>>>YOU ARE WELCOME WWW.KALVICIKARAM.BLOGSPOT.IN - & >>>WWW.KALVICIKARAM.COM>>>>P.M.ELUMALAI M.SC,B.Ed. BT ASSITANT (SCIENCE)PUMS KALATHAMPATTU MELMALAYANUR BLOCK &TALUK VILLUPURAM Dt TAMILNADU INDIA PIN:604204 CELL NO:9865763717 >>>>

FLASH NEWS

WWW.KALVICIKARAM.COM ....NEET Exam 2019 - Full Question Paper & Answer Key | Mr. Moorthy - Click Here For Download >>>>> 410 விடுகதைகள் விடைகளுடன் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் -PDF வடிவில் >>CPS : 2017 - 18 ,. 2018-19 Account Slip Published NOW & GPF 2020-20201 Account slip published now >> Tamilnadu School Education - All Standard New Syllabus Text Books >>/marquee>

வியாழன், 1 ஜூன், 2017

ஆசிரியர்களுக்கான சிறப்பு யுக்திகள் !


1.ஆசிரியர்கள் சிறப்புத்தன்மை என்பது அவர்களின் புதுபுது முயற்சிகளை பொருத்தே அமையும் . சில பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது செயற்முறை பயிற்சிகளை பயன்படுத்தலாம் .
2.நவீன வசதிகளான கணிபொறி மற்றும் , இணைய வசதிகளை பயன்படுத்தி நுட்பமாக கற்றுகொடுங்கள் மாணவர்களின் மனநிலையை பரிசோதியுங்கள் .
3.மாணவர்களை பேசவையுங்கள் பாடங்களின் அனுகுமுறையில் விருப்பமுண்டா இல்லையா என்பதை பரிசோதியுங்கள் 
.
4.மாணவர்களின் ஆர்வம் பெருக அவர்களிடம் நட்பு பாராட்டுங்கள் .
ஆசிரியரான உங்களிடம் குறையிருப்பின் குறிப்பிட்ட முறையில் தெரிவிக்க அனுமதியுங்கள் . மேலும் பாடங்களை படிக்க மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் தெரிவிக்குமாறு அன்பு கட்டளையிடுங்கள் நிச்சயம் அனைவரும் உங்களிடம் அறிவிப்பார்கள்
ஒற்றுமை ,ஒழுங்கு , ஒருமைப்பாடு போன்ற வாழ்கை பாடங்களை கற்பிக்க கதைகள் , சில கதாபாத்திரங்கள் , சில நிகழ்வுகளை பயன்படுத்துங்கள் உங்ககளின் கைப்பாவையாக மாணவர்கள் மாறுவர் .
பெற்றோர்களை சந்தியுங்கள் மாணவ தேவை மற்றும் மனகோளாறுகள் ஏதேனும் இடையூறுகள் இருப்பின் பெற்றோர்க்கு தெரிவியுங்கள் ஆசிரியரே .
5.ஆசிரிய அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் . மாணவர்களை ஆசிரியராக இடமாற்றம் செய்யுங்கள் நீங்கள் மாணவர்களாக கற்றுக் கொள்ளுங்கள் .
6.செயல்முறை பயிற்சி வகுப்பறையில் மாற்றம் புகுத்துங்கள் மாணவகளின் திறமைக்கு தினசரி சவால் கொடுங்கள் ஒவியம் வரைய வண்ணத்தாள்கள் ஒட்டுதல் , கணினியில் ஆக்க பூர்வ நடவடிக்கைகள் புகுத்துதல் வேண்டும் . தினசரி பாடங்கள் வகுப்பறை நடவடிக்கைகளை நிர்வகிக்க ஒரே மாணவருக்கு வாய்ப்பு வழங்குவதை விட ஒவ்வொரு மாணவரையும் வகுப்பறை நிர்வாகியாக்கி தலைமை பொறுப்பை கற்க வையுங்கள் .
வகுப்பறை விவாதம் புதிய தலைப்புகள் பாடங்களில் கொடுத்து மாணவர்களுக்கு குழுவிவாதம் , வகுப்புவிவாதம் நடத்துங்கள் , செமினார்கள் நடத்துங்கள் அதுவே மாணவர்களை உற்சாகப்படுத்தும் .
வகுப்பறை சூழல்களை மாற்றுங்கள் வகுப்பறை சூழல்களின் மாற்றங்களை தொடர்ந்து நோக்குங்கள் ,மாணவர்களின் சிந்தனைக்கு சிறகு கொடுங்கள் தொடர்ந்து பறக்கட்டும் .
7.தொடர்ந்து பறக்கும் மாணவர்களுக்கு பாடங்களை உட்கிரகித்து அதற்கான செயல்முறை பயிற்சிகளை கொண்ட வகுப்பு கண்காட்சி நடத்துங்கள் ஒவ்வொரு மாணவரிடமும் உரையாடி அவர்களின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்தினால் வகுப்பில் புதியதொரு எழுச்சி பிறக்கும் அறிவுவளர்ச்சியும் பெருகும்.
ஆசிரியர்களுக்கான புதியயுக்திகள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் .
யுக்திகளை நடைமுறைப்படுத்துங்கள் எழுச்சியை உண்டாக்குங்கள்.
என்றும் அன்புடன்.www.kalvicikaram.blogspot.in.....