இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, சிறப்பு பிரிவினருக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தகுதி பெற்ற மாணவர்கள், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கு நேரில் வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


  3.   இது குறித்து, அண்ணா பல்கலையின், இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, ஜூலை, 6ல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள், அன்று சென்னைக்கு வந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள், ஜூலை, 7ல் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 8ல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

  4. சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். காலை, 9:00 மணி, 10:30 மணி மற்றும் நண்பகல், 12:00 மணி என, மூன்று கட்டங்களாக, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வழியே அனுப்பப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.'ஆன்லைன்' கவுன்சிலிங் எச்சரிக்கைபொது பிரிவு மாணவர்கள், தங்களின் விருப்ப பாடப்பிரிவு மற்றும் விருப்ப கல்லுாரியை பதிவு செய்யும் நடவடிக்கைகளை, https://www.tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu ஆகிய இணையதளங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.

  5. மேலும், ஆன்லைன் கவுன்சிலிங்கின்நடைமுறைகளும், இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

புதன், 4 ஜூலை, 2018

பி.இ. கல்விக் கட்டண நிர்ணய ஆய்வுக்குழு: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறை


பொறியியல் கல்விக் கட்டண ஆய்வுக் குழுவை மீண்டும் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

2015-ஆம் ஆண்டுக்குப் பின் முடங்கியிருந்த இந்த ஆய்வுக் குழு, இப்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களைத் தொடர்ந்து,

செவ்வாய், 29 மே, 2018

'கட் ஆப்’ மதிப்பெண்களை கணக்கிடுவது, கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது குறித்த வீடியோ அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது

 கட் ஆப் மதிப்பெண் எப்படி தயார் செய்வது என்பது குறித்தும், எவ்வாறு கல்லூரிகளை, பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுப்பது என்பது குறித்தும் வீடியோவுடன் கூடிய ஆடியோ விளக்கத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வை நடத்த உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் மதிப்பெண்ணை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவேண்டியதில்லை.

திங்கள், 30 ஏப்ரல், 2018

BE - அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே கலந்தாய்வு : சுனில் பாலிவால் அறிவிப்பு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் என உயர்கல்வித்துதறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கு தனியாக கலந்தாய்வு நடந்தது. 

இன்ஜி., கவுன்சிலிங் விதிகள் வரும் 2ல் வெளியாகுது விபரம்..

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி அல்லது அந்தந்த மாவட்ட உதவி மையங்கள் வாயிலாக, கணினி வழி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிக்கையில் இடம் பெற வேண்டிய கவுன்சிலிங் விதிகள் உள்ளிட்ட, மற்ற விபரங்கள் இடம் பெறவில்லை. கவுன்சிலிங் விதிகள் குறித்த விபரங்கள், வரும், 2ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. வழக்கமாக, அறிவிக்கை வெளியிடும் போது, அதில் அனைத்து விபரங்களும், விதிகளும் இடம்பெறும். அதை பின்பற்றி, கவுன்சிலிங் பதிவுக்கு தேவையான ஆவணங்களை, மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வர்.ஆனால், இந்த ஆண்டு, முதல் முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு மாறுவதால், விதிகளை இறுதி செய்வதில், உயர்கல்வித் துறைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அமைச்சரும், செயலரும் அறிவித்த கவுன்சிலிங் தேதி மற்றும் ஆன்லைன் பதிவு தேதி மட்டுமே, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. 'மற்ற விபரங்கள், மே, 2ல் நிச்சயம் வெளியாகும்' என, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர்.

சனி, 28 ஏப்ரல், 2018

இன்ஜி., கவுன்சிலிங் விதிமுறை நாளை அறிவிப்பு...

சென்னை: பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.

ஆன்லைன் : பிளஸ் 2 முடித்த, கணிதம் மற்றும் தொழிற்கல்வி மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரி களில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, முதலாம் ஆண்டுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். இது, நடப்பாண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிகிறது. 'சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கும். 'ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை, ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்' என, தமிழக, இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.
விண்ணப்ப பதிவு : எந்த பிரிவு மாணவர்களுக்கு, எப்போது, ஆன்லைன் கவுன்சிலிங்; அதன் விதிகள் என்ன; விண்ணப்ப பதிவு எப்படி என்பது போன்ற விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu/ என்ற இணையதளம் மற்றும், https://tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சனி, 24 பிப்ரவரி, 2018

இன்ஜினியர் கவுன்சிலிங்- ஆன்லைனில் எவ்வாறு நடைபெறும்?

வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்!!!

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் மாணவர்கள் 
மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக நடைபெற்று வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கவுன்சிலிங் நடைபெறும் என்றும்,
அதற்கான வசதி இல்லாதவர்களுக்கு மட்டும் நேரடியாக கவுன்சிலிங் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் அமைச்சர் கூறியதாவது: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 21 ஆண்டுகளாக பொறியியல் கவுன்சிலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆனால் தற்போது மாணவர்கள் வசதிக்காக, அவர்கள் சந்தேகங்களை முழுமையாகத் தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஆண்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதற்கான வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்காக மட்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு இடத்திலும் பெரிய மாவட்டமாக இருந்தால் 2 இடங்களிலும் கவுன்சிலிங் மையங்கள் செயல்படும்
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கு 44 மையம்: வீட்டில் இருந்தபடி, 'அட்மிஷன்' பெறலாம்!!!

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, தமிழகம் முழுவதும், 44 மையங்கள்

அமைத்து, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளில், மாணவர்களைச் சேர்ப்பதற்கான, ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடத்தப்படுவது வழக்கம். வரும் கல்வி ஆண்டில்,

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

பொறியியல் கல்லூரிகளில் 2500 பேராசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஏஐசிடிஇ சலுகை எதிரொலி

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் அகில இந்திய 
தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அளித்துள்ள சலுகை காரணமாக, குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 பேராசிரியர்கள் வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகை, பொறியியல் கல்வியின் தரத்தை மேலும் குறைக்கவே வழிவகுக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாடு முழுவதும் 3 ஆயிரத்து 224 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 927 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை 523 பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 78 ஆயிரத்து 845 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கல்லூரிகளை ஏஐசிடிஇ கட்டுப்படுத்தி வருகிறது. இந்தக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற்ற பின்னரே, மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். இதற்கென ஒவ்வொரு ஆண்டும், அனுமதி வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிடும்.
அதுபோல, 2018-19 கல்வியாண்டுக்கான அனுமதி நடைமுறைகளை ஏஐசிடிஇ இப்போது தொடங்கியுள்ளது. இதற்காக அண்மையில், அனுமதி வழிகாட்டுதலை வெளியிட்டது. அதில், கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்து, ஏஐசிடிஇ அறிவித்திருந்தது. இதற்கு, பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், தனியார் கல்வி நிறுவன ஊழியர் சங்க நிர்வாகியுமான கார்த்திக் கூறியது:-
பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் இதுவரை 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும் என ஏஐசிடிஇ நிர்ணயித்த போது, பெரும்பாலான கல்லூரிகள் அதைப் பின்பற்றவில்லை. பல கல்லூரிகள் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், சில கல்லூரிகள் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவிலேயே விகிதத்தை அமல்படுத்திவந்தன.
இப்போது இந்த விகிதாசாரத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்து சலுகை அளித்துள்ளது. இது கல்லூரிகளின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும். இதனால், மாணவர்களை கவனிக்கும் அளவு குறைந்து, கல்வித் தரம் பாதிக்கப்படும்.
இப்போது தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்டு, ஒருசில ஆண்டுகளில் 300 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நிலைத்திருக்கும். எனவே, ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், ஏஐசிடிஇ ஏற்கெனவே 1:15 என்ற அளவில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தை நிர்ணயித்திருந்தபோதே, பெரும்பாலான பொறியில் கல்லூரிகள் 30 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் (1:30) என்ற அளவில்தான் நிர்ணயித்து வந்தன.
எனவே, ஏஐசிடிஇ இப்போது இந்த விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்திருப்பதால், எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. பொறியியல் கல்வியின் தரம் இப்போது உள்ளதைப் போலவேதான் நீடிக்கும் என்றார்.
கல்வித் தரம், ஆராய்ச்சி நிச்சயம் பாதிக்கும்
ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்திருப்பது, பொறியியல் கல்வியின் தரத்தை மட்டுமின்றி, உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.
இதுகுறித்து தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டி:
பொறியியல் கல்லூரிகளை, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் அடிப்படையில் ஏ,பி,சி என பிரித்து, அதில் -சி- பிரிவில் வரும் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் ஆசிரியர்-மாணவர் சேர்க்கை விகிதத்தை 1:20 ஆக அறிவித்திருக்க வேண்டும். ஏ, பி பிரிவில் வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு முன்பிருந்தது போல 1:15 என்ற விகிதத்தையே நிர்ணயித்திருக்க வேண்டும்.
ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்து கல்லூரிகளுக்கும் 1:20 என ஏஐசிடிஇ அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரிகளின் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது. இந்தச் சலுகை காரணமாக, பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு மட்டுமே நேரம் இருக்கும். ஆராய்ச்சி அல்லது ஆராய்ச்சி ஊக்குவிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு பேராசிரியர்களுக்கு நேரம் இருக்காது. எனவே, பொறியியல் கல்லூரியின் தரம் மேலும் மோசமடையும் என்பதோடு, ஆராய்ச்சி மேம்பாடும் பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பலர் வேலை இழக்க நேரிடும் என்றார் அவர்.

செவ்வாய், 19 டிசம்பர், 2017

நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!!!


நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த
திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​
​மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.​

புதன், 6 டிசம்பர், 2017

30,000 பேருக்கு மீண்டும் தேர்வு!


தொலைநிலை கல்வி திட்டம் மூலம்
பொறியியலபடித்த 30,000 பட்டதாரிகள் பட்டத்தை செல்லுபடியாக்க, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பை தொலைநிலை கல்வி திட்டம் மூலம் வழங்கக்கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறை கூறுகிறது. ஆனால், சில தனியார் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைகள், தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டங்களை வழங்குவதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தொலைதூர கல்வி திட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கற்பிப்பதை ஏற்க முடியாது. பல தனியார் பல்கலைகள் தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், பட்டங்களை வழங்கியுள்ளன. அது செல்லாது வரும், 2018 - 19 கல்வி ஆண்டு முதல் இவ்வகை கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. உதய்பூரில் உள்ள ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபீட், ராஜஸ்தான் சுரு மாவட்டத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அன்வான்ஸ்ட் ஸ்டீஸ் இன் எஜூகேசன், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் அக்ரிகல்ச்சரல் இன்ஸ்டிடியூட், தமிழகத்தில் உள்ள விநாயகா மி‌ஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன் ஆகிய நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 2001 முதல் 2005 வரை தொலைதூர கல்வி திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்துத் தொழில்நுட்ப பட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த 4 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக பெறப்பட்ட தொகையை 2018 மே 31 ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ சார்பில் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்டில், அவர்கள் வெற்றி பெற வேண்டும். 2018 அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாய்ப்புகளையும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என அவர்கள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தொலைநிலை கல்வி திட்டத்தில் வழங்கிய பொறியியல் பட்டங்களைப் பல்கலைக்கழக மானியக்குழு நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களின் வாயிலாக பொறியியல் பட்டம் பெற்ற சுமார் 30,000 பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களுக்கான ஒரே தீர்வாக மே அல்லது ஜூன் மாதத்தில் ஒரு தேர்வு நடத்தப்படவுள்ளது. அதை எழுதுவதற்கு ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தங்கள் பட்டங்களை செல்லுபடி ஆக்க அவர்களுக்கு இதுவே ஒரே வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 27 நவம்பர், 2017

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு பின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, பிரதான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டு
உள்ளது. இதை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., - பி.பிளான் ஆகிய படிப்புகளில் சேர, இரண்டு தாள்களுக்கு, ஏப்., 8ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.
கணினி வழி தேர்வு, ஏப்., 15, 16ல் நடக்க உள்ளது. இரண்டில், ஏதாவது ஒரு வகை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்-லைன் பதிவு, டிச., 1ல் துவங்கி, ஜன., 1ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nic.in என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளி, 24 நவம்பர், 2017

என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,070 பேராசிரியர்களுக்கு தடை

விடைத்தாள் திருத்தும்பணியில் மெத்தனமாக செயல்பட்டதால், என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்ய 1,070 பேராசிரியர்களுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 518 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பருவத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த விடைத்தாள்களை பேராசிரியர்கள் சரியாக திருத்துவதில்லை என்றும், மெத்தனமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த பருவத்தேர்வு விடைத்தாள்களை சரிவர திருத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா ஆகியோரிடம் சிலர் புகார் செய்தனர். இதற்கிடையே பல மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யக்கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
இதனையடுத்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் ஏற்கனவே மதிப்பீடு செய்த பேராசிரியர்களிடம் கொடுக்கப்படவில்லை. வேறு பேராசிரியர்களை கொண்டு இந்த விடைத்தாள்கள் திருத்தப்பட்டது. மறுமதிப்பீட்டில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் பழைய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் கிடைத்தது.முதலில் விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்கள் சரியாக திருத்தாததால் மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து போட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த பேராசிரியர்களுக்கு தண்டனை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது.அதன்படி 1,070 பேராசிரியர்கள் 1 முதல் 3 வருடங்கள் வரை விடைத்தாள்களை திருத்தம் செய்ய தடை விதித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் உமா உத்தரவிட்டுள்ளார். இதில் சென்னை மண்டலத்தில் 680 பேர், திருச்சி மண்டலத்தில் 271 பேர், கோவை மண்டலத்தில் 119 பேர் அடங்குவர்.

சனி, 18 நவம்பர், 2017

ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு வெற்றிக்கு வழிகாட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

இந்தியாவில் பொறியியல் படிப்பில் சிறந்த கல்வி நிறுவனங்களாக உள்ள ஐ.ஐ.டி-யில் சேர்வதற்குப் பள்ளி மாணவர்கள் கடுமையாகப் போட்டி போடுகிறார்கள். இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி-க்கள் இருந்தாலும், அதில் தமிழக மாணவர்களின் சேர்க்கை  என்பது மிகவும் குறைவு. தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நுழைவது ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகிறது. இதனை மாற்றியமைக்க தமிழக அரசும், பல்வேறு அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றன. தமிழக அரசு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு முன்பே, ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளைத் தன் பள்ளியில் ஆரம்பித்து முன்னோடியாக மாறியிருக்கிறார் வழுதாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் திருமுருகன்.


பெரும்பாலும் நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தி வரும் வேளையில் தமிழில் கணிதம், இயற்பியல், வேதியியல் சார்ந்த கேள்விகளுக்கு விளக்கத்துடன் பயிற்சி வகுப்பு எடுப்பதுடன், அந்தப் பயிற்சியை செல்போனில் படம்பிடித்து யூ டியூப்பிலும், வாட்ஸ்அப் வழியாகவும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறார் திருமுருகன். இந்த வீடியோவை தமிழகத்தில் உள்ள அரசு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தில் பதிந்து வருகிறார். 
"தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு அவசியமாக இருந்த காலத்திலேயே நான் வழங்கிய பயிற்சியின் மூலம் ஐ.ஐ.டி-யிலும், அரசுப் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்தனர். நுழைவுத்தேர்வு கைவிடப்பட்டபோது பயிற்சி வகுப்பில் மாணவர்கள்  ஆர்வம் காட்டாமல் இருந்தனர். நீட் தேர்வின் மூலமே மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்ற நிலை உருவாகி இருப்பதால் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களும் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். 


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும்வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்பு வீடியோக்களையும், கேள்விகளையும் வாட்ஸ்அப், யூ டியூப்களில் 

 பதிவு செய்து வருகிறேன். இதுவரை, யூடியூப்பில் 47 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளேன். இதையும் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் இணைய வழியே கேள்விகள் கேட்டும் விளக்கம் பெறலாம். அரசும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதால் இனி, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்விலும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் அதிக இடங்களைப் பிடிப்பதற்கு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன” என்றார் நம்பிக்கையுடன்.
இவர், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு உதவும் வகையில் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு கணிதம் (IIT JEE Mathemstics) குறித்தும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஐ.ஐ.டி தேர்வுக்கான அடிப்படைகள் குறித்தும் புத்தகங்கள் எழுதி வருகிறார். 

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து திருமுருகன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். 
"விரைவில் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்கான ஜே.இ.இ. தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தயங்காமல் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஐ.ஐ.டி-யில் சேர முதல் கட்டமாக மெயின் தேர்வு எழுத வேண்டும். அதில் நிறைய மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் 1.5 லட்சம் மாணவர்கள் மட்டும் அடுத்த கட்ட அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதில் வெற்றி பெறுபவர்களே, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி-க்களில் உள்ள 9,700 இடங்களில் சேர்க்கப்படுகின்றனர் என்பதால் ஜே.இ.இ முதன்மைத் தேர்விலேயே அதிக மதிப்பெண் பெற்றிட முயல வேண்டும். 

ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை  ஒரு வருடம் தனிப் பயிற்சி பெற வேண்டும் என்றாலும் பள்ளிப் பாடங்களை முறையாகப் புரிந்து படித்திருந்தால் முதல் தேர்விலேயே அதிக மதிப்பெண்ணைப் பெறலாம்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைக் கருத்தில் கொண்டு தயாராக வேண்டும். 
கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேட்கப்படுகின்றன. எனவே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கேள்விகளைப் படித்து புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலத் திறமையை மேம்படுத்திக் கொள்வது நல்லது.
நுழைவுத்தேர்வுக்கான கேள்விகள் எல்லாம் ஆப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். கேள்விக்கு நான்கு விடைகளும் பொருந்திபோவதுபோல் அமைத்திருப்பார்கள். அதில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
2018-ம் ஆண்டில் ஐ.ஐ.டி-ஜே.இ.இ (அட்வான்ஸ்) தேர்வை இணையம் வழியாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான மாதிரித் தேர்வை எழுதிப் பார்ப்பதோடு கணினியைச் சிறந்த முறையில் இயக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். 
தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. தவறான விடையை எழுதினால், ஏற்கெனவே சரியான விடைக்கான மதிப்பெண் குறைந்துவிடும். எனவே, தெரியாத கேள்வியாக இருந்தால் அதற்கு விடையளிக்காமல் தவிர்ப்பது நல்லது.
கேள்விகளுக்கு வேகமாக விடை அளிக்க ஷார்ட் கட் முறையினை அறிந்துகொள்வது முக்கியம். இது மதிப்பெண்ணை  அதிகப்படுத்தி வெற்றியை கைவசப்படுத்தும்.

வெள்ளி, 10 நவம்பர், 2017

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும்: தமிழக அரசு

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 563 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு வருடம் தோறும் ஜூன் மாதம் நடைபெறும்.
பல மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு கல்லூரியை தேர்ந்தெடுத்த பின், மருத்துவ கலந்தாய்விலும் கலந்து கொண்டு இடம் கிடைக்கும் பட்சத்தில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுவதால், அண்ணா பல்கலைக்கழத்திற்கு கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளது.
இந்த சூழலை தவிற்பதற்காக வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக முன்னரே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இதன்படி தற்போது இது அதிகார பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பால் வெளியிட்டுள்ளார். இதில் வரும் ஆண்டில் இருந்து ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் சேர்க்கை செயலாளர் இந்துமதி மாற்றம் செய்யப்பட்டு, புதிய செயலாளராக ரைமண்ட் உத்திரியராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.