>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது


மிகச்சிறந்த பணிக்கான விருது நமது முன்னாள் வட்டார கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டது

75 ஆவது சுதந்திர தின விழாவில் செஞ்சி வட்டார கல்வி அலுவலர் சிவகுமார் அவர்களின் பணியினை பாராட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார் 
மேலும் இவ்விழாவினை தொகுத்து வழங்கிய செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணிதப்பட்டதாரி ஆசிரியர் திரு பாலமுருகன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்

நமது விழுப்புரம் மாவட்டத்தில் மிககச்சிறந்த கல்விப் பணிக்கான விருது மேல்மலையனூர் ஒன்றியத்தின் முன்னாள் வட்டார கல்வி அலுவலரும் தற்போதைய செஞ்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலருமான உயர்திரு பொ.சிவக்குமார்  அவர்களுக்கும் தற்போதைய கோலியனூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் செல்வி உமாராணி அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

















 

புதன், 10 மார்ச், 2021

மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்!

*🌍🌎மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்!*



*📗📗அரசுப்பள்ளி மாணவனை பாராட்டி வாழ்த்திய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி ஐயா அவர்களும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும்!*


*📗📕அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்கவைத்ததற்காக தந்தையையும் பாராட்டினார்!*



*விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் அப்துரஷீத் என்பவரது மகன் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனான A.ரியாஸ் முகமது எனும் மாணவன் இந்த  ஊரடங்கு காலத்தில் பயனுள்ள வகையில் தன்னால் இயன்ற அளவு low-cost material மூலம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை  தனக்கென்று உருவாக்கி அதனை அறிவியல் அரட்டை என்னும் YouTube channel ல் பதிவேற்றம் செய்து வருகின்றார்.அந்த நிகழ்வு நமது மாவட்ட ஆட்சியர் அவர்களும் கண்டுவந்துள்ளார். பின்னர் ஆட்சியர் அவர்களே தொலைபேசி வாயிலாக ஆட்சியர் அலுவலகத்திற்கு அம் மாணவன் A.ரியாஸ் முகமதுவை வரவழைத்து மாணவனின் கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வைத்தும் தயாரித்த விதம் மற்றும் இப்பொருள்களால் சமுதாயத்திற்கு  ஏற்படும் பயன்கள் ஆகியவற்றை கேட்டு..... மாணவன் வழங்கிய பதிலைக் கண்டு வியந்து பின் பாராட்டி வாழ்த்தி சிறப்பித்தார்.உடன் மாவட்ட கல்வி அலுவலர் ஐயா அவர்களும் கலந்து கொண்டது மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.*


(அப்போது தானும் மாணவனின் Channel ஐ Subscribe செய்துள்ளதை ஆட்சியர் கூறும்போது மாணவனுக்கு கண்கள் குளமானது)


https://youtube.com/channel/UCGAhowDFyrtgjQGrRWaVqnA


*தற்போதைய தேர்தல் பணிப்பளு நேரத்தில் மாணவனுக்காக நேரம் ஒதுக்கி மாணவனின் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் போற்றும் விதமாக வாழ்த்துக்களையும் வழங்கி சிறப்பித்தமைக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி IAS ஐயா அவர்களுக்கும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கும் மாணவன் சார்பாக நன்றிகள் பல கோடி!*


எனது மகன் ஆட்சியரிடம் பாராட்டுதலையும் வெகுமதியுடன் வாழ்த்துக்களையும்  பெற்றதைக்கண்டு எனக்கும் மகிழ்ச்சியே!


இப்படிக்கு.

*_அப்துல் ரஷீத்._*

*இடைநிலை ஆசிரியர்.*

மேல்மலையனூர் ஒன்றியம்.

*_விழுப்புரம் மாவட்டம்_*

மேலும் கல்விச்சிகரம் மாணவனை அன்புடன் வாழ்த்துகிறது....

.........................................


புதன், 9 டிசம்பர், 2020

மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.



மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். அவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த, வர்க்கி அறக்கட்டளை என்ற அமைப்பு, சர்வதேச அளவில், கல்விப் பணியில் சிறப்பான சேவை செய்து வரும் ஆசிரியரை தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் கவுரவித்து வருகிறது. இந்த அறக்கட்டளையை, இந்தியாவை சேர்ந்த கல்வியாளரும், சமூக சேவருமான சன்னி வர்க்கி என்பவர், 2014ல், லண்டனில் நிறுவினார். இதற்கு, யுனெஸ்கோ எனப்படும், ஐ.நா., கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு, பொருளுதவி அளித்து வருகிறது.

சர்வதேச அளவில், நடப்பு ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியர் விருதுக்கு, 140 நாடுகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். இதில் இருந்து, 10 ஆசிரியர்கள், இறுதி சுற்றுக்கு தேர்வாகினர். அதில், மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில், பரித்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியரான, ரஞ்சித்சின்ஹ் திசேல், இந்த ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியராக நேற்று அறிவிக்கப்பட்டார். இவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையில், 50 சதவீதத்தை, இறுதி சுற்றுக்கு தேர்வான, மீதமுள்ள, ஒன்பது ஆசிரியர்களின் கல்வி பணிக்காக பகிர்ந்தளிக்க போவதாக, ரஞ்சித் அறிவித்தார்.

பரித்வாடி கிராமத்தில், மாட்டு கொட்டகையுடன் சேர்ந்தாற்போல் பாழடைந்து கிடந்த ஆரம்ப பள்ளியில், 2009ம் ஆண்டு, ரஞ்சித்சின்ஹ் பணியில் சேர்ந்தார். அங்கு, கல்வி கற்பிப்பதில் பல சீர்திருத்தங்களை உருவாக்கினார். பாடங்களை தாய்மொழியில் மொழிபெயர்த்தார். பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவித்தார். இதையடுத்து, சிறுமியர் திருமணம் அக்கிராமத்தில், 100 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தகங்களில், க்யூ.ஆர்., கோடு தொழில்நுட்பத்தை புகுத்தி, மாணவர்கள், 'ஆடியோ, வீடியோ' வாயிலாக பாடங்களை படிக்கும் முறையினை அறிமுகம் செய்தார். பிரச்னைகளுக்கு உரிய இரு நாடுகளின் மாணவர்களை, 'ஆன்லைன்' வாயிலாக உரையாட வைத்து, அவர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் செய்து வருகிறார். இதில், இந்தியா - பாகிஸ்தான், பாலஸ்தீனம் - இஸ்ரேல், ஈராக் - ஈரான், அமெரிக்கா - வட கொரியா நாடுகளைச் சேர்ந்த, 19 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்..🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹



சனி, 17 ஆகஸ்ட், 2019

தேசிய கொடியை ஏற்றிய மாணவி!'- தூத்துக்குடியில் கௌரவபடுத்திய பள்ளி நிர்வாகம்!



Friday, August 16, 2019


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பந்தல் மண்டபம் அருகில் உள்ளது சரவணய்யர் நடுநிலைப்பள்ளி.கடந்த 1895-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி தான் திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி.விரைவில் 125-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இப்பள்ளியில் மொத்தம் 210 மாணவர்கள் படிக்கிறார்கள்.

 govt school
பொதுவாக பள்ளிகளில் சுதந்திர தின விழா என்றால் தலைமை ஆசிரியர், தாளாளர், தியாகிகள் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.ஆனால் இப்பள்ளியில் புதுமையாக 8-ஆம் வகுப்பு முடித்த, தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசிய கொடி ஏற்ற வைத்து மரியாதை செய்கிறது பள்ளி நிர்வாகம்.இது குறித்து தாளாளர் திரு.ராமச்சந்திரன் அவர்களிடம் கேட்ட போது "இன்றைக்கு 73-வது சுதந்திர தினம்.கடந்த ஆண்டு எங்க பள்ளியில் படித்து இளம் விஞ்ஞானி விருது பெற்ற ஜெயராம வர்ணா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு தேசிய கொடியை ஏற்றினார்.

மாணவிக்கு அப்துல் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகம் பரிசளிக்கப்பட்டது. ஒவ்வொரு வருஷமும் அரசு திறனாய்வு தேர்வு நடத்திட்டு வர்றாங்க.இதுல தேர்ச்சி பெறுவது கஷ்டம்.தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு அரசு மாதம் ரூ.500 வீதம் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.24,000 வரை உதவித்தொகை கொடுக்குறாங்க.எங்க பள்ளியில இந்த தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துறோம்.

இதன் மூலமா கடந்த 3-வருஷத்துல 24 பேர் இந்த தேர்வுல தேர்ச்சி பெற்றுருக்காங்க.மாணவி ஜெயராம வர்ணா இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் மாவட்ட அளவில் 5-ஆம் இடம் பிடித்து இளம் விஞ்ஞானி விருது பெற்றுருக்காங்க. இதன் மூலமா மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி இருக்காங்க. இளம் வயதில் சாதனை படைத்த மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அழைத்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான தலைமை பண்பு வளர்வதுடன் சாதிக்கும் எண்ணமும் உருவாகிறது" என்றார்.

..........................................................

செவ்வாய், 23 ஜூலை, 2019

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கான 17 விதிமுறைகள்

Tuesday, July 23, 2019


..................

புதன், 5 செப்டம்பர், 2018

விழுப்புரம் மாவட்டம் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்கள்



செவ்வாய், 4 செப்டம்பர், 2018

புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2018 - தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு!


சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 9 பிரிவுகளில் " புதிய தலைமுறை ஆசிரியர் விருது.



1) புதுமை - ஒத்தக்கடை அரசு பள்ளி தலைமையாசிரியர் திரு. தென்னவன்.

2) கிராம சேவை - சஞ்சனூர் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் - திரு.சி.வீரமணி.

3) பழங்குடி மேம்பாடு - பொக்காபுரம் - தலைமையாசிரியர் - திரு. கண்ணதாசன்.

4) பெண்கல்வி - காலச்சேரி - நடுநிலைப்பள்ளி ஆசிரியர் திரு. ஆனந்த்

5) செயல் ஊக்கம் - பீமநகர் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் திருமதி. ராஜ ராஜேஸ்வரி

6) மொழித்திறன் - பெண்ணாடம் ஆசிரியர் திருமதி. கீதா

7) அறிவியல் விழிப்புணர்வு - வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் திரு. தனபால்

8) படைப்பாற்றல் - மணப்பாறை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் - திரு. து.கேசவன்

9) சிறப்பு குழந்தைகள் - Little Hearts Home - ஆசிரியர் திருமதி. ரீட்டா ஐயப்பன்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விருது!" தேசிய நல்லாசிரியர் ஸதி டீச்சர்


மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின்
பிறந்த நாளான செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதையொட்டி, மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து கெளரவப்படுத்தும். இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராடி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர். வாழ்த்துடன் உரையாடினோம்.


``என் பூர்வீகம், கோத்தனூர். அப்பா கல்வித்துறையில் வேலை பார்த்தார். நானும் என் அக்காவும் கல்வித்துறையிலேயே பயணிக்க ஆசைப்பட்டார். 1995-ம் ஆண்டு, டிஆர்பி (ஆசிரியர் தகுதித்தேர்வு) எழுதி, ஆசிரியராகத் தேர்வானேன். சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தின் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியைப் பணியைத் தொடங்கினேன். பல பள்ளிகளுக்கு இடமாறுதலாகி, 2009-ம் ஆண்டில், தலைமை ஆசிரியை ஆனேன். இந்தப் பள்ளிக்கு வந்தது 2012-ம் ஆண்டு.


நான் வொர்க் பண்ணின எல்லாப் பள்ளிகளிலுமே, மாணவர்கள் நல்ல சுற்றுப்புறச் சூழலில் படிக்கணும். அவர்களின் கல்வித்தரம் உயரணும் என்பதில் கவனமா இருப்பேன். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பலரின் உதவிகளுடன் மேம்படுத்தியிருக்கிறேன். இந்தப் பள்ளிக்கு வந்தபோது, வகுப்பறையும் கட்டடங்களும் பழுதாகி இருந்தன. கழிவறை வசதி சரியில்லை. இவற்றைச் சரிசெய்ய களம் இறங்கினேன். மாணவர்களுக்குக் கழிவறை வசதியை ஏற்படுத்த, எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் நிதி போதுமானதா இல்லை. எங்க கிராமத்தில் உள்ள எல்.என்.டி கம்பெனி நிர்வாகத்திடம் உதவி கேட்டேன்.
அவங்க கொடுத்த 5 லட்சம் நிதியுதவியால், தரமான கழிவறை வசதியை உருவாக்கினோம். அந்த முதல் வெற்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அப்போது, 146 மாணவர்கள் இருந்தாங்க. மாணவர்கள் இடைநிற்றலும் அதிகமா இருந்துச்சு. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் எங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது சவாலாக இருந்துச்சு. இதை எல்லாம் மாற்றி, தனியார் பள்ளிக்கு இணையா கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம்'' எனப் பெருமிதத்துடன் தொடர்கிறார் ஸதி.




``நிறைய நிறுவனங்களின் உதவியை நாடினோம். எல்.என்.டி நிறுவனம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுக் கட்டடங்களைக் கட்டிக்கொடுத்தாங்க. டேப்லெட் பயன்பாட்டுடன், ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகளைச் செய்துகொடுத்திருக்காங்க. `மெஷர் கட்டிங்' என்ற நிறுவனம், சுகாதாரமான குடிநீர் வசதி, கணினி பயிற்சி வசதிகளைச் செய்துகொடுத்தாங்க. வி.கே.சி நிறுவனத்தினர்,
ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் எல்லோருக்கும் புது ஷூ, பெல்ட், டை, ஐடி கார்டு கொடுத்து உதவுறாங்க. ஃபர்னிச்சர் உதவிகளையும் செய்றாங்க. இவர்களின் உதவியால், சில ஆண்டுகளிலேயே எங்க பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாச்சு. இப்போ 270 மாணவர்கள் படிக்கிறாங்க. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்கள் சிறப்பா இருக்காங்க. 42 வட மாநில மாணவர்களின் தமிழ்ப் பேச்சும் இனிமையா இருக்கும். யோகா, கராத்தே, இசைப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி உட்பட பல பயிற்சிகள் கொடுக்கிறோம். பல போட்டிகள்லயும் மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறாங்க" என்கிறார்.
பள்ளி மாணவர்களால் சிறப்பாக நடைபெற்றுவரும் `குட்டி கமாண்டோ' திட்டம் பற்றிக் குறிப்பிடும் ஸதி, ``எங்க கிராமத்தில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுச்சு. பல குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராம இருந்தாங்க. இதைத் தடுக்க, `குட்டி கமாண்டோ' என்ற படையை உருவாக்கினேன். அந்தப் படையில் 10 மாணவர்கள் வீரர்களாக இருக்காங்க. அவங்க தினமும் காலையில 5.30 மணிக்கும், மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்குள் விசிலடித்தபடி வலம்வருவாங்க. அதனால்,
பலரும் பொதுவெளியில் மலம் கழிப்பதில்லை. மீறிக் கழிப்பவர்களிடம், `பொதுக்கழிப்பிட வசதி அல்லது தனிக்கழிப்பிட வசதியைப் பயன்படுத்துங்க. இல்லையெனில் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்'னு சொல்வாங்க. இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெற்றிருக்கு. அடுத்து, பிளாஸ்டிக் பை பயன்பாடில்லா கிராமம் என்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்" எனப் புன்னகைக்கிறார் ஸதி.

இவர், கடந்த ஆண்டு மாநில அளவிலான `சிறந்த நல்லாசிரியர் விருது' வென்றது குறிப்பிடத்தக்கது. ``தேசிய நல்லாசிரியர் விருது செய்தி கிடைச்சதும், நான் செய்துவரும் அறப்பணியை ஊக்கப்படுத்துவதாகவும், மற்ற ஆசிரியர்களுக்குத் தூண்டுகோலாகவும் இந்த விருது அமையும்னு நினைச்சேன். விருது செய்தியைக் கேள்விப்பட்டு, பல குழந்தைகள் எனக்கு போனில் வாழ்த்துச் சொன்னாங்க. எதிர்பாராத அவர்களின் வாழ்த்துகளால் நெகிழ்ந்துபோனேன். இன்னைக்குப் பள்ளி தொடங்கினதும், பிரேயர்ல விருது செய்தியைக் குழந்தைகள் எல்லோரிடமும் சொன்னேன். என்னைக் கட்டியணைத்து வாழ்த்துச் சொன்னாங்க. இதுவே சிறந்த விருதா நினைக்கிறேன். சீக்கிரமே குழந்தைகளுக்குப் பிரியாணி விருந்து கொடுத்துக் கொண்டாட ஆசைபடறேன்" என்கிறார் ஆசிரியை ஸதி.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

2017 ஆம் ஆண்டிற்கான தமிழகத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது ..!புதிய தலைமுறைக்கு பேட்டி.

2017 ஆம் ஆண்டிற்கான தமிழகத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது ..! மத்திய அரசு அறிவிப்பு: தேசிய நல்லாசிரியர் விருது - தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு ஆசிரியை தேர்வு!(NATIONAL AWARD FOR KOVAI TEACHER
நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கான 2017 - 18 விருதுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.


2017 ஆம் ஆண்டிற்கான தமிழகத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது ..! மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்னன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 யை ஆசிரியர் தினமாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளை, நாடும் முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறோம்.

டாக்டர் ராதாகிருஷ்னன்  அவர்கள் ஆசிரியர் பணியை மிகவும் விரும்பி செய்ததால், அவருடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், அந்த நாளில் நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், அனைத்து மாநிலங்களுக்கும் தலா 20 ஆசிரியர்களுக்கும் மேல், விருது வழங்கப்பட்டு வந்தது.  இதனிடையே, தகுதியற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுவதை தடுக்க, இந்த ஆண்டு முதல், நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும் என மனிதவள மேம்பாட்டு துறை சமீபத்தில் தெரிவித்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 23 என்று எண்ணிக்கையில், மத்திய அரசால் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு 1 அல்லது 3 நபர்களுக்கு மட்டுமே மத்திய அரசின் ஆசிரியர் விருது கிடைக்கும் என்ற நிலை உருவாக்கியது. இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான, தமிழகத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பணிபுரியும் ஸதி என்ற ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.


 இதுகுறித்து, ஆசிரியர் ஸதி அவர்கள் தெரிவிக்கையில், இந்த விருதை தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.  இந்த விருதால், தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். மேலும் இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன எனவும் அந்த ஆசிரியை தெரிவித்தார். மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறோம் - தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான கோவையை சேர்ந்த ஸதி புதிய தலைமுறைக்கு பேட்டி.

தமிழகத்திற்கு பொதுவாக கடந்த வருடம் வரை 23 விருதுகள் வரை கிடைக்கும். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றத்தினால், இந்த வருடம் ஒரே ஒரு விருது மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சனி, 30 டிசம்பர், 2017

கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:–
அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி கனவு ஆசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை கூடுதல், இணை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர், அரசு தேர்வுகள் துறை இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் திட்ட இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) உறுப்பினர் செயலராகவும் மாநில குழு அமைக்கப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மூத்த உதவி தொடக்க கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமை ஆசிரியர், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது.
ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள் வீதம் 192 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

வியாழன், 28 டிசம்பர், 2017

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு


தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில்
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்
 மாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
 மாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
* 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
* அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
* 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்,

செவ்வாய், 26 டிசம்பர், 2017

பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம் – செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.

திங்கள், 25 டிசம்பர், 2017

திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு.....

நேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.

  மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார்  அவர்களும் கலந்து கொண்டார்.

விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி  11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது.

அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் " நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்" என்றார்.

உடனே நம் மதிப்புமிகு ஆட்சியர் " வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்" என கூறி  யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், " இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும்.
நானும்  உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்" என்றார்.

இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் கல்விக்காக  பல பணியாற்றி வருகிறார்.
அவருடன் இணைந்து  முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் மாவட்ட கல்வி முன்னேற பாடுபட்டு வருகிறார்.

மாவட்ட ஆட்சியர் அளித்து வரும் ஊக்கத்தின் மூலம் திருவண்ணாமலை  மாவட்டம் இந்த ஆண்டில் மாபெரும் வெற்றி பெறும்.

மேற்காண் இந்த நிகழ்வு மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்தது.

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் ......
வாழ்த்துக்கள்.....


கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் பள்ளிக்கு புதுமை பள்ளி விருது!மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் குழு அமைப்பு

கற்பித்தல் முதல் கட்டமைப்பு வரை, சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப்பள்ளி', விருது வழங்க, திருப்பூர் மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், நடப்பாண்டில், 'புதுமைப்பள்ளி' விருது வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர் எண்ணிக்கையை ஆண்டுதோறும் அதிகரிப்பது, கற்பித்தலில் புதுமை, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வது என சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப் பள்ளி', விருது வழங்கப்படுகிறது.
ஆய்வுப்பணிகள் துவக்கம்
 ஒவ்வொரு மாவட்டத்திலும், துவக்கம் முதல் மேல்நிலை வரை, நான்கு நிலைகளிலும் தலா ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்படுகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு, தலா ஒரு லட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு, தலா நான்கு லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.மாநில அளவில் ஒரு குழுவும், மாவட்ட அளவில் ஒரு குழுவும், பள்ளிகளை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்,மாவட்டக்கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வியாளர்களை உறுப்பினர்களாகக்கொண்ட குழு, அமைக்கப்படுகிறது.
மாநில அளவிலான குழுவிற்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், தொடக்கக்கல்வி இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலை) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினர், பள்ளியின் கட்டமைப்பு, செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை, அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், புதுமைப்பள்ளி தேர்வுக்கான ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளன.
தேர்ந்தெடுப்பது எப்படி?
புதுமைப்பள்ளி விருதுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு நிலையிலும், தலா மூன்று பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட ஆய்வுக்குழுவினர், மாநிலகல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். மாநில ஆய்வு குழுவினர், அதில் ஒரு மாவட்டத்துக்கு, ஒவ்வொரு நிலையிலும் சிறந்த ஒரு பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர்.புதுமைப்பள்ளி விருதாக பெறும் பரிசுத்தொகையை, பள்ளிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறைகளை மேம்படுத்தி நவீனப்படுத்துதல், வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், ஆங்கில வாசிப்பு பயிற்சி, யோகா பயிற்சி வழங்குதல், கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்குதல், பள்ளி நுாலகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமேபயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி பட்டியல் தயாரிப்பு
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறப்பாக செயல்படும் பள்ளிகளை, அவ்வப்போது பட்டியல் எடுத்து வருகிறோம். மேலும், அடிப்படை வசதிகள் முதல், மாணவர் சேர்க்கை வரை, உள்ள பள்ளிகளையும் கண்காணித்து வருகிறோம். அரசுப்பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தவே, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு உரிய பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் தயாரித்துள்ளோம். இதைத்தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

வெள்ளி, 22 டிசம்பர், 2017

அரசாணை 253-நாள்-04.12.2017-புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது வழங்குதல் சார்ந்து ஆணை வெளியிடப்படுகிறது...



புதன், 22 நவம்பர், 2017

கட்டுரைப்போட்டியில் பெற்ற பரிசுத்தொகையை பள்ளி வளர்ச்சி நிதிக்கு அளித்த ஏழாம் வகுப்பு மாணவி நிவேதா


நிவேதா...

எங்கள் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி.கூரை வேய்ந்த வீடு.பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு  பொருளாதார வசதி இல்லை.ஆனால் எதையும் தெளிவான பார்வையோடு அணுகும் திறமையான பெண்...படிப்பில் படு சுட்டி.. கணக்கு பாடத்தில் மிக மிக கெட்டி..

எங்கள் ஒன்றியத்தில் சென்ற வாரம் நடைபெற்ற RTE தொடர்பான  போட்டிகளில் உயர் தொடக்கப்பள்ளி நிலையில் *நிவேதாவை* கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள தயார் செய்திருந்தோம்...
போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், விளையாட்டாய் "நிவேதா, நீயோ ஏழாம் வகுப்பு தான் படிக்கிறாய்..எட்டாம் வகுப்பு  மாணவர்களுடன்  போட்டியிட வேண்டியிருக்கும்..முதல் பரிசுவாங்குவது சற்று கடினம்தான்..குறைந்தது மூன்றாவது பரிசாவது பெற முயற்சி செய்வோம் நிவேதா" என்றேன்..
அதற்கு சிறிதும் தாமதிக்காதவளாய் "சார்  ,நாம முதல் பரிசுதான் வாங்குறோம் சார் " என்று உறுதியாக  சொன்னாள்...
 அவள் தன்னம்பிக்கைக்கு தகுந்தார்போல் போட்டியில்  இரண்டாம்  பரிசை வென்று பரிசுத்  தொகையாக ₹1300 பெற்றாள்.

அதுக்கப்புறம்தான் நடந்ததுதான் ஹைலைட்டு...வங்கிக்கு சென்று பரிசுத்தொகைக்கான
காசோலையை  பணமாக மாற்றிய கையோடு நேராக பெற்றோரோடு பள்ளிக்கு வந்தவள் தான் பெற்ற பரிசுத் தொகையை எங்கள் பள்ளியின் த ஆ  யிடம் வழங்கி இதை பள்ளியின் வளர்ச்சிக்கு தன் பங்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி எங்களை வியப்புக்குள்ளாக்கினாள்..

பெற்றோரிடம் என்னங்க இதெல்லாம் என்று விசாரித்த போது,"அவள் பெரியவளாகி வேலைக்கு சென்று சம்பாதிக்க துவங்கியதும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பாள்....அதற்கான வாய்ப்பு இப்போதே கிடைத்துவிட்டது.என் மகள் விருப்பபடியே பரிசுத் தொகையை பள்ளிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பெற்றோரும் தலைமையாசிரியரிடம் வற்புறுத்த  துவங்கி விட்டனர்..

 தலைமையாசிரியருக்கு  என்ன செய்வது என்று புரியவில்லை.., அவர்களிடம் எவ்வளவு எடுத்துகூறியும்  நிவேதாவும் அவள் பெற்றோரும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக நிற்கின்றனர்.

இந்த பெருமித மனநிலையில் இருந்து மீளாத தலைமை ஆசிரியை அவர்கள்  காலை இறைவணக்க கூட்டத்தில் *நிவேதாவின்* செயலை எடுத்துக்கூறி  அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பாராட்டினார்..

அவளின் உழைப்பால்  கிடைத்த பரிசு அவளுக்கு மட்டுமே உரியது என்று நாங்கள் உறுதியாக இருந்தாலும் அவர்களின் உறுதிக்கு முன் என்ன செய்வதென்று அறியாத நிலையில், அருமையான மாணவியை வளர்த்தெடுத்த பெருமிதத்தோடு
*ஊ ஒ ந நி பள்ளி,வடசிறுவளூர்,ஒலக்கூர் ஒன்றியம்,விழுப்புரம் மாவட்டம்.*

வெள்ளி, 17 நவம்பர், 2017

'வாசிப்பு திறனை வளர்க்கும் தினமலர் வழங்கும் பட்டம்'

திருப்பூர்: ''மாணவர்களின் வாசிப்புத் திறனை, 'தினமலர்'நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' இதழ்கள் அதிகரிக்கின்றன,'' என, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர்கண்ணப்பன் பேசினார்.
'அனைவருக்கும் இடைநிலை கல்வி' திட்டத்தில், திருப்பூர் மாவட்ட நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானம், வளர்ச்சி பணிகள் குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கண்ணப்பன், நேற்று ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு பள்ளியாக சென்ற அவர், மாணவர்கள் மத்தியில் பேசினார்.திருப்பூர், நொய்யல் வீதி பள்ளியில், அவர் பேசியதாவது:முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நனவாக்க, அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணியில் சேர முயற்சிக்க வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.
 பாடப் புத்தகங்கள் மட்டுமே, முழு அறிவுத் திறனை வளர்த்து விடாது; பாடப் புத்தகத்தை கடந்த அறிவு, அவசியம்.'தினமலர்' நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' ஆகியவை மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கின்றன. இவற்றை மாணவர்கள், சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர் நலனுக்காக, 'புத்தக பூங்கொத்து' என்ற பெயரில், நுாலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான தலைப்பில் படிக்கும் புத்தகங்கள், அறிவை விரிவடைய செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.

வியாழன், 19 அக்டோபர், 2017

அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு அறிவிப்பு!!!

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

புதிய தலைமுறை "ஆசிரியர் விருது 2017 " நிகழ்ச்சி

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று 5/9/2017 செவ்வாய் அன்று மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதை கல்விசிறகுகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்