10 ஆயிரம் சதுர அடியில் எம்ஜிஆர் உருவத்தை ஓவியமாக வரைந்த அரசுப் பள்ளி மாணவிகள்....
பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள் 100 பேர் சேர்ந்து 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளனர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று 100 அடி நீளம், 100 அடி அகலத்தில் எம்.ஜி.ஆர் உருவத்தை ஓவியமாக வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பெரம்பலூர், பாடாலூர், சத்திரமனை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் 100 பேர், ஓவிய ஆசிரியர்கள் வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் எம்ஜிஆர் உருவத்தை தத்ரூபமாக வரைந்து சாதனை படைத்தனர். இந்த ஓவியத்தை பார்த்து ரசித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவிகளை பாராட்டினர்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்ஸ்ரீதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி ஆகியோரும் ஓவியம் வரைந்த மாணவிகளைப் பாராட்டினர்.