>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
BEST TEACHER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BEST TEACHER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 டிசம்பர், 2020

மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.



மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த, வர்க்கி அறக்கட்டளை என்ற அமைப்பு, சர்வதேச அளவில், கல்விப் பணியில் சிறப்பான சேவை செய்து வரும் ஆசிரியரை தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் கவுரவித்து வருகிறது. இந்த அறக்கட்டளையை, இந்தியாவை சேர்ந்த கல்வியாளரும், சமூக சேவருமான சன்னி வர்க்கி என்பவர், 2014ல், லண்டனில் நிறுவினார். இதற்கு, யுனெஸ்கோ எனப்படும், ஐ.நா., கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு, பொருளுதவி அளித்து வருகிறது.

சர்வதேச அளவில், நடப்பு ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியர் விருதுக்கு, 140 நாடுகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். இதில் இருந்து, 10 ஆசிரியர்கள், இறுதி சுற்றுக்கு தேர்வாகினர். அதில், மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில், பரித்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியரான, ரஞ்சித்சின்ஹ் திசேல், இந்த ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியராக நேற்று அறிவிக்கப்பட்டார். இவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையில், 50 சதவீதத்தை, இறுதி சுற்றுக்கு தேர்வான, மீதமுள்ள, ஒன்பது ஆசிரியர்களின் கல்வி பணிக்காக பகிர்ந்தளிக்க போவதாக, ரஞ்சித் அறிவித்தார்.

பரித்வாடி கிராமத்தில், மாட்டு கொட்டகையுடன் சேர்ந்தாற்போல் பாழடைந்து கிடந்த ஆரம்ப பள்ளியில், 2009ம் ஆண்டு, ரஞ்சித்சின்ஹ் பணியில் சேர்ந்தார். அங்கு, கல்வி கற்பிப்பதில் பல சீர்திருத்தங்களை உருவாக்கினார். பாடங்களை தாய்மொழியில் மொழிபெயர்த்தார். பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவித்தார். இதையடுத்து, சிறுமியர் திருமணம் அக்கிராமத்தில், 100 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தகங்களில், க்யூ.ஆர்., கோடு தொழில்நுட்பத்தை புகுத்தி, மாணவர்கள், 'ஆடியோ, வீடியோ' வாயிலாக பாடங்களை படிக்கும் முறையினை அறிமுகம் செய்தார். பிரச்னைகளுக்கு உரிய இரு நாடுகளின் மாணவர்களை, 'ஆன்லைன்' வாயிலாக உரையாட வைத்து, அவர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் செய்து வருகிறார். இதில், இந்தியா - பாகிஸ்தான், பாலஸ்தீனம் - இஸ்ரேல், ஈராக் - ஈரான், அமெரிக்கா - வட கொரியா நாடுகளைச் சேர்ந்த, 19 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்..🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹



ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

NATIONAL AWARDS TO TEACHERS..-2020 - List of selected teachers for National Awards to Teachers, 2020 - PDF தேசிய நல்லாசிரியர் விருது தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல்- அறிவிப்பு



NATIONAL AWARDS TO TEACHERS..-2020
 - List of selected teachers for National Awards to Teachers, 2020 - PDF


தேசிய நல்லாசிரியர் விருது தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல்- அறிவிப்பு 
CLICK HERE TO DOWNLOAD

.....................................

புதன், 5 ஆகஸ்ட், 2020

முதல்-அமைச்சர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்....





பள்ளி ஆசிரியர் ஒரு பழைய உலக அழகை தொழிலுக்குள் கொண்டுவருவதோடு, மாணவர்களை மனதில் பதிய வைக்கும் நல்லறிவை கொரோனா காலத்திலும் பராமரிக்க உதவுகிறார். அவர் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறார்.

நாங்கள் பேசும் இந்த 49 வயதான ஆசிரியர் மஹாலட்சுமி, கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுவீரபட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கற்பிக்கிறார். அவர் சுமார் 25 ஆண்டுகளாக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 700’க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.

மகாலட்சுமி ஒவ்வொரு நாளும் தனது காலை வேலைகளை முடித்தவுடன், அவர் தனது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தொடங்குகிறார், அவர்களுடன் சந்திப்புகளைத் திட்டமிடுகிறார். தொற்றுநோய்களின் போது தனது ஒவ்வொரு மாணவர்களையும் பார்வையிடும் நடைமுறை இப்போது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது. இது அவருக்கு தற்போது தினசரி வழக்கமாகிவிட்டது.



தனது மாணவர்களை உந்துதலாக வைத்திருக்கவும், அவர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் இதை செய்வதாகக் கூறியுள்ளார். மஹாலட்சுமி மேலும் கூறுகையில், “கொரோனா ஊரடங்கின் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் கல்வி ரீதியாக நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், அவர்களை சந்திக்க முடிவு செய்தேன். பல மாணவர்கள் பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியில் இருந்து வருவதால், அவர்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்களின் மன ஆரோக்கியம் குறித்து நான் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்தேன்.” என அவர் மேலும் கூறினார்.



அவர் பயப்பட வேண்டாம் என்று பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்துகிறார். மேலும் நிலைமைகள் இயல்பு நிலைக்கு வந்தவுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார். நெருக்கடியை சமாளிக்க அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க மகாலட்சுமி இதைச் செய்வதாகக் கூறுகிறார்.

“பள்ளியில் ஏராளமான மணிநேரங்களை ஒன்றாகக் கழித்ததால், இந்த குழந்தைகள் படிப்படியாக என்னுடைய குழந்தைகளைப் போலவே மாறிவிட்டார்கள். நேரத்தை எவ்வாறு கடத்துவது என்பது குறித்து அவர்களைப் படித்து விரிவுரை செய்ய நான் அவர்களிடம் கேட்கவில்லை. அவ்வாறு நான் செய்தால், அவர்கள் என்னைச் சந்திக்க விரும்ப மாட்டார்கள்.





பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கவே அவர்களின் வீடுகளுக்குச் செல்கிறேன். இது எனது மாணவர்களுக்கும் எனக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும்.” என்று அவர் மேலும் கூறினார்.

அரசு பள்ளியில் பணிபுரியும் தமிழாசிரியை மஹாலட்சுமி தனது மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ஊக்கமளிப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமின்றி கடலூர் மாவட்ட மக்களிடையேயும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.


...................................................................

சனி, 29 பிப்ரவரி, 2020

சாகித்திய அகடமி விருது பெற்ற ஆசிரியை...



Thursday, February 27, 2020




சாகித்திய அகடமி விருது பெற்ற ஆசிரியை

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது இந்தியாவின்i முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நாவல் மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும். பள்ளி ஆசிரியை சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ஜெயஸ்ரீ திருவண்ணாமலையில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. இவரும் எழுத்தாளராக, மொழிப்பெயர்ப்பாளராக உள்ளார். இதுவரை நான்கு பெண் படைப்பாளிகள் தான் தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்கள். அதில் ஜெயஸ்ரீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி பாராட்டு இதனையடுத்து கே.வி.ஜெயஸ்ரீக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த நாவல், மலையாளத்தில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம் பெற்றிருக்கும் இந்த மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்த்திருப்பது பெருமைக்குரியது. சாகித்ய அகாடமி விருது பெற உள்ள அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்


................

சாகித்திய அகடமி விருது பெற்ற ஆசிரியை


Thursday, February 27, 2020




சாகித்திய அகடமி விருது பெற்ற ஆசிரியை

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது இந்தியாவின்i முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நாவல் மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும். பள்ளி ஆசிரியை சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ஜெயஸ்ரீ திருவண்ணாமலையில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. இவரும் எழுத்தாளராக, மொழிப்பெயர்ப்பாளராக உள்ளார். இதுவரை நான்கு பெண் படைப்பாளிகள் தான் தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்கள். அதில் ஜெயஸ்ரீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி பாராட்டு இதனையடுத்து கே.வி.ஜெயஸ்ரீக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த நாவல், மலையாளத்தில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம் பெற்றிருக்கும் இந்த மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்த்திருப்பது பெருமைக்குரியது. சாகித்ய அகாடமி விருது பெற உள்ள அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்


......................................

வியாழன், 27 பிப்ரவரி, 2020

சாகித்திய அகடமி விருது பெற்ற ஆசிரியை


Thursday, February 27, 2020




சாகித்திய அகடமி விருது பெற்ற ஆசிரியை

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது இந்தியாவின்i முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நாவல் மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும். பள்ளி ஆசிரியை சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ஜெயஸ்ரீ திருவண்ணாமலையில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார்.

ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. இவரும் எழுத்தாளராக, மொழிப்பெயர்ப்பாளராக உள்ளார். இதுவரை நான்கு பெண் படைப்பாளிகள் தான் தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்கள். அதில் ஜெயஸ்ரீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி பாராட்டு இதனையடுத்து கே.வி.ஜெயஸ்ரீக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த நாவல், மலையாளத்தில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம் பெற்றிருக்கும் இந்த மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்த்திருப்பது பெருமைக்குரியது. சாகித்ய அகாடமி விருது பெற உள்ள அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்


......................................

புதன், 4 டிசம்பர், 2019

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது விண்ணப்பம்

வெள்ளி, 15 நவம்பர், 2019

முகநூல் தோழர்கள் மூலம் ரூ 1,50,000 நிதி பெற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சீருடை பெற்றுத்தந்த ஆசிரியை

.

Friday, November 15, 2019












அன்பு முகநூல் தோழர்களே........உங்களுக்கு
நன்றி மட்டும் சொல்லி விட முடியுமா?இல்லை..இல்லவே இல்லை.. முடியவே முடியாது.... எவ்வளவு பெரிய உதவிகளையும் செய்த  அடுத்த கணமே மறந்து விடும் இக்காலத்தில் என்றும் தங்களை மறவேன்........
என்றும் பள்ளி குழந்தைகளின் வாழ்த்துகள் மகிழ்ச்சியும்  தங்களை வளம் பெறச்செய்யும்....
நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகள் என் மனதில்...
குழந்தைகளின் மழலையை ரசிக்க வேண்டும்...
அவர்கள் மகிழ்வுடன் பள்ளிக்கு வருதல் வேண்டும்..
அரசுப்பள்ளி குழந்தைகளின் அறிவுத்திறனை உலகறியச்செய்ய வேண்டும்...
சுட்டி டிவியில் வரும் டோரா வின் கண்கள் அதில் தெரியும் சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் நேரில் பார்த்து ரசிக்க வேண்டும்....
குழந்தைகளுக்கு மெட்ரிக் பள்ளிகளைப்போல வாரம் ஒரு நாள் சிறப்பு சீருடை போட்டால் எப்படி இருக்கும் என்று சின்ன ஆசைபட்டேன்...செப்டம்பர் மாதம் எண்ணி 15 நாளில் ரூ  1,50,000 அனுப்பி என்னை மகிழ்ச்சி கடலில் திளைக்கச்செய்து விட்டீர்கள்.....407 குழந்தைகள் இன்று மகிழ்வுடன் அணிந்து வருவதைக்காண கண் கோடி வேண்டும்......சிறப்பு ஆடை என்றவுடன் மறுப்பேதும் சொல்லாமல் ஒவ்வொருவரும் 5, 10, 100, என்ற எண்ணிக்கையில் பெற்றுத்தந்தமைக்கு இருகரம் கூப்பி என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்....என்றும் என் பள்ளியின் வளர்ச்சியிலும் குழந்தைகளின் மகிழ்விலும் உங்களின் பங்கு உண்டு...என்னது முக நூலா?நண்பர்களாக?  என்று வியப்புடன் கேட்கும் போது உங்களிடம் எத்தனை அன்பினை பெற்று உள்ளேன் என்பது அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது...
மலைகளைப் பெயர்க்கும் நம்பிக்கை ஒன்று இருக்குமானால் அது சுய சக்தியில்  கொள்ளும் நம்பிக்கை தான்-
 என்பதற்கேற்ப தன்னம்பிக்கையில் நான் என்றும்  தோற்றது இல்லை...
விதியின் இலக்குக்குப் பலியாவதற்குப் பதிலாக விதியை மாற்றி அமைத்து நாம் அதனை நிர்ணயிக்கவும் முடியும்.என்பதை என் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன்..
தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பது...
தொல்லைத்தரும் தொலைக்காட்சி பார்ப்பது இல்லை...இனம் மொழி மதம் எல்லாம் கடந்து முகநூல்.....மட்டுமே..
கேட்கத்தயங்கிய நிமிடங்கள்....
கேட்டவுடன் திரும்பி வந்த பதில்கள்...யாரும் இல்லை என்ற வார்த்தை சொல்லவில்லை..அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இடைமலைப்பட்டிபுதூர் மக்களின் சார்பிலும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் சார்பில் நன்றி..நன்றி..நன்றி

 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர் பள்ளி ஆசிரியர் திருமதி லதா பாலாஜி

வெள்ளி, 12 ஜூலை, 2019

ஆசிரியருக்கு ஓர் இலக்கணம் ஜோதிமணி

Friday, July 12, 2019


ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர்
15 ஆண்டுகள் பணிபுரிந்து,
மாறுதலில் செல்லும்பொழுது
பள்ளி மாணவர்கள் அழுது,
சக ஆசிரியர்கள் அழுது,
பெற்றோர்கள் அழுது,
ஊரே ஒன்று சேர்ந்து அழும்பொழுது,
அவரும் அழுது

யாரும் அழாதீர்கள்.நான் இன்னும் ஒரு மாங்குடியை உருவாக்கப்போகிறேன்
எனச் சொல்லி,
தான் பணிபுரிந்த பள்ளியில் வாசலில் விழுந்து கும்பிட்டு விடைபெற்ற ஆசிரியரின் கால்களில்
சக ஆசிரியர் விழுந்து கும்பிட்டு,
ஆசி வாங்கி் வழி அனுப்ப முடியும் என்றால் அவரது பெயர்தான்  ஜோதிமணி...


புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி ஒன்றியம்
மாங்குடி ஊ.ஒ.ந.பள்ளியில்


அரசு கொண்டுவருதற்கு முன்பே
பல திட்டங்களை தன் பள்ளியில்
கொண்டுவந்து அழகு பார்த்தவர்..
கல்வியாளர்கள் சங்கமம் சார்பில்
தமிழக அளவில் சிறந்த பள்ளி என
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே
இப்பள்ளிக்கு விருது கொடுத்துப் பாராட்டி இருக்கின்றோம் என்னும் பெருமையோடு இப்பதிவைப் பகிர்கின்றேன்..

தலைமை ஆசிரியர் திரு. ஜோதிமணி அவர்களுக்கு கல்விச்சிகரத்தின் வாழ்த்துக்கள்


 

சனி, 8 ஜூன், 2019

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்தம்பதிகள் தம் மகனை அரசுப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தார்கள்

🙏💐💐💐💐

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் மேல்செவலாம்பாடி ஊ.ஒ.தொ.பள்ளி தலைமை யாசிரியர் மற்றும் தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு. இரா.ஜெய்சங்கர் , மற்றும் அவலூர்பேட்டை ஊ.ஒ.தொ.பள்ளிஆண்கள்  பள்ளியில்பணியாற்றும்  ஆசிரியர் திருமதி. ப.ஷீலா அவர்கள் தங்கள்  தவப்புதல்வன் செல்வ மகனை

💐 *செல்வன் ஜெ. விஜய்கிருஷ்ணா*  💐 அவர்களை

குந்தலம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு சேர்த்துள்ளார்கள்  என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்றோம்...  அவர்களை வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார் கள்

    வட்டாரத்தில் முன்மாதிரி ஆகவும் வழிகாட்டியாகவும் திகழ்வும் தம்பதியர்களை மேல்மலையனூர் வட்டார தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி. அன்புடன் பாராட்டி மகிழ்கின்றது.
......



சனி, 27 ஏப்ரல், 2019

பள்ளிக் கல்வித்துறையின் "கல்வி தொலைக்காட்சி"-யில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்- Registration link

தமிழ்நாடு அரசு ...பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சியில்  1 முதல் 12 ஆம் வகுப்பு வரை(குறிப்பாக 10,12) அனைத்துப்பாடங்களையும் சிறப்பாக, புதுமையாக வீடியாவில் கற்பிக்கக் கூடிய ஆர்வமும் திறமையும் உடைய தன்னார்வமிக்க ஆசிரியர்களைக் கொண்டு சென்னை கல்வி தொலைக்காட்சி படப்பதிவு மையத்தில்,பதிவு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் பாடத்தோடு இணைத்து ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்

திங்கள், 15 ஏப்ரல், 2019

கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாதனை.


வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த கோக்கலூர் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வேறு அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பி பரிசு பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடையே மகிழ்வித்து மகிழ் சென்னை சிறுதுளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த ஆசிரியர். ஜெயா வெங்கட் நினைவாகவும், தஞ்சாவூர் கனவு மெய்ப்பட வேண்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான குழந்தைசாமி, சிவகுருநாதன், தரணிபாய், ஆனந்த் ஆகியோர் ஏற்பாடுகளையும்,நமது முடிவுகளை இரவு பகலும் கண் விழித்து சேகரித்து உதவிய அன்புத்தம்பி கனவு பள்ளி பிரதீப் ஆகியோர் இடைவிடாது ஏற்பாடுகளை
 செய்து அரசு பள்ளிகளுக்கு இடையே அஞ்சல் துறை அஞ்சல் அட்டையை மூலம் அரசு பள்ளிகளுக்கு இடையே வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்ளச் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அஞ்சல் அட்டையில் படம் வரைந்து இதர பள்ளிகளுக்கு அனுப்பி இருந்தனர்.

இதில் கோக்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் பள்ளி அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் அஜய்  முதல் பரிசையும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஆஷிகா இரண்டாம் பரிசும், நான்காம் வகுப்பு மாணவன் கிரண்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர். சென்னை சிறு துளி மற்றும் கனவு மெய்ப்பட வேண்டும் குழு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழ்,பரிசு மற்றும் பதக்கத்தினை மாணவர்களுக்கு வழிபாட்டு கூட்டத்தில் வழங்கப்பட்டது.

................................................................................................................................................................................

ஞாயிறு, 17 மார்ச், 2019

கண்தான விழிப்புணர்வில் அசத்தும் அரசுப்பள்ளி




மேலூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு மேற்கொண்டதன் பயனாக இதுவரை 33 பேர் கண்தானம் செய்து அசத்தியுள்ளனர்.

மேலூர் அருகே வடக்கு வலையபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இங்கு பயிலும் மாணவர்கள் நீர் மேலாண்மை, மரக்கன்று நடுதல், கருவேல மரங்களை அகற்றுதல், நூலக பயன்பாடு என சமூகம் சார்ந்த பல செயல்பாடுகளில் மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.மேலும் மாணவர்கள் கடந்த 2 ஆண்டாக மேற்கொண்ட கண்தான விழிப்புணர்வால் இக்கிராமத்தில் மட்டும்33 பேர் கண்தானம் செய்து அசத்தியுள்ளனர். இதற்குஆசிரியர் சதீஷ்குமார் வழிகாட்டியாக இருந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முதலில் கிராமமக்களின் கண்தான விழிப்புணர்வு பற்றி கூறியபோது யாருமே ஆர்வம் காட்டவில்லை. மாறாக கண்தானம் என்றால் கண்ணை பிடுங்கி எடுப்பார்கள் என அச்சப்பட்டனர்.

அதன்பின் தான் கண் இல்லாதவர்களின் வாழ்க்கை முறை, அவர்களுக்கு கண் கிடைத்தால் வாழ்க்கை முறை மாற்றம், மகிழ்ச்சி குறித்து விவரிக்கப்பட்டது.இதற்கு முன்மாதிரியாக இப்பள்ளியில் பணியாற்றும்7 ஆசிரியர்கள் தங்கள் கண்களை தானம் செய்தனர்.அதன்பின் இவ்வூரை சேர்ந்த வளர்மதி என்ற பெண் முதன்முதலில் தனது கண்ணை தானம் செய்ய முன் வந்தார்.தொடர்ந்து மாணவர்களின் கண்தான விழிப்புணர்வு கிராமத்தில் பரவ துவங்கி இதுவரை 33 பேர் கண்தானம் தந்துள்ளனர்.

கல்வி மட்டுமல்லாது சமூக செயல்பாடுகளுக்கும் முழு ஆதரவு அளித்து எங்களை ஊக்கப்படுத்தி வரும் தலைமையாசிரியை சத்தியபாமாவுக்கே இந்த பெருமை சேரும்’ என்றார்.அரசு பள்ளி என்றால் பெயருக்கு பாடங்கள் நடத்தி, மாணவர்களை தேர்வு எழுத வைக்கும் மத்தியில் இப்பள்ளி முன்மாதிரியாக செயல்படுவதை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.

புதன், 12 டிசம்பர், 2018

டில்லியில் நடைபெறும் சிறந்த ஆசிரியர்களுக்கான "IDEAL விருதுக்கு" வேலூர் மாவட்டம் ராஜாவூர் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி இந்திரா அவர்கள் தேர்வு!!

      National Ideal Teacher Award

KALVICIKARAM .IN  சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!







புதன், 5 செப்டம்பர், 2018

விழுப்புரம் மாவட்டம் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்கள்



செவ்வாய், 4 செப்டம்பர், 2018

புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2018 - தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு!


சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 9 பிரிவுகளில் " புதிய தலைமுறை ஆசிரியர் விருது.



1) புதுமை - ஒத்தக்கடை அரசு பள்ளி தலைமையாசிரியர் திரு. தென்னவன்.

2) கிராம சேவை - சஞ்சனூர் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் - திரு.சி.வீரமணி.

3) பழங்குடி மேம்பாடு - பொக்காபுரம் - தலைமையாசிரியர் - திரு. கண்ணதாசன்.

4) பெண்கல்வி - காலச்சேரி - நடுநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. ஆனந்த்

5) செயல் ஊக்கம் - பீமநகர் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் திருமதி. ராஜ ராஜேஸ்வரி

6) மொழித்திறன் - பெண்ணாடம் ஆசிரியர் திருமதி. கீதா

7) அறிவியல் விழிப்புணர்வு - வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் திரு. தனபால்

8) படைப்பாற்றல் - மணப்பாறை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் - திரு. து.கேசவன்

9) சிறப்பு குழந்தைகள் - Little Hearts Home - ஆசிரியர் திருமதி. ரீட்டா ஐயப்பன்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விருது!" தேசிய நல்லாசிரியர் ஸதி டீச்சர்


மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின்
பிறந்த நாளான செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதையொட்டி, மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து கெளரவப்படுத்தும். இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராடி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர். வாழ்த்துடன் உரையாடினோம்.


``என் பூர்வீகம், கோத்தனூர். அப்பா கல்வித்துறையில் வேலை பார்த்தார். நானும் என் அக்காவும் கல்வித்துறையிலேயே பயணிக்க ஆசைப்பட்டார். 1995-ம் ஆண்டு, டிஆர்பி (ஆசிரியர் தகுதித்தேர்வு) எழுதி, ஆசிரியராகத் தேர்வானேன். சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தின் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியைப் பணியைத் தொடங்கினேன். பல பள்ளிகளுக்கு இடமாறுதலாகி, 2009-ம் ஆண்டில், தலைமை ஆசிரியை ஆனேன். இந்தப் பள்ளிக்கு வந்தது 2012-ம் ஆண்டு.


நான் வொர்க் பண்ணின எல்லாப் பள்ளிகளிலுமே, மாணவர்கள் நல்ல சுற்றுப்புறச் சூழலில் படிக்கணும். அவர்களின் கல்வித்தரம் உயரணும் என்பதில் கவனமா இருப்பேன். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பலரின் உதவிகளுடன் மேம்படுத்தியிருக்கிறேன். இந்தப் பள்ளிக்கு வந்தபோது, வகுப்பறையும் கட்டடங்களும் பழுதாகி இருந்தன. கழிவறை வசதி சரியில்லை. இவற்றைச் சரிசெய்ய களம் இறங்கினேன். மாணவர்களுக்குக் கழிவறை வசதியை ஏற்படுத்த, எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் நிதி போதுமானதா இல்லை. எங்க கிராமத்தில் உள்ள எல்.என்.டி கம்பெனி நிர்வாகத்திடம் உதவி கேட்டேன்.
அவங்க கொடுத்த 5 லட்சம் நிதியுதவியால், தரமான கழிவறை வசதியை உருவாக்கினோம். அந்த முதல் வெற்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அப்போது, 146 மாணவர்கள் இருந்தாங்க. மாணவர்கள் இடைநிற்றலும் அதிகமா இருந்துச்சு. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் எங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது சவாலாக இருந்துச்சு. இதை எல்லாம் மாற்றி, தனியார் பள்ளிக்கு இணையா கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம்'' எனப் பெருமிதத்துடன் தொடர்கிறார் ஸதி.




``நிறைய நிறுவனங்களின் உதவியை நாடினோம். எல்.என்.டி நிறுவனம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுக் கட்டடங்களைக் கட்டிக்கொடுத்தாங்க. டேப்லெட் பயன்பாட்டுடன், ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகளைச் செய்துகொடுத்திருக்காங்க. `மெஷர் கட்டிங்' என்ற நிறுவனம், சுகாதாரமான குடிநீர் வசதி, கணினி பயிற்சி வசதிகளைச் செய்துகொடுத்தாங்க. வி.கே.சி நிறுவனத்தினர்,
ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் எல்லோருக்கும் புது ஷூ, பெல்ட், டை, ஐடி கார்டு கொடுத்து உதவுறாங்க. ஃபர்னிச்சர் உதவிகளையும் செய்றாங்க. இவர்களின் உதவியால், சில ஆண்டுகளிலேயே எங்க பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாச்சு. இப்போ 270 மாணவர்கள் படிக்கிறாங்க. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்கள் சிறப்பா இருக்காங்க. 42 வட மாநில மாணவர்களின் தமிழ்ப் பேச்சும் இனிமையா இருக்கும். யோகா, கராத்தே, இசைப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி உட்பட பல பயிற்சிகள் கொடுக்கிறோம். பல போட்டிகள்லயும் மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறாங்க" என்கிறார்.
பள்ளி மாணவர்களால் சிறப்பாக நடைபெற்றுவரும் `குட்டி கமாண்டோ' திட்டம் பற்றிக் குறிப்பிடும் ஸதி, ``எங்க கிராமத்தில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுச்சு. பல குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராம இருந்தாங்க. இதைத் தடுக்க, `குட்டி கமாண்டோ' என்ற படையை உருவாக்கினேன். அந்தப் படையில் 10 மாணவர்கள் வீரர்களாக இருக்காங்க. அவங்க தினமும் காலையில 5.30 மணிக்கும், மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்குள் விசிலடித்தபடி வலம்வருவாங்க. அதனால்,
பலரும் பொதுவெளியில் மலம் கழிப்பதில்லை. மீறிக் கழிப்பவர்களிடம், `பொதுக்கழிப்பிட வசதி அல்லது தனிக்கழிப்பிட வசதியைப் பயன்படுத்துங்க. இல்லையெனில் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்'னு சொல்வாங்க. இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெற்றிருக்கு. அடுத்து, பிளாஸ்டிக் பை பயன்பாடில்லா கிராமம் என்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்" எனப் புன்னகைக்கிறார் ஸதி.

இவர், கடந்த ஆண்டு மாநில அளவிலான `சிறந்த நல்லாசிரியர் விருது' வென்றது குறிப்பிடத்தக்கது. ``தேசிய நல்லாசிரியர் விருது செய்தி கிடைச்சதும், நான் செய்துவரும் அறப்பணியை ஊக்கப்படுத்துவதாகவும், மற்ற ஆசிரியர்களுக்குத் தூண்டுகோலாகவும் இந்த விருது அமையும்னு நினைச்சேன். விருது செய்தியைக் கேள்விப்பட்டு, பல குழந்தைகள் எனக்கு போனில் வாழ்த்துச் சொன்னாங்க. எதிர்பாராத அவர்களின் வாழ்த்துகளால் நெகிழ்ந்துபோனேன். இன்னைக்குப் பள்ளி தொடங்கினதும், பிரேயர்ல விருது செய்தியைக் குழந்தைகள் எல்லோரிடமும் சொன்னேன். என்னைக் கட்டியணைத்து வாழ்த்துச் சொன்னாங்க. இதுவே சிறந்த விருதா நினைக்கிறேன். சீக்கிரமே குழந்தைகளுக்குப் பிரியாணி விருந்து கொடுத்துக் கொண்டாட ஆசைபடறேன்" என்கிறார் ஆசிரியை ஸதி.

வெள்ளி, 6 ஜூலை, 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டில் பாடங்கள்; கற்பிக்கும் ஆசிரியர் பயிற்றுனர்



ராமநாதபுரம் : அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வாங்கி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கிறார். 

ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் உலகராஜ். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனரான இவர், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற இசை மூலம் மாணவர்களை கவரும் வகையில் ஏற்கனவே பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். 

தற்போது, தனியார் பள்ளிகளில் பயன்படுத்துவது போன்ற ஸ்மார்ட் போர்டு கல்வியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி வருகிறார். 'இன்ராக்டிவ்' என்ற கருவி மூலம், புரஜெக்டர் உதவியுடன் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் நடத்தி வருகிறார். இதில், பென் டிரைவ் பயன்படுத்தியும் பாடங்கள் நடத்தலாம்.

இதே முறையில் வேலுார் மாவட்டம் வாணியம்பாடியில் ஆசிரியர் அருண்குமார் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். இதை அறிந்த உலகராஜ் அவரிடம் சென்று இதனை கற்று வந்துள்ளார். இதற்காக ரூ.80 ஆயிரம் சொந்த செலவில், புரஜெக்டர், லேப்டாப் , இன்ட்ராக்டிவ் கருவி, ஸ்பீக்கர், ஸ்கிரீன் உள்ளிட்ட உபகரணங்கள் என வாங்கியுள்ளார். 

ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கும் சென்று இந்த முறையில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று ஸ்மார்ட் போர்டில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். லேசர் பேனாவை மாணவர் கையில் கொடுத்து ஸ்கிரீனில் எழுதப்படும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுத வேண்டும். அந்த மாணவர் சரியாக எழுதும் வரை கற்றுக்கொடுக்கப்படுகிறது.


இதனால், கூடுதல் பயிற்சி கிடைக்கும். சரியாக எழுதியதும் வாழ்த்துக்கள், சிறப்பு, நன்று, என அறிவிப்பு வருவதுடன், மத்தாப்பு கொளுத்துவது போல், கைதட்டல், கை கொடுப்பது, டாடா காட்டுவது போல் திரையில் வரும். இதை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்கள் எளிதல் உற்சாகத்துடனும், கற்றலில் ஈடுபாட்டுடன் கல்வி கற்க முடிகிறது, என்றார் உலகராஜ்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்! ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!


கோவை:மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது.

விசாரித்தபோது, உக்கடம், மீன் மார்க்கெட் பின்புறமுள்ள, ஒக்கிலியர்பாளையம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்பது தெரியவந்தது.பள்ளி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத சூழலில், மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் குவிகின்றனர். தனியார் பள்ளிக்கும், இப்பள்ளிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சீருடை மட்டும் தான் என்கின்றனர், அப்பகுதி வாசிகள்.
இவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி தவறாமல் இடம்பெற்ற பெயர், ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜார்ஜ். பரபரப்பாக விழிப்புணர்வு பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியபோது...
தொடக்கப்பள்ளி தான், கல்வியின் அடித்தளம். இங்கு சரியாக வழிநடத்தப்படுபவர்கள், எத்தகைய சூழலிலும், எதிர்நீச்சல் போடுவார்கள். வார்த்தையும், எழுத்தும் உச்சரிக்க தெரிந்தபின், மனப்பாடம் செய்விப்பது தவறு.
புத்தகத்தில் உள்ளதை தாண்டி, என்ன கற்று கொடுக்கிறோம் என்பதில் தான், ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்படும். எனக்கு, தனித்துவமான ஆசிரியராக இருக்க வேண்டுமென்பதே விருப்பம். இதற்காக, வகுப்பு நிகழ்வுகள் முழுவதும், செயல்வழி கற்றலாக மாற்றி விட்டோம். இப்படி சொல்லி கொடுப்பது, ஆயுள் முழுக்க மறக்காது.எல்லா பாடங்களுக்கும், செயல்திட்டங்கள் தயாரித்துள்ளோம். இதை மாணவர்களே தயாரித்து, வகுப்பறையில் வைக்கின்றனர். 

கணிதத்தில் கொள்ளளவு என்ற பாடத்திற்கு, ஒரு லிட்டர், அரை லிட்டர் என அளவைகள் கொண்ட, பாட்டில்கள் சேகரித்து, எப்படி அளப்பது என்பதை சொல்லி கொடுக்கிறேன். குழுவாக பிரித்து, லிட்டர் அளவீடு குறித்து, வினாடி-வினா நடத்தப்படுவதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்கின்றனர். ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், பட்டம் குறித்த பாடம் உள்ளது. இதை செய்யும் முறை குறித்து, மாணவர்களுக்கு விளக்கியதோடு, பட்டம் திருவிழாவை பள்ளியில் நடத்தினோம்.
இதுபோன்ற செயல்பாடுகளை,பெற்றோர் அறிந்து கொள்ள மாதந்தோறும் கூட்டம் நடத்துகிறோம். பள்ளிக்கு விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு, மாதந்தோறும் பரிசுகள் வழங்குகிறோம்.தலைமையாசிரியர் விசாலாட்சி,ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடத்துதல் உள்ளிட்ட பள்ளி சார் செயல்பாடுகளுக்கு,பள்ளி மேலாண்மை குழுவின் ஆலோசனைகளையும் பெறுகிறார்.
ஒரு பள்ளியின் வளர்ச்சியில், பெற்றோரின் பங்கும் இருந்தால், மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பே இல்லைஎன்றார் ஆசிரியர் கிறிஸ்டோபர்.
பெண்கல்வி குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு, மாணவர்கள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தனர். பொதுக்கூட்டம் நடத்தி, மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான, சிறுமுயற்சி என்ற ஆசிரியருக்கு, கைக்குலுக்கி விடைபெற்றோம்.

வியாழன், 26 ஏப்ரல், 2018

5 மாணவர்களோடு மூட இருந்த அரசுப் பள்ளியை 284 மாணவர்களாக வளர்த்தெடுத்த தலைமை ஆசிரியை!


வெறும் ஐந்து மாணவர்களோடு மூடப்பட இருந்த அரசுப்பள்ளியை தனது முயற்சியால் 284 மாணவர்களாக வளர்த்தெடுத்திருக்கிறார் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை.

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான் அந்தப் பள்ளி. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலலிதாதான் அந்த அசத்தல் முயற்சிக்குச் சொந்தக்காரர். அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கச் சொன்னால், 'ஏன் சார், அங்க தர்மத்துக்கு பாடம் சொல்லித் தருவாங்க. பிள்ளைங்க எதிர்காலம் என்னாவது?' என்று படித்த பெற்றோர்களே அவநம்பிக்கையாக கரிச்சுக் கொட்டும் காலம்.

இந்த நிலையில், விஜயலலிதா அரசுப் பள்ளி மீதான நம்பிக்கையை 200 சதவிகிதம் அதிகரிக்கச் செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறார்.

கரூர் நகரத்தை ஒட்டி திருச்சி சாலையில் ஐந்து கிலோ மீட்டரில் இருக்கிறது நரிக்கட்டியூர். இந்தக் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஒரு ஆசிரியர், வெறும் ஐந்து மாணவர்களோடு மூடப்படும் நிலையில் இருந்திருக்கிறது. அதைதான் அந்தப் பள்ளிக்கு பணிக்கு வந்த தலைமை ஆசிரியை விஜயலலிதா மாணவர்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல அதிகரிக்க வைத்து, இப்போது 284 மாணவர்களாக ஆக்கி சாதனை செய்திருக்கிறார். அடுத்த வருடம் ஒன்றாம் வகுப்பு படிக்கத் தயாராக இருக்கும் நான்கு வயது சிறுவர், சிறுமியர்கள் 46 பேரை இப்போதே தனியார் பள்ளியில் உள்ளது போல் எல்.கே.ஜி வகுப்பு ஆரம்பித்து, அதில் பயில வைக்கிறார்.

தனியார் பள்ளிகள் நோக்கி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் போவதை தடுக்கவே இந்த ஏற்பாடாம். இன்னும் ஏகப்பட்ட அசத்தல் விஷயங்கள் இந்தப் பள்ளியில் உள்ளன. தலைமை ஆசிரியை விஜயலலிதாவோ, 'சக ஆசிரியர்கள், ஊர் மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், ஸ்பான்ஸர்கள்ன்னு எல்லோரும் ஊர்கூடி தேர் இழுத்து இந்தச் சாதனையைச் செய்திருக்கிறோம். இதுல என் பங்கு எல்லோரையும் ஒருங்கிணைத்ததுதான்" என்கிறார் சிம்பிளாக.