சோலார் டிராக்டர் - தமிழக மாணவருக்கு இளம் விஞ்ஞானி 2016 விருது!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் சோலார் டிராக்டரைக் கண்டுபிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்தவர் சாரதி சுப்புராஜ். அவருடைய மனைவி செண்பகவல்லி. இவர்களுக்கு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்தவர் சாரதி சுப்புராஜ். அவருடைய மனைவி செண்பகவல்லி. இவர்களுக்கு
சிவசூர்யா என்னும் மகன் உள்ளார். சிவசூர்யா கோவில்பட்டியில் உள்ள காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கிறார். சிவசூர்யா இளம் வயதிலேயே எட்டு புதுமைகளை கண்டுபிடித்து இந்தியாவின் ‘இளம் விஞ்ஞானி 2016’ என்ற விருதினை பெற்றுள்ளார்.
ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குழந்தைகள் 30 பேரை தேர்வு செய்து தேசிய விருது வழங்கப்படும். இந்த விருது ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும். அந்த விருதில், ரூபாய் 10,000 பணம், ரூபாய் 3,000க்கான மதிப்புள்ள புத்தகங்கள், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் பிரிவில் மாணவன் சிவசூர்யாவுக்கு ‘இளம் விஞ்ஞானி 2016’ விருதினை பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவப்படுத்தினார்.
சிவசூர்யா விவசாயிகளுக்கு உதவும் வகையில் சூரிய ஒளியில் இயங்க கூடிய டிராக்டரைக் கண்டுபிடித்துள்ளார். புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான இன்ஸ்பயர் போட்டியில் சிவசூர்யா பங்கேற்றார். சூரிய ஒளி மூலம், ரிமோட்டால் இயக்கப்படும் டிராக்டரை வடிவமைத்திருந்தார். இந்த கண்டுபிடிப்பால் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தார். அதன்மூலம் இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார்.
இதுகுறித்து சிவசூர்யா, “இந்த டிராக்டரை சூரிய ஒளியில் செல்பேசி மூலம் இயக்க முடியும். இதனை ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் எளிதில் இயக்க முடியும். இதன் மூலமாக மிகக் குறைந்த செலவில் எளிதில் உழவு செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஸ்பேஸ் கிட்ஸ் என்ற அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1,500 மாணவர்களை அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் பங்கேற்க செய்தது. அதில் 150 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டனர். முதல் மூன்று மாணவர்களை தேர்வு செய்ததில் சிவசூர்யாவும் ஒருவராக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் விஞ்ஞானிகள் மூலம் அவருக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.