நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது, ரூ.500, 1000 செல்லாது : பிரதமர் மோடி அறிவிப்பு
Date: 2016-11-09@
00:05:59
புதுடெல்லி: நாடு முழுவதும், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி தடாலடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நள்ளிரவு முதல் இந்த அதிரடி நடவடிக்கை அமல் படுத்தப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் அடையாள அட்டை காண்பித்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். பிரதமரின் அதிரடி அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முப்படை தளபதிகளை நேற்று சந்தித்து எல்லை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது.
அப்போது போர் குறித்த அறிவிப்பை அறிவிக்க போகிறார் என்ற பரபரப்பு நிலவியது. அதன்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: எனது அரசு ஏழைகளின் நலனுக்காக செயல்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்துக்கும், ஏழ்மையை ஒழிப்பதற்கும் கருப்பு பணம் மிகப்பெரிய தடையாக உள்ளது. எனது அரசு பதவி ஏற்றதும், ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கத்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை. பலர் ரூ.1000 மற்றும் ரூ.500 கட்டுக்களை மூட்டை மூட்டையாக பதுங்கியுள்ளனர். ஏழை ஆட்டோ டிரைவர் கூட பயணிகள் விட்டும் செல்லும் தங்க நகைகளை நியாயமாக ஒப்படைக்கிறார். ஆனால் சிலர் சுயநலத்துக்காக ஊழல் புரிகின்றனர். கருப்பு பண புழக்கத்தில் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பழைய நோட்டுக்களை முதலில் ஒழிக்க வேண்டும் என பல தரப்பில் ஆலோசனை கூறப்பட்டது. அனைத்து பண பரிவர்த்தனைகளையும் எலக்ட்ரானிக் முறையில் மேற்கொள்வதே, கருப்பு பணத்தை ஒழிக்க சரியான வழி என கூறப்பட்டது.
மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளும், ரூ.1000 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுக்களை அதிகளவில் இந்தியாவில் புகுத்தியுள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் இனி செல்லாது. இனிமேல் அவை வெறும் காகிதங்களே. இந்த அறிவிப்பால் மக்கள் பீதியடைய வேண்டாம். தங்களிடம் வைத்துள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் வரும் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளிலும், தலைமை தபால் நிலையங்களிலும் ஆதார் எண் மற்றும் பான் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை காட்டி மாற்றிக் கொள்ளலாம். அதன்பிறகும் சில காரணங்களால் பணத்தை மாற்ற முடியாதவர்கள் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம்.
கருப்பு பணத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. இந்தப் பணத்திற்கு பதில் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும். பண பரிமாற்றம், செக் பரிமாற்றம், இன்டர்நெட் பண வர்த்தனை, ஆன்லைன் பண பரிவர்த்தனை ஆகியவற்றுக்கு எந்த தடையும் இல்லை. வங்கிகளில் இருந்து மக்கள் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரமும், வாரத்துக்கு ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், விமான நிலையங்களில் ரூ.500, ரூ.1000 பயன்படுத்த விதிவிலக்கு உள்ளது. இந்த அறிவிப்பு திடீனெ வெளியிடப்பட்டதால், அதற்கு தயாராகும் வகையில் வங்கிகளும், ஏடிஎம்களும் இன்று ஒரு நாள் மட்டும் செயல்படாது.
சில இடங்களில் நாளையும் செயல்படாது. ஏழ்மைக்கும், கருப்பு பணத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபடுவது நாம் ஒவ்வொருவரின் பொறுப்பு. முதலீட்டுக்கு சிறப்பான நாடு இந்தியா என சர்வதேச நிதியமும் உலக வங்கியும் கூறியுள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலும் தனியாக நாட்டு மக்களுக்கு டிவியில் உரையாற்றினார். மோடியின் இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.