>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
B.ED லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
B.ED லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 மே, 2019

TNTEU - "Time Table - B.Ed/B.Ed (Spl)/M.Ed/M.Ed (Spl) Examination,May/June 2019''



   ......................................................................................

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

B.Ed., கணிணி அறிவியல் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு!!

திங்கள், 17 ஜூலை, 2017

பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்..

சென்னை:தமிழகத்தில், 21 கல்லுாரிகளுக்கான, பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.

தமிழக அரசின், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, 21 கல்வியியல் கல்லுாரிகளில், 1,753 இடங்களில், பி.எட்., படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 

இதற்கு, தமிழக அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியால், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.

முதல் நாளான இன்று, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. மற்ற பிரிவினருக்கு, நாளை முதல் கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பம் பெற்ற, 6,281 பேரில், 5,833 பேர் விண்ணப்பம் அனுப்பினர். அவர்களில், சரியான, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற, 2,996 பேர், முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு,1,000 ரூபாய்; மற்றவர்களுக்கு, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

இதை, 'செயலர், தமிழ்நாடு, பி.எட்., மாணவர் சேர்க்கை, 2017 - 18' என்ற பெயரில், 'டிடி' என்ற, வங்கி வரைவோலையாக தர வேண்டும்.கவுன்சிலிங், 22ம் தேதி வரை நடக்கிறது. பி.இ., - பி.டெக்., படித்தவர்களுக்கு, வரும், 19ம் தேதி இடங்கள் ஒதுக்கப்படும். அவர்களுக்கு, 10 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, www.ladywillingdoniase.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

திங்கள், 10 ஜூலை, 2017

பி.எட்., கல்லூரிகளில் தில்லுமுல்லு : கல்வியியல் பல்கலை அதிரடி முடிவு....

பி.எட்., கல்லுாரிகளில் தகுதி இல்லாத முதல்வர்கள் இருப்பதால், அவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது.
பட்டதாரிகள், ஆசிரியர் பணியில் சேர வேண்டும் எனில், பி.எட்., படிப்பை முடித்திருப்பதோடு, ஆசிரியர் தகுதி தேர்விலும், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
கண்காணிப்பு : நாடு முழுவதும் உள்ள, பி.எட்., படிப்புக்கான கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, என்.சி.டி.இ., என்ற, தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது. 
தமிழகத்தில், என்.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும். இதனால், பல்கலையின் முழு கட்டுப்பாட்டில், கல்லுாரிகள் செயல்பட வேண்டும். மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை கண்காணிக்கும்.
இந்நிலையில், பி.எட்., கல்லுாரிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதனால், துணைவேந்தர் தங்கசாமி மற்றும் பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர், சீரமைப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளனர்.
தர மதிப்பீடு : அதாவது, அனைத்து பி.எட்., கல்லுாரிகளும், அங்கீகாரம் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள், 'நாக்' தர மதிப்பீடு பெற வேண்டும். அத்துடன், அனைத்து கல்லுாரிகளிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து, பி.எட்., கல்லுாரிகளில் முதல்வர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து, போலிகளை கண்டுபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பி.எட்., கல்லுாரிகளில், கல்வியியல் படிப்பில், பிஎச்.டி., முடித்தவர்கள் மட்டுமே, முதல்வராக இருக்க முடியும்.பல கல்லுாரிகளின் முதல்வர்கள், இந்தவரையறைக்குள் இல்லை என, தெரியவந்துள்ளது. எனவே, விரைவில், அந்த முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பல்கலை நிர்வாகம் முடிவு 
செய்துள்ளது.

வெள்ளி, 7 ஜூலை, 2017

B.Ed கற்பித்தல் பயிற்சியை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என்பதற்கான அண்ணாமலை பல்கலைக்கழக செய்தி....

வெள்ளி, 30 ஜூன், 2017

THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR

THANJAI TAMIL UNIVERSITY B.ED TEACHING PRACTICE IN SAME PRIMARY SCHOOL - CIRCULAR தமிழ் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை- BEd கற்றல் கற்பித்தல் பயிற்சியை விடுப்பின்றி அந்தந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம்


ஞாயிறு, 25 ஜூன், 2017

கோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை

புதன், 21 ஜூன், 2017

தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அவர்கள் பணியாற்றும் பள்ளியிலேயே விடுப்பு ஏதும் எடுக்காமல் முழு ஊதியத்துடன் மேற்கொள்ளலாம் என்பதற்கான திருப்பத்தூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் வழங்கிய ஆணை_*



சனி, 17 ஜூன், 2017

21-ந்தேதி பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் வினியோகம்

தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777 இடங்கள் உள்ளன.
இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் பி.எட். கல்லூரி, சைதாப்பேட்டை பி.எட். கல்லூரி உள்பட 13 பி.எட். கல்லூரிகளில் 21-ந்தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகின்றன. 30-ந்தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும், விலை ரூ.500. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும். இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 6 ஜூன், 2017

B.Ed., Teaching Practice - Regarding Director Proceeding..

DEE - ஊராட்சி/நகராட்சி/உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலம் பி.எட் பயிலும் போது பயிற்சியினை பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளுதல் ஆணை வெளியிடப்பட்டது சார்ந்து - இயக்குநர் செயல்முறைகள்!! நாள்:-04.05.2017


ஞாயிறு, 7 மே, 2017

B.Ed கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை

பேராசிரியர்கள் நியமனத்துக்கு தகுதி ஒப்புதல் பெறாத, கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.
தமிழகத்திலுள்ள, பி.எட்., கல்லுாரிகளில், பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களை நியமிக்க, பல்கலையிடம் தகுதி ஒப்புதல் பெற வேண்டும்.
கடந்த கல்வியாண்டில், தகுதி ஒப்புதல் பெறாமல், பல கல்லுாரிகள், பேராசிரியர்களை நியமித்துள்ளன.
இந்த கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு
உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிவிப்பில், 'மே, 15க்குள், புதிய பணி நியமனங்களுக்கு, தகுதி ஒப்புதல் பெற வேண்டும். இல்லாவிட்டால், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது' என, தெரிவித்து உள்ளார்.

பி.எட்., பயிற்சி: ஆசிரியர்களுக்கு அரசு சலுகை

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிப்புக்கு, தங்கள் பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்கலாம்' என, அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் பிறப்பித்த உத்தரவு:
தொடக்க பள்ளிகளில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிக்கும் போது, அவர்களுக்கான பயிற்சியை, பணிக்காலமாக சம்பளத்துடன் மேற்கொள்ளலாம்.
தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, இந்த பயிற்சியை எடுத்து கொள்ளலாம். தாங்கள் படிக்கும் பல்கலையில் அனுமதித்த காலத்தில், பயிற்சியை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 6 மே, 2017

பணிபுரியும் பள்ளியிலேயே B.Ed. கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கும் இனி முழுமையாக ஊதியத்தை வழங்க செயல்முறை வெளியீடு.

திங்கள், 24 ஏப்ரல், 2017


தமிழ்ப் பல்கலைக் கழகம்-தொலைநிலைக்கல்வி -2017-19 ஆம் கல்வியாண்டு இளங்கல்வியல் ( பி.எட் ) சேர்க்கை.விண்ணப்பிக்க கடைசி நாள்: 16/06/2017 - விளம்பரம் - விண்ணப்பம் - விவரக்கையேடு - முழு விவரம்.....

தமிழ்ப் பல்கலைக் கழகம்-தொலைநிலைக்கல்வி -2017-19 ஆம் கல்வியாண்டு இளங்கல்வியல் ( பி.எட் ) சேர்க்கை.விண்ணப்பிக்க
கடைசி நாள்: 16/06/2017 - விளம்பரம் - விண்ணப்பம் - விவரக்கையேடு -
 முழு விவரம்..... CLICK HERE

வியாழன், 13 ஏப்ரல், 2017


B.Ed, படிப்புக்கு தேசிய நுழைவு தேர்வு

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், நேரடியாக பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மைசூரு, அஜ்மீர், போபால், புவனேஷ்வர் உள்ளிட்ட, மண்டல மையங்களில், இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன.
மிகக் குறைந்த கட்டணத்தில், தங்குமிடம் வசதிகளுடன், பட்டப்படிப்பும், பி.எட்., படிப்பும் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு, உடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. வரும் கல்வி ஆண்டில், பி.எட்., இணைந்த பி.எஸ்சி., - பி.ஏ., படிப்புகள், நான்கு ஆண்டுகளும், பி.எட்., இணைந்த எம்.எஸ்சி., படிப்பு, ஆறு ஆண்டுகளும் நடத்தப்படுகிறது. அதே போல், பி.எட்., - எம்.எட்., தலா இரு ஆண்டுகளும், பி.எட்., - எம்.எட்., இணைந்த படிப்பு, மூன்று ஆண்டுகளும் கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்பில் சேர, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதற்கு, www.ncert-cee.kar.nic.in என்ற இணையதளத்தில், மே, 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 29 மார்ச், 2017


பி.எட் (கல்வியியல்) கற்பித்தல் பயிற்சிக்கு அனுமதி கோரும் விண்ணப்பம்..

திங்கள், 20 பிப்ரவரி, 2017