மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி வினாத்தாள்
அகில இந்திய ஒதுக்கீட்டிலும், தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உதவும் வகையில், 'நீட்' என்ற மருத்துவ நுழைவு தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகம், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
மருத்துவ படிப்புக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், தமிழக அரசின் ஒதுக்கீட்டு முறையில், கடந்த ஆண்டு, 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரம், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு, 'நீட்' தேர்வின்படியே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், 'நீட்' குறித்த விழிப்புணர்வு பெறவும், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், தமிழக மாணவர்கள் இடங்கள் பெற வசதியாக, 'நீட்' குறித்த மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகம், 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன. 'தினமலர்' இதழுடன், வேல்ஸ் பல்கலையின், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் நிறுவனம் இணைந்து, இந்த புத்தகத்தை வழங்கின. பின், 'நீட்' குறித்த அடிப்படை தகவல்களை, வேல்ஸ் பல்கலை பேராசிரியை விஜய் ஆனந்தி, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இணைந்து வழங்கியோர்'தினமலர்' நாளிதழின், டி.வி.ஆர்.அகாடமி நடத்திய, ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை, பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் கல்லுாரி, பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி நிறுவனங்கள், இணைந்து வழங்கின. நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, வேல்ஸ் பல்கலை, பூர்விகா மற்றும் பெரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனங்கள், உறுதுணை வழங்கின.