இம்மாத இறுதிக்குள் போலீஸ் எழுத்து தேர்வு முடிவுகள்......
திண்டுக்கல்: போலீஸ் எழுத்து தேர்வு முடிவுகள் இம் மாத இறுதிக்குள் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு ஆகிய மூன்று துறைகளிலும் 15 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இதையொட்டி மே 21ம் தேதி நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் 6 லட்சத்து 28 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதற்காக மாவட்டம் தோறும் 18 முதல் 25 மையங்கள் வரை அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர்வு நடைமுறைகள் அனைத்து நிகழ்வுகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இந்த எழுத்துத் தேர்வு முடிகள் நேற்று முன்தினம் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முடிவுகள் வெளியாகவில்லை. இந்த மாத இறுதிக்குள் போலீசாருக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
முடிவுகள் வந்த ஒரே வாரத்தில் உடல் தகுதி தேர்வுக்கு வீரர்கள் அழைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.