IGNOU:தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு | தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிசம்பர் 7-ம் தேதி வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:இதுதொடர்பாக
இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் தங்கள் கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ளவும், மேற் படிப்புகள் படிக்கவும் தரமான படிப்புகளை வழங்குகிறது. ஆன்லைனில் விண்ணப்பம் அந்த வகையில், 2017-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க் கைக்கு தற்போது விண்ணப் பங்கள் வழங்கப்பட்டு வருகின் றன. சென்னை நந்தனத்தில் இக்னோ மண்டல அலுவலகத் திலும் பல்வேறு இடங்களில் உள்ள அதன் கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.200. விண்ணப்பம் மற்றும் விளக்கவுரையை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.ignou.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் மாதம் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைன் மூலமாகவும் (www.onlineadmission.ignou.ac.in) விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இக்னோ பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் நந்தனம் அண்ணாசாலையில் உள்ள ஜிஆர் வணிக வளாகத்தில் (3-வது தளம்) இயங்குகிறது. அலுவலக தொலைபேசி எண்கள் 044- 24312766, 24312979.