ரிசர்வ் வங்கி அறிவிப்பு: செல்லாத நோட்டுகளை மாற்ற செய்ய வேண்டியது என்ன?
Date: 2016-11-09@
06:25:36
சென்னை: மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை திடீரென ரத்து செய்துள்ள நிலையில், இனி பொதுமக்கள் என்ன செய்வது, அடுத்த சில நாட்களுக்கு அன்றாட செலவுக்கான பணத்துக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
* போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கவும், கருப்புப் பணம் பதுக்கலை தடுக்கவும் அரசின் இந்த நடவடிக்கை அவசியமானது.
* போலி ரூபாய் நோட்டுகளை தீவிரவாதிகள் பயன்படுத்தி நாச வேலைகளில் ஈடுபடுவதை தடுக்கவும் இது அவசியமாகிறது.
* நவம்பர் 10ம் ேததி முதல் பொதுமக்கள், கார்பரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சொசைட்டிகள், அறக்கட்டளைகள் போன்றவற்றிடம் ஏற்கெனவே உள்ள ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அல்லது எந்த வங்கி கிளைகளிலும் கொடுத்து அதற்கு ஈடான மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இவை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
* அவசர ரொக்க தேவைக்களுக்காக, நபர் ஒருவருக்கு ரூ.4,000 வரை செல்லாத நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றி பெற்றுகொள்ளலாம். இதற்காக மக்கள் உரிய அடையாள ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.
* வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள பணத்தை வாடிக்கையாளர்கள் செலவு செய்ய எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதை காசோலைகள், என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ். ஐஎம்பிஎஸ். மொபைல் பேங்கிங், இண்டர் நெட் பேங்கிங், போன்ற மின்னணு பரிமாற்ற முறைகளில் செய்யலாம்.
* வங்கி கிளைகளின் கவுண்டர்களில் இருந்து வாரத்துக்கு ரூ.10,000 வரை மட்டுமே ரொக்கமாக எடுக்க முடியும். புதிய முறைக்கு மாற வசதியாக அனைத்து ஏடிஎம்களிலும், இதர பண பரிவர்த்தனை இயந்திரங்களும் நவம்பர் 9ம் தேதி மூடப்பட்டிருக்கும்.
* ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.2,000 வரை மட்டுமே எடுக்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.