>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
PF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 அக்டோபர், 2020

30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிபுரிந்துள்ள ஆசிரியருக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை

 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள ஆசிரியருக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை


        கல்வி உதவி பெறுபவை தாய தோமையார் மேல்நிலைப்பள்ளி , நசரேத் இடைநிலையாசிரியர் திரு . இரா . குழந்தைராஜ் என்பாருக்கு 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள காரணத்தால் ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணையிடல் - சார்பு.







பார்வை 1. சார்ந்த நபரது 09-10-2019 விண்ணப்பம்

2. அரசாணை எண் : 162 நிதி நாள் : 13-04-1998

3. அரசாணை எண் : 562 நிதி நாள் ( வாதியக்கழு ) நாள் : 28-07-1996 , இப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலையாசிரியர் திரு . இரா . குழந்தைராஜ் என்பார் 15-09-2019 அன்று 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிமுடித்துள்ளதால் இவருக்கு பார்வையில் கண்ட அரசாணையின்படி சிறப்பு நிலையில் 10 ஆண்டுகள் பணி முடித்துள்ளமைக்காகவும் ஒரு போனஸ் ஊதிய உயர்வு வழங்கி ஊதிய நிர்ணயம் பின்வருமாறு அனுமதித்து ஆணை வழங்கலாகிறது.

சனி, 10 அக்டோபர், 2020

ஒரே ஒரு SMS PF கணக்கின் இருப்புத்தொகையை அறிந்து கொள்ளலாம்...

 உங்கள் வருங்கால வைப்புதியில் உள்ள இருப்பு தொகையை வீட்டிலிருந்தபடியே SMS மூலம் எவ்வாறு கண்டறிவது...!

2019-20 நிதியாண்டின் வட்டியை இரண்டு தவணைகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஆறு கோடி உறுப்பினர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் தவணை தீபாவளி வரை பங்குதாரர்களின் கணக்கில் மாற்றப்படலாம். EPFO PF மீதான வட்டி 8.50 சதவீத விகிதத்தில் செலுத்த வேண்டும். அவர் முதல் தவணையின் கீழ் 8.15 சதவீத வட்டியையும் பின்னர் 0.35 சதவீத வட்டியையும் செலுத்துவார். 0.35% டிசம்பர் மாதத்திற்குள் செலுத்தலாம். PF-ன் வட்டி பரிமாற்றம் குறித்து, EPF செயற்குழு உறுப்பினர் லைவ் இந்துஸ்தானிடம் தீபாவளியை ஒட்டி முதல் தவணை வட்டி மாற்ற முடியும் என்று கூறினார்.

இருப்பினும், இது இன்னும் விவாதத்தில் உள்ளது. தீபாவளியைச் சுற்றி, பி.எஃப் பங்குதாரர்கள் அரசாங்கத்திடமிருந்து பரிசைப் பெறலாம்.

SMS மூலம் பி.எஃப் இன் சமநிலையை எவ்வாறு அறிந்து கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்...

SMS மூலம் இருப்பு தொகையை கண்டறிய முடியும்...

படி 1:- உங்கள் UAN எண் EPFO ​​உடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் PF-ன் இருப்பு பற்றிய தகவல்கள் செய்தி மூலம் பெறப்படும். இதற்காக, நீங்கள் EPFOHO-யை 7738299899-க்கு அனுப்ப வேண்டும். உங்கள் PF தகவல் குறுஞ்செய்தி மூலம் பெறப்படும்.

படி 2:- நீங்கள் இந்தி மொழியில் தகவல்களை விரும்பினால், EPFOHO UAN-யை எழுதுவதன் மூலம் அனுப்ப வேண்டும். பி.எஃப் சமநிலையை அறிந்து கொள்ளும் இந்த சேவை ஆங்கிலம், பஞ்சாபி, மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி மொழிகளில் கிடைக்கிறது. PF இருப்புக்கு உங்கள் யுஏஎன் வங்கி கணக்கு, பான் (PAN) மற்றும் ஆதார் (AADHAR) உடன் இணைக்கப்படுவது அவசியம்.

உங்கள் PF பணத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றுவது எப்படி?... இதோ வழிமுறைகள்!!

படி 3:- உங்கள் பாஸ் புத்தகத்தில் நிலுவைத் தொகையை EPFO ​​இணையதளத்தில் சரிபார்க்கலாம். பாஸ் புத்தகத்தைப் பார்க்க, ஐ.நா. எண்ணை வைத்திருப்பது அவசியம்.

தவறவிட்ட அழைப்பின் (missed call) மூலம் சமநிலையை அறிந்து கொள்ளுங்கள்...

1 missed call மூலம் இருப்புதொகையை அறிந்து கொள்ளுங்கள் - 011-22901406 என்ற எண்ணில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து தவறவிட்ட அழைப்பைக் கொடுங்கள். இதன் பின்னர், PF விவரங்கள் EPFO-வின் செய்தி மூலம் பெறப்படும். இங்கே நீங்கள் UAN, பான் மற்றும் ஆதார் இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

UAN எண்ணை என்ன செய்கிறது - EPFO யுனிவர்சல் கணக்கு எண் (UAN) சேவையை வழங்குகிறது. இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF கணக்கு இருப்பைக் காணலாம். இந்த எண் வங்கி கணக்கு போன்றது.


...........................................



வியாழன், 27 செப்டம்பர், 2018

PF - வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள். ஆனால் அவர்கள் அளிக்கும் பிஎப் கணக்கில் உள்ள 6 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு பற்றி மட்டும் பலருக்குத் தெரியாது.


1976-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகித்து வருபவர்களுக்கு EDLI எனப்படும் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பிஎப் கணக்கு வைத்துள்ள எல்லா ஊழியர்களும் பயன்பெறமுடியும்.

எப்படி இந்தக் காப்பீட்டிற்கான பங்களிப்பை அளிப்பது?
ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு எப்படி ஈபிஎஸ் எனப்படும் பென்ஷன் பங்களிப்புப் பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே போன்று EDLI-க்கான பிரீமியமும் செலுத்தப்படுகிறது.

EDLI பிரீமியத்தினை எப்படிச் செலுத்துவது?
EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். பிஎப் சந்தார்களின் சம்பளத்தில் இருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது.

நிறுவனங்கள் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பு எப்படிப் பிரிகிறது?
பிஎப் கணக்கில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் செலுத்தப்படும் என்றும் பொதுவாக நாம் அறிவோம். ஆனால் நிறுவனம் நமக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் 8.33 சதவீதம் பென்ஷனுக்காகவும், 3.67 சதவீதம் ஈபிஎப் பங்களிப்பு, 0.51 சதவீதம் EDLI பிரீமியம், 0.85% ஈபிஎப் அட்மின் கட்டணங்கள், 0.01% EDLI கட்டணங்களாகச் செல்கிறது.

EDLI காப்பீடு எப்படிக் கணக்கிட்டு அளிக்கப்படுகிறது?
EDLI காப்பீடு பிஎப் சந்தாதார் இறந்த பிறகு அவரது 30 மடங்கு அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியைக் கணக்கிட்டு அளிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் பொனஸ் தொகையாக 1,50,000 ரூபாய் அளிக்கப்படும். காப்பீடு பிரீமியம் தொகை அனைவருக்கும் சமமானதே ஆகும்.

பிஎப் சந்தாதார் இறக்க நேர்ந்தால் EDLI காப்பீடு தொகையைப் பெறுவது எப்படி?
ஈபிஎப் கணக்குச் சந்தாதரகள் இறக்க நேர்ந்தால் நாமினிக்கள் இந்தக் காப்பீட்டுப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும். ஒருவேலை நாமினி இல்லை என்றால் சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் காப்பீடு தொகையினைத் திரும்பப்பெறலாம்.
அதற்கு நாமினி அல்லது சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் படிவம் 5-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

காப்பீடு தொகையைத் திரும்பப் பெறும் போது கவணிக்க வேண்டியவை?
EDLI காப்பீட்டினை பெறும் போது பிஎப் சந்தாரர் இறக்கும் வரை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து இருக்க வேண்டும். படிவத்தில் நிறுவனத்தின் அத்தாட்சி இருக்க வேண்டும். நிறுவனத்தில் அத்தாட்சி பெற முடியவில்லை என்றால் கெசட் அலுவலரிடம் பெறலாம்.

தேவையான ஆவணங்கள்
1) இறப்புச் சான்றிதழ்
2) நாமிக்கள் மேஜராக இல்லாத போது பாதுகாவலர் நிலை சான்றிதழ் கட்டாயம்.
3) கேன்சல் செய்யப்பட்ட செக்

உதாரணம்
பாபுவின் மாத சம்பளம் 15,000 ரூபாய். ஈபிஎப், ஈபிஎஸ், EDLI திட்டங்களில் இவரது பெயரில் பங்களிப்புகள் உள்ளது. பணிக் காலத்தில் இவர் இறந்துவிடுகிறார். இவரது நாமினி EDLI காப்பீடு தொகையினைப் பெற முயலும் போது (30 x Rs.15,000) + (Rs.1,50,000) = Rs.6,00,000 அல்லது இதற்கு இணையான ஒரு தொகையினைக் காப்பீடாகப் பெறலாம்.

வியாழன், 4 ஜனவரி, 2018

DEE - ஊராட்சி / நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு கணக்குகள் அரசு தகவல் தொகுப்பு மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது-நிலுவைகள் விவரங்கள் சார்பு!

வியாழன், 14 டிசம்பர், 2017

புதிய ஊதியப்படி பி.எப்., சந்தா

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள அடிப்படையில், பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான, மாதாந்திர சந்தா பிடிக்க, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, 2009ல், ஊதியம் உயர்த்தப்பட்டது.
அதன் அடிப்படையில், பி.எப்., மாதாந்திர சந்தாவாக, சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு, 'அலுவலர் குழு - 2017' பரிந்துரைகளின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய ஊதியத்தில் அடிப்படை ஊதியம், சிறப்பு ஊதியம், தனி ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் மொத்த தொகையில், 12 சதவீதத்தை, வருங்கால வைப்பு நிதியின் மாதாந்திர சந்தாவாக, தொடர்ந்து பிடித்தம் செய்ய வேண்டும்.
மேலும், பொது வருங்கால வைப்பு நிதியில், 12 சதவீதத்திற்கும் மேலாக, மாதச்சந்தா செலுத்திட, தடையேதுமில்லை என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதற்கான உத்தரவை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

புதிய ஊதியப்படி பி.எப்., சந்தா..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள அடிப்படையில், பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான, மாதாந்திர சந்தா பிடிக்க, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, 2009ல், ஊதியம் உயர்த்தப்பட்டது.
அதன் அடிப்படையில், பி.எப்., மாதாந்திர சந்தாவாக, சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு, 'அலுவலர் குழு - 2017' பரிந்துரைகளின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய ஊதியத்தில் அடிப்படை ஊதியம், சிறப்பு ஊதியம், தனி ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் மொத்த தொகையில், 12 சதவீதத்தை, வருங்கால வைப்பு நிதியின் மாதாந்திர சந்தாவாக, தொடர்ந்து பிடித்தம் செய்ய வேண்டும்.
மேலும், பொது வருங்கால வைப்பு நிதியில், 12 சதவீதத்திற்கும் மேலாக, மாதச்சந்தா செலுத்திட, தடையேதுமில்லை என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதற்கான உத்தரவை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சண்முகம் பிறப்பித்துள்ளார்.

சனி, 29 ஜூலை, 2017

புதன், 19 ஜூலை, 2017

ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்

சென்னை: ''வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த ஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,'' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார்.


இதுகுறித்து, அவர் கூறியதாவது: வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்துள்ள ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு, 10 நாட்களுக்கு முன் விண்ணப்பித்தால், அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே, ஓய்வூதிய பலன்களை பெறும் வசதி தற்போது அறிமுகமாகி உள்ளது. இதற்கு, ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்கள், இணையதளத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், அந்த ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய பலன்களை சுலபமாக பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 25 ஜூன், 2017

"PF" CALCULATION METHOD

உங்க PF பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் சட்டம்-1952 (அ) தொழிலாளர் சேமநல நிதி 1952 என்பது இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.
இதனால் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன. தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் தொழில் தருவோர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்து வட்டியுடன் ஒய்வின் முடிவில் தொழிலாளர்களுக்கு திருப்பி தரப்படும் . இந்தப் பங்களிப்புப் பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் திரும்ப பெற்று கொள்ளலாம்
1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் சேமநல நிதி திட்டத்துடன் சேர்த்து இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் இதனை செயல்படுத்தி வருகிறது .   ஒரு தொழிலாளரின் சம்பளம் ரூ. 15000 க்கு கீழ் எனில்  பிஎப் கட்டாயம். ஆனால் தொழிலாளரின் சம்பளம் ரூ.15000க்கு மேல் எனில் தொழிலாளர் விருப்பப்படாவிட்டால் பிஎப் பிடிக்க தேவையில்லை.  
தொழிலாளர் வாங்கும் சம்பளம் மற்றும் இதர படிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அதே 12 சதவிகிதத் தொகையை அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இதில் 8.33 சதவிகிதத் தொகை தொழிலாளர்களது குடும்ப நல ஓய்வூதியத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவிகிதத் தொகை அந்தத் தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படும். பிஎப் பணத்துக்கு  ஆண்டுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
உதாரணமாக:
 ஒருவர் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி(டிஏ) சேர்த்து ரூ.25000  வாங்குகிறார் என்றால் அவரிடம் இருந்து 12 சதவீதம் அதாவது  ரூ. 3,000  பிஎப் பணம் பிடித்தம் செய்யப்படும்.  இதேபோல் நிறுவனமும் ரூ. 3,000 பணத்தை செலுத்தும்.  
ஆனால் அதில் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. 25000 ரூபாயில் 3.67 சதவீதம் அதாவது ரூ. 917.50  பணத்தை தொழிலாளரின் பங்களிப்பாக அவரது கணக்கில் நிறுவனம் சேர்க்கும் . 
இதேபோல் 25 ஆயிரம் ரூபாயில்  15 ஆயிரம் ரூபாயை கழித்துபோக மீதமுள்ள 10000த்தில் தான்  8.33 சதவீதம் பணத்தை (ரூ.832.50 காசு தான்)  தொழிலாளரின்  வைப்பு நிதி கணக்கில் சேர்க்கப்படும். ஆக மொத்தம் அவரது கணக்கில்   நிறுவனம் சார்பாக ரூ. 917.50+ரூ.832.50 சேர்த்து 1750 மாதந்தோறும் சேர்க்கப்படும்.  
நில்லுங்க... 3000 ரூபாய் வர வேண்டுமே ஆனால் ரூ1750 தானே போடுகிறார்கள் என்று தோன்றுகிறதா?  ஏனெனில் மீதமுள்ள 1250 ரூபாய் பென்சன் திட்டத்துக்கு போய்விடும். அதுவும் கணக்குல சேர்த்துக்குவாங்க.
எனவே ஓராண்டு முடிவில் அவர் கணக்கில் உள்ள பணத்துக்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டு முடிவிலும்  இதேபோல் 8.65  வட்டி வழங்கப்படும்.  இப்ப கணக்கு போட்டு பாருங்க உங்க பிஎப் கணக்குல எவ்வளவு வரும்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம்.
பணத்தை எப்படி எடுப்பது?
ஒருவர் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் பொழுது அந்த உறுப்பினர் தனது வைப்புக் கணக்கை முடித்துக் கொண்டு பணத்தைப் பெறலாம். ஆனால் அந்த உறுப்பினர் வேறு ஒரு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் சேர்ந்தால் அவரது கணக்கு புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படும். 
ஒருவர் பணியில்  இருந்து விலகிய பின்னர் 60 நாட்களாக வேலையில்லாமல் இருந்தாலோ, அல்லது  பிஎப் வசதி உள்ள நிறுவனத்தில்   வேலை செய்யாமல் இருந்தாலோ ,  பிஎப் கணக்கை முடித்துக்கொண்டு மொத்த பணத்தையும் எடுக்கலாம். ஆனால் வேலையில் இருக்கிறார் என்றால், அவர் 57 வயதில் தான் 90 சதவீத பணத்தை எடுக்க முடியும். இதேபோல் 58 வயதில் மீதமுள்ள 10 சதவீத பணத்தை எடுக்க முடியும்

ஞாயிறு, 11 ஜூன், 2017

பி.எப்., கணக்கில் ஆதார் இணைக்கவரும் 30 வரை கால அவகாசம்.....

பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான, பி.எப்., கணக்கில், கோடிக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.
டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில், நான்கரை கோடி உறுப்பினர்களுக்கு, பி.எப்., நடைமுறையில் எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
பி.எப்., தொகை பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட, தற்போதுள்ள நடைமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பி.எப்., ஓய்வூதியர்கள் மற்றும் சந்தாதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணை, பி.எப்., கணக்கில் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
முதலில், ஏப்., 30க்குள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கான காலக்கெடு இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 2 ஜூன், 2017

அரசு ஊழியர்களின் பொது சேமநல நிதி கணக்கு அறிக்கையை மாநில கணக்காயர் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 2016-17-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கையை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைத்தளத்தில் இம்மாதம் முதல்வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 2016-2017-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கைதமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைத்தளத்தில் (www.agae.tn.nic.in) இம்மாதம் (ஜூன்) முதல் வாரத்தில்பதிவேற்றம் செய்யப்படும்.பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாதாரர்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து தங்களின் 2016-2017 வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சனி, 27 மே, 2017

PF பங்கீட்டு அளவை 10 சதவீதமாக குறைக்க EPFO ஆலோசனை

ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தது ஊழியர்கள் தரப்பிலும், நிறுவன தரப்பிலும் தலா 12 சதவீத பணத்தை இ.பி.எப்(ஊழியர் சேம லாப நிதி திட்டம்), இ.பி.எஸ் (பணியாளர் ஓய்வூதியத் திட்டம்)மற்றும் EDLI (பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்) திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. 
இந்த அளவீட்டை ஒய்வூதிய அமைப்பான இ.பி.எப்.ஓ, 10 சதவீதமாகக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான இறுதி முடிவு நாளை(மே-27) முடிவு செய்யப்பட உள்ளது. வளர்ச்சிக்கு உறுதுணை இந்த 10 சதவீதம் என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ கீழ் அளிக்கப்படும் பணத்தில் பிடிக்கப்படுவது.
12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுவதன் மூலம் ஊழியர்களுக்கு அதிகமான பணம் கையில் கிடைக்கும் .இது நாட்டின் வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம் இ.பி.எப்.ஓ அமைப்பிற்குப் பரிந்துரை செய்துள்ளது. இ.பி.எப்.ஓ தான் இதற்கான இறுதி முடிவு எடுக்கும்.

திங்கள், 1 மே, 2017

P.F., வட்டி 8.65 சதவீதம் : மத்திய அரசு ஒப்புதல்.

இ.பி.எப்., எனப்படும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு, 2016 - 17ம் ஆண்டுக்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, அறங்காவலர் குழு முடிவு செய்யும்.
அறங்காவலர் குழு முடிவிற்கு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்க வேண்டும். பி.எப்., அமைப்பு தன்னாட்சியாக செயல்படுவதால், அறங்காவலர் குழு பரிந்துரைகளை, மத்திய அரசு, அப்படியே ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், 2015- - 16-ம் நிதி ஆண்டில், பி.எப்.,கான வட்டி விகிதத்தை, 8.8 சதவீதமாக, அறங்காவலர் குழு நிர்ணயம் செய்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சகம், இதை, 8.7 சதவீதமாகக் குறைத்தது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, வட்டிவிகிதம், 8.8 சதவீதமாக மீண்டும் நிர்ணயம் செய்யப்பட்டது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஏற்றபடி, பி.எப்., வட்டி விகிதத்தை, 0.50 சதவீதம் குறைக்க வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு, நிதிஅமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம், பி.எப்., அறங்காவலர்கள் குழு கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நடந்தது. இதில், 2016 - -17ம் நிதி ஆண்டுக்கான, பி.எப்., வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்ய, பரிந்துரைக்கப்பட்டது.அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, சில நாட்களுக்கு முன் நிருபர்களிடம் கூறுகையில், '2016 - 17ம் ஆண்டுக்கான பி.எப்., வட்டி சதவீதத்தை, 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யமத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்து விட்டது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்' என்றார்.
இந்நிலையில், பி.எப்., அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '2016 - 17ம் ஆண்டுக்கான, பி.எப்., வட்டி சதவீதம், 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்ய மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்த உத்தரவை, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நான்கு கோடி சந்தாதாரர்களின் கணக்கில், வட்டித் தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறியுள்ளது.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பி.எப். பணத்தை எடுத்துக்கொள்ள அரசு புது சலுகை அறிவிப்பு.

உடல் நலக்குறைவு நேரங்களில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை டாக்டர் அனுமதி கடிதம் கொடுக்காமல் கூட எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவன உரிமையாளரின் ஒப்புதலையும் டாக்டரின் சான்றையும் சமர்ப்பித்தே பி.எப் பணத்தின் ஒரு பகுதியை எடுப்பது கட்டாயமாகும் என்ற நிலை இதன் மூலம் மாறியுள்ளது.
மருத்துவ நோக்கங்களுக்காக பி.எப் நிதி சேமிப்புகளை திரும்ப பெற சுயமாக ஒரு சான்றிதழை (self-declaration form) தொழிலாளி கொடுத்து ஆறு மாத கால சேமிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்கிறது இந்த புதிய அறிவிப்பு.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது உள்ளிட்ட பெரிய அளவிலான நோய் சிகிச்சைகளுக்குத்தான் இந்த விதிமுறை பொருந்தும். டிபி, தொழுநோய், வாதம், இதய சம்மந்தமான நோய்கள் மற்றும் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பி.எப்.பணத்தை எடுக்க ஓ.கே. சொல்லியுள்ளது அமைச்சகம்.
மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் பி.எப் தொகையை எடுக்கலாம். இதற்கு மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

திங்கள், 17 ஏப்ரல், 2017


PF கணக்கில் விரைவில் 5 மாற்றங்கள் (50,000 ரூபாய் போனஸ், புதிய வட்டி விகிதம்)

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 2016-2017 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதம், ஆதார் இணைப்பு, புதிய போனஸ் திட்டம் எனப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனைவரும் பிஎப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றுஅறிவுறுத்தியுள்ளது. முன்பு ஆதார் எண்ணை இணைக்க மார் 31-ம் தேதி தான் கடைசித் தேதி என அறிவித்து வருங்கால வைப்பு நிதி ஆணையம் அதனைச் சற்று தளர்த்தி ஏப்ரல் 30-ம் தேதி என அறிவித்தது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் இதே போன்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இவை மட்டும் இல்லாமல் அன்மையில் பிஎப் திட்டத்தில் பிற மாற்றங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
வட்டி விகிதம்
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள 4 கோடி சந்தாதார்களும் 2016-2017 நிதி ஆண்டிற்கான வட்டி விகிதமாக 8.65 சதவீதம் அளிக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் கமிட்டி முடிவு செய்துள்ளது, அதனை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசு இன்னும் ஓர் இரு நாளில் 8.65 சதவீதமாக வட்டி விகிதத்தை அறிவிக்கும் என்று அதிகாரப் பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
50,000 ரூபாய் போனஸ்
வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு செய்து இடையில் எடுப்பதைத் தவிர்க்கும் வண்ணமாக 20 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள பிஎப் கணக்குகளுக்கு 50,000 ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும். 20 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பங்களிப்பு செலுத்தி வந்த பிஎப் கணக்குகளுக்கும் பணத்தைத் திரும்பப் பெறாமல் இருந்தால் 50,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்த பிறகு இந்தத் தொகை வழங்கப்படும்.
 
இறந்த பிஎப் சந்தாதார்களைச் சார்ந்தவர்கள்
வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ள சந்தாதார்கள் இறந்து விட்டால் தற்போது அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றது, ஆனால் குறைந்தபட்ச தொகை என்று ஒன்று இல்லை. எனவே புதிதாகக் குறைந்தபட்ச தொகையாக 2.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றது.
 
பங்குச் சந்தை முதலீடு
வருங்கால வைப்பு நிதி ஆணையம் இப்போது 10 சதவீதம் பிஎப் தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றது, இப்போது அதனை 15 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதனை வர்த்தகச் சங்கங்கள் எதிர்த்து வருகின்றன. 2017 பிப்ரவர் 15-ம் தேதி வரை வருங்கால வைப்பு நிதி ஆணையம் 18,069 கோடி ரூபாயை ஈடிஎப் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 18.13 சதவீதம் வரை லாபமும் பெற்றுள்ளது.
 
பிஎ பணத்தை எளிதாகத் திரும்பப் பெற செயலி
4 கோடி பேர் பிஎப் சந்தாதார்களாக உள்ள நிலையில் பணத்தை எளிதாகத் திரும்பப் பெற ‘யூமங்' என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதன் மூலம் இணையதளம் மூலம் பிஎ பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை அளிப்பது மிகவும் எளிமைப்படுத்தப்படும்.

சனி, 15 ஏப்ரல், 2017


PF எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு காலக்கெடு நீட்டிப்பு

பிஎப் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஒ) தெரிவித்துள்ளது.
முன்னதாக இபிஎப்ஒ ஆணையம் பிஎப் எண்ணுடன் ஆதாரை இணைப் பதற்கு கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இபிஎப்ஒ ஆணையம் தெரிவித் துள்ளது. அதுமட்டுமல்லாமல் 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய் வூதிய கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து டிஜிட்டல் லைப் சான்றிதழை ஒப்படைப்பதற்கான கால அவகாசமும் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பல முறை ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. லைப் சான்றிதழை டிஜிட்டலில் சமர்பிக்க முடியாத ஓய்வூதிய தாரர்கள் வங்கிகளின் சென்று சமர்பிக்கலாம் எனசமீபத்தில் இபிஎப்ஒ ஆணையம் உத்தர விட்டது. மேலும் டிஜிட்டலில் ஏன் சமர்பிக்கமுடியவில்லை என்பதற்கு காரணத்தை கூற வேண்டும் என்று கூறியிருந்தது.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

G.O.No. 35 Dt: 15.02.2017 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.01.2017 to 31.03.2017 – Orders- Issued.

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

பி.எஃப். பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்.

பி.எஃப். பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்.

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) கீழ் பயன்பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும், தங்களுக்கு கிடைக்கும் சேவைகள் தொடர்வதற்கு தங்களது ஆதார் அடையாள எண்ணை இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இபிஎஃப்ஓ அமைப்பின் ஆணையர் வி.பி.ஜாய், தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இபிஎஃப்ஓ அமைப்பின் சேவைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனில் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும் வரும் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அல்லது ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள படிவத்தின் நகலை அளிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து, கால அவகாசம் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். நாடு முழுவதும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 4 கோடி சந்தாதாரர்களும் உள்ளனர். இந்நிலையில், ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது குறித்து நாடு மழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 120 மண்டல அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது.