>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
தேர்தல் ஆணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் ஆணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை இணையதளம் வழியே தெரிந்துகொள்ளலாம் - மாநில தேர்தல் ஆணையம்!

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை இணையதளம் வழியே தெரிந்துகொள்ளலாம் - மாநில தேர்தல் ஆணையம்!



..........................................................................

செவ்வாய், 5 அக்டோபர், 2021

உள்ளாட்சித் தேர்தல் - நிரப்பப்பட்ட மாதிரி படிவங்கள்!!

 

Local Body Election Filled Forms

உள்ளாட்சித் தேர்தல் - நிரப்பப்பட்ட மாதிரி படிவங்கள்!!


*👉வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நாட்குறிப்பு(DIARY)*

*👉வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பும்,  பின்பும் அளிக்கவேண்டிய உறுதிமொழி*


*👉வாக்குச்சீட்டு கணக்குகள், தாள் முத்திரை கணக்கு*

*👉👉அனைத்தும் நிரப்பப்பட்ட  மாதிரி படிவங்கள் PDFல்







*******************************************

திங்கள், 4 அக்டோபர், 2021

திங்கள், 5 ஏப்ரல், 2021

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 05, 06.04.2021 தேதிகளில் என்னென்ன செய்ய வேண்டும்? - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 05, 06.04.2021 தேதிகளில் என்னென்ன செய்ய வேண்டும்? - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்....

 







வரும், 6ம் தேதி காலை, 5:30 மணிக்கு நடக்கும் ஓட்டுப்பதிவில், குறைந்தபட்சம், 50 ஓட்டுப்பதிவு செய்ய வேண்டுமென, ஓட்டுச்சாவடி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு தொகுதியும், ஓட்டுப்பதிவுக்கு தயாராகி வருகின்றன. வரும் 6ம் தேதி காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.



ஓட்டுச்சாவடி அலுவலர்கள், நாளை (5ம் தேதி) மதியம், 12:00 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு சென்றுவிட வேண்டும். மாவட்ட அளவில், 16 ஆயிரத்து, 045 பேர், ஓட்டுச்சாவடி தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.


ஓட்டுப்பதிவு நாளில், காலை, 5:00 மணிக்கே, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். காலை, 5:30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். குறைந்தபட்சம், இரண்டு வேட்பாளர் ஏஜன்ட் இருந்தாலே, மாதிரி ஓட்டுப்பதிவை துவக்கலாம்.



அதன் பின்னரும், வராதபட்சத்தில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் தலைமையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தலாம். ஒவ்வொரு சாவடியிலும், குறைந்தபட்சம், 50 ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும்.கட்டாயம், 'நோட்டா'வுக்கும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். மாதிரி ஓட்டுப்பதிவை முடித்து, 'க்ளோஸ்' பட்டனை அழுத்த வேண்டும். 



அதன்பின், 'கன்ட்ரோல் யூனிட்'டில் உள்ள, 'பேலட்' என்ற பட்டனை அழுத்தி, அதற்குபிறகு ஓட்டளிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.'ரிசல்ட்' பார்க்கணும்!இறுதியாக, 'ரிசல்ட்' பட்டனை அழுத்தி, மாதிரி ஓட்டுக்களாக பதிவான ஓட்டுக்களை சரிபார்க்க வேண்டும். பிறகு, 'கிளியர்' பட்டனை அழுத்தி, இயந்திரத்தை சரிசெய்துகொள்ளலாம். இறுதியாக, 'டோட்டல்' என்ற பட்டனை அழுத்தி, 'ஜீரோ' என்று இருப்பதை முகவர்களிடம் காட்ட வேண்டும்.



'விவி பேட்'டில் உள்ள ரசீதுகளை எடுத்து, மாதிரி ஓட்டுப்பதிவுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். ரசீதுகளின் பின், மாதிரி ஓட்டுப்பதிவு என எழுதி, கருப்புநிற உறையில் போட்டு, 'சீல்' வைத்து பத்திரமாக வைக்க வேண்டும்.



அதை, பிரத்யேக பெட்டியில் வைத்து, 'சீல்' வைத்து ஏஜன்டுகள் கையெழுத்து பெற்று பத்திரமாக வைக்க வேண்டும்.மாதிரி ஓட்டுப்பதிவு தொடர்பான இரண்டு அறிக்கை தயாரித்து, மண்டல தேர்தல் அலுவலர் வரும்போது, ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், 'கன்ட்ரோல் யூனிட்'டில் 'கிரீன்' பேப்பர் சீல்' மற்றும் 'ஸ்ட்ரிப் சீல்' வைத்து, ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்த வேண்டுமென, பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.



........................................................................

சனி, 3 ஏப்ரல், 2021

தேர்தலுக்காக. இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் பட்டியல்.. முழு விவரம்

 தேர்தலுக்காக. இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் பட்டியல்.. முழு விவரம்

......


 
 0

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், 1 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

அந்த சிறப்பு பேருந்துகள் விவரம்


மாதாவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

 

கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

 

ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

 

தாம்பரம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

 

கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக விக்கிரவாண்டி, பண்ருட்டி செல்லும் பேருந்துகள்

 

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் 

சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பர,ம் காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

 

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் 

திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள்

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள். 

 

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.

 




........................................................



தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாதிரி நிரப்பப்பட்ட PRESIDING OFFICER’S DIARYஎளிமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே பக்கத்தில் சேமித்து

 தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாதிரி நிரப்பப்பட்ட PRESIDING OFFICER’S DIARYஎளிமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே பக்கத்தில் சேமித்து  வைத்துக்கொள்ளுங்கள் தேர்தல் பணியை எளிமையாக்கும்:

 

தலைமை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மாதிரி நிரப்பப்பட்ட PRESIDING OFFICER’S DIARYஎளிமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே பக்கத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் தேர்தல் பணியை  எளிமையாக்கும்.

செவ்வாய், 30 மார்ச், 2021

வெள்ளி, 26 மார்ச், 2021

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளிகள்....

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளிகள்....

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளிகள்

ELECTION CLASS TRAINING VIDEOS


1) DUTY OF PRESIDING OFFICERS TAMIL



2 ) EVM Training - Part1 in Tamil



3 ) EVM Training - Part 2 in Tamil


4 ) Polling Officers Training



5) EVM -VVPAT



6) POLLING DAY PREPARATION




7) CLOSE OF POLL



Video courtesy : 
Election commission of India / YouTube
CEO tamilnadu / YouTube
Tme/ YouTube
VT WHAT I LEARN / YOUTUBE

CONTENT DISCLOSURE : மேற்காணும் காணொளிகள் EDUCATION PURPOSE க்காக பகிரப்பட்டுள்ளது. இதனை சரிபார்த்து நடைமுறைபடுத்தவும், உங்கள் பயிற்சியில் மற்றும் கட்டகத்தில் உள்ளதை பின்பற்றவும்

.....................................................

புதன், 24 மார்ச், 2021

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆப் அறிமுகம்....

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஆப் அறிமுகம்....

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது 

இதற்க்கான  அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை 'சி-விஜில்' செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது


கூகுள் ப்ளேஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் 'C Vigil' செயலியை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம்.

லிங்க்

https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil


இதில் செல்போன் எண்ணை பதிவு செய்தும், செய்யாமலும் பயன்படுத்த முடியும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா,

பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானம் விநியோகிப்பது,

திருமண மண்டபங்களில் விருந்து வைப்பது,

வாக்காளர்களை மிரட்டுவது,

வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது,

வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது,

பொய்யான செய்திகளைப் பரப்புவது,


போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் இந்த செயலி மூலம் இது தொடர்பாக புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து புகார்அளிக்கலாம்.

புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்

உங்கள் பகுதியில் தேர்தல் முறைகேடு நடந்தால் இந்த ஆப் மூலம் போட்டோ வீடியோ எடுத்து அனுப்பினா போதும்


.......................................

திங்கள், 22 மார்ச், 2021

தேர்தல் பணிக்கு அஞ்சும் அரசு ஊழியர்கள்... பிரச்னைகளும் பின்புலமும்

 தேர்தல் பணிக்கு அஞ்சும் அரசு ஊழியர்கள்... பிரச்னைகளும் பின்புலமும்!


தமிழகத்தில் இம்முறை தேர்தல் பணிகளில் ஈடுபட பெரும்பாலான அரசு ஊழியர்கள் தயங்குகின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்கள் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று புலம்பும் நிலை உள்ளது. 





ஒரு பள்ளி அல்லது ஒரு கல்லூரியை வாக்குப்பதிவு மையம் என்று அழைக்கிறார்கள். இதில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.



ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் பதவி நிலை ஒன்று, இரண்டு, மூன்று என மொத்தம் நான்கு பேர் தேர்தல் பணியில் இருப்பார்கள். ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள், அவர்களது சின்னங்கள் உள்ளிட்ட விவரங்கள் வாக்குச் சாவடிகளில் ஒட்டப்பட்டிருக்கும்.



வாக்குச் சாவடி மையங்களுக்கு வெளியே 100 மீட்டர் தொலைவில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து, அதற்கான பூத் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பெண் ஊழியர் ஒருவரை பணியில் ஈடுபடுத்தும்.



ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அச்சுப் பதிவு இயத்திரம் ஆகியன வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.


நிலை ஒன்றில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர் வாக்காளர்களின் வருகையை பதிவு செய்து, அவர்களுடைய அடையாள அட்டையை சரி பார்த்தப் பின்னர் வாக்களிக்க அனுமதிப்பார். நிலை இரண்டில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளரின் அடையாள அட்டை குறித்த விவரங்களை பதிவு செய்துகொண்டு, அதற்கான படிவத்தில் வாக்காளரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிப்பார்.




நிலை மூன்றில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளரின் கைவிரலில் மை வைத்துவிட்டு வாக்களிக்க அனுமதிப்பார். இவை அனைத்து பணிகளையும் செய்யக்கூடிய வகையில் முழுமையான விவரங்களை தெரிந்துவைத்துள்ள நபராக வாக்குப்பதிவு தலைமை அலுவலர் இருப்பார்.






இத்தகைய தேர்தல் பணிகளில் காலமுறை ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்களை தேர்தல் ஆணையம் முழுமையாக பயன்படுத்துகிறது. இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபட பெரும்பாலான அரசு ஊழியர்கள் தயங்குகின்றனர். அதிலும், குறிப்பாக பெண் ஊழியர்கள் இதில் இருந்து தப்பித்தால் போதும் என்று புலம்பும் நிலை உள்ளது.


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 என இருந்தது. அது, பின்னர் 59 என்றும், 60 என்றும் உயர்த்தப்பட்டுவிட்டது. அடுத்து வரும் அரசு ஓய்வு பெறும் வயதை 61 உயத்திவிடுமோ என அஞ்சுகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டாலும் அரசு அதனை தர மறுக்கிறது என வேதனைப்படுகின்றனர். 50 வயதை கடந்த பெரும்பாலான அரசு ஊழியர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு உள்ளனர்.



ஒரு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தொடர்ந்து 35 மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் தேர்தலுக்காக, 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேர்தல் பணியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.


தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தாங்கள் வசிக்கும் சட்டமன்ற தொகுதிக்கு வெளியே, வேறு ஒரு சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப் பெட்டிகளை முறையாக ஒப்படைத்துவிட்டு அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீடு திரும்ப வேண்டும்.



தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு உணவு, மருத்துவம், தூங்கும் வசதியுடன் கூடிய தங்குமிடம், சுத்தமான கழிப்பிடம், குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைப்பதில்லை. இவற்றுக்காக சில இடங்களில் அங்குள்ள அரசியல் கட்சியினரை சார்ந்து தேர்தல் பணிசெய்யவேண்டிய நிலை அரசு ஊழியர்களுக்கு எழுகிறது.


அதேபோல உடனடியாக வாக்குச் சாவடி மையங்களுக்கு செல்வதற்கும், நள்ளிரவு பணி முடித்து வீடு திரும்புவதற்கும், போதுமான போக்குவரத்து வசதி கிடைப்பதில்லை. இதில் பெண்களும், கர்ப்பிணிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.



'இவற்றை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளிலேயே தேர்தல் பணிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். பெண் ஊழியர்களையும், கர்பிணிகளையும் ஈடுபடுத்தக்கூடாது. வாக்குச் சாவடிக்கு வெளியே பெண் ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த கூடாது. பூத் சீட்டு கொடுப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்க காவல்துறையினரை நியமிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


......................................................................

அஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும் வழி முறைகள்

 *அஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும்

முறை*

CLIK HEARE

https://drive.google.com/file/d/1SWds0S7E1WtvfV7vaOBLAfqvO-SWRafD/view?usp=drivesdk

அஞ்சல் வாக்குச்சீட்டு அளிக்கும்

*முடிந்தவரை பகிருங்கள்*

ELECTION TRAINING VIDEOS

ELECTION TRAINING VIDEOS

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு காணொளிகள் - 

ELECTION CLASS TRAINING VIDEOS 

1.) DUTY OF PRESIDING OFFICERS TAMIL 


2.) EVM PART 1 

3.) EVM PART 2


4.) CONDUCTING MOCK POLL 


5.) EVM/VVPAT 

6.) POLLING DAY PREPARATION

7.) CLOSE OF POLL 

Video courtesy : 
Election commission of India / YouTube
CEO tamilnadu / YouTube
Tme/ YouTube
VT WHAT I LEARN / YOUTUBE
                

CONTENT DISCLOSURE : மேற்காணும் காணொளிகள் EDUCATION PURPOSE க்காக பகிரப்பட்டுள்ளது. இதனை சரிபார்த்து நடைமுறைபடுத்தவும், உங்கள் பயிற்சியில் மற்றும் கட்டகத்தில் உள்ளதை பின்பற்றவும்.


...............................

பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link

 Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link



உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணி ஆணையில் உள்ள சரியாக உள்ளதா? - சரிபார்த்துக் கொள்ளவும் - தவறாக இருந்தால் உங்கள் வாக்கு பதிவாகாத நிலை ஏற்படும்

* ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே  விண்ணப்பம் கொடுக்கவும்


*தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... .Voter ID யை  எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.



*அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்




*Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை



*1.Voter ID xerox

*2.election order xerox

*3.Part No and Serial No

*எடுத்து செல்க





*இந்த லிங்கில் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து உங்கள் பாகம் எண் வரிசை எண் அறிந்து கொள்ளலாம்.



Part no மற்றும் Serial no அறிந்துகொள்ள :


Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப  "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link









.................................................

உங்களுக்கு புடிச்ச வேட்பாளரை பற்றி தெரிந்துகொள்ள CLIK HEARE

 போர் அடிச்சா... 

CLIK HEARE

affidavit.eci.gov.in 

இந்த வெப்சைட் போங்க... உங்களுக்கு புடிச்ச வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவங்க வேட்புமனுவை டவுன்லோட் பண்ணி என்ஜாய் பண்ணுங்க... உங்க தொகுதி வேட்பாளரோட ஜாதகமே கிடைக்கும்.


.........................................

புதன், 17 மார்ச், 2021

நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில்

நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில்

 
நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில்
  • நீங்கள் தலைமை வாக்குச்சாவடி அலுவலரா ? அல்லது முதல் வாக்குச்சாவடி அலுவலரா ?மிக முக்கியமான இந்த 10 பக்கங்கள் உங்களுக்கு புதிய வடிவில் CLICK HEER

செவ்வாய், 16 மார்ச், 2021

ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி?

ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி?








ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி