AEEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AEEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 8 நவம்பர், 2019
சனி, 1 செப்டம்பர், 2018
புதன், 30 மே, 2018
இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்.....
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள் :
இந்தக் கல்வியாண்டு (2018-2019) முதல்... இனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும் என்று C.E.O. அவர்கள் தெரிவித்துள்ளார். தகவல் பின்வருமாறு :
1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்
2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,
3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை,
4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,
5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,
6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,
7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம். மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.
சனி, 28 ஏப்ரல், 2018
லஞ்சம் வாங்கிய AEEOக்கு 3 ஆண்டுகள் சிறை...
அறிவியல் ஏ.இ.ஓவாக இருந்த திரு முத்துக்கிருஷ்ணன் திருச்செங்கோடு ஏ.இ.ஓவாக மாறுதல் பெற்று பகுதி ஒன்றில் ஏ.இ.ஓ வாக பணியாற்றினார்.....இவர் மீது இலஞ்ச ஒழிப்பு வழக்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நடைபெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது...
45 வயதில் ஏ.இ.ஓ வாக வந்தவர் இப்போது இவருக்கு 55 வயதாகிறது சர்வீஸில் பத்து வருடம் வழக்கு நடத்தவே போய் விட்டது. தீர்ப்பும் அவருக்கு எதிராக வர இனி இவர் பனிக்காலம் முழுவதுமே வழக்குக்கே போய்விட்டதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது.
....இது மற்ற இலஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கும் உதாரணமாக இருக்கட்டும்.......நேர்மை தவறி...கை நீட்ட இறங்கினால் அதற்கு அதிகார பலத்தையும் பயன்படுத்தினால்... நிலைமை எப்படி கொண்டுப்போய் விடும் என்பதை இதை விட உதாரணமாக இருக்கமுடியாது.
வியாழன், 26 ஏப்ரல், 2018
AEEO - க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம், மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர், அதேப்பகுதியில் திரு.வி.க என்ற பெயரில்நடுநிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் 103 மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.
பள்ளிக்கு அரசு நிதி உதவியின்படி மாணவர்களுக்கு இலவச புத்தகம், உடை உணவுஎன அனைத்தும் வழங்கப்பட்டு வந்துள்ளது. பின்னர், சிவில் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயின்று வரும் 103 மாணவர்களுக்கு கடந்த 2104-2015ம் ஆண்டு வரை அரசு நிதி உதவியிலிருந்து உணவு, உடை என எந்த சலுகைகளும் வழங்க முடியாது என வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ரா கூறியுள்ளார்.இதையடுத்து, மகேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிம்னறம், பள்ளிக்கு அரசு சலுகைகள் வழங்க உத்தரவிட்டது. இருந்தும் சித்ரா சலுகைகளை வழங்க மறுத்துள்ளார். இதுகுறித்து சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மகேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் உதவி தொடக்க கல்வி அலுவலர் சித்ராவுக்கு ₹2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த பணத்தை அரசு மனுதாரருக்கு கொடுத்துவிட்டு, சித்ராவிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், சித்ரா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2014-15ம் ஆண்டுக்கான உணவு, புத்தகம் ஆகியவற்றுக்கான நிதியை பள்ளி நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
வெள்ளி, 2 மார்ச், 2018
செவ்வாய், 28 நவம்பர், 2017
வெள்ளி, 24 நவம்பர், 2017
மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்
மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்
அதிர்ச்சி அளிக்கிறதா ? நண்பர்களே ...
உண்மைதான் ..
மத்திய அரசிற்கு இணையான ஊதியம் தமிழக கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டும் என்ற கோரிக்காக பல ஆண்டுகளாக நாம் போராடிவருகிறோம் ...
உண்மையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசு வழங்குவதைவிட அதிக ஊதியம் வழங்கி வருவது எத்தனை பேருக்கு தெரியும் ?
குழம்ப வேண்டாம் பொறுமையாக படிக்க ..மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200. தமிழக மாநில இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750(1.1.2011க்கு பிறகு ), 5200+2800(1.1.2011க்கு முன்பு ...
இப்போது மூன்று வித ஊதியங்களில் இருந்து பதவி உயர்வு பெறுவதால் பெறும் ஊதிய நிர்ணயங்களை இங்கே காண்போம் ..
அடிப்படை ஊதியம் மூன்று கணக்கீட்டிற்கும் 10000என்று வைத்துக் கொள்வோம் ..
31.12.2010 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .
அ. ஊதியம் 10000
தர ஊதியம். 2800
------------------------------ --
மொத்தம். 12800
------------------------------ --
பதவி உயர்வு
பணப்பலன் 3%
12800*3%= 384@390
பட்டதாரி பதவி உயர்வு
நிர்ணயம்
அ. ஊதியம் 10000
3% 390
தர ஊதியம். 4600
------------------------------ --
மொத்தம். 14990
------------------------------ --
1.1.2011 ல் பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .
அ. ஊதியம் 10000
தர ஊதியம். 2800
தனி ஊதியம். 750
------------------------------ --
மொத்தம். 13550
------------------------------ --
பதவி உயர்வு
பணப்பலன் 3%
13550*3%= 406.50@410
பட்டதாரி பதவி உயர்வு
நிர்ணயம்
அ. ஊதியம் 10000
3% 410
தனி ஊதியம். 750
தர ஊதியம். 4600
------------------------------ --
மொத்தம். 15760
------------------------------ --
குறிப்பு :
-------------
பதவி உயர்வில் தனி ஊதியம் அடிப்படை ஊதியத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது .
இதுவே மத்திய அரசைவிட கூடுதல் ஊதியம் பெற வழிவகை செய்கிறது ..
1.1.2011ல் மத்திய அரசிற்கு இணையாக ஊதியம் வழங்கப்பட்டால்
9300+4200
பட்டதாரி பதவி உயர்வு நிர்ணயம் .
அ. ஊதியம் 10000
தர ஊதியம். 4600
------------------------------ --
மொத்தம். 14600
------------------------------ --
பதவி உயர்வு
பணப்பலன் 3%
14600*3%= 426@430
பட்டதாரி பதவி உயர்வு
நிர்ணயம்
அ. ஊதியம் 10000
3% 410
தர ஊதியம். 4600
------------------------------ --
மொத்தம். 15010
------------------------------ --
முடிவு :
----------
மத்திய இணை ஊதியம் பெற்று பதவி உயர்வில் சென்றால் பெறும் ஊதியம் 15010
தற்போதைய நிலையில் பதவி உயர்வில் பெறும் ஊதியம் 15760
மத்திய அரசைவிட அதிகமாக வழங்கும் ஊதியம் ..
15760
15010
------------------
750
------------------
தமிழக கல்வித்துறையில் 1.1.2011க்கு பிறகு
5200+2800+750பெற்று பதவி உயர்வில் செல்பவர்களுக்கு AEEOக்களும், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் மத்திய அரசு தரும் ஊதியத்தைவிட அதிக ஊதியத்தை வழங்கி பெரும் உதவி செய்து வருகிறார்கள் ..
மேலும் ஏழாவது ஊதியக்குழுவிலும் அரசின் பணத்தை தொடர்ந்து வாரி வழங்கும் கர்ண பிரபுக்களை பாராட்டியே ஆக வேண்டும் ..
இத்தகை நிர்ணயங்களை தணிக்கை அலுவலர்களும் கவனிப்பை எதிர்நோக்கி கண்டும் காணாமல் போவதும் கல்வித்துறையில் பெறும் குழப்பங்களை முரண்பாடுகளையும் உருவாக்கி வருகிறது ..
கர்ண பிரபுக்கள் கைங்கர்யம் மற்றும் தணிக்கை அலுவலர்களின் காட்டில் மழை பெய்யும் வரை அரசு பணம் வீணாகும் ...
தொடரட்டும் மத்திய அரசை விட கூடுதல் மாநில பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் ...
ஆக்கம்
------------
சுரேஷ் மணி
நாமக்கல்
9943790308
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)