இன்று 20/11/16 உலகளாவிய குழந்தைகள் தினம்
👶 உலகளாவிய குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வறுமை, எட்ய்ஸ் போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில்
திப்பு சுல்தான்
🐯 'மைசூரின் புலி" என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் பிறந்தார்.
🐯 இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த இவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.
🐯 இவர் அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள், கப்பல் கட்டும் தளம் மற்றும் போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தினார். மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் கண்டு இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.
🐯 'உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்" என்று ஆங்கிலேயர் கூறியபோது, முடியாது என மறுத்து, கர்ஜனையோடு 'ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என முழங்கியபடியே மரணம் அடைந்தார்.
🐯 தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன் திப்பு சுல்தான் 1799ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்.
செல்மா லேகர்லாவ்

✍ இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும், ஸ்வீடனை சேர்ந்த படைப்பாளியுமான செல்மா லேகர்லாவ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி ஸ்வீடன் நாட்டின் வார்ம்லேண்ட் நகரில் பிறந்தார்.
✍ இவர் தன் ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே கற்றார். சிறு வயதிலேயே புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகளும் எழுதினார். ஸ்டாக்ஹோம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
✍ ஆசிரியர் பணிக்கு இடையே 'கோஸ்ட்டா பெர்லிங்ஸ் சகா" என்ற தனது முதல் நாவலை எழுதினார். தன் படைப்புகளுக்கு கருத்துகளை சேகரிக்க ஓரிரு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.
✍ இத்தாலிக்கு சென்ற இவர், 'ஆன்டிகிறிஸ்ட்ஸ் மிராக்ளர்" என்ற புத்தகத்தை எழுதினார். தொடர்ந்து இவர் பல சிறுகதைகள் எழுதினார். 1902-ல் வெளிவந்த 'ஜெருசலேம்" என்ற நூல் அமோக வரவேற்பை பெற்றது.
✍ பள்ளிக் குழந்தைகளுக்காக 'தி ஒண்டர்ஃபுல் அட்வென்சர்ஸ் ஆஃப் நீல்ஸ்" என்ற நூலை எழுதினார். இது உலக அளவில் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் புத்தகம் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்வீடன் இலக்கியக் கழகத்தின் தங்கப் பதக்கத்தை 1904-ல் பெற்றார்.
✍ இவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1909-ல் பெற்றார். உலகப் புகழ்பெற்ற படைப்பாளியாக திகழ்ந்த இவர; 1940-ம் ஆண்டு மறைந்தார்
💻 1985ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மைக்ரொசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.