பேஸ்புக் அக்கவுண்ட்ஸ் பாதுகாப்பில் ஓட்டை...
அதிர்ச்சிகர தகவல்கள்
உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள தகவல்கள் திருடப்படும் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது. இது பேஸ்புக் செட் அப்பில் உள்ள குறைபாடு என்று கூறப்படுகிறது.இதனால் வேறொருவர் உங்கள் அக்கவுண்ட்டில் ஊடுவ முடியும்.
இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு பல்வேறு ஷாக்கிங் தகவல்கள் உள்ளன.
' உங்களது பேஸ்புக் கணக்கின் பாஸ்வோர்ட் தேவையில்லாமலேயே உங்கள் கணக்கினில் மற்றவர்கள் ஊடுருவ முடியும் என்பது உறுதியாகி உள்ளது. லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் மார்டின்ட்லே என்பவர், இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளராக இருந்துவருகிறார்.
இவர் தன்னுடைய செல்போனில் புதிய சிம்கார்ட் போட்டுள்ளார். அந்த சிம் செயல்பட தொடங்கியதும், அந்த புதிய எண்ணானது அவரது பேஸ்புக் கணக்குடன் இணைந்துள்ளது.
அப்போது அவர், தனது பேஸ்புக் கணக்கை லாக் இன் செய்யவில்லை. ஆனாலும் 'அவர் தனது பேஸ்புக் கணக்கில் சிறிது நேரமாக செயல்படவில்லை' என்று அவரது அலைபேசிக்கு பேஸ்புக்கிடம் இருந்து மெசேஜும் வந்துள்ளது.
உடனே அவர் தனது புதிய எண்னை பயன்படுத்தி பேஸ்புக்கில் தேடிய பொழுது வேறொரு நபரின் பேஜ் திறந்துள்ளது. ஜேம்ஸ் அந்த குறிப்பிட்ட அலைபேசி எண்ணை உபயோகித்து, எதோ ஒரு பாஸ்வோர்டுடன் குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கினுள் உள்நுழைய முயற்சித்துள்ளார். ஆனால் அது பயன் அளிக்கவில்லை.
எனவே அவர் பேஸ்புக்கில் உள்ள அக்கவுண்ட் ரெக்கவரி வசதியினை கிளிக் செய்துள்ளார். அதில் அவருக்கு வந்துள்ள ஆறு வழிமுறைகளில், எந்த எண்ணை உபயோகித்து அந்த குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கினுள் தவறாக நுழைய முயற்சித்தாரோ, அந்த எண்ணுக்கு மெசேஜ் மூலம் பாஸ்வோர்ட் மாற்றுவதற்கான ரகசிய கோட் -ஐ பெற்றுள்ளார்.
அதனை அவர் உடனடியாக செயல்படுத்திய பொழுது, ரகசிய கோடின் மூலம் அந்த கணக்கினுள் நுழைய முடிந்தது என்பதை அவர் கண்டுபிடித்துள்ளார்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.