கற்றலில் குறைபாடு:டிச.2 -இல் தேசிய மாநாடு.
கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்ஸியா) குறித்த தேசிய மாநாடு சென்னையில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் சென்னை ஐஐடியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கற்றலில் குறைபாட்டை சிறு வயதிலேயே
நிர்வகிப்பது, பள்ளி, கல்லூரி கல்வி, கற்றலில் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரியோர்களை நிர்வகிப்பது, அவர்களின் திறனை வளர்ப்பது, தொழிற்பயிற்சி அளிப்பது, கற்றலில் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், குடும்பத்தினருக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
ஆர்கிட்ஸ் அமைப்பின் தலைவர் டாக்டர்.கீத் ஓபராய், செகந்தரபாத் தேசிய மூளை வளர்ச்சி குறைபாடு உடையோர் தேசிய நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் ஜெயந்தி நாராயண் உள்ளிட்ட பல வல்லுநர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்வதற்கு 98411 10588 என்ற எண்ணில் அழைக்கலாம்.