>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
NEET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NEET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

புதன், 5 ஜூன், 2019

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


 மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 5) இணையதளத்தில் வெளியாகின்றன.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில்,  14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை.
இன்று வெளியீடு: இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை புதன்கிழமை (ஜூன் 5) வெளியிடுகிறது. இந்த முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கால்நடை மருத்துவப் படிப்பின் (பிவிஎஸ்சி - ஏஹெச்) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா,  இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 6 மே, 2019

NEET Exam 2019 - Full Question Paper & Answer Key

NEET Exam 2019 - Biology Question with Answer Key

NEET Exam 2019 - Question Paper and Key Answer

  • Answer Key for English Medium
  • NEET Exam 2019 - Biology Question with Answer Key | Mr. S. Thiyagarajan - Click Here For Download

தீராத நீட் சோகம்! சிபிஎஸ்இ மாணவர்கக்கு ஈஸி! மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினம்!





இன்று நடைபெற்ற நீட்தேர்வு எளிமையாக இருந்ததாக சிபிஎஸ்இ மாணவர்கள் கூறிய நிலையில் வழக்கம் போல் தமிழக பாடத்திட்ட மாணவர்கள் கடினமாக இருந்ததாக கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலும் எம்பிபிஎஸ் லட்சியத்தில் உள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் நீட் தேர்வை எழுதினர். வழக்கம் போல் கடுமையான கெடுபிடிகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்கள் கூட தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு தேர்வறைக்குள் முன்பு போல் கெடுபிடி காட்டப்படவில்லை என்று மாணவர்கள் கூறினர். இதனால் எந்த சஞ்சலமும் இன்றி நீட் தேர்வை எழுதியதாக தமிழக மாணவர்கள் தெரிவித்தனர்.

னால் தேர்வு தான் மிகவும் கடினமாக இருந்ததாகமாநில பாடத்திட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.

இயற்பியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சிரமமாக இருந்ததாக மாநில பாடத்திட்ட மாணவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் நீட் தேர்வு எளிமையாக இருந்ததாக சிபிஎஸ்இ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

NEET EXAM 2019 - ORIGINAL QUESTION PAPER AND ANS KEY [ Exam Date :05.05.2019 ]


...............................................................................................................................................

சனி, 4 மே, 2019

நீட் தேர்வு மையங்கள் மாற்றம் - அறிவிப்பு.

முக்கிய தகவல்: நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம் - தேர்வர்கள் கவனிக்க.....
_நீட் தேர்வு எழுதுபவர்களின் ரோல் எண்கள் 410602881 முதல் 410603660 வரை உள்ளவர்களுக்கு மதுரை விராகனூர், வேலம்மாள் நகரில் உள்ள மதுரை - ராமேஸ்வரம் உயர் நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

_
_ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை அ.வளையாபட்டி அழகர் கோவிலில் உள்ள பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது._


_ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு மதுரை நரிமேட்டில் உள்ள PT ராஜன் சாலையில் அமைந்துள்ள கேந்திர்யா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது._

_ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு மதுரை P&T எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை எய்ம்ஸ் ரோடு, தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தனபாண்டியல்  பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

_ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள CS ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

_அதேபோல் ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே மதுரை ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ண நகரில் அமைந்துள்ள மகாத்மா மாண்டசெரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை நாகமலை மேற்கு, மேலகுயில்குடி சாலையில் அமைந்துள்ள SBOA பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது._

தேர்வர்கள் புதிய தேர்வு மையங்களின் அமைவிடத்தை தெரிந்துவைத்துக்கொண்டு இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. உங்கள் பகுதியில் யாரேனும் மதுரை தேர்வு மையங்களில் தேர்வெழுதுபவராக இருந்தால் அவர்களுக்கு தெரியப்படுத்தவும்...

திங்கள், 22 ஏப்ரல், 2019

NEET dress code: Light, half-sleeve clothes, no belts


NEET dress code: Light, half-sleeve clothes, no belts


The National Testing Agency (NTA), which recently released admit cards for National Eligibility-cum-Entrance Test (NEET) for undergraduate (UG) medical and dental seats, has laid down a dress code for candidates to minimise instances of cheating. In a recently released circular, the NTA asked candidates to wear only light clothes with half sleeves and open footwear. 



 Those wearing customary dresses including burqas or turbans have been asked to mention the same in their application form and report to the exam centre at least one and a half hours early to complete the frisking procedure. 'Students who have to wear a burqa or a turban during exams have already mentioned the same in their application form and this will be mentioned in their admit card. We've requested them to report to the exam centre early so that their frisking process is over in time,' said the circular. 

NEET dress code: Light, half-sleeve clothes, no belts


 Any metal objects, including belts or digital watches, will not be allowed in the exam centre. According to registration figures made public by NTA, close to 15.19 lakh students registered for NEET-UG this year, compared to 13.26 lakh in 2018. There are close to 67,000 UG medical seats in government-run and private institutes in the country, which means at least 23 students will be vying for one medical and dental seat this year. 




Like last year, most NEET-UG registrations in the country have come from Maharashtra, where 2.19 lakh students will be appearing for the exam, followed by Uttar Pradesh and Tamil Nadu, with 1.57 lakh and 1.40 lakh students respectively. From Rajasthan, 99,711 have registered for NEET-UG and another 84,443 students registered from Bihar. NEET 2019 will be held across the country on May 5.

NEET dress code: Light, half-sleeve clothes, no belts 

சனி, 20 ஏப்ரல், 2019

நீட்க்கு தயாராகி கொண்டு இருக்கிறார்களா இதோ உங்கள் திறமைக்கு சவாலாக இருக்கும் நீட் quiz செயலி (application) உங்களில் அடுத்த டாக்டர் யார்?

Saturday, April 20, 2019


உங்கள் நண்பர்களுக்கு உங்களின் மதிப்பெண்ணை screen short எடுத்து அவர்களுக்கு சவால் விடுங்க

இந்த செயலியின் டவுன்லோட் லிங்கை கீலே சொடுக்கவும்

இது உங்களுக்கு பயன் படவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்

https://play.google.com/store/apps/details?id=neet.entrance.exam

.................................................

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

'நீட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று 15.04.2019 மாலை 5 மணிக்கு வெளியாகிறது

இணையதளத்தில், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு கட்டாயம் ஆன பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தமிழக மாணவர்கள், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.மே, 5ல், நாடு முழுவதும் இந்த தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

CLIK HEAR

சனி, 30 மார்ச், 2019

Latest NEET Exam Study Materials Download

NEET Exam Study Materials Download

NEET Exam Study Materials
Latest - Study Materials

NEET Exam - Model Question Papers
Physics - Study Materials
Chemistry - Study Materials

Botany - Study Materials
Tamil Medium Translation for NCERT CBSE Books

சனி, 21 ஜூலை, 2018

'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை

புதுடில்லி, 'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் அலைபேசி எண், புகைப்படங்கள், இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'நீட்' தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் முழு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், பிறந்த நாள், இ - மெயில் முகவரி, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. இதற்கு, இரண்டு லட்சம் ரூபாய், பணம் செலுத்த வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் அலைபேசி எண்களின் முதல் மூன்று எண்கள் மட்டுமே இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோர், பணம் செலுத்தி, மொத்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.'நீட்' தேர்வு எழுதியோரின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை

புதுடில்லி, 'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் அலைபேசி எண், புகைப்படங்கள், இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'நீட்' தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் முழு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், பிறந்த நாள், இ - மெயில் முகவரி, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. இதற்கு, இரண்டு லட்சம் ரூபாய், பணம் செலுத்த வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் அலைபேசி எண்களின் முதல் மூன்று எண்கள் மட்டுமே இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோர், பணம் செலுத்தி, மொத்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.'நீட்' தேர்வு எழுதியோரின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 15 ஜூலை, 2018

'நீட்' தேர்வு முடிவு: இன்று வெளியீடு...

சென்னை:உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.நாடு முழுவதும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்., போன்றவற்றை படிக்க, அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 1,215 இடங்கள் உள்ளன. அதிகபட்சமாக, தமிழகத்தில், 192 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், 2018 - 19ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வு, ஜூலை, 6ல் நடந்தது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உட்பட, நாடு முழுவதும், 42 நகரங்களில் தேர்வு நடந்தது.தேர்வு முடிவுகள், www.nbe.edu.in என்ற இணையளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.
கவுன்சிலிங் அட்டவணை உள்ளிட்ட விபரங்கள், www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 13 ஜூன், 2018

நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் 49 கேள்விகளில் பிழை என டி.கே.ரங்கராஜன் எம்.பி வழக்கு தொடர்ந்துள்ளார்.


 நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 10 மே, 2018

நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 பிழைகள் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாகக் கிடைக்குமா?


















சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட
 நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 மொழி பெயர்ப்புப்
 பிழைகள் இருந்ததாக தன்னார்வ தொண்டு நிறுவனம்
 குற்றம்சாட்டியுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
 அளித்து வரும் டெக் பார் ஆல் என்ற தன்னார்வ தொண்டு
 நிறுவனம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில், 180 வினாக்கள்
 கொண்ட நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள்
 தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தன்னார்வ 
தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த
 பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

உதாரணமாக, நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 75வது வினாவில்
 Cheetah (தமிழில் சிறுத்தை) என்ற வார்த்தைக்கு பதிலாக சீதா
 என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதே போல 77வது வினாவில்
 வரும் ஒரு ஆங்கில வார்த்தையும் தவறான அர்த்தத்தில்
 மொழி பெயர்க்கப்பட்டிருப்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இதே போல 49 மொழி பெயர்ப்புப் பிழைகள் கொடுக்கப்
பட்டிருப்பதால், தமிழில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு
 சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
 வைக்கப்பட்டுள்ளது. 49 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண்
 வழங்கப்பட்டால், தமிழில் தேர்வெழுதிய மாணவ, 
மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாகக்
 கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்பதையும் அவர்களே விளக்கியும்
 உள்ளனர். அதாவது, என்சிஇஆர்டி புத்தகங்கள் தமிழில் இல்லாததும்
, ஆங்கிலத்தின் மிக நுணுக்கமான வார்த்தைகளை தமிழில் மொழி
 பெயர்க்க சிபிஎஸ்இ நிர்வாகம் தவறியதுமே காரணம் என
 தெரிவித்துள்ளனர்.

இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது
 என்று இதுவரை புரியாத புதிராக இருக்கிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வில் பங்கேற்ற 
24 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழில் நீட் தேர்வெழுதியது
 குறிப்பிடத்தக்கது......

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

செவ்வாய், 27 மார்ச், 2018

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை

 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது