மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ், அகவிலைப் படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் அவர்களுக்கான அகவிலைப் படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஒரு அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது குடும்பத்தின் அல்லது உறவினர்கள் ஓய்வூதியத்தைப் பெற உதவும். புதிய விதியின் கீழ், ஒரு மத்திய அரசு ஊழியர் இறந்த பிறகு, அவருடைய குடும்பம் மற்றும் அவரைச் சார்ந்திருப்பவர்கள் 7 ஆண்டுகள் சேவையில் முடிவதற்குள் ஊழியர் இறந்தால் ஓய்வூதியப் பணமாக 50 சதவிகிதத்தைப் பெறுவார்கள்.
மேலும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கு கட்டாய 7 வருட சேவை என்ற நிபந்தனையை அரசு நீக்கியுள்ளது. இப்போது ஒரு ஊழியர் 7 வருட சேவை முடிவதற்குள் இறந்துவிட்டால், ஓய்வூதியப் பணத்தில் 50 சதவிகிதம் குடும்பத்திற்கு வழங்கப்படும். முன்னதாக பல வழக்குகளில், இந்த நிபந்தனை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதிய பலனை பெற முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது..
.........................................................