மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் புதுமையான முறையில் கற்பிக்கும் பள்ளிகள்!
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், புரிதலை எளிமையாக்கும் விதமாகவும் தமிழக பள்ளிகளில் பொம்மலாட்ட கலைகளின் மூலமாக கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் மாணவர்கள் கற்றலில் அதிக ஆர்வம்காட்டி வருகின்றர்.
செயல்வழிக்கற்றல் முறையில் கற்பித்தலை ஊக்குவிப்பதற்காக பள்ளிகளில் பொம்மலாட்டம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள துவக்க பள்ளிகளில் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக பல்வேறு கட்டங்களாக ஆசிரியற்களுக்கு பொம்லாட்டம் பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த செயல்வழிக்கற்றல் மூலமாக சிற்ப்பு பயிற்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பாடங்களில் உள்ள கதைகளுக்கு ஏற்றார் போல் பொம்மைகளை செய்து திரைக்கு பின்னால் இருந்து கதைகளுக்கு ஏற்றார் போல் செய்கைகளை செய்து கற்றுகொடுக்கின்றனர்.
அத்துடன் மாணவர்களுக்கு பொம்மலாட்டத்தை கற்று கொடுப்பதுடன் அவர்களையே ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்க்கு ஏற்றார் போல் நடிக்கவும் செய்வதால் மாணவர்கள் மிகவும் உற்ச்சாகத்துடன் கற்றலில் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.
இது போன்ற செயல் வழிக்கற்றல் மூலமாக மாணவர்கள் பாடங்களை மிகவும் எளிமையாக புரிந்து கொள்வதுடன் , மிகவும் ஆர்வதுடன் பாடங்களை கவனிப்பதாக சொல்கின்றனர் ஆசிரியர்கள்.
இந்த பொம்மலாட்டம் போன்ற செயல்வழிக்கற்றல் மூலமாக மிகவும் உற்சாகத்துடன் கல்வி கற்பதாகவும் கடினமான பாடங்களை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள இதுபோன்ற செயல்வழிக்கற்றல் மிகவும் உதவுவதாக தெரிவிக்கும் மாணவர்கள் இது தங்களுக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.