காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
06-03-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 140
அதிகாரம் : ஒழுக்கமுடமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
பொருள்:
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
அன்பு தான் உன் பலவீனம் என்றாலும் , இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான்.
- அன்னை தெரசா
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
SOUNDS OF THINGS - பொருள்களின் ஒலிகள்
1. Fire - crackles
2. Flags - flutter
3. Guns - boom
4. Hands - clap
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1.தேனி எப்போது தனி மாவட்டமானது ?
1997, ஜனவரி-1
2. தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஊர் எது ?
கயத்தாறு
✡✡✡✡✡✡✡✡
Daily English
Di-syllabic words
1. weapon - weap-on
2. stupid - stu-pid
3. return - re-turn
4.routine - rou-tine
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
மிளகு
🌿 சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மிளகு தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மிளகின் தாயகம் இந்தியா ஆகும்.
🌿 ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எகிப்து நாட்டிற்கு மிளகு பண்டமாற்றாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
🌿 மிளகு என்பது செடி அல்ல, அது ஒரு கொடி. சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, கறுப்பு, வெள்ளை என்று வெவ்வேறான வண்ணங்களில் கிடைக்கிறது. பழுக்காத மிளகை பறித்தால் பச்சையாக இருக்கும்.நன்கு பழுத்து காய்ந்தது கறுப்பு நிறமாக மாறும்.
🌿மிளகின் விஷ முறிவு தன்மைக்காக “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் “ என கூறியுள்ளனர்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
உண்மையான மதிப்பு
ஒரு நாள் அரண்மனைப் பழத்தோட்டதில் துருக்கி மன்னரும், முல்லாவும் உலாவிக் கொண்டிருந்தனர். மன்னர், முல்லா அவர்களே தாங்கள் ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனுடைய மதிப்பை கூறிவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டேன். முல்லா, ஆம், எனக்கு இந்த ஆற்றல் அல்லாவின் அருளால் தான் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். துருக்கி மன்னன் என்னுடைய மதிப்பு என்னவென்று கூறுங்கள் பார்க்கலாம். தங்களுடைய உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள் தான் என்றார் முல்லா.
முல்லாவிடம் மன்னர், தங்களை என் மதிப்பு பற்றி சொல்லச்சொன்னால், என் இடுப்பில் அணிந்திருக்கும் கச்சையின் மதிப்பைப் பற்றி கூறுகிறீர்கள் என்று கோபமாக கேட்டார். மன்னர் பெருமானே! நான் சொன்னது தங்களது கச்சையின் மதிப்பைப் பற்றித்தான். உடலிருந்து உயிர் பிரிந்து விட்டால் இன்று உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து நீடிக்காது. அழியக்கூடிய உடம்புக்கு மதிப்பு இருக்காது. முல்லாவின் அந்தச் சாதுரியமான பதில் துருக்கி மன்னரை சிந்திக்க வைத்தது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮கொரோனா எதிரொலியால் குர்கான், நொய்டாவில் உள்ள பேடிஎம் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
🔮கொரோனா வைரஸ் இறைச்சி உணவுகள் மூலம் பரவாது, எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
🔮கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.
🔮மகளிர் உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
🔮கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு ரூ.155.80 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி.
🔮கொரோனா வைரஸ் எதிரொலி: டெல்லி அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு.
🔮மாா்ச் 31-க்கு பிறகு பிஎஸ் 4 வாகனங்களைப் பதிவு செய்யத் தடை: போக்குவரத்துத் துறை ஆணையா் உத்தரவு.
🔮சங்கரன்கோவில் அருகே திறப்பு: தென்னிந்தியாவில் முதன்முறையாக உலக அமைதிக்கான புத்த கோபுரம்: புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டது.
HEADLINES
🔮COVID-19 | Coronavirus cases rise to 30, man from Ghaziabad tests positive.
🔮India-EU summit to be rescheduled in wake of coronavirus: MEA.
🔮Coronavirus: Delhi govt orders closure of all primary schools till March 31.
🔮New dimension needs to be created in medical education to handle challenges of astronauts, says former ISRO chairman.
🔮Women’s T20 World Cup: India advances to final. 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
....................................