எம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் - விஜயபாஸ்கர்....
சென்னை: மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி தமிழக மாணவர்களுக்கு 2203 இடங்கள் கிடைக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நீட் தர வரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இது மருத்துவ கனவுகளுடன் கொண்ட மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசாணையை இன்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார்.