>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
RTE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RTE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜூன், 2019

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 81,000 ஏழை மாணவர்களுக்கு இலவச சீட்.. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் இலவசமாக, 81,000 ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான, 25% இடஒதுக்கீட்டு சேர்க்கை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மையற்ற தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். நடப்பு கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கு, இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 22 துவங்கி மே 18 வரை நடைபெற்றது.

இதில் 1, 20,000 பேர் விண்ணப்பித்தனர். இதில் தகுதியற்ற 7,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

எஞ்சியிருந்த 1.13 லட்சம் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு சேர்க்கைக்கு பரிசீலனை செய்யப்பட்டன.

இதில் டிஜிஇ எனப்படும் ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினம், துப்புரவுத் தொழிலாளி மற்றும் எச்ஐவி பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின்கீழ் கடந்த மே 31 அன்று சேர்க்கை வழங்கப்பட்டது.

அதேபோல், 25 % ஒதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவான விண்ணப்பங்கள் வந்த 3,000 பள்ளிகளில் உள்ள இடங்களை விட குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பித்த 30 ஆயிரம் பேருக்கும் சேர்க்கை வழங்கப்பட்டது.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்த பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று குலுக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வாகும் குழந்தைகளுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்படும். இலவச சேர்க்கை பெறும் மாணவர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தவேண்டாம்.

இவர்களுக்கான கட்டணத்தை அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்வி அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற குலுக்கலில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் 1.21 லட்சம் இடங்களுக்கு 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், இதில் தகுதியான 81,000 பேருக்கு மெட்ரிக் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

திங்கள், 28 மே, 2018

25 சதவீத இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்
கீழ் விண்ணப்பித்திருக்கும் குழந்தைகளுக்கு திங்கள்கிழமை நடைபெறும் குலுக்கல் மூலம் சேர்க்கை வழங்கப்படவுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏழை, நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.
2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்பட பல்வேறு ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க பெற்றோருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கு சேர்க்கைக்காக ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து அந்த விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன. அப்போது தகுதி இல்லாத, போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு தகுதியுடைய குழந்தைகளின் பெயர்ப் பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குச் சமமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் அதற்கான சேர்க்கை உடனடியாக வழங்கப்படும். மாறாக, பள்ளியில் உள்ள இடங்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதாரணமாக ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன என வைத்துக் கொண்டால் அதில் 25 இடங்கள் இலவச சேர்க்கையின் கீழ் வரும். அந்தப் பள்ளியில் நுழைவு நிலை வகுப்பில் சேர 25 குழந்தைகள் மட்டுமே விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு அன்றைய தினமே சேர்க்கை வழங்கப்படும். மாறாக அதை விடக் கூடுதலான அளவில் விண்ணப்பித்திருந்தால் அந்தந்த பள்ளிகளில் பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் நிர்வாகிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெறும் குலுக்கல் மூலம் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியது:- கடந்த 2013-ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டு 90,607-ஆக உயர்ந்துள்ளது. ஒரு குழந்தைக்கான சேர்க்கைக்கு அதிகபட்சம் 5 பள்ளிகள் வரை விண்ணப்பிக்கலாம் என்பதால் பெற்றோர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்துள்ளனர். குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை அந்தந்த பள்ளிகளில் அறிவிப்புப் பலகையில் திங்கள்கிழமை அன்றே ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

RTE - ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு - அரசு GAZETTE வெளியீடு

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

RTE - ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு - அரசு GAZETTE வெளியீடு...

சனி, 12 ஆகஸ்ட், 2017

RTE - இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயம் அரசாணை வெளியீடு.

RTE - இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயம் அரசாணை வெளியீடு.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி, மலைப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும், மற்ற பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் கட்டணச் செலவை நிர்ணயித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். 
அதன்படி, மலைப்பகுதியைச் சேர்ந்த முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரத்து 385 (மற்ற பகுதியைச் சேர்ந்த முதல் வகுப்பு குழந்தைக்கு ரூ.25 ஆயிரத்து 155) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு குழந்தைகள் வரை, ரூ.25 ஆயிரத்து 155-ல் இருந்து ரூ.33 ஆயிரத்து431 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.

சனி, 15 ஜூலை, 2017

TEACHER - STUDENT FIXATION RATIO AS PER RTE

RTE படி ஆசிரியர் மாணவர் விகிதம் 

புதன், 5 ஜூலை, 2017

PRESS RELEASE: RTE 2009 ன் படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 ரூ ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக விண்ணப்பிக்க 25/07/2017 வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.



ஞாயிறு, 18 ஜூன், 2017

RTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப குறிப்பிட்ட வகுப்பில் சேர்த்தல் அரசாணை G. O. No. 189 Dated 12-07-2010-School Education -



புதன், 14 ஜூன், 2017

RTE 25% ஒதுக்கீடு - அழியப்போகும் அரசுப்பள்ளிகள்

🌴 அரசின் 25% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளியில் முதல்வகுப்பிற்கு வரவேண்டிய சுமார் 89000 குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இப்படி ஆண்டுதோறும் சென்றால் அரசுப்பள்ளியை மூட வேண்டியதுதான்....
🌴 அரசுப்பள்ளியில் வசதிகளை அதிகப்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட வேண்டும்.
🌴 அரசுப்பள்ளிக்கு ஆபத்தாக இருக்கும் 25% இடஒதுக்கீடு, ஐந்தாம் வகுப்பில் திறமையான SC/ST மாணவர்களை தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகளில் படிக்க ஊக்குவிப்பது போன்ற திட்டங்களை அடியோடுகைவிட வலியுறுத்த
வேண்டும். சங்கங்கள் முயற்சி எடுத்து அரசுப்பள்ளியின் எதிர்காலத்தை காக்கவேண்டும்
🌴 அரசின் திட்டங்கள் அரசுப்பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமே தவிர , தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க கூடாது.
🌴  மூவாயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்
கான   மாணவர்களை அரசுப்பள்ளியில் சேரவிடாமல் செய்துள்ளது.
🌴 இவ்வாண்டு மட்டும்  சுமாராக இரண்டாயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் மாணவர் இல்லை என அரசு தொகுப்பில் சரண் செய்யப்பட்டுள்ளன.
🌴  இதுபோன்ற ஆபத்தான திட்டங்கள் தொடராமல் இருக்க சங்கங்கள் வலியுறுத்த  வேண்டும்

திங்கள், 5 ஜூன், 2017

பள்ளிகளில் இலவச 'அட்மிஷன்'

சென்னை: இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு, 79 ஆயிரத்து, 842 விண்ணப்பங்கள் பதிவாகின. இதில், ஒரு முறைக்கு மேல் பதிவு செய்த, 12 ஆயிரத்து, 17 கூடுதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
67 ஆயிரத்து, 825 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. இவர்களுக்கு, 7,954 பள்ளிகளில், இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன் விபரங்களை, www.tnmatricschools.com என்ற இணையதளத்தில், தெரிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன், இன்று பள்ளிகளில் அட்மிஷன் பெறலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

செவ்வாய், 30 மே, 2017

RTE : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜூன் 5ல் பள்ளிகளில் சேர்ப்பு: தமிழக அரசு

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பிருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 5ம் தேதிக்குள் பள்ளிகளில் சேருவதற்கான சேர்க்கை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 ரூ ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க 20.04.2017 முதல் 26.05.2017 வரைகால அவகாசம் வழங்கப்பட்டது. சேர்க்கைக்கு மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் இணைய வழியாகப் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிக்கும் விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பட்டியல் 30.05.2017அன்று பதிவிறக்கம் செய்யப்படும். 
நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குச் சமமாகவோ, அதைவிடக்குறைவாகவோ விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின், விண்ணப்பித்துள்ள தகுதியான அனைத்துக் குழந்தைகளுக்கும் சேர்க்கை வழங்கும் பொருட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால், 31.05.2017 அன்று சார்ந்த பள்ளிகளுக்கு குழந்தைகளின் பெயர்ப் பட்டியல் வழங்கப்படும். 
நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில், 31.05.2017 அன்று குலுக்கல் முறையில் சேர்க்கைகான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். குலுக்கல் நடத்தும் பொருட்டு கல்வித் துறை சார்ந்த பிரதிநிதி ஒருவரும் , மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமனம் செய்யப்படும் பிரதிநிதி ஒருவரும் ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பிவைக்கப்படுவர். 
சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் குலுக்கல் நடைபெறும்போது, மாவட்டக் கல்வித் துறை உயர் அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை உயர் அலுவலர்கள் சென்று பார்வையிடுவர். 
முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்களான, ஆதரவற்றவர்கள் / எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் / மூன்றாம் பாலினத்தவர் / துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள் / மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றிச் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும். அதன்பின்னர் மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருப்பிடத்தில் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைக் கொண்டு குலுக்கல் நடத்தப்படும். 
அவ்வாறு குலுக்கல் நடத்தப்பட்டபின்னரும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் காலியிருப்பின், ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கும் அதிகமாக இருப்பிடத்தில் வசிக்கும் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களைக்கொண்டு குலுக்கல் நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவுநிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவிற்கும் 5 இடங்கள் வீதம் காத்திருப்புப் பட்டியல் குலுக்கல் முறையில் தயார் செய்யப்படும். 
குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் பள்ளியில ்சேரவில்லையெனில் காத்திருப்புப் பட்டியலிலிருந்து சேர்க்கை வழங்கப்படும். 
சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் பட்டியல், காத்திருப்புப் பட்டியலில் கல்வித் துறை சார்ந்த பிரதிநிதி/ வருவாய்த்துறை சார்ந்த பிரிதிநிதி, பள்ளியின் முதல்வர் மற்றும் குலுக்கலில் கலந்துகொண்ட பெற்றோர்கள் கையொப்பமிட்டு 31.05.2017 அன்றே பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்படும். சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு 05.06.2017க்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழன், 25 மே, 2017

இலவச கல்வி விண்ணப்ப பதிவு இன்றுடன்  முடிகிறது

தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி வழங்கும் திட்டத்தில் சேர, இன்றுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது.

மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம் - 2009 ன் படி, தமிழகத்தில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளி களில் உள்ள, எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில், மாணவர்களை இலவசமாக சேர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன்லைன் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
ஏப்., 18ல், ஆன்லைன் பதிவு துவங்கியது. மே, 20ல் முடிவதாக இருந்தது. ஆனால், பெற்றோர் கோரிக்கையை ஏற்று, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கூடுதல் அவகாசம் இன்று முடிகிறது. இதுவரை, பதிவு செய்யாதோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்யலாம். 
மேலும் சந்தேகங்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தகவலியல் மையங்கள், உதவி தொடக்க கல்வி அதிகாரி மற்றும் மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இ - சேவை மையங்களிலும், இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

வியாழன், 18 மே, 2017

RTE - 25 % இட ஒதுக்கீட்டில் சேர்க்க 26/05/2017 கால அவகாசம் நீட்டிப்பு. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 % இட ஒதுக்கீட்டில் சேர்க்க 26/05/2017 கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மே 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மே 26-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இச்சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும்,வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டும் 2017-2018-ம் கல்வியாண்டு முதல் இந்த சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன்வழி விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 20 முதல் மே 18-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 26-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 17 மே, 2017

RTE - 25% Reservation Intake Capacity (2017-2018) - District and School wise Details (Nursery, Primary & Matriculation)


Right of Children to Free and Compulsory Education Act, 2009 - 25% Reservation Intake Capacity (2017-2018) - District and School wise Details...


S.NoDistrictNursery & Primary SchoolsMatriculation Schools
1.ARIYALURDownloadDownload
2.CHENNAIDownloadDownload
3.COIMBATOREDownloadDownload
4.CUDDALOREDownloadDownload
5.DHARMAPURIDownloadDownload
6.DINDIGULDownloadDownload
7.ERODEDownloadDownload
8.KANCHEEPURAMDownloadDownload
9.KANYAKUMARIDownloadDownload
10.KARURDownloadDownload
11.KRISHNAGIRIDownloadDownload
12.MADURAIDownloadDownload
13.NAGAPATTINAMDownloadDownload
14.NAMAKKALDownloadDownload
15.PERAMBALURDownloadDownload
16.PUDUKOTTAIDownloadDownload
17.RAMANATHAPURAMDownloadDownload
18.SALEMDownloadDownload
19.SIVAGANGAIDownloadDownload
20.THANJAVURDownloadDownload
21.THE NILGIRISDownloadDownload
22.THENIDownloadDownload
23.THOOTHUKUDIDownloadDownload
24.TIRUNELVELIDownloadDownload
25.TIRUPPURDownloadDownload
26.TIRUVALLOREDownloadDownload
27.TIRUVANNAMALAIDownloadDownload
28.TIRUVARURDownloadDownload
29.TRICHYDownloadDownload
30.VELLOREDownloadDownload
31.VILLUPURAMDownloadDownload
32.VIRUDHU NAGARDownload

RTE சேர்க்கை கூடுதல் அவகாசம் தர அரசுக்கு கோரிக்கை

மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணம், நன்கொடை இன்றி மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்த சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை, எந்த வித கட்டணமும் இன்றி, பாடங்கள் நடத்தப்படும். 
பொருளாதாரத்தில் நலிந்த, அனைத்து குடும்பத்தினரும், குழந்தைகளை சேர்க்கலாம்.தமிழகத்தில், எல்.கே.ஜி., என்ற நுழைவு வகுப்பில், 10 ஆயிரம் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப் பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை, 40 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பதிவு செய்துள்ளனர்; நாளை விண்ணப்ப பதிவு முடிகிறது. இன்னும், ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் அளிக்கலாம். 
இது குறித்து, பெற்றோர், மாணவர்கள் மேம்பாட்டு நலச் சங்க பொதுச்செயலர், வி.பி.வில்லியம்ஸ் கூறுகையில், ''பெரும்பாலான மாணவர்களுக்கு, எப்படி விண்ணப்பிப்பது என, தெரியவில்லை. தனியார் பள்ளிகள் இதற்கு வழிகாட்ட வேண்டும். விண்ணப்பிக்கும் அவகாசத்தை, இந்த மாத இறுதி வரை, தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்,'' என்றார்.
யாருக்கு தகுதி? : இலவச கல்வி திட்டத்தில், ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு குறைவான அனைவரும் விண்ணப்பிக்கலாம். அரசு வருவாய் துறை வழங்கும், வருமானச் சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். மாணவர்களின் விண்ணப்பங்கள், அரசு அதிகாரிகள் முன் பரிசீலிக்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், இருப்பிட சான்றும் அவசியம்.