பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால்
ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை பள்ளி
மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று
வருகின்றன.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒரு
வாரத்திற்கு முன் முடிந்து விட்டன. 10-ம் வகுப்புக்கு நாளை
(வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
தமிழகத்தில் தனியார், நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்
பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையில் தேர்வுகள் ஏற்கனவே
முடிந்து விட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்
தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள்
நாளையுடன் முடிவடைகிறது. எனவே நாளையுடன்
மாணவர்களுக்கான பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன.
வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு
தேர்வுகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் முன்னதாக
அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால்
தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடித்து விட்டனர்.
அதனால் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அரசு பள்ளி
மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மே மாதம் மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும்
. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்களுடன் மே மாதம் விடுமுறை
சேர்த்து 40 நாட்களுக்கு மேலாக மாணவர்களுக்கு விடுமுறை
கிடைத்துள்ளது. ஜூன் 1-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்பட்ட
போதிலும் ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ந் தேதி வரை பள்ளிகளுக்கு
வரவேண்டும். அவர்களுக்கு வேலை நாட்கள் அடிப்படையில்
10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.