பள்ளிக்கூட புத்தகங்களுக்கு 'பிளாஸ்டிக்' அட்டை கூடாது...
புதுடில்லி: டில்லியில் உள்ள பள்ளி மாணவர்கள், தங்கள் புத்தகங்களுக்கு, 'பிளாஸ்டிக்' தாள்கள் பயன்படுத்தி, அட்டை போடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சுற்றுச்சூழல் மாசடைவதை மனதில் வைத்து, பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த, டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் தடை விதித்தது.இதையடுத்து, பள்ளி மாணவர்கள், தங்கள் புத்தகங்களுக்கு, பிளாஸ்டிக் தாள்களால் ஆன அட்டைகளை பயன்படுத்த, தடை விதிக்கும்படி, சுற்றுச்சூழல் அமைச்சகம், கல்வித்துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இதை தொடர்ந்து, பிளாஸ்டிக் அட்டை பயன்படுத்த தடை விதிக்கும்படி, டில்லியில் உள்ள அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.