அரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க...உத்தரவு!:ரூ.820 கோடி நிலுவையால் வாரியம் அதிரடி:டிச., 3க்குள் விபரம் தர அதிகாரிகளுக்கு கிடுக்கி
ஆண்டுக்கணக்கில், மின் கட்டணம் செலுத்தா மல், அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், 820 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதால், இந்த அதிரடி நடவடிக் கையை, தமிழக மின் வாரியம் எடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் பற்றிய விபரத்தை, டிச.,3க்குள் அளிக்கும் படியும், மின் வாரிய அதிகாரிகளுக்கு கிடுக்கிப் பிடி போடப்பட்டுள்ளது.
அரசு துறை அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகம் மற்றும் கட்டடங்களு க்கு, மின் வாரியம் சார்பில், மின் வினியோகம் செய்யப்படுகிறது.பொது மக்கள் மற்றும் தனி யார் நிறுவனங்கள், கடைகளில், மின் பயன்பாடு கணக்கெடுத்த, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும்.பின்,அபராதத்துடன்கட்டணம் செலுத் திய பிறகே, இணைப்பு வழங்கப்படுகிறது.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மின் கணக்கு எடுத்ததில் இருந்து, அபராதமின்றி கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசம் தரப்பட்டும், கட்டணம் செலுத்துவதில்லை.
தற்போது, மின் வாரி யம், பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.அதற்கு, அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்பு கள், பல மாதங்களாக, மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளதும், ஒரு காரணம்.
நிதி நெருக்கடி அதிகரித்து வருவதால், மின் கட்டணத்தை செலுத்துமாறு, மின் வாரிய அதி காரிகள், அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்பு களுக்கு, பல முறை கடிதம் எழுதினர். ஆனால், அவை பொருட்படுத்துவதில்லை.
இதையடுத்து, பாக்கியை வசூலிக்கவும், ஒழுங் காக கட்டணம் செலுத்த வைக்கவும், அதிரடி நடவடிக்கையில் இறங்க, மின் வாரியம் முன் வந்துள்ளது. நிலுவை வைத்துள்ள உள்ளாட்சி மற்றும் அரசு துறை அலுவலகங் களில், மின் இணைப்பை துண்டிக்குமாறு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மின் வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அரசு துறை,உள்ளாட்சி அதிகாரிகளை சந்தித்து,நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை வசூலிக்க, பொறியாளர்கள் செல்வர்; அங்கே யாரும் கண்டுகொள்வதில்லை. பல மணி நேரம் காக்க வைத்து, அனுப்பி விடுவர்.
தற்போது, கட்டணம் செலுத்தாத, அரசு அலுவலகங்களுக்கு முறைப்படி, 'நோட்டீஸ்' அளித்து, மின் இணைப்பை துண்டிக்குமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எனவே, கட்டணம் செலுத்தாமல் அலட்சிய மாக உள்ள அரசு அலுவலகம், உள்ளாட்சி கட்டடங்கள், விரைவில் இருளில் மூழ்கும். இந்த உத்தரவு தொடர்பாக, எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை, பொறியாளர்கள், டிச., 3க்குள், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மதிப்பெண் குறைவு!
மத்திய அரசு, மாநில மின் வாரியங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஆண்டு தோறும் மதிப்பெண் வழங்குகிறது.
கடந்த ஆண்டு, தமிழக மின் வாரிய செயல்பாடு மோச மாக இருப்பதாக, மத்திய அரசு தெரிவித் தது. இதற்கு, அரசு துறைகளிடம் இருந்து, முறை யாக மின் கட்டணம் வசூலிக்காததும் முக்கிய காரணம்.