இல்லம் தேடிக் கல்வி Mobile App New version Download
Version : 0.0.69
இல்லம் தேடிக் கல்வி Mobile App New version Download
UPDATED NEW
👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
***---***********************
Version : 0.0.69
இல்லம் தேடிக் கல்வி Mobile App New version Download
UPDATED NEW
👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
***---***********************
ITK மாணவர்களுக்கு ACHIEVEMENT TRACKER DEMO VIDEO -- PRIMARY STUDENTS
CLIK HEARE LINK VIDEO
*************************************
ITK EDIT BANK ACCOUNT AND CENTRE DETAILS UP DATE செய்ய... வழிமுறைகள்...
CLIK HEARE
💥 *இல்லம் தேடி கல்வி*
🌷 தன்னார்வலர்கள் தாங்கள் தவறுதலாக பதிவு செய்த
🌹 BANK ACCOUNT DETAILS
🌹 CENTRE ID
🌹 CENTRE NAME
🌹CENTRE OPENING DATE
*UPDATE செய்வதற்கான வழிமுறை*
இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு பொங்கல் திருநாள் விடுமுறை! க.இளம்பகவத் இ.ஆ.ப, சிறப்புப் பணி அலுவலர், இல்லம் தேடிக் கல்வி.
வரும் பொங்கல் திருவிழாவிற்கு இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கலாம் என்று தன்னார்வலர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. 34 % தன்னார்வலர்கள் போகிப்பண்டிகை உட்பட நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 29% தன்னார்வலர்கள் பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
17% தன்னார்வலர்கள் இல்லம் தேடிக் கல்வி குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாட போவதாக தெரிவித்துள்ளனர்.
3% தன்னார்வலர்கள் விடுமுறை எதுவும் வேண்டாம் என்றும் 17% தன்னார்வலர்கள் தைப்பூசம் வரை விடுமுறை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மையான தன்னார்வலர்களின் கருத்தின்படி தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவிற்கு போகிப்பண்டிகை உட்பட 4 நாட்கள் இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட விரும்பும் தன்னார்வலர்கள் இந்தப் பொங்கலை கல்விப் பொங்கலாக கொண்டாட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தித்திக்கும் பொங்கலாய், இனித்திருக்கும் கரும்பாய் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் தன்னார்வலர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தகவல் :
க.இளம்பகவத் இ.ஆ.ப,
சிறப்புப் பணி அலுவலர்,
இல்லம் தேடிக் கல்வி.
************************************************
இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1000- ஐ எவ்வாறு பெறுவது?
அன்பார்ந்த தன்னார்வலர்களே!
தாங்கள் இல்லம் தேடிக் கல்வியில் இணைந்து அளப்பரிய பணியைச் செய்து வருகிறீர்கள்! பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட நமது குழந்தைகளின் கல்வியை மீட்பதற்கு உங்களது பணி மகத்தானது..
பல தன்னார்வலர்கள் தங்களது சுய முயற்சியால் குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்களை உருவாக்கி சிறப்பாக கற்பித்து வருகிறீர்கள். தாங்கள் அப்பணியை மென்மேலும் சிறப்பாக செய்து வர ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- வழங்கப்படும்.
டிசம்பர் மாதம் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளைத் தொடங்கி குறைந்தபட்சம் 20 நாட்கள் வகுப்புகள் நடத்தியுள்ள தன்னார்வலர்களுக்கான ஊக்கத்தொகை தற்பொழுது விடுவிக்கப்படுகிறது.
இதற்காக தன்னார்வலர்கள் தங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை இல்லம் தேடி கல்வி கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான ஆப்ஷன் நாளை முதல் செயலியில் ஆக்டிவேட் செய்யப்படும்.
தன்னார்வலர்களுக்கு தனியான வங்கி கணக்கு இல்லை எனில் புதிய வங்கி கணக்கு ஒன்றினைத் தொடங்கி பதிவேற்றம் செய்க.
தன்னார்வலர்களின் பெயர், வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட், ஆகியவற்றுடன் வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ள பக்கத்தை புகைப்படம் எடுத்து எடுத்து இல்லம் தேடிக் கல்வி கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
.............................................................
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் செயலி வெளியிடப்பட்டுள்ளது.
தன்னார்வலர் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்வது, எவ்வாறு மாணவர்களை கல்வி மையத்தில் இணைப்பது, மாணவர்கள் வருகை பதிவு மற்றும் கருத்து வளங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்த காணொளியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
App பதிவிறக்கம் செய்து Open செய்யும் போது User id மற்றும் Password கேட்கும். அதில் தன்னார்வலர்களில் User id என்பது அவர்கள் தன்னார்வலராக பதிவு செய்த போது பயன்படுத்திய 10 இலக்க மொபைல் எண்ணை ( 9864276542) பயன்படுத்தவும்.
Password என்பது மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் @ உங்களது பிறந்த வருடம் ( 6542@1981) என்று பயன்படுத்தி Submit கொடுக்கவும்.
மாணவர்களை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இணைப்பதற்கு மாணவர்களின் EMIS ID தன்னார்வலர்கள் தெரியவேண்டும்.
மாணவர்களின் பெயர், EMIS ID, ஆகியவற்றை வகுப்பாசிரியர்கள் மாணவர்களின் நோட்டுப் புத்தகத்தில் குறித்து அனுப்புக. இதை தலைமையாசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தச் செயலியை அனைத்து தன்னார்வலர்களும் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள தகவல் தெரிவிக்கவும்.
Click Here To Download - ITK Volunteers Mobile App
*******************-*-******---**********************