மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4% ஒதுக்கீடு: பணியாளர் சட்டத்தில் திருத்தம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4% ஒதுக்கீடு: பணியாளர் சட்டத்தில் திருத்தம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசுப் பணியாளர் பணி நிபந்த னைகள் சட்டம் திருத்தப் பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 19 முதல், அரசு நிறுவனங்களில் மாற்றுத் திறனாளி களுக்கு 4% இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தது.
இது தொடர் பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்தது.

அதன்படி, சட்டத் திருத்த மசோ தாவை பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தாக்கல் செய்தார். அரசால் வரையறுக்கப் பட்ட அளவு ஊனமுள்ளவர் களுக்கான ஒதுக்கீடு, அரசால் ஒவ்வொரு துறையிலும் கண்டறி யப்பட்ட பதவிகள் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.வரையறுக்கப்பட்ட ஊனம் கொண்ட தகுந்த நபர் கிடைக்காத பட்சத்தில், வெவ்வேறு வகை மாற்றுத்திறன் கொண்டவர்களால்அந்தப் பணியிடங்கள் நிரப் பப்பட வேண்டும். அந்த ஆண் டில்அப்பதவிக்கான நபர் கிடைக் காத பட்சத்திலேயே, ஊனமுற்ற வர் அல்லாத பிறரால் நிரப்பப் படவேண்டும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் தொடர்பான புதிய வரையறை களும் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.அதேபோல, அரசின் கொள் முதல் திறனை மேம்படுத்தவும் செலவை குறைக்கவும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதாவையும் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று தாக்கல் செய்தார்.