திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 'ஐ.ஏ.எஸ்., ஆவதே லட்சியம்' எனக் கூறிய மாணவி, அதேபோல், சாதித்து காட்டினார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகே, தேவனம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி; மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. நீலகண்டன் என்ற மகனும், நித்யா என்ற மகளும் உள்ளனர்.இதில், நித்யா, 34. கடந்த, 2013ல், ஐ.ஆர்.எஸ்., தேர்வெழுதி வெற்றி பெற்று, வருமானவரித் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
'தினமலர்'
இவர், திருப்பூர், பாளையக்காடு முருகப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளியில், 1998 - 99ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 468 மதிப்பெண்பெற்றார்.அப்போது, 'தினமலர்' திருப்பூர் பகுதியில் வெளியான, 'சாதனை மொட்டுகள்' பகுதிக்கு, அவர் அளித்த பேட்டியில், 'கல்வியில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ்., ஆவது என்லட்சியம்' என்றார்.நம்பிக்கையை சிறிதும் தளரவிடாத அவர், பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,085 மதிப்பெண்பெற்றார்.
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரியில், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். அதன்பின், ஐதராபாதில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இருப்பினும், அவரது ஐ.ஏ.எஸ்., கனவு, அவரது துாக்கத்தை கலைத்து கொண்டே இருக்க, ஐதராபாதில், சிறப்புப் பயிற்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினார். நான்காவது முயற்சியில், அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
223வது, 'ரேங்க்'
நித்யா கூறிய தாவது:இன்ஜி., படிப்பு முடித்து, வேலை செய்து கொண்டே, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதினேன். நான்காவது முயற்சியில், இந்திய அளவில், 223வது, 'ரேங்க்' பெற்று தேர்ச்சி பெற்றேன்.ஒன்றரை வயது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். கிராமப்புற மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், எனது பணி அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி? அனுதீப்பின் அனுபவங்கள் #BBCExclusive
யு.பி.எஸ்.சி 2017ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த முறை 990 மாணவர்கள் குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பிபிசி சந்தித்தபோது அனுதீப் தன்னுடைய வெற்றிக்கதையை பகிர்ந்து கொண்டார்.
"மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நான் முதலிடம் பெற்றதைவிட என் எதிரில் இருக்கும் பொறுப்புகளே பெரிதாக தெரிகிறது. எனக்கு உறுதுணையாக இருந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."
"கடின உழைப்பின் அடிப்படையில் மட்டுமே இந்த இடத்தை பிடித்திருக்கிறேன், உழைப்புக்கு எந்த ஒரு மாற்றும் இல்லை" என்கிறார் அனுதீப்.
"நாம் எதைச் செய்தாலும் சரி, அது விளையாட்டாக இருந்தாலும்கூட நமது இலக்கு எப்பொழுதும் சிறப்பானதை அடைய வேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும். இதை என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன், தேர்வுகளுக்கு தயார் செய்யும்போதும் என் தந்தையின் மந்திரத்தையே பின்பற்றினேன்" என்று விளக்குகிறார் அனுதீப்.
சரித்திரம், சுயசரிதை புத்தகங்களை படிப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லும் அனுதீப், அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கனின் ஆளுமை தமக்கு மிகவும் பிடித்தமானது என்று சொல்கிறார்.
"ஆபிரகாம் லிங்கன் எப்பொழுதும் எனக்கு உத்வேகம் அளிக்கும் தலைவராகவே திகழ்கிறார். பல தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் அவர், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் சவால்களை எதிர்நோக்கி வெற்றி பெற்று தனது நாட்டை வழிநடத்தி சென்றவர்" என்கிறார் அனுதீப்.
சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு தான் தயார் செய்ததை பற்றி விரிவாக விளக்கியபோது. "இது மிகவும் கடினமான தேர்வு. ஏனெனில் தகுதி வாய்ந்த பலர் அதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்ச்சி பட்டியலில் தகுதிவாய்ந்தவர்களில் சிலரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது, விடுபட்டவர்களில் பலர் திறமையானவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தினசரி எத்தனை மணிநேரம் படிக்கிறோம் என்பதைவிட என்ன படிக்கிறோம், எப்படி படிக்கிறோம் என்பது முக்கியம்" என்று கூறினார்.
2013ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய வருவாய் சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அனுதீப்.
"தற்போது ஐதராபாத்தில் வருவாய்துறை உதவி ஆணையராக பதவி வகிக்கிறேன், பணியில் இருக்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்களிலும், வார இறுதிகளிலும் தேர்வுகளுக்காக தயார் செய்துக் கொண்டிருப்பேன். எப்போதும் நமது முயற்சி சிறந்ததாக இருக்க வேண்டும், கடின முயற்சியும், தொடர் உழைப்பும் பலன் தருவது உறுதி" என்று தனது வெற்றியின் ரகசியத்தை சொல்கிறார் அனுதீப்.
வாசிப்பதில் ஆர்வம் கொண்ட அனுதீப்புக்கு கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். சிறுவயதில் இருந்தே கால்பந்து விளையாடுவதிலும், கால்பந்து போட்டிகளை பார்ப்பதில் விருப்பம் கொண்டவர் அவர்.
"கால்பந்து எப்போதும் என் வாழ்வின் ஓர் அங்கமாகவே இருந்தது, நான் மிகவும் நன்றாக கால்பந்து விளையாடுவேன். மன அழுத்தம் ஏற்பட்டால் அதை குறைக்க கால்பந்து விளையாடுவேன். கதை புத்தகங்கள் படிக்கவும் எனக்கு பிடிக்கும். கற்பனைக் கதைகளை அதிகம் படித்ததில்லை, ஆனால் உண்மையான விஷயங்கள் தொடர்பான புத்தகங்களை படிப்பேன்" என்கிறார் அவர்.
கல்வி துறையில் பணியாற்ற விரும்பும் அனுதீப்
"நேரம் கிடைக்கும் போதெல்லாம், விளையாடுவேன் அல்லது படிப்பேன். அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். இவை நமது மன அழுத்தத்தை போக்குவதோடு, நம்மை வலிமையாக்குகிறது. எனது பொழுதுபோக்கு என்னை உருவாக்கியிருக்கிறது என்றே கூறுவேன்" என்கிறார் அவர்.
அனுதீப்பின் குடும்பத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் இந்த செய்தியை கேட்டதும் குடும்பத்தினரின் மறுமொழி எப்படி இருந்தது? "இந்த செய்தியை கேட்டபிறகு, அம்மாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழியத் தொடங்கியது, அப்பாவுக்கோ அதை இன்னும்கூட நம்ப முடியவில்லை, அது மிகவும் மகிழ்ச்சியான தருணம், என்னாலும் நம்ப முடியவில்லை. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் அனுதீப்.
தனக்கு வழங்கப்படும் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்கும் அனுதீப், கல்வி துறையில் பணிபுரிவது தனது முதல் தெரிவு என்று சொல்கிறார்.
கல்வி பற்றி விரிவாக பேசும் அனுதீப், "உலகின் வளர்ந்த நாடுகளில், உதாரணமாக ஸ்காண்டிநேவிய நாடுகளில் கல்வி நிலை மிக உயர்ந்த நிலையில் உள்ளது, வலுவான கல்வி முறையே அவர்களின் வளர்ச்சிக்கான ஆணிவேர்" என்று சொல்கிறார்.
“நாம் புதிய மேம்பட்ட இந்தியாவை உருவாக்க விரும்பினால், நமது கல்வி முறையை மேம்படுத்த வேண்டும். அதற்கான திசையில் வேலை செய்ய வேண்டும். என்னுடைய வளர்ச்சி பயணத்தில் நாட்டிற்கான பங்களிப்பை ஏதாவது ஒருவகையில் வழங்க விரும்புகிறேன் " என்று அவர் குறிப்பிடுகிறார்.
தெலங்கானாவின் கிராமத்தை சேர்ந்தவர் அனுதீப்
தனது வெற்றியின் பின்னணியில் இருப்பது தனது தந்தைதான் என்று உறுதியாக கூறுகிறார் அனுதீப். "அப்பாதான் எனக்கு முன்மாதிரியாக இருக்கிறார், தெலங்கானாவில் உள்ள தொலைதூர கிராமத்தை சேர்ந்த என் தந்தை கடினமாக உழைத்து முன்னேறியவர். அவருடைய உழைப்புதான் எனக்கு சிறந்த கல்வியை தந்தது. வேலையில் கடினமாக உழைப்பதோடு, உயர் தரத்தையும் கடைப்பிடித்து வரும் என் அப்பாவைப் போல இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்" என்று சொல்கிறார் இந்த கடின உழைப்பாளி.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் - என்ற திருக்குறளுக்கு ஏற்ப அனுதீப்பின் தந்தை கடின உழைப்பினால், கற்றவர் கூட்டத்தில் முந்தியிருக்கும்படியாக மகனை கல்வியில் மேம்படச் செய்தால், மகனோ,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் - என்று பெற்றவர்களை பெருமை கொள்ள செய்திருக்கிறார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தருமபுரி இளைஞன்; வெற்றிக்கு யாரெல்லாம் காரணம்? உற்சாக பேட்டி...
தருமபுரி ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தருமபுரி இளைஞன் கீர்த்திவாசனுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இவரை காண அரசியல் கட்சியினர் அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்வில் தருமபுரியைச் சேர்ந்த வெ.கீர்த்திவாசன் என்பவர் அகில இந்திய அளவில் 29-வது இடத்திலும், தமிழகத்தில் முதலாவது இடத்திலும் முதல் முயற்சிலேயே தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், சொந்த ஊரான தருமபுரி வந்த வெ.கீர்த்திவாசனுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் தெருவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு, ஓய்வு பெற்ற ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முனியப்பன் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், வெ.கீர்த்திவாசனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தருமபுரி மாவட்டம் கல்வியில் பின்தங்கி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு அதிக அளவில் படித்து தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.
தருமபுரியில் பள்ளி படிப்பை முடித்து தொடர்ந்து திருச்சி ஐ.ஐ.டி. கல்லூரியில் கட்டிட பொறியாளர் படிப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது கல்லூரிக்கு வருகை தந்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை பார்த்து நாமும் இது போன்று உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன்.
என்னை போன்று இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்வை சிறப்பாக்கி கொள்ள வேண்டுமானால் கடுமையாக படித்து போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்.
நான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகி ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரிவதுடன், அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடுவேன். எனது இந்த முயற்சிக்கு தந்தை வெங்கடேஷ்பாபு, தாயார் தீபா மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
அரசுப்பள்ளி ஆசிரியர் தம்பதிகளின் மகள் IAS தேர்வில் வெற்றி
திங்கள், 30 ஏப்ரல், 2018
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி..
கலசபாக்கம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால், அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எம்.எல்.ஏ. பாராட்டினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சி சின்னகல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன், ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குமாரி. இவர்களுக்கு பி.யுவராஜ் (வயது 22) என்ற மகனும் செண்பகவள்ளி என்ற மகளும் உள்ளனர்.
யுவராஜ் 1-ம் வகுப்பு முதல், 5-ம் வகுப்பு வரை சீட்டம்பட்டு அரசு ஆரம்ப பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆர்ப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 418 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வரை மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து விட்டு, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. படித்துவிட்டு, ஓராண்டாக ஐ.ஏ.எஸ்.தேர்வுக்குப் படித்து வந்தார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், பிறந்த கிராமத்துக்கும் பெருமைத் தேடி கொடுத்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், சிறுவயது முதலே படிப்பில் மிகவும் கவனம் செலுத்தி வந்தேன். அரசு பள்ளிக்கூடத்தில் படித்து, தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்துக்கொண்டு இருக்கும்போது, அங்குள்ள பேராசிரியர்கள் ஐ.ஏ.எஸ். படிக்க ஊக்கப்படுத்தினர்.
அதன்படி சகாயம், இறையன்பு போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முன்னுதாரணமாக மனதில் நினைத்து படித்து வந்தேன். முதலில் சென்னையில் உள்ள மனித நேய மையத்தில் 2 மாதம் படித்தேன். நான் பிளஸ்-2 படிக்கும்போது, அரசு சார்பில் வழங்கிய மடிக்கணினியை வைத்து இணையதள வசதியுடன் படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் மாநிலத்தில் முதல் இடம் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், 74-வது இடம் பெற்றுள்ளேன்.
நான் ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த பின்னர், என்னை பொதுப்பணி துறை செயலாளராக நியமித்தால், கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார நடவடிக்கை எடுப்பதுடன் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 510 குளங்கள் காணாமல்போய் உள்ளதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பேன். எனது சொந்த கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நூலகம் அமைத்து என்னை போன்ற மாணவர்கள் அதிக புத்தகங்களை படித்து அரசு தேர்வுகளில் வெற்றி பெற ஊக்குவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற யுவராஜை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், அவருடைய வீட்டுக்கு நேரடியாக சென்று இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார். குடிசை வீட்டில் வாழும் யுவராஜீக்கு உடனடியாக பசுமை வீடு கட்டித்தரப்படும். அவருக்கு, டெல்லி சென்று பயிற்சி பெற தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும், என்றார்.
சனி, 28 ஏப்ரல், 2018
சிவில் சர்வீசஸ் ரிசல்ட் : தமிழகத்தில் 70 பேர் தேர்ச்சி...
இந்திய ஆட்சி பணி, போலீஸ் பணி உட்பட, சிவில் சர்வீசஸ் பணிகளில், 980 காலியிடங்களுக்கு, 2017, ஜூன், 18ல், முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது.
இதில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 12 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்டவர்கள், பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். 2017, அக்., 28ல் பிரதான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி முதல், ஏப்., வரை நேர்முக தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகளை, யு.பி.எஸ்.சி., என்ற, அகில இந்திய குடிமை பணிகள் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில், ஐதராபாத் இளைஞர் துரிஷெட்டி அனுதீப், முதல் இடம் பெற்று உள்ளார்.தமிழகத்தில், மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற, 15 மாணவியர் உட்பட, 51 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், தர்மபுரி டாக்டர் கீர்த்தி வாசன், அகில இந்திய அளவில், 29ம் இடமும், சென்னை மதுபாலன், 71ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் பல மையங்களில் பயிற்சி பெற்ற பலரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து, 70க்கும் மேற்பட்டவர்கள், ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதன், 29 நவம்பர், 2017
தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!
இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.
தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்!
இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27) அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35ஆகவும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40 ஆகவும் உள்ளது. இதனை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (CISCE) மாற்றியுள்ளது. அதன்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 33 மதிப்பெண்களும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பிற்கான குறைந்த தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றம் வரும் 2018-19ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் நடத்திய பொதுத் தேர்வில், ஹச்சிங்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜில் பயின்ற புனேவைச் சேர்ந்த முஸ்கன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மாணவன் அஸ்வின் ராவ் ஆகியோர் 99.4% மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.
ஞாயிறு, 29 அக்டோபர், 2017
குடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழக அரசு உத்தரவுப்படி, மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) ஆகியன இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து, அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தனி பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி திட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அல்லது மீன் துறை அலுவலகங்களிலிருந்து நேரில் விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய சான்றாவணங்களை இணைத்து, தொடர்புடைய மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக அக். 23-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு நாகை மீன்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை 04365-253009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்...
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினார். போட்டித்தேர்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி'? என்பது குறித்து அனுபவம் மிகுந்தவர்களை அழைத்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சி.சைலேந்திரபாபு கலந்துகொண்டு போட்டி தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், மாணவர்களிடம் கேள்விகளை கேட்டு அவர்களுக்கு தான் எழுதிய நூல்களை பரிசாகவும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை பட்டப்படிப்பு முடித்த யார் வேண்டுமானாலும் எழுதலாம். கிரிக்கெட், சினிமா உள்ளிட்ட எந்த சிந்தனையும் இல்லாமல் 2 ஆண்டுகள்முழுமனதுடன் படிக்க வேண்டும். தேர்வில் 70 சதவீத கேள்விகள் தினசரி நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து தான் கேட்கப்படுகிறது.
எனவே தினசரி 2½ மணி நேரம் செய்தித்தாள் கண்டிப்பாக படிக்க வேண்டும். தமிழ் மொழியில் தேர்வு எழுதலாம் என்றாலும் ஆங்கில அறிவு என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. குறிப்பாக சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடபுத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும். நேர்மையான இளைஞர்களின் பங்களிப்பு அரசு பொறுப்புகளுக்கு தேவைப்படுவதால், அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகளை கூறிகொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நூலகர் காமாட்சி வரவேற்றார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலரும் கலந்து கொண்டனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
வெள்ளி, 28 ஜூலை, 2017
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
யு.பி.எஸ்.சி நடத்திய சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில் 13 ஆயிரத்து 350 பேர் தேர்வாகி உள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்காக முதல்நிலை தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைப்பெற்றது.
இந்நிலையில், யு.பி.எஸ்.சி நடத்திய சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில் 13 ஆயிரத்து 350 பேர் தேர்வாகி உள்ளனர்.
தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்கள் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
குடியுரிமை மற்றும் வனத்துறையில் உள்ள 980 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. அடுத்தக்கட்டமான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு அக்டோபர் 28-ம் தேதி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது
சனி, 8 ஜூலை, 2017
தமிழகத்தில் 4 ஐஏஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்
தமிழகத்தில் 4 ஐஏஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
*சுதா தேவி ஐஏஎஸ் - சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம்.
*ஜெயாசந்திர பானு ஐஏஎஸ் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக நியமனம்.
*நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசன்ட் திவ்யா ஐஏஎஸ் நியமனம்.
* அரியலூர் மாவட்ட ஆட்சியராக லஷ்மி ப்ரியா நியமனம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
ஞாயிறு, 4 ஜூன், 2017
அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்!
போளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி
பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்வு எழுதிய ஆயிரத்து 99 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்று இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
Thiruvannamalai government school student Vijayalakshmi cleared her IAS exams
இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று டிசம்பர் மாதம் மெயின் தேர்வை எழுதினர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமானவர் ஜெயகுமார். இவரின் மகள் விஜயலட்சுமியும் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடக்கக்கல்வியை அங்குள்ள நர்சரிப் பள்ளியொன்றில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக்கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயின்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அனைவரிடமும் இருந்து விஜயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
சனி, 3 ஜூன், 2017
அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்!
போளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி
பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்வு எழுதிய ஆயிரத்து 99 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்று இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
Thiruvannamalai government school student Vijayalakshmi cleared her IAS exams
இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று டிசம்பர் மாதம் மெயின் தேர்வை எழுதினர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமானவர் ஜெயகுமார். இவரின் மகள் விஜயலட்சுமியும் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடக்கக்கல்வியை அங்குள்ள நர்சரிப் பள்ளியொன்றில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக்கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயின்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அனைவரிடமும் இருந்து விஜயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
வியாழன், 1 ஜூன், 2017
யூ.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது; முதல் முயற்சியிலேயே அசத்திய தமிழக மாணவர்!!
யூ.பி.எஸ்.சி, 2016-ம் ஆண்டு குடிமைப் பணிகளில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் யூ.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1,099 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர்.நந்தினி இம்முறை முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முருகன் தேசியளவில் 21-வது இடத்திற்கு வந்துள்ளார். தனது முதல்முயற்சியிலேயே இந்தியளவில் 21-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார் பிரதாப் முருகன்.மேலும், 220 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். முதற்கட்டத் தேர்வுகள், பிரதான தேர்வுகள் மற்றும் நேர்காணல் என்று மூன்று கட்டங்களில் நடக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று பல்வேறு உயர்மட்ட குடிமைப் பணிகளில் பணியாற்றுவதற்காக வருடா வருடம் நடத்தப்படுகிறது
ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம் பிடித்த கோலார் மாணவிக்கு முதல்வர் பாராட்டு.....
பெங்களூரு: அகில இந்திய அளவிலான, 2016 யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம் கெம்பகோடியை சேர்ந்த கே.ஆர்.நந்தினி முதலிடம் பிடித்தார். இவரது தந்தை, ரமேஷ், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், தாய், விமலா, தனியார் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.
கோலார் சின்மயா பள்ளியில், பள்ளி படிப்பை முடித்த நந்தினி, மூடபிதரி ஆல்வாஸ் பி.யூ., கல்லூரியில் பி.யூ.சி., முடித்தார். இதன் பின், பெங்களூரின் எம்.எஸ்.ராமையா பொறியியல் கல்லுாரியில் பி.இ., சிவில் பொறியியல் படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றார்.
இதையடுத்து, கர்நாடகா அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. டில்லியில் உள்ள கர்நாடகா பவனில், பொறியாளராக தன் பணியை துவக்கினார்.
கடந்த முறை நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில், 642வது இடம் பிடித்து, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக தேர்வானார். இதன் மூலம், பரிதாபாத்தில் சுங்க அதிகாரியாக பயிற்சி பெற்று வந்தார்.
இருந்தும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவதையே, தன் குறிக்கோளாக கொண்டிருந்ததால், 2016ல் மீண்டும், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதினார்.
இதற்கான முடிவுகள், டில்லியில் நேற்று வெளியானது. அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, ஐ.ஏ.எஸ்., ஆகும் தனது கனவை நனவாக்கியுள்ள, நந்தினியை, முதல்வர் சித்தராமையா பாராட்டியுள்ளார். 17 ஆண்டுகளுக்கு பின், கர்நாடகாவை சேர்ந்தவர், முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாற்றப்பட்டவர்கள் விவரம்:
திருச்சி மாவட்ட கலெக்டராக கே.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்ட கலெக்டராககலெக்டராக கே.எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.நாகை மாவட்ட கலெக்டராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக சாந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்ட கலெக்டராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் வேளாண் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.மீன்வளத்துறைக்கு புதிய ஆணையராக தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.மீன் வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகர மேம்பாட்டுத் துறைக்கு மாற்றம்போக்குவரத்து துறை புதிய செயலராக டேவிடார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுஅனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை மாநகராட்சி ஆணையராக அனீஸ் சேகர் நியமனம்.
புதுடில்லி:'சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அனுமதி அட்டையில், தரமற்ற புகைப்படம் இருந்தால், ஆதார் அடையாள அட்டை போன்ற ஆதாரங்களை கொண்டு வர வேண்டும்' என, தேர்வர்களுக்கு, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
முதல்நிலை தேர்வு
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது. யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வுகள், ஜூன், 18ல் நடக்க உள்ளன.
இதில் பங்கேற்கும் தேர்வர்களின்அனுமதி அட் டையில், அவர்களின் புகைப்படங்கள் தெளி வின்றி இருந்தால், ஆதார், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை
மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங் கள் போன்றவற்றை எடுத்து வரும்படி, யு.பி.எஸ்.சி., கூறியுள்ளது. இந்த அடையாள
அட்டையுடன், உறுதிமொழிக் கடிதத்தையும், தேர் வர்கள் அளிக்க வேண்டும்என, கூறப்பட்டுள்ளது.
இணையதளம்
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அனுமதி அட்டை களை, யு.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில்
Advertisement
பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வின்போது, மொபைல் போன், கால்குலேட்டர், மின்னணு வியல் சாதனங்கள், புளுடூத் போன்ற, பிற தக வல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை, அனு மதிக்கப்பட மாட்டாது. விதிகளை மீறும் தேர் வர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்றும், யு.பி.எஸ்.சி., எச்சரித்து உள்ளது.
புதன், 24 மே, 2017
IAS., IPS., (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) பயிற்சிக்காக மாவட்ட நூலகங்களில் வல்லுநர்கள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
மாணவர்களுக்கு பயிற்சிகள்: மாணவர்கள் கல்வியில் சிறந்த பயிற்சிகளைப் பெற வசதியாக பள்ளி வேலை நாள்களில் மாலை நேரங்களில் ஒரு மணிநேரம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, ஒவ்வொரு பகுதிக்கும் (பிளாக்) ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு வாரத்துக்கு மூன்று நாள்கள் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்படும்.
சனிக்கிழமைகளில் மூன்று மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள், கல்வித் துறையில் மத்திய அரசு கொண்டு வரும் மாற்றங்களை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும். மத்திய அரசு நடத்தும் தேர்வுகளைப் பார்க்கும் போது மாணவர்களுக்குத் தயக்கம் ஏற்படுகிறது. இதைப் போக்கும் வகையில் பல்வேறு வழிகாட்டி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
செய்முறைக் கையேட்டை மாணவர்கள் தனியாரிடம் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையை மாற்றி அரசே செய்முறைக் கையேடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. வட மாவட்ட ஆசிரியர்கள்: வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் காலம் வரை அவர்கள் தாற்காலிகப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவர்.
மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக மூன்று மாதங்களுக்கு தாற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும். தாற்காலிகப் பணியிடங்களுக்கான ஊதியம் எவ்வளவு என்பதை அரசு பரிசீலித்து விரைவில் அறிவிக்கும். வரைவுப் பாடம் தொடர்பாக அனைவரின் கருத்துகளும் கோரப்படும். யாருடைய கருத்துகளாக இருந்தாலும் அதில் நியாயம் இருந்தால் பரிசீலிக்கப்படும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு: மத்திய அரசின் மாற்றங்களுக்கு ஏற்றாற்போன்று மாணவர்களை தமிழக அரசு தயார் செய்யும். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளை மாணவர்கள் திறம்பட எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 32 மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குரிய பாடங்களை கற்றுத் தர வல்லுநர்களை நியமிக்க உள்ளோம் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.