>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
JACTTO-GEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JACTTO-GEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்

சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, வரும், 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதில், 12 லட்சம், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதால், பொது தேர்வு மற்றும் அரசு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ ஜியோ சார்பில், 2011 முதல், தொடர் போராட்டங்கள்

திங்கள், 26 நவம்பர், 2018

கஜா புயலால் நிவாரணம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க ஜாக்டோ- ஜியோ முடிவு...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் அறிவித்துள்ளார்.

திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளா் மற்றும் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேசுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், ஊராட்சி செயலாளர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21-மாத நிலுவைத் தொகையை உடனே வழங்குதல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கூட்டம் நடத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 26-ஆம் தேதி முதல், 30-ஆம் தேதி வரையில் வேலை நிறுத்த பிரசாரம் மேற்கொள்ளவும், 30-ஆம் தேதி தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். அதற்குள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் 4-ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கவும் இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

வியாழன், 20 செப்டம்பர், 2018

போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்'...!!

போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்'...!! - மத்திய அரசு

போராட்டம் செய்தால் சம்பளம் ‘கட்’!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (செப்டம்பர் 19) நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.




இதனையடுத்து, அரசு ஊழியர்கள் யாராவது போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தெரிவித்திருப்பதாவது:

“அரசு ஊழியர்கள் எந்தவிதத்திலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஊழியர்கள் மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்டவைகளும் நடத்தை விதிகள் 1964இன் பிரிவு 7ஆவது விதிமீறலாகக் கருதப்படும். அதிகாரிகள் யாரும் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு எந்தவிதமான விடுமுறையும் அளிக்க வேண்டாம். தேர்தல் சமயத்தில் விடுமுறை எடுத்தாலோ, போராட்டத்தில் ஈடுபட்டாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.”

என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழன், 26 ஏப்ரல், 2018

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி டெட் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 4 வது நாளாக சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில் இடைநிலை ஆசிரியர் பிரதிநிதிகள் 16 பேர் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய கட்டிடத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


சம வேலை சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட  இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கக்கதில் உள்ள அரசு பள்ளியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , தொடர் உண்ணாவிரத  போராட்டம் காரணமாக இதுவரை சுமார் 110க்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , இன்று நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.அரசு தரப்பில் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியடைந்த நிலையில், இன்று மீண்டும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கபட்டது..

இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் பிரதிநிதிகள் 16 பேர் அமைச்சர் செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என்றும் ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் அளிக்கும் பரிந்துறையை முதல்வரிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் மேலும் அதன் அடிப்படையில் போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்று கொண்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பேட்டி
செங்கோடையன்
பள்ளி கல்வி துறை அமைச்சர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் ஒருங்கினைப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்டதாகவும் ஒரு நபர் கமிஷ்னை ஒரு வாரத்தில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்..

மேலும் அமைச்சர் அளித்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற்றுகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பேட்டி
ராபர்ட்
இடைநிலை ஆசிரியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

செவ்வாய், 27 மார்ச், 2018

தமிழ்நாடு இடைநிலைக்கல்வி ஆசிரிய இயக்கங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தீர்மானங்கள்!!!


ஞாயிறு, 18 மார்ச், 2018

தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோ ஜியோ முடிவு

திருச்சி: பொது தேர்வு விடைத்தாளை திருத்த மாட்டோம்... புறக்கணிக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.


ஏப்.,12-ல் பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் பொது தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பு ஊதியத்தை அதிகரித்து தர வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 11 மார்ச், 2018

அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்.....

சென்னை:'அரசு துறைகளை ஒப்பந்தமயமாக்கும் அரசாணையை, திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சங்கத்தின் பொதுச் செயலர், அன்பரசு விடுத்துள்ள அறிக்கை:அரசின் செலவுகளை குறைக்க, அரசு துறைகளில் உள்ள, தேவையற்ற பணியிடங்களைக் கண்டறிந்து, அவற்றில் ஒப்பந்த அடிப்படையில், ஆட்களை நியமிக்க, பணியாளர் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை, இப்போதே எதிர்க்காவிட்டால், ஏற்கனவே காலியாக விடப்பட்டுள்ள, மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாது.வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும், தேர்வாணைய தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் எதிர்காலமும், குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும். 
எனவே, பணியாளர் சீரமைப்பு குழு நியமன அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அனைத்து தாலுகா தலைநகரங்களிலும், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 8 மார்ச், 2018

மே 8ல் கோட்டை முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியர் மன்ற பொது செயலாளருமான க.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோருக்கு உள்ள ஊதிய முரன்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 21 முதல் 24ம் தேதி வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னையில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 26ம் தேதி அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் இதுநாள் வரையில் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில், தற்போது தேர்வுகள் துவங்கியுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தினை தவிர்த்து வருகிறோம்.
இருப்பினும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் வரும் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்திட ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது. அதன் பிறகும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத நிலையில் மே மாதம் 8ம் தேதி சென்னையில் கோட்டை முன்பாக முற்றுகை போராட்டம் நடத்திட முடிவு செய்துள்ளோம். 

சனி, 3 மார்ச், 2018

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5,6,7 தேதியில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்...

தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் வரும் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக தலைமை செயலக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு தலைமை செயலக சங்க செயற்குழு கூட்டம் நேற்று மாலை தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர்கள் மணிவண்ணன், அருண், பொருளாளர் ெகாளஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:
பஐயா ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுனர் குழுவின் காலக்கெடுவை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக இறுதி அறிக்கையை அளித்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பதவி உயர்வு பெற்றும் இதுவரை கட்டாய மாவட்ட பயிற்சிக்கு அனுப்பாமல் உள்ள சுமார் 100 பேரை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். 7வது ஊதியக்குழுவில் தலைமை செயலக அனைத்து நிலை பணியாளர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, அனைவருக்கும் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் தலைமை செயலக பணியாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள கோப்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசின் செலவை குறைக்க, அரசு துறைகளில் உள்ள பணியிடங்களை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு மற்றும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தலைமை செயலகத்தில் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்று பணியில் உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணி வரன்முறை செய்து, அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5, 6 மற்றும் 7ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வருவார்கள். வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மதிய உணவு இடைவேளையின்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார். வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. அந்த மூன்று நாட்களும் தலைமை செயலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு...

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
சென்னை நகரில் போராட்டத்துக்கு தடை கோரி நயினா முகமது என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கறிஞர் நயினா முகமது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018


21ம் தேதி முதல் போராட்டம் - JACTTO GEO

பங்களிப்பு ஊதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கை - பிப். 21 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடம்

தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக JactoGeo அமைப்பு அறிவிப்பு*

வியாழன், 4 ஜனவரி, 2018

ஜாக்டோ ஜியோ -தொடர் முழக்க போராட்டம்- 06.01.2018- கோரிக்கைகள்!!!

திங்கள், 1 ஜனவரி, 2018

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்ட செய்தி

ஜாக்டோ-ஜியோஒருங்கிணைப்புக்குழுகூட்டம் இன்று 31.12.17சென்னையில் தமிழகஆரம்ப பள்ளி ஆசிரியர்கூடடணி சங்கஅலுவலகத்தில்நடைபெற்றது. திரு.இரா.தாஸ்,திரு. மு.அன்பரசுதலைமை ஏற்றனர். 
அதில் கீழ்க்கண்ட முடிவுகள்எடுக்கப்பட்டுள்ளன.
1.) 3.1.18 அன்று மாவட்ட கூட்டங்களை நடத்துவது.
2) 6.1.18 அன்று CPS ரத்துஅறிக்கை வெளியிடுதல்,பொங்கல் போனஸ்வழங்குதல் உள்ளிட்ட 11 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி மாவட்டதலைநகரில் காலை மணி 10முதல் 1 மணி வரைதொடர்முழக்க போராட்டம்நடத்துவது.
4) 9.1.18 & 10.1.18 நாட்களில்அனைத்து அரசியல் கட்சி/சட்டமன்ற கட்சி தலைவர்கள்மற்றும் அமைச்சர்களைமாநிலஒருங்கிணைப்பாளர்கள்சந்திப்பது.
5)4.2.18 அன்று சென்னையில்CPS ஒழிப்பு கருத்தரங்கம்நடத்துவது. அதில்நீதியரசர்,வழக்கறிஞர்,பத்திரிக்கையாளர்,பாராளுமன்றஉறுப்பினர்,தொழிற்சங்கதலைவர்,ஆகியோரைபங்கேற்க அழைப்பது.
6) ஜனவரி மாதம் மதுரையில்நடைபெற உள்ளஉயர்மட்டக்குழு கூட்டத்தில்தொடர்மறியல் போராட்டத்தேதியை அறிவிப்பது.
7) வழக்கு மற்றும் போராட்டநிதி சங்கத்திற்கு ரூ. 20000/_என முடிவு செய்யப்பட்டது.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

Flash News : ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த காலம் ஈடுகட்டுதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள் - அத்தியாவசிய காரணங்களுக்காக அனுமதி கோரினால் அனுமதி வழங்கலாம் 


புதன், 20 டிசம்பர், 2017

ஜாக்டோ - ஜியோ வழக்கு ஜனவரி முதல் வாரத்திற்கு (05.01.2018) ஒத்திவைப்பு

ஜாக்டோ - ஜியோ வழக்கு ஜனவரி முதல் வாரத்திற்கு (05.01.2018) ஒத்திவைப்பு

செவ்வாய், 19 டிசம்பர், 2017

ஜனவரியில் தொடர் மறியல் ஜாக்டோ - ஜியோ முடிவு

'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஜனவரியில், தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், சுப்பிரமணியன், மாயவன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகத்தில், கோரிக்கைமனு அளித்தனர்.
அவர்கள் அளித்த பேட்டி:
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 2016 ஜன., 1 முதல், ஊதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 21 மாதம் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது; அதை வழங்க வேண்டும். ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளையும்,குறைகளையும் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும்.
நிறைவேற்றாவிட்டால், ஜனவரி இறுதியில், சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த, முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சனி, 2 டிசம்பர், 2017

டிச.8ல் மதுரையில் 'ஜாக்டோ -ஜியோ' கூட்டம்

ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழுக்கூட்டம் மதுரையில் டிச., 8 ம் தேதி நடக்க உள்ளதாக உயர் மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.
பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவும், புதிய ஊதியக்குழு அமல்படுத்த கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் செப்.,7,8 மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஜாக்டோ -ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்கு டிச. 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக இருந்தது. நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப அன்றே அடுத்த கட்ட நடவடிக்கையை கூடி தீர்மானிக்க ஜாக்டோ- ஜியோ முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் இவ் வழக்கு டிச.8ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இது குறித்து ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், ''நீதிமன்ற வழக்கு டிச.8 ம் தேதி விசாரணைக்கு வரஉள்ளதால் அன்று மாலை 4:00 மணிக்கு மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ- ஜியோ உயர் மட்ட குழுக்கூட்டம் நடைபெறும்'' என்றார்.

திங்கள், 27 நவம்பர், 2017

நிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள் வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும், பங்களிப்பாக செலுத்திய பணம் கூட கிடைக்கவில்லை என்றும், ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு, அரசு ஊழியர், - ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த கூட்டமைப்பு, செப்டம்பரில் நடத்திய, தொடர் வேலை நிறுத்த போராட்டம்,உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது. அப்போது, நவ., 30க்குள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து,நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 'குறித்த நாட்களுக்குள் நிபுணர் குழு அறிக்கை வெளியிட வேண்டும்; இல்லாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்தபடி, நிபுணர் குழுவின் அறிக்கை, நவ., 30ல் வெளியிடப்பட வேண்டும். அதன்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம். அறிக்கை வராவிட்டால், டிச., 4ல், உயர்மட்டக்குழு கூடி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இது குறித்த வழக்கு, டிச., 8ல் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, தமிழக அரசு தாமதிக்காமல், கோரிக்கையை நிறைவேற்றமுன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 25 நவம்பர், 2017

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. 
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசின் 7வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்துதல், பங்கேற்பு ஒய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொகுப்பூதியம் பெறுவோருக்கு கால முறை ஊதியம் வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜாக்டோ-ஜியோ அ மைப்பு போராடி வருகிறது.
இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்றக் கிளை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தது. ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது. 
ஊதிய உயர்வு தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கையை பெறவும், ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை தரவும் அரசுக்கு உயர்நீதி மன்றம் காலக்கெடு நிர்ணயித்தது. 
நீதிமன்றம் அறிவித்த காலக்கெடுவுக்குள் அரசு அந்த அறிக்கையை பெற்று பெயரளவுக்கு ஒரு ஊதிய உயர்வை அறிவித்து, கோரிக்கைகளை நிறைவேற்றாமலேயே ஜாக்டோ-ஜியோவை ஏமாற்றி வருகிறது. குறித்த காலத்துக்குள் ஊதிய உயர்வு அறிவிப்பை தந்து விட்டோம் எனக்கூறி நீதி மன்றத்தையும் அரசு ஏமாற்ற முயல்கிறது. 
மேலும் நீதிமன்ற ஆணைக்கு முரணாக போராடிய ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்கள் மீது அரசு பொய் வழக்கு போட்டு பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கி வருகிறது. என்றாலும் நீதி மன்றம் தன் இறுதித் தீர்ப்பில் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு ஆணை பிறப்பிக்கும் என்றும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யும் என காத்திருக்கிறோம். இது பொய்த்துப் போனால் போராட்டம் ஓயாது. இவ்வாறு மீனாட்சி சுந்தரம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஜாக்டோ - ஜியோ வழக்கு : நேற்று (23.11.2017) நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள்

வேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் முறையில், விசாரிக்கக்கோரிய ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கையை ஐகோர்ட் மதுரை கிளை நிராகரித்தது. 
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும், கடந்த செப்டம்பர் 7ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி வக்கீல் சேகரன் என்பவர், ஏற்கனவே ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும், அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் சேகரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் சங்க நிர்வாகிகள் ஆஜராகினர். இதேபோல், தமிழக தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதனும் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். 
மேலும், இந்த வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட்டின் விசாரணைக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜி.ஆர்.சுவாமிநாதான் ஆகியோரது சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.  அப்போது அரசுத் தரப்பில், அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டுமென்பதால் அவகாசம் வேண்டுமென கூறப்பட்டது. 
ஜாக்டோ-ஜியோ தரப்பில், ‘மூத்த வக்கீல் உடல் நலக்குறைவால் ஆஜராகவில்லை. எனவே, இருவார கால அவகாசம் வேண்டும்’ என கோரப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘உங்களுக்காகவே இந்த வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கிறது. கால அவகாசம் கேட்டால் எப்படி’ என்றனர். 
இதற்கு ஜாக்டோ-ஜியோ வக்கீல், ‘அட்வகேட் ஜெனரலும், எங்கள் மூத்த வக்கீலும் சென்னையில் உள்ளனர். எனவே, இருவரும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அங்கிருந்து வாதிட அனுமதிக்க வேண்டும்’ என்றார். 
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘நாங்கள் விசாரிக்க தயாராக இருக்கிறோம். இதற்காக வீடியோ கான்பரன்சிங்கில் விசாரிக்க வேண்டியதில்லை. உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. வேண்டுமானால் இரு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கிறோம். அப்போது வந்து ஆஜராகி வழக்கை நடத்துங்கள்’’ எனக்கூறி விசாரணையை டிசம்பர் 8 க்கு தள்ளி வைத்தனர்.