எம்எல்ஏ ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன்... ஹாட்ஸ் ஆப் வசந்தகுமார்...
எம்எல்ஏகளுக்கான ஊதியம் இரு மடங்கு உயர்த்தி வழங்கவுள்ள நிலையில் தனக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என்று நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் அறிவித்து முன்மாதிரியாக திகழ்கிறார்.
தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் விவசாயிகள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த ஊதிய உயர்வு தேவையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் தனக்கு வழங்கப்படவுள்ள ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிட உள்ளதாக நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், காமராஜரின் இலவச கல்வியில் பயின்று முன்னேறிய நான் கடந்த 2006-2011-ஆம் ஆண்டு எம்எல்ஏ-வாக இருந்தபோது பெற்ற ஊதியத்தில் பல கிராமங்களில் இலவச டியூஷன் சென்டர்களை அமைத்ததோடு ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செலவழித்துள்ளேன்.
கடந்த முறை எம்எல்ஏ ஆகும் வாய்ப்பை இழந்தாலும் மாதந்தோறும் அந்த தொகையை செலவு செய்து இலவச டியூஷனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் செலவிட்டேன். தற்போது எம்எல்ஏ-க்களின் ஊதியம் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் அதை ஏற்கெனவே செய்து வந்த கல்வி வளர்ச்சி திட்டத்துக்கு இரு மடங்காக செலவிடுவேன் என்று தனது அறிக்கையில் வசந்தகுமார் தெரிவித்தார்.