கலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது..
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல்கலாம் தேசிய நினைவகம், நான்கு புறமும் 50க்கு 50 மீட்டர் அளவில் சதுர வடிவில் அமைந்துள்ளது
. நினைவகத்தை சுற்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கொண்டு வரப்பட்ட அழகு செடிகள், நிழல் தரும் மரக்கன்றுகள் ஊன்றி அழகுபடுத்தி உள்ளனர்.
. நினைவகத்தை சுற்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கொண்டு வரப்பட்ட அழகு செடிகள், நிழல் தரும் மரக்கன்றுகள் ஊன்றி அழகுபடுத்தி உள்ளனர்.
நினைவகத்தின் பின்புறத்தில் கலாம் கண்டு பிடித்த அக்னி ஏவுகணை, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரி வைக்கப்பட்டும், நினைவகத்திற்குள் நான்கு பக்கங்களிலும் மின் ஒளியில் கலாமின் ஓவியங்கள், சிலைகள் உள்ளன. ஒரு மூலையில் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், கலாம் நிற்பது, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரியை கலாம் அறிமுகப்படுத்துவது, ராணுவ வீரர்கள் அணிவகுப்பை கலாம் ஏற்பது போன்ற தத்ரூபமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.மற்றொரு புறத்தில் கலாம் ஐ.நா., சபையில் பேசுவது, ஜனாதிபதி மாளிகையில் கலாம் நிற்பது, குழந்தைகளிடம் கலாம் கைகொடுத்து சிரித்து பேசுவது போல் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளனர்.
95 ஓவிய படங்கள் : கலாம் குழந்தை பருவம் முதல் ஜனாதிபதி வரை பல முகபாவனையுடன் கூடிய 95 ஓவியம் 4 முதல் 15 அடி உயரமும், ஜனாதிபதியாக கலாம் அமர்ந்திருப்பது போல் சிலிக்கானில் உருவான கலாம் சிலையும் உள்ளது.
மேலும் கலாமின் 700 புகைப்படங்கள் உள்ளன. கலாம் சமாதி முன் சுவரில் 15 அடி உயரத்தில் சிறுவயதில் கலாம் பேப்பர் விற்பது, கோயில், கடற்கரை, படகுகள் நிறைந்த அழகிய ஓவியம் இடம் பெற்றுள்ளது. நினைவகம் மேற்கூரையில் புகழ் பெற்ற ராஜஸ்தான் ஓவியம் வரைந்து, கலாம் நினைவகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.