TET Latest News: புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு?
புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.
புதிதாக நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆயிரத்துக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பிருப்பதாக
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கடைசியாக ஆசிரி யர் தகுதித்தேர்வு கடந்த 2013-ல் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத் தப்படவில்லை. தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவி னருக்கு 50 சதவீத மதிப்பெண் தளர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியர் நியமனம் ஆகியவை தொடர்பான வழக்கு கள் முடிவடைந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்து வதற்கான சூழல் உருவாகி யுள்ளது.முந்தைய தகுதித்தேர்வு மூலம் பள்ளிக் கல்வித்துறையிலும் சரி, தொடக்கக் கல்வித்துறையிலும் சரி அதிக எண்ணிக்கையிலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களும், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணிநிரவல் காரண மாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முற்றிலுமாக குறைந்துவிட்டன.ஏற்கெனவே பணியாற்றும் ஆசிரியர்களையே மாணவர் பற்றாக்குறை காரணமாக வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த புதிய தகுதித்தேர்வானது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரவும், ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெற உதவுமே தவிர அரசு பள்ளிகளில் முன்பு போல ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரி யர், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப் படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசு பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி, இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் முந் தைய தகுதித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டுவிட்டன. தற்போது மாணவர் பற்றாக்குறை காரண மாக காலியிடங்களும் இல்லா மல் போய்விட்டன. பள்ளிக் கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், குறிப் பிட்ட சில பாடங்களில் சுமார் 450 பின்னடைவு பணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) என ஆயிரத்துக்கும் குறைவான காலியிடங்களே நிரப்ப வாய்ப் பிருக்கிறது” என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டு தகுதித்தேர்வு மூலம் சுமார் 4,500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித் திருப்பதால் எஞ்சிய 3,500 காலியிடங்கள் தொடக்கக் கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருக் கக்கூடும்.