>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வெள்ளி, 2 ஜூன், 2017

மாற்று சான்றிதழ் - சில அடிப்படை தகவல்கள் உங்களுக்காக .

தொடக்க கல்வித்துறை மாற்று சான்றிதழின் அடிக்கட்டு பள்ளியில் இருக்க வேண்டிய ஆவணம் என்பதால் , மாற்று சான்றிதழின் விவரங்கள் முன்புறம் இரண்டு A4 பேப்பர் அளவில் இருக்க வேண்டும் . நடுவில் கிழிப்பதற்கு வசதியாக துளையிட்ட தாளாக இருக்க வேண்டும் . நூறு மாற்று சான்றிதழ்கள் கொண்ட பைண்டிங் செய்ய பட்ட புத்தகமாக இருக்க வேண்டும் .
மாற்று சான்றிதழின் இடப்பக்கம் உள்ள அனைத்து விவரங்களும் வலப்புறம் இருக்க வேண்டும் . இடப்பக்கம் உள்ள மாற்று சான்றிதழின் அடிக்கட்டையில் விவரங்களை பூர்த்தி செய்து , அதே விவரங்களை வலது பக்கம் உள்ள மாற்று சான்றிதழில் பூர்த்தி செய்து , இடது பக்க சான்றிதழில் பெற்றோரிடம் கையொப்பம் பெற்று , பின்னர் வலது பக்கம் உள்ள சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் . இடது பக்கம் உள்ள அடிக்கட்டு சான்றினை முக்கிய பதிவேடாக பாதுகாக்க வேண்டும் . இதில் உள்ள தாள் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் . சான்றின் முன் பக்கம் , பின்பக்கம் அனைத்து விவரங்களும் பள்ளியில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும் . Xerox எடுக்காமல் , பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகமாக வாங்க வேண்டும் .